8th Social Science Civics Guide Unit 3
8th Standard Social Science Civics Guide Lesson 3 சமயச்சார்பின்மையை புரிந்து கொள்ளுதல்
8th Standard Social Science Civics Guide Lesson 3 சமயச்சார்பின்மையை புரிந்து கொள்ளுதல் Tamil Medium Guide Book Back Question and answers download pdf. 8th STD All Subject Guide. Tamil Nadu Start Board Syllabus Samacheer kalvi 8th std all Lesson / Units question and answers. 8th Social Science TEXT Books download pdf. Tamil and English Text books. 8th Standard Tamil Guide.
8th Social Science Civics Guide Unit 3 சமயச்சார்பின்மையை புரிந்து கொள்ளுதல்
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:
1. சமயச்சார்பின்மை என்பது
- அரசு அனைத்து சமயத்திற்கும் எதிரானது
- அரசு ஒரே ஒரு சமயத்தை மட்டும் ஏற்றுக் காெள்கிறது
- எந்த சமயத்தை சார்ந்த குடிமகனும் சகிப்புத் தன்மையுடன் அமைதியாக இணக்கமாக வாழ்தல்
- இவற்றுள் எதுவுமில்லை
விடை : 78.09%
2. இந்தியா ஒரு _______________ கொண்ட நாடாகும்
- பல்வேற சமயநம்பிக்கை
- பல்வேறு பண்பாட்டு நம்பிக்கை
- (அ) மற்றும் (ஆ) இரண்டும்
- இவற்றுள் எதுவுமில்லை
விடை : (அ) மற்றும் (ஆ) இரண்டும்
3. இந்திய அரசியலமைப்பின் முகவுரை திருத்தப்பட்ட ஆண்டு
- 1951
- 1976
- 1974
- 1967
விடை : 1976
4. பின்வருவனற்றுள் எது இந்தியாவை சமேேயச்சார்பற்ற நாடாக விவரிக்கிறது?
- அடிப்படை உரிமைகள்
- அடிப்படை கடமைகள்
- அரசு நெறிமுறையுறுத்தும் காெள்கைகள்
- அரசியலமைப்பின முகவுரை
விடை : அரசியலமைப்பின முகவுரை
5. சமயச் சுதந்திர உரிமை எதனுடன் தாெடர்புடையது
- நீதித்துறை
- பாராளுமன்றம்
- அரசு நெறிமறையுறுத்தும் கொள்கை
- அடிப்படை உரிமைகள்
விடை : அடிப்படை உரிமைகள்
6. அரசியலமைப்பின் பிரிவு 28 எந்த வகையான கல்வியை அரச உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் தடை செய்துள்ளது?
- சமயபோதனைகள்
- நீதிநெறிக்கல்வி
- உடற்கல்வி
- இவற்றுள் ஏதுவுமில்லை
விடை : சமயபோதனைகள்
7. ஒரு நாடு சமயச்சார்பற்ற நாடாக எப்போது கருதப்படும் எனில் அது
- ஒரு குறிப்பிட்ட சமயத்திற்கு முக்கியத்துவம் அளித்தால்
- அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் சமய போதனைகளை தடை செய்தால்
- ஒரு குறிப்பிட்டசமயத்திற்கு முக்கியத்துவம் அளிக்காமல் இருந்தால்
- எந்த சமய நம்பிக்கைகளையும் பரப்ப தடை விதித்தால்
விடை : ஒரு குறிப்பிட்டசமயத்திற்கு முக்கியத்துவம் அளிக்காமல் இருந்தால்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக:
- சமயம் நமக்கு _____________ போதிக்கவில்லைவிடை : பகைமையை
- சமயச்சார்பின்மை ஜனநாயகத்தின் ஒரு பகுதி அது _____________ அளிக்கிறது. விடை : சம உரிமையை
- _____________ என்பது கடவுள் மற்றும் கடவுள்கள் மீது நம்பிக்கையற்றிருப்பதாகும்.விடை : நாத்திகம்
- நமது அரசியலமைப்பின் அடிப்படை நோக்கம் _____________ மற்றும் _____________ ஊக்குவிப்பதாகும். விடை : தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை
- பிரிவு 15 சமயம், சாதி, பாலினம் அல்லது பிறப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் _____________ காட்டவதை தடை செய்கிறது.விடை : பாகுபாடு
III.பொருத்துக
- நாத்திகம் – Secularism என்ற பதத்தை உருவாக்கியவர்
- குழந்தைகள் – சமூகச் சீர்திருத்தவாதி
- தீன – இலாஹி – கடவுள் நம்பிக்கையற்றிருப்பது
- அரசியலமைப்பு – வருங்கால குடிமக்கள்
- ஹோல்யாேக் – தெய்வீக நம்பிக்கை
- இராஜாராம் மோகன்ராய் – 1950
விடை : 1 – இ, 2 – ஈ, 3 – உ, 4 – ஊ, 5 – அ, 6 – ஆ
IV. சரியா / தவறா?
- இந்திய நாட்டிற்கென ஒரு சமயம் உள்ளது.விடை : தவறு
- சமயச்சார்பின்மை என்ற சொல் கிரேக்க மொழியிலிருந்து பெறப்பட்டுள்ளது.விடை : தவறு
- மொகலாய பேரரசர் அக்பர் சமயச்சகிப்புத்தன்மைக் காெள்கையை பின்பற்றினார்.விடை : சரி
- சமண சமயம் சீனாவில் தாேன்றியது.விடை : தவறு
- இந்திய அரசாங்கம் அனைத்து சமய விழாக்களுக்கும் விடுமுறையை அறிவிக்கிறது.விடை : சரி
V சரியான கூற்றைத் தேர்ந்தேடு
(i) இந்தியா போன்ற சமயப் பன்முகத்தன்மை காெண்ட சமூகத்திற்கு சமயச்சார்பின்மை விலை மதிப்பற்ற ஒன்றாகும்.
(ii) சமயச்சார்பற்ற என்ற சொல்லானது 1950ஆம் ஆண்டு ஏற்றுக் காெள்ளப்பட்ட நமது அரசியலமைப்பில் குறிப்பிடப்படவில்லை.
(iii) அரசியலமைப்பு பிரிவு 26 ஒரு குறிப்பிட்ட சமயத்திற்காக வரி செலுத்துவதற்கு ஊக்கமளிக்கிறது.
(iv) அக்பரின் கல்லறை ஆக்ராவிற்கு அருகிலுள்ள சிக்கந்தராவில் உள்ளது.
- i, ii மட்டும்
- ii, iii மட்டும்
- iv மட்டும்
- i, ii, iv மட்டும்
விடை : i, ii, iv மட்டும்
2. கூற்று : ஒரு வெளிநாட்டவர் இந்தியாவில் தனது சமயத்தைப் பின்பற்றலாம்.
காரணம் : அரசியலமைப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ள சமய சுதந்திரம்
இந்தியர்களுக்கு மட்டுமல்லாமல் வெளிநாட்டவருக்கும் உணடு.
- கூற்று சரி காரணம் தவறு.
- கூற்று, காரணம் இரணடும் சரி, காரணம் கூற்றினை விளக்குகிறது.
- கூற்று தவறு, காரணம் சரி
- கூற்று, காரணம் இரணடும் சரி, காரணம் கூற்றினை விளக்கவில்லை
விடை : கூற்று, காரணம் இரணடும் சரி, காரணம் கூற்றினை விளக்குகிறது.
3. கூற்று : இந்தியாவில் சமயச்சார்பின்மை என்ற கொள்கை மிக்க மதிப்புள்ளதாகும்
காரணம் : இந்தியா பல்வேறு சமயம் மற்றும் பன்முக கலாச்சாரம் கொண்ட நாடாகும்
- கூற்று சரி காரணம் கூற்றை விளக்குகிறது
- கூற்று சரி காரணம் கூற்றை விளக்கவில்லை
- கூற்று தவறு, காரணம் சரி
- இரணடும் தவறு
விடை : கூற்று சரி காரணம் கூற்றை விளக்குகிறது
4. தவறான இணையைத் தேர்க
- தீன் இலாகி – ஒரு புத்தகம்
- கஜுராஹோ – இந்து கோவில்
- அசோகர் – பாறைக் கல்வெட்டு
- இக்பால் – கவிஞர்
விடை : தீன் இலாகி – ஒரு புத்தகம்
VI. கீழ்க்காணும் வினாக்களக்கு ஓரிரி வார்த்தைகளின் விடையளி
1. சமயச்சார்பின்மையை பரப்பிட பங்களித்த சில இந்தியர்களது பெயர்களைக் குறிப்பிடுக
- இராஜாராம் மோகன்ராய்
- சர் சையது அகமது கான்
- இரவீந்திரநாத் தாகூர்
- மகாத்மா காந்தி
- பி.ஆர். அம்பேத்கர்
2. சமயச்சார்பின்மை என்பது எதனை குறிக்கிறது?
- சமயச்சார்பின்மை என்பது பிற மதங்களின் மீது சகிப்புதன்மையான அணுகுமுறை மற்றம் வெவ்வேறு நம்பிக்கைகளைச் சார்ந்த குடிமக்களுடன் அமைதியாக இணங்கி வாழும் ஒரு மனப்பாங்கு ஆகும்.
3. சமயச்சார்பின்மையின் நோக்கங்ளைக் கூறுக
- ஒரு சமயக் குழு மற்றொரு சமயக் குழுவின் மீது ஆதிக்கம் செலுத்தாமல் இருப்பது
- ஒரு சமயத்தைச் சார்ந்த சில உறுப்பினர்கள் அதே சமயத்தைச் சார்ந்த மற்ற உறுப்பினர்கள் மீது ஆதிக்கம் செலுத்தாமல் இருப்பது
- அரசானது எந்த ஒரு குறிப்பிட்ட சமயத்தையும் பின்பற்ற வலியுறுத்தாமல் இருப்பது அல்லது தனி நபர்களின் சமய சுதந்திரத்தில் தலையிடாமல் இருப்பது.
4. அரசிடமிருந்து சமயத்தை பிரிப்பது முக்கியத்துவம் வாய்ந்தது ஏன்?
- இந்தியா பல்வேறு சமயங்களை பின்பற்றும் மக்களை கொண்ட நாடாகும்.
- எனவே அனைத்து சமயங்களுடன் சகிப்புத் தன்மையுடன் இருப்பது அவசியமாகும்
- ஆகவே அரசிடமிருந்து சமயத்தை பிரிப்பது முக்கியத்துவம் வாய்ந்தது
5. சமயச்சார்பற்ற நாட்டின் சிறப்பு பண்புக் கூறுகள் யாவை?
சுதந்திர கோட்பாடு
- எந்த சமயத்தையும் பின்பற்ற அரசு அனுமதித்தல்
சமத்துவக் கோட்பாடு
- அரசு எந்த ஒரு சமயத்திற்கும் மற்றவற்றிற்கு மேலாக முன்னுரிமை அளிக்காதிருத்தல்
நடுநிலைமைக் கோட்பாடு
- சமய விவகாரங்களில் அரசு நடுநிலைமை கொண்டிருத்தல்
6. சமயச்சார்பின்மை தொடர்பின்மை இந்திய அரசியலமைப்பு பிரிவுகள் மூன்றினைக் குறிப்பிடுக
பிரிவு – 15
- சமயம், இனம், சாதி, பாலினம், அல்லது பிறப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடுத்துவதை தடை செய்கிறது.
பிரிவு – 18
- பொது வேலை வாய்ப்பில் சமமான வாய்ப்பளித்தல்
பிரிவு – 25 (1)
- எந்த ஒரு சமயத்தினை ஏற்கவும் பின்பற்றவும் பரப்பவும் உரிமை வழங்குகிறது.
VII. விரிவான விடையளி
1. சமயச்சார்பற்ற கல்வி நமக்கு ஏன் தேவை?
- குறுகிய மனப்பான்மையை போக்குவதற்கும், சக்திவாய்ந்த ஆற்றல் மற்றும் அறிவான நோக்கத்தினை உருவாக்குவதற்கும்
- இளைஞர்கள் நல்ல குடிமக்களாக்க பயிற்சி அளிப்பதற்கும்
- சுதந்திரம், சமத்துவம், சகோதரத்தும் மற்றும் கூட்டுறவு வாழ்க்கை போன்ற மக்களாட்சியின் மதிப்புகளை பலப்படுத்துவதற்கும்
- பிறரை பாராட்டுதல் மற்றும் மற்றவர் நிலையிலிருந்து புரிந்து கொள்ளும் மனப்பான்மையை வளர்ப்பதற்கும்
- அன்பு, சகிப்புத்தன்மை, ஒத்துழைப்பு, சமத்துவம் மற்றும் இரக்க உணர்வை வளர்ப்பதற்கும்
- பொருள் முதல்வாத மற்றும் ஆன்மீக கொள்கையை ஒருங்கிணைக்கவும் தேவைப்படுகிறது.
2. இந்தியா போன்ற நாட்டிற்கு சமயச்சார்பின்மை அவசியம் நிருபிக்கவும்
- இந்தியா பல சமய மற்றும் கலாச்சார, பண்பாட்டு நம்பிக்கைகள் கொண்ட நாடாகும்.
- பல்வேறு சமயக் கோட்பாடுகளைக் கொண்டுள்ள மக்களிடையே அமைதி மற்றும் நல்லிணக்த்தை பராமரிக்க நமக்கு சமயச்சார்பற்ற நாடு அவசியமாகும்.
- அது சம உரிமைகளையும் வழங்கும் மக்களாட்சியின் ஒரு பகுதி ஆகும்.
- எனவே சமயச்சார்பின்மை இந்தியாவில் மக்களாட்சி வளர்ச்சிக்கான அடிப்படை கொள்கைகளில் ஒன்றாக ஏற்றுக் கொள்ப்பட்டது.