TN 8th Social Science All Unit Question & Answers Tamil medium & English Medium Samacheer Kalvi Guide

8th Social Science Geography Guide Unit 5

8th Social Science Geography Guide Unit . 5

8th Standard Social Science Geography Guide Lesson 5 இடர்கள்

8th Standard Social Science Geography Guide Lesson 5 இடர்கள் Tamil Medium Guide Book Back Question and answers download pdf. 8th STD All Subject Guide. Tamil Nadu Start Board Syllabus Samacheer kalvi 8th std all Lesson / Units question and answers. 8th Social Science TEXT Books download pdf. Tamil and English Text books. 8th Standard Tamil Guide.

TN 8th Social Science All Unit Question & Answers Tamil medium & English Medium Samacheer Kalvi Guide

 

8th Social Science Geography Guide Unit 5  இடர்கள்

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

1. காற்றில் உள்ள நைட்ரஜன் சதவீதம் _______________ 

  1. 09%
  2. 08%
  3. 07%
  4. 63%

விடை : 78.09%

2. இந்தியப் பெருங்கடலில் சுனாமி _______________ ஆம் ஆணடில் ஏற்பட்டது.

  1. 1990
  2. 2004
  3. 2005
  4. 2008

விடை : 2004

3. சுனாமி என்ற சொல் _______________ மொழியிலிருந்து பெறப்பட்டது.

  1. ஹிந்தி
  2. பிரெஞ்சு
  3. ஜப்பானிய
  4. ஜெர்மன்

விடை : ஜப்பானிய

4. புவி மேற்பரப்பு நீருக்கு _______________ எடுத்துக்காட்டாகும்.

  1. ஆர்டீசியன் கிணறு
  2. நிலத்தடி நீர்
  3. அடி பரப்பு நீர்
  4. ஏரிகள்

விடை : ஏரிகள்

5. பருவமழை பொய்ப்பின் _______________ காரணமாக ஏற்படுகிறது

  1. ஆவி சுருங்குதல்
  2. வறட்சி
  3. ஆவியாதல்
  4. மழைப்பொழிவு

விடை : வறட்சி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

  1. இடர்கள் _____________ க்கு வழிவகுக்கிறது.விடை : பேரழிவு
  2. நிலச்சரிவு _____________ இடருக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்..

விடை : இயற்கையால் ஏற்படும்

  1. இடர்கள் தாேன்றுவதன் அடிப்படையில் இடர்களை _____________ வகைகளாகப் பிரிக்கலாம்.விடை : எட்டு
  2. தீவிரவாதம் _____________ இடருக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.

விடை : மனித தூண்டுதலால் ஏற்படம்

  1. நைட்ரஜன் ஆக்சைடுகள் மனிதர்களைப் பாதிக்கும் _____________ மாசுபடுத்திகளாகும்.விடை : முதன்மை
  2. செர்னோபில் அணு விபத்து _____________ ஆணடில் நடைபெற்றது.விடை : 1986

III.பொருத்துக

  1. முதல்நிலை மாசுபடுத்திகள் – தீவிரவாதம்
  2. அபாயகர கழிவுகள் – சுனாமி
  3. நில அதிர்வு – காலாவதியான மருந்துகள்
  4. வானிலையியல் வறட்சி – சல்பர் ஆக்ஸைடுகள்
  5. மனிதனால் தூண்டப்பட்ட இடர் – மழைப் பொழிவு குறைதல்

விடை : 1 – , 2 – , 3 – , 4 – , 5 –

IV. சுருக்கமாக விடையளி

1. இடர் வரையறு

  • மக்கள் பொருளாதார வளங்கள் அல்லது கட்டமைப்புகளை அச்சுறுத்தக்கூடிய நிகழ்வுகள் இடர்கள் எனப்படுகின்றன

2.  இடர்களின் முக்கிய வகைகள் யாவை.

  • இயற்கை இடர்கள்
  • மனிதனால் உருவாக்கப்படும் இடர்கள்
  • சமூக – இயற்கை இடர்கள்

3. அபாயகரக் கழிவுகள் பற்றி குறிப்பு எழுதுக.

  • சுற்றுச்சூழல் மற்றும் மனிதர்களுக்கு பெருத்த சுகாதார தீங்குகளை ஏற்படுத்தக்கூடிய நச்சுக்கழிவுகள் அபாயகர கழிவுகள் எனப்படுகிறது.
  • எகா : மருத்துவ கழிவுகள், கதிரியக்க பொருள்கள், இரசாயனங்கள்

4. நமது நாட்டில் வெள்ள பாதிப்புக்குள்ளாகும் முக்கிய பகுதிகளை பட்டியலிடுக

  • பஞ்சாப், ஹரியானா, உத்திரப்பிரதேசம், வட பீகார், மேற்கு வங்காளத்தை உள்ளடக்கிய கங்கைச்சமவெளி மற்றம் பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு பகுதிகள்
  • கடலோர ஆந்திரம், ஒடிசா, குஜராத் போன்றவை அடிக்கடி வெள்ளப் பாதிப்புக்கு உள்ளாகும் இதர பகுதிகளாகும்.

5. வறட்சியின் வகைகளைக் குறிப்பிடுக

  • வானிலையியல் வறட்சி
  • நீரியியல் வறட்சி
  • வேளாண் வறட்சி

5. மலை அடிவாரப் பகுதிகளில் நாம் ஏன் குடியிருப்புகளை அமைக்க கூடாது?

  • நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் மலை அடிவாரப் பகுதிகளில் குடியிருப்புகளை அமைக்க கூடாது

V. வேறுபடுத்துக

1. இடர் மற்றும் பேரிடர்

இடர்

பேரிடர்

1. புவியிலுள்ள உயிர் மற்றும் உயிரற்ற பொருட்களை பாதிக்கக்கூடிய நிகழ்வை இடர் என்கிறோம்

வரையறுக்கப்பட்ட பகுதியில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் நிகழும் ஒரு அபாயகரமான நிகழ்வை பேரிடர் என்கிறோம்

2. குறைவான இழப்பு மற்றும் மீள்வதற்கு குறைவான காலமே தேவைப்படுகிறது.

பேரிழப்பு மற்றும் மீள்வதற்கு நீண்ட காலமும் தேவைப்படுகிறது.

2. இயற்கை இடர்கள் மற்றும் செயற்கை இடர்கள்

இயற்கை இடர்கள்

செயற்கை இடர்கள்

1. இயற்கைக் காரணிகளால் உருவாகின்றன. இவ்வகையான இடர்களில் மனிதனின் பங்கு இருப்பதில்லை

மனிதர்கள் விரும்பத்தக்காத நடவடிக்கைகள் மூலமும் திட்டமிடப்பட்ட செயல்பாடுகளின் விளைவாகவும் ஏற்படுகின்றன.

எகா : நில அதிர்வு, வெள்ளப்பெருக்கு, சூறாவளி, பயுல்கள், வறிசடசி, நிலச்சரிவு, சுனாமி மற்றும் எரிமலை வெடிப்பு

எகா : அபாயகரமான கழிவுகள், காற்று, நீர்  நிலம் மாசடைதல், அணைக்கட்டு உடைதல், போர், கலவரங்கள், தீவிரவாத செயல்கள்

 

3. வெள்ளப்பெருக்கு மற்றும் வறட்சி

வெள்ளப்பெருக்கு

வறட்சி

கனமழை மற்றும் கடல்களில் உருவாகும் பேரலைகளால் புவியின் மேற்பரப்பில் உள்ள ஒரு பகுதி நீரினால் மூழ்கடிக்கப்படுதல் வெள்ளப்பெருக்கு எனப்படுகிறது

வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, தொழில்துறை மற்றும் மக்களின் அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்ய இயலாத நீர் பற்றாக்குறையே வறட்சி எனப்படுகிறது.

4. நில அதிர்வு மற்றும் சுனாமி

நில அதிர்வு

சுனாமி

நில அதிர்வு என்பது புவியின் மேலாட்டில் தீடீரென எற்படும் கடும் அதிர்வாகும்

கடலடி நில அதிர்வு, கடலடி நிலச்சரிவு மற்றும் எரிமலை வெடிப்பு ஆகியவற்றின் காரணமாக கடலில் ஏற்படும் பேரலைக்கு சுனாமி என்று பெயர்

VI. விரிவான விடையளி

1. காற்று மாசுபடுதலை பற்றி ஒரு கட்டுரை வரைக

  • உட்புற அல்லது வெளிப்புறக் காற்றானது சில வாயுக்கள் மற்றும் திடப்பொருட்களின் சேர்க்கையால் அதன் இயற்கை பண்புகள் மற்றும் காற்றின் சதவீதங்கள் மாறுபடுவதை காற்று மாசுபடுதல் என்கிறோம்.

இதன் வகைகள்

முதன்மை மாசுபடுத்திகள்

  • ஒரு மூலத்தில் இருந்த நேரடியாக வெளியேற்றப்படும் மாசுவாகும்

எ.கா.

  • சல்பர் டை ஆக்ஸைடு
  • நைட்ரஜன் ஆக்ஸைடு
  • கார்பன் டை ஆக்ஸைடு

இரண்டாம் நிலை மாசுபடுத்திகள்

நேரடியாக வெளியேற்றப்படாமல் மற்ற முதன்மை மாசுக்கள் வளிமண்டலத்தில் வினைபுரிவதால் உருவாகுபவை ஆகும்.

எ.கா.

  • தரைமட்ட ஓசோன்
  • பனிப்புகை

2. நில அதிர்வை வரையறுத்து அதன் விளைவுகளை பட்டியலிடுக?

  • புவியின் மேலாேட்டில் தீடீரென ஏற்படும் கடும் அதிர்வாகும். இவ்வதிர்வு தோன்றும் மையத்திலிருந்து அனைத்து திசைகளிலும் தொடர்ச்சியான அதிர்வு ஏற்படுத்துகிறது.

இதன் விளைவுகள்

  • நில அதிர்வின் காரணமாக உயரமான மலைப்பகுதிகளில் நிலச்சரிவும், கடலடி அதிர்வால் சுனாமியும் எற்படுகிறது.
  • நில அதிர்வின் அளவினைப் பொறுத்த இழப்பின் தன்மை மாறுபடுகிறது.

3. நிலச்சரிவிற்கான காரணங்கள் குறித்த விரிவான விளக்கம் தருக.

  • நிலச்சரிவு என்பது புவியீர்ப்பு விசையினால் பாறைகள், மண் மற்றும் தாவரங்கள் கீழ்நோக்கி வேகமாகச் செல்லும் நகர்வைக் குறிப்பதாகும்.
  • செங்கத்து சரிவு மற்றம் கனமழை நிலச்சரிவுகள் எற்பட முக்கிய காரணங்களாகும்.
  • பலவீனமான தளர்ந்த நில அமைப்பு, காடழிப்பு, நில அதிர்வு, எரிமலை வெடிப்பு
  • சுரங்கம் தோண்டுதல், மலைப்பிரதேசங்களில் சாலைகள் மற்றம் இருப்பு பாதைகளின் கட்டுமானம் ஆகியவை நிலச்சரிவுகள் எற்படுவதற்கான மற்ற காரணங்களாகும்.

4. நீர் மாசுபாட்டால் ஏற்படும் விளைவுகள் குறித்த விரிவாக விவாதிக்க

நீர்வாழ் உயிரினங்கள் இறப்பு

  • போதிய ஆக்சிஜன் கிடைக்காமை, சூரிய ஒளியின்மை போன்ற காரணங்களினால் எற்படுகிறது.

உணவுச்சங்கிலியில் மாற்றம்

  • நீரிலுள்ள மாசுபடுத்திகளை நுண்ணுயிரிகள் உண்ணுகின்றன. அவற்றை உண்ணும் மீன்களின் வாியாக அவை மனிதனை வந்தடைகின்றன. இதனால் பல்வேறு நோய்கள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படுகிறது.

மனிதனுக்கு ஏற்படும் பல்வேறு நோய்கள்

  • மாசடைந்த நீரினை பயன்படுத்துவதால் டைபாய்டு, காலரா, மஞ்சள் காமாலை, தோல் நோய்கள் எற்படுகின்றன.

சுற்றுச்சூழல் சிதைவு

  • அமில மழை, வேளாண் நிலங்கள் பாதிப்பு காரணமாக சுற்றுச்சூழல் சிதைவு நேர்கிறது.

Leave a Reply