8th Social Science Guide Unit 4
8th Standard Social Science – History Guide Lesson 4 மக்களின் புரட்சி
8th Standard Social Science – History Guide Lesson 4 மக்களின் புரட்சி Tamil Medium Guide Book Back Question and answers download pdf. 8th STD All Subject Guide. Tamil Nadu Start Board Syllabus Samacheer kalvi 8th std all Lesson / Units question and answers. 8th Social Science TEXT Books download pdf. Tamil and English Text books. 8th Standard Tamil Guide.
8th Social Science Guide Unit 4 மக்களின் புரட்சி
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:
1. பாளையக்காரர் முறை ஏற்படுத்தப்பட்ட ஆண்டு
- 1519
- 1520
- 1529
- 1530
விடை : 1529
2. பின்வரும் தமிழ்நாட்டு பாளையக்காரர்களுள் ஆங்கில ஆட்சியை எதிர்த்ததில் முன்னோடியானவர்
- பூலித்தேவன்
- யூசுப்கான்
- கட்டபொம்மன்
- மருது சகோதரர்கள்
விடை : பூலித்தேவன்
3. காலின் ஜாக்சன் எந்தப் பகுதியின் ஆட்சியாளர்
- மதுரை
- திருநெல்வேலி
- இராமநாதபுரம்
- தூத்துக்குடி
விடை : இராமநாதபுரம்
4. வீரபாண்டிய கட்டபொம்மன் கீழ்க்கண்ட எந்த கோட்டையின் முன்பு தூக்கிலிடப்பட்டார்?
- பாஞ்சாலங்குறிச்சி
- சிவகங்கை
- திருப்பத்தூர்
- கயத்தாறு
விடை : கயத்தாறு
5. வேலு நாச்சியார் எப்பகுதியின் ராணி ஆவார்?
அ) நாகலாபுரம்
ஆ) சிவகிரி
இ) சிவகங்கை
ஈ) விருப்பாச்சி
விடை : சிவகங்கை
6. ’திருச்சிராப்பள்ளி பிரகடனம்’ யாரால் வெளியிடப்பட்டது.
- மருது பாண்டியர்கள்
- கிருஷ்ணப்ப நாயக்கர்
- வேலு நாச்சியார்
- தீரன் சின்னமலை
விடை : மருது பாண்டியர்கள்
7. கீழ்க்கண்டவைகளுள் தீரன் சின்னமலையோடு தொடர்புடைய பகுதி எது?
- திண்டுக்கல்
- நாகலாபுரம்
- புதுக்கோட்டை
- ஓடாநிலை
விடை : ஓடாநிலை
8. ராணி லட்சுமிபாய் எப்பகுதியில் ஏற்பட்ட புரட்சியை வழிநடத்தினார்?
- மத்திய இந்தியா
- டெல்லி
- கான்பூர்
- பரெய்லி
விடை : மத்திய இந்தியா
II. கோடிட்ட இடங்களை நிரப்புக:
- கிழக்குப்பகுதி பாளையங்கள் _______ கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. விடை : கட்டபொம்மன்
- விஸ்வநாத நாயக்கர் அவரது அமைச்சர் _______ உடன் கலந்தாலோசித்து பாளையக்கார முறையை ஏற்படுத்தினார். விடை : அரியநாதர்
- கட்டபொம்மனின் முன்னோர்கள் _______ பகுதியைச் சார்ந்தவர்கள். விடை : ஆந்திரா
- _______ தமிழர்களால் ‘வீர மங்கை’ எனவும் தென்னிந்தியாவின் ஜான்சி ராணி எனவும் அறியப்பட்டார். விடை : வேலுநாச்சியார்
- _______ ‘சிவகங்கையின் சிங்கம்’ என அழைக்கப்படுகிறார். விடை : சின்னமருது
- 1857 புரட்சியை _______ என்பவர் ‘முதல் இந்திய சுதந்திரப் போர்’ என விவரிக்கிறார். விடை : வி.டி.சவார்க்கர்
III.பொருத்துக
- டெல்லி – கன்வர் சிங்
- கான்பூர் – கான் பகதூர் கான்
- ஜான்சி – நானா சாகிப்
- பரெய்லி – லட்சுமி பாய்
- பீகார் – இரண்டாம் பகதூர்ஷா
விடை : 1 – உ, 2 – இ, 3 – ஈ, 4 – ஆ, 5 – இ
IV. சரியா, தவறா?
- விஜய நகர ஆட்சியாளர்கள் தங்கள் மாகாணங்களில் நாயக்கர்களை நியமித்தனர். விடை : சரி
- சிவசுப்பிரமணியம் என்பவர் மருது பாண்டியர்களின் அமைச்சர் ஆவார் விடை : தவறு
- 1799 அக்டோபர் 17 ம் நாள் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டார். விடை : சரி
- திப்பு சுல்தானின் மூத்த மகன் பதே ஹைதர் ஆவார் விடை : சரி
V. கீழ்க்காணும் கூற்றை ஆராய்ந்து சரியான விடையை தேர்வு செய்யவும்
- வேலூர் புரட்சி 1801 ஆம் ஆண்டு ஏற்பட்டது.
- நான்காம் மைசூர் போருக்குப்பின் திப்புவின் குடும்பத்தினர் வேலூர் கோட்டையில் சிறைவைக்கப்பட்டனர்.
III. வேலூர் புரட்சியின் போது வில்லியம் பெண்டிங் சென்னையின் ஆளுநராக
இருந்தார்.
- ஆங்கிலேயருக்கு எதிரான வேலூர் கலகத்தின் வெற்றி இந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வு ஆகும்.
- I & II சரி
- II & IV சரி
- II & III சரி
- I, II, & IV சரி
விடை : II & III சரி
a) தவறான இணையைக் கண்டுபிடிக்கவும்
மருது பாண்டியர் – எட்டயபுரம்
கோபால நாயக்கர் – திண்டுக்கல்
கேரளவர்மன் – மலபார்
துண்டாஜி – மைசூர்
விடை : மருது பாண்டியர் – எட்டயபுரம்
b) மாறுபட்ட ஒன்றைக் கண்டுபிடி
கட்டபொம்மன்,
ஊமத்துரை,
செவத்தையா,
திப்பு சுல்தான்
விடை : திப்பு சுல்தான்
VI. பின்வரும் வினாக்களுக்கு ஒன்று அல்லது இரண்டு வரிகளில் விடையளி.
1. பாளையக்காரர்கள் என்பவர் யார்? சிலரின் பெயரைக் கூறுக?
- விஸ்வநாத நாயக்கர் பாளையக்காரர் முறையை ஏற்படுத்தினார்
- அதன்மூலம் நாடு 72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு
- பாளையமும் ஒரு பாளையக்காரரின் கீழ் கொண்டுவரப்பட்டது.
பாளையக்காரர்கள் சிலர்
- பூலித்தேவர்
- வீரபாண்டிய கட்டபொம்மன்
- ஊமைத்துரை
- மருது சகோதரர்கள்
- தீரன் சின்னமலை
2. பாளையக்கார புரட்சியில் வேலு நாச்சியாரின் பங்கு என்ன?
- இந்தியாவில் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தை எதிர்த்துப் போரிட்ட முதல் (இந்தியப்) பெண்ணரசி ஆவார்.
- இவர் தமிழர்களால் ‘வீரமங்கை’ எனவும் ’தென்னிந்தியாவின் ஜான்சி ராணி’ எனவும் அறியப்படுகிறார்
3. தென்னிந்திய புரட்சியில் பாளையக்கார கூட்டமைப்பின் தலைவர்கள் யாவர்?
- சிவகங்கையின் மருது சகோதரர்கள்
- திண்டுக்கல்லின் கோபால நாயக்கர்
- மலபாரின் கேரளவர்மன்
- மைேரின் கிருஷ்ணப்ப நாக்கர் மற்றம் துண்டாஜி
4. ’திருச்சிராப்பள்ளி பிரகடனத்தின்’ முக்கியத்துவம் யாது?
- ஜூன் 1801ல் மருது சகோதரர்கள் ’திருச்சிராப்பள்ளி பிரகடனம்’ என்றழைக்கப்பட்ட ‘சுதந்திரப் பிரகடனம்’ ஒன்றை வெளியிட்டனர்.
- இதன் மூலம் மருது சகோதரர்கள், ஆங்கிலேயர்களுக்கெதிரான எதிர்ப்புணர்ச்சியை நாடெங்கும் பரப்பினர்.
- 1801 பிரகடனமே ஆங்கிலேயருக்கு எதிராக இந்தியர்களை ஒன்று சேர்க்கும் முதல் அழைப்பாக இருந்தது.
5. வேலூர் கலகத்தின் விளைவுகளை எழுதுக?
- புதிய முறைகள் மற்றும் சீருடை ஒழுங்கு முறைகள் விலக்கிக் கொள்ளப்பட்டன.
- முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திப்புவின் குடும்பத்தினர் வேலூரிலிருந்து கல்கத்தாவிற்கு அனுப்பப்பட்டனர்.
- வில்லியம் காவெண்டிஷ் பெண்டிங் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
6. 1857 ஆம் ஆண்டு புரட்சிக்கான உடனடிக் காரணம் என்ன?
- இராணுவத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட என்பீல்டுரக துப்பாக்கியே உடனடிக் காரணமாக இருந்தது.
- இந்த வகைத் துப்பாக்கியில் குண்டுகளை நிரப்புவதற்கு முன் அதன் மேலுறையைபற்களால் கடித்து நீக்கவேண்டும்.
- அதன் மேலுறையில் பசுவின் கொழுப்பு மற்றும் பன்றியின் கொழுப்பு தடவப்பட்டிருந்தது. எனவே இதனை இந்திய சிப்பாய்கள் (இந்து, முஸ்லீம்) தங்கள் மத உணர்வை புண்படுத்துவதாக கருதினர்.
- ஏனெனில் இந்துக்கள் பசுவை புனிதமாகக் கருதுபவர்களாகவும். முஸ்லீம்கள் பன்றியை வெறுப்பவர்களாகவும் இருந்தனர்.
- இவ்வாறு கொழுப்பு தடவப்பட்ட தோட்டாக்கள் புரட்சிக்கு அடிப்படை மற்றும் உடனடிக் காரணமாயிற்று.