12th Bio Botany Unit 7 Full Guide. Student Guide 360. 12th Botany பாரம்பரிய மரபியல் short answers.

12th Botany Unit 7 Lesson 2 Additional 2 Marks

12th Botany Unit 7 Lesson 2 Additional 2 Marks

12th Standard Botany Lesson 2 short answers. HSC second year Tamil Medium Bio-Botany Unit 7 lesson 2 short answers.  +2 Tamil Medium additional 2 marks. Samacheer kalvi guide Tamil Medium Bio Botany Unit 7 Full Guide. Student Guide 360. 12th Botany பாரம்பரிய மரபியல் answers. 12th Bio Botany Tamil Medium Samacheer kalvi guide Book Back question and answers additional short answers. 12th Botany all important questions with answers unit 7 lesson 2.

Two Mark Question and Answers.  +2 Samacheer kalvi guide Tamil Medium Bio Botany Unit 7 Full Guide. Student Guide 360. 12th Botany பாரம்பரிய மரபியல்.  12th Botany Unit 7 Book Back Full Answer key.  and also the Additional Answer key.

12th Bio Botany Unit 7 Full Guide. Student Guide 360. 12th Botany பாரம்பரிய மரபியல் short answers.

இரண்டு மதிப்பெண் வினாக்கள்

12th Botany Unit 7 Lesson 2 Additional 2 Marks

1. மரபணு வகையம் என்றால் என்ன?

ஒரு பண்புக்குரிய மரபணுக்கள் மரபணு வகையம் எனப்படும்.

2. புறத்தோற்ற வகையம் என்றால் என்ன?

ஒரு உயிரியல் வெளிப்படக்கூடிய பண்புகள் புறத்தோற்ற வகையம் எனப்படும்.

3. ஒரு பண்பு கலப்பு பாரம்பரியம் என்றால் என்ன?

ஒரு பண்பு கலப்பு என்று தூய கால் வழி கொண்ட பெற்றோர் தாவரங்களிடையே வேறு பட்ட ஒரு பண்பினை அடிப்படையாகக் கொண்டு நடைபெறும் பாரம்பரியம் ஒரு பண்பு கலப்பு என்று பெயர்.

4. மெண்டலின் முதல் விதி யாது ?

எதிரிடைப் பண்புகளுக்கான இணைக் காரணி களில் ஒன்று ஓங்கு தன்மையுடனும், மற்றொன்று ஒடுங்கு தன்மையுடனும் காணப்படுகிறது. எ.கா. உயரம் T – குட்டை t T – ஓங்கு தன்மை t – ஒடுங்கு தன்மை.

5. மறைத்தல் என்றால் என்ன?

  • இரு மரபணுக்களின் அல்லீல் அல்லாத இடைச் செயல்.
  • ஒரு இலக்கிலுள்ள மரபணுவின் அல்லீல்களுடன் இடைச்செயல் புரிந்து, பண்பு வெளிப்பாடு தடுக்கப்படுவதற்கு மறைத்தல் பாரம்பரியம் என்று பெயர். (அ)
  • அல்லீல் அல்லாத வேறொரு இரு மரபணுக்கள் இடைச்செயல் புரிந்து ஒரு ஓங்கு மரபணு மற்றொரு மரபணுவின் வெளிப்பாட்டை ஒடுக்கு வதற்கு மறைத்தல் என்று பெயர்.

6. எபிஸ்ட்டாடிக் மரபணு என்றால் என்ன?

  • அல்லீல் அல்லாத இரு மரபணுக்களின் ஒன்றின் வெளிப்பாட்டை மறைக்கும் மரபணு எபிஸ்ட்டாடிக் (அ) மறைக்கும் மரபணு என்று பெயர்.

7. ஹைப்போஸ்ட்டேட்டிக் – என்றால் என்ன?

  • அல்லீல்களல்லாத மரபணுக்களின் இடைச் செய லான மறைத்தலில் எந்த மரபணுவின் வெளிப்பாடு மறைக்கப்டுகிறதோ அதற்கு ஹைப்போஸ்ட்டேட்டிக் என்று பெயர்.

8. மெண்டலின் பரிசோதனைகளுக்கு – தோட்டத்துப் பட்டாணி இரு மிகச்சிறந்த தேர்வாக இருந்ததற்குக் காரணம் தருக.

  • இது ஒரு பருவ தாவரமாகவும், ஒற்றை மரபணுவால் கட்டுப்படுத்தக்கூடிய தெளிவான எதிரிடைப் பண்புகளைக் கொண்டதாகவும் இருப்பது.
  • தற்கருவுறுதல் நடைபெறுவது இயல்பானது அயல் கருவுறுதல் செய்வது எளிதானது.

9. தொடர்ச்சியான வேறுபாடு என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.

  • ஓர் உயிரினத் தொகையில் பெரும்பாலான மிகச் சிறிய அளவு வேறுபாடு கொண்டிருப்பது ஆகும்.
  • எ.கா. மனித உயரம் & மனித தோலின் நிறம்,

10. தொடர்ச்சியற்ற வேறுபாடு என்றால் என்ன? எ.கா. தருக.

  • இதில் உயிரினங்களில் ஒன்று (அ) சில பண்பு களில் பெரிய அளவு வேறுபாடு காணப்படுவது ஆகும்.
  • எ.கா தோட்டப்பட்டாணியின் உயரம் நெட்டை & குட்டை தாவரங்கள்.

11. கலப்பினம் செய்தல் என்றால் என்ன?

  • இரு வேறுபட்ட பண்புகளை உடைய தாவரங் களைக் கலப்பு செய்து அதனால் F, சந்ததியில் சில சிறப்புப் பண்புகளைப் பெறுவதற்கு கலப்பினம் செய்தல் என்று பெயர்.

12. ஓடுங்கு கொல்லி மரபணு பெற்றுள்ள ஆன்டிரைனத்தில் காணப்படும் மூன்று வகைத் தாவரங்களை விளக்குக.

ஆன்டிரைனத்தில் மூன்று வகை தாவரங்கள் உள்ளன.

  • 1. பச்சை நிறம் கொண்ட பசும் தாவரங்கள். (CC)
  • 2. மஞ்சள் நிறத்துடன் கூடிய பசும்தாவரங்கள் கரோடினாய்டுகளைக் கொண்டிருப்பதால் வெளிறிய பச்சை அல்லது தங்க நிறம் பெற்ற

13. பைசம் சட்டைவம் தாவர மலர்களின் ஊதா நிறமிகள் தோன்றுவதில் மரபணுக்களின் பங்கினை விளக்குக.

  • தாவர மலர்களின் நிறத்திற்குக் காரணமான மரபணு உலக ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப் பட்டது.
  • பட்டாணியில் இது மரபணு A என்றழைக்கப் பட்டது. ஒங்கு நிலையிலுள்ள இம்மரபணு. படியெடுத்தல் காரணியாகச் செயல்பட்டு ஒரு புரதத்தை உற்பத்தி செய்து அது ஆந்தோசயனின் நிறமி உருவாக்கத்திற்கு காரணமாகிறது. எனவே தான் பட்டாணித்தாவர மலர்கள் ஊதா நிறத்தைப் பெறுகின்றன.

14. தூய கால் வழி என்றால் என்ன?

  • ஒரு தூய தனித் தாவரத்தை தற்கருவுறுதலுக்கு உட்படுத்தும் போது அதிலிருந்து நிலையான பாரம்பரியப் பண்புடைய தாவரங்கள் ஒரே ரபணுவாக்க, புறப்பண்பாக்கம் உடைய உருவாக்கப்படுவதற்கு தூயகால்வழி என்று பெயர்.

12th Botany Lesson 2 short answers

15. பல் காரணியப் பாரம்பரியம் என்றால் என்ன?

  • பல்வேறு மரபணுக்கள் கூட்டாகச் சேர்ந்து ஒரு பண்பைத் தீர்மானிக்கும் முறைக்குப் பல் மரபணு பாரம்பரியம் என்று பெயர். (எ.கா) கோதுமை விதையுறையின் நிறம் சார்ந்த பாரம்பரியம்.

16.மெண்டலிசம் (அ) மெண்டலிய மரபியல் என்றால் என்ன?

  • தோட்டப்பட்டாணி தாவரத்தில் மெண்டல் மேற் கொண்ட கலப்புறுத்த ஆய்வுகள், தாவர கலப்புயிரி முறைகள் அடிப்படையில் கிரிகர் மெண்டல் உருவாக்கிய பாரம்பரியம் சார்ந்த கருதுகோள்களையும் விதிகளையும் விளக்குவதே மெண்டலிய மரபியல் தத்துவம் (அ) மெண்டலிசம் – இது நவீன மரபியலுக்கு அடிப் படையாக அமைந்தது எனவே மெண்டல் மரபியலின் தந்தை எனப்படுகிறார்.

17. மரபணு இடையீட்டுச் செயல் என்றால் என்ன?

  • ஒரு புறத்தோற்றப் பண்பு ஒன்று (அ) அதற்கு மேற்பட்ட மரபணுக்களால், ஒவ்வொன்றும் இரண்டு (அ) அதற்கு மேற்பட்ட அல்லீல்களைக் கொண்டுள்ள மரபணுத் தொகுப்புகளால் கட்டுப் படுத்தப்படுகிறது இதற்கு மரபணு இடைச்செயல் என்று பெயர். (எ.கா) மறைத்தல் பாரம்பரியம்.

18. முதுமரபு மீட்சி என்று பெயர்?

  • ஒரு உயிரியல் பரிணாம மாற்றங்களுக்குப் பின்னர், இழக்கப்பட்ட பண்பு ஒன்று மீண்டும்
    அவ்வுயிரியல் தோன்றுவது, முது மரபு மீட்சி என்று பெயர்.

19. முழுமையற்ற ஓங்கு தன்மை (அ) கலப்புறா மரபணுக்கள் என்றால் என்ன?

  • ஓங்கு, ஒடுங்கு அல்லீல்கள் என்றில்லாமல் இரு வகை அல்லீல்களும் கூட்டாகச் செயல்பட்டு இடைப்பட்ட பாரம்பரியத்தினை (அ) புறத்தோற் றத்தை வெளிப்படுத்துவதற்கு இடைப்பட்ட பாரம்பரியம் என்று பெயர். (எ.கா) அந்தி மந்தாரை

20. இரு தூய கால் வழி தாவரங்களிடையே காணப் படும் கலப்பின் சந்ததிகளை எவ்வாறு வரை படத்தின் மூலம் விவரிப்பாய்?

  • F2 பன்னட்கட்டம் : இரு பண்பு கலப்பு

*

RY

Ry

rY

ry

RY

RRYY

RRYy

RrYy

RrYy

Ry

RRYy

RryY

RrYy

Rryy

rY

RrYY

RrYy

rrYY

rrYy

ry

RrYy

Rryy

rrYy

rryy

21. மரபணுக்கள் என்றால் என்ன?

  • பாரம்பரியத்தின் செயல்படும் அலகுகளான இவை- குரோமோசோம்களின் குறிப்பிட்ட அமை விடங்களில் காணப்படுகின்றன. பெற்றோர் களிடமிருந்து சந்ததிகளுக்கு உயிர் வேதியிய, உள்ளமைப்பிய மற்றும் நடத்தை பண்புகளைக் கடத்தும் பாரம்பரியக் கூறுகளாகும்.

22. இனத்தொகை பாரம்பரியவியல் என்றால் என்ன?

  • இது ஒரு இனத்தொகையில் காணப்படும் பாரம் பரியம் சார்ந்த வேறுபாடுகளையும், பல்வேறு கால, இட சூழ்நிலைகளில் மரபணுக்களில் (அ) அல்லீல்களில் ஏற்படும் நிரல் விகிதம் குறித்து அறியும் இயலாகும்.

23. மூலக்கூறு பாரம்பரியவியல் என்றால் என்ன?

  • மரபணுக்கள், புற அமைப்பு, மற்றும் உயிர்ச் செயல்களை எவ்வாறு மூலக்கூறு நிலையில் மேற்கொள்கிறது என்பதை விளக்கும் பிரிவு.

24. சடுதி மாற்றம் வரையறு.

  • ஒரு குரோமோசோமின் மரபணுக்களின் நியூக்ளி யோடைடு வரிசையில் காணப்படும் நிலையான மாற்றமே சடுதி மாற்றம் எனப்படும். இது பரிணாம முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

25.ஊடுகடத்தல் மரபியல் என்றால் என்ன?

  • மரபணுக்கள் எவ்வாறு பெற்றோரிடமிருந்து சந்ததிக்குக் கடத்தப்படுகின்றன என்பதை விளக்கும் ஒரு பிரிவாகும்.

26. பல் மரபணு பாரம்பரியம் வரையறு.

  • ஒரு உயிரினத்தின் பல மரபணுக்கள் ஒன்று சேர்ந்து ஒரு பண்பைத் தீர்மானிக்கும் முறைக்குப் பல் மரபணு பாரம்பரியம் எனப்படும்.

27. மெண்டலின் அனுபவ விதிகள் (Empirical laws) எவ்வாறு உருவானது?

  • மெண்டல் கூர்மையான துல்லியமான பகுப்பாய் வினால் கலப்பினச் சோதனைகளை மேற் கொண்டு வரும் சந்ததிகளின் பாரம்பரியத்தை முன்மொழிந்தார். அது பெரும்பாலும் சரியாகவே இருந்தது. இதையே அனுபவ அணுகுமுறை என்றழைக்கப்படுகிறது. இதன் மூலம் பெறப் படும் விதிகள் அனுபவ விதிகள் என்றழைக்கப் படுகின்றன.

28. மெண்டல் தன் ஆய்வுகளில் வெற்றியாளராக இருக்க என்ன காரணம்?

  • மெண்டலின் பகுப்பாய்வு, அனுபவ அறிவு.
  • கணித மற்றும் புள்ளியல் அறிவின் பயன்பாடு நிகழ்விரைவு முறைகளைக் கையாண்டது. எண்ணிக்கைகள் விவரங்கள் துல்லியமான விரிவான பதிவுகள்
  • கவனமாக திட்டமிட்ட சோதனைகள்
  • எடுத்துக் கொண்ட ஆய்வு தாவரம் தோட்டப் பட்டாணி (தனிப்பட்ட குரோமோசோம்களில் உள்ள ஏழு எதிரிடைப் பண்புகள்) இவை அனைத்துமே மெண்டலின் வெற்றிக்குக் காரண மாக அமைந்தது.

29. தன் மகரந்தச் சேர்க்கை (அ) தற்கருவுறுதல் என்று பெயர்?

  • ஒரு தாவரத்தின் ஒரு மலரின் மகரந்தத்தூளை, அதே மலரின் சூலமுடியில் சேர்த்து மகரந்தச் சேர்க்கையடையச் செய்து – தொடர்ந்து கருவுறுதல் அடையச் செய்வதற்கு தற்கரு வுறுதல் என்று பெயர்.

30. தூய கால் வழி கலப்பு என்பது ஒத்த காரணி தன்மையா? விளக்கு.

  • தூய கால் வழி என்பதை ஒத்த காரணி தன்மை என்பதும் சரியே – ஒரே விதமான மரபணு, புறத் தோற்றப் பண்புகளை உடைய உயிரினங்களே தூய கால் வழி இவை தற்கருவுறுவாக்கத் தினால் மட்டுமே உருவாக்கப்படுகின்றன

12th Botany Lesson 2 short answers

12th Botany Unit 7 Lesson 2 Additional 2 Marks

31. ஆந்தோசயனின் குறிப்பு வரைக.

  • இவை இயல்பாக தாவரங்களில் காணப்படும் நிறமி, சிவப்பு, ஊதா, நீலம் ஆகிய நிறங்களுக்கு உரியது.
  • இந்நிறமிகள் குறைந்த pH (அமிலத்தன்மை)யில் நிலையாக இருக்கும் அப்போது அது சிவப்பு நிறமாகக் காணப்படும். அதிகமாக pH அளவுக்கேற்ப அதன் நிறம் ஊதா மற்றும் நீலமாக வெளிறக்கூடியது.

32. சந்ததி என்பதை விவரி.

  • பாலினப் பெருக்கத்தினால் உருவாக்கப்பட்ட (அ) பாலிலா இனப்பெருக்கம் (அ) தற்கருவுறுதல் இவற்றினால் உருவாக்கப்பட்ட சேய் உயிரினங்கள் (தாவரங்கள் (அ) விலங்கினங்கள்) அனைத்தும் உண்மையான சந்ததி எனப்படுகிறது.

33. முப்பண்புக் கலப்பின நுட்பத்தை விவரி.

  • மூன்று பண்பு கலப்பில் மூன்று எதிரிடைப் பண்புகளைப் பெற்ற தாவரங்களுக்கிடையே நடை பெறும் ஒரு மரபியல் கலப்பாகும்.
  • ஒரு தற்கருவுறுதல் செய்யும் மூன்று பண்பு கலப்பு தாவரம் 8 விதமான கேமீட்டுகளை 64 தாவரங்களையும் உருவாக்குகிறது. மெண்டலின் தனித்துப் பிரிதல் விதி மற்றும் சார்பின்றி ஒதுங்குதல் விதி மூன்று பண்பு கலப்புக்கும் பொருந்தும்.

34. பசுங்கணிகம் மற்றும் மைட்டோகாண்டிரியா பண்புகளின் பாரம்பரியம் மென்டலின் பாரம்பரிய முறையை பின்பற்றவில்லை. ஏன்? PTA – 1

  • பசுங்கணிகம் மற்றும் மைட்டோகாண்டிரியா இவற்றின் பண்புகளின் பாரம்பரியம் மெண்டலின் பாரம்பரிய முறையை பின்பற்றாமல் குரோமோசோம் தவிர்த்த பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. இதன் பண்புகளாவன,
  • a) சைட்டோபிளாசம் சார்ந்தது. இவ்விரு உள்ளுருப்புகளில் காணப்படும் பிளாஸ்மோ ஜீன்கள் சார்ந்தது.
  • b) இவற்றின் கடத்தல் ஒரு பெற்றோரைச் சார்ந்தது (பெண் பெற்றோரிடமிருந்து கடத்தப்படுகிறது)
  • c) இவற்றில் குறைவான மறுசேர்க்கை விகிதம் காணப்படுகிறது.

35. கலப்புயிரிகள் என்றால் என்ன ?

  • மெண்டலின் கலப்புறுதல் சோதனைக்குப்பின் உருவாகும் தாவரங்கள் வேறுபட்ட பண்பிணைவுகளைப் பெற்றிருப்பதால் அவை கலப்புயிரிகள் எனப்படும்.
  • இரு வேறுபட்ட அல்லீல்களைக் கொண்டிருந்தால் அது மாறுபட்ட பண்பிணைவு என்றழைக்கப்படுகிறது.

36. இரு பண்புக்கலப்பு என்றால் என்ன?

  • இரு பண்புக்கலப்பு என்பது இரு எதிரிடைப் பண்புகளைப் பெற்ற தாவரங்களுக்கிடையே நடைபெறும் ஒரு மரபியல் கலப்பாகும்.
  • இரு பண்புக்கலப்பு பாரம்பரியமென்பது இரு வேறுப்பட்ட அல்லீல்களைக் கொண்ட மரபணுக் களிடையே நிகழும் பாரம்பரியம் ஆகும்.

12th Botany Lesson 2 short answers

Leave a Reply