8th Science Guide Lesson 17 தாவர உலகம்
8th Std Science Guide Lesson 17 தாவர உலகம் | Tamil Medium
8th Science Tamil Medium Guide Lesson 17 தாவர உலகம் book back answers. 8th Standard Science Guide Tamil Medium Book Back Answers. 8th Science Samacheer kalvi guide Tamil Medium 8th Text Book download pdf. 8th std All Subject Guide.
8th Science Guide பாடம் 17 தாவர உலகம்
I. கோடிட்ட இடத்தை நிரப்புக.
- ‘வகைபாட்டியல்’ என்ற சொல்………………… லிருந்து பெறப்பட்டது.
விடை : கிரேக்கத்தி
2 இரு சொற்பெயரிடு முறையை முதன்முதலில் ……………………. என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. விடை : கரோலஸ் லின்னேயஸ்
- “ஜெனிரா பிளாண்டாரம்” என்ற நூலை எழுதியவர் ……………….
விடை : பெந்தம் மற்றும் ஹீக்கர்
- ஒரு விதையிலை தாவர விதைகள் ……………. வித்திலைகளை மட்டுமே கொண்டுள்ளன. விடை : ஒரு
5 பழுப்புபாசி ……………. வகுப்பைச் சார்ந்தது. விடை : பியோபைசியே
- அகார் அகார் …………. என்ற பாசியிலிருந்து பெறப்படுகிறது.
விடை : சிவப்பு பாசிகள்
- பூஞ்சைகளின் சேமிப்பு பொருள் …………… மற்றும் …………..
விடை : கிளைக்கோஜன் மற்றும் எண்ணெய்
- …………….. ஒரு முதல் நிலத்தாவரம். விடை : டெரிடோஃபைட்டுகள்
- ……………… தாவரங்களில் சைலம் மற்றும் ஃபுளோயம் காணப்படுவதில்லை.
விடை : பிரையோஃபைட்
- ……………. தாவரங்களில் வலைப்பின்னல் நரம்பமைவு காணப்படுகிறது.
விடை : இரு விதையிலை
II சரியான விடையைத் தேர்ந்தெடு.
1.தூதுவளையின் இருசொற்பெயர் சொலானம் ட்ரைலொபேட்டம் ஆகும். இதில் ’சொலானம்’ என்ற சொல் எதைக் குறிக்கிறது.
- சிற்றினம்
- பேரினம்
- வகுப்பு
- துறைகள்
விடை : பேரினம்
2. காலனி வடிவில் காணப்படும் பாசிகளுக்கு எடுத்துக்காட்டு ……………..
- ஆசில்லடோரியா
- நாஸ்டாக்
- வால்வாக்ஸ்
- குளோரெல்லா
விடை : வால்வாக்ஸ்
3. புளோரிடியன் ஸ்டார்ச் ……………… ல் சேமிப்பு பொருளாக உள்ளது.
- குளோரோஃபைசி
- பியோஃபைசி
- ரோடோஃபைசி
- சயனோஃபைசி
விடை : ரோடோஃபைசி
4. உண்ணத் தகுந்த காளான்
- பாலிபோரஸ்
- அகாரிகஸ்
- பெனிசிலியம்
- அஸ்பர்ஜில்லஸ்
விடை : அகாரிகஸ்
5. …………… தாவரங்கள் மண் அரிப்பை தடுக்கிறது.
- பாசி
- பூஞ்சை
- பிரையோஃபைட்டுகள்
- டெரிடோஃபைட்டுகள்
விடை : பிரையோஃபைட்டுகள்
6. நிலத்தாவரங்களில் முதல் வாஸ்குலார் பூவாத் தாவரங்கள்
- பிரையோஃபைட்டுகள்
- டெரிடோஃபைட்டுகள்
- ஜிம்னோஸ்பெர்ம்கள்
- ஆஞ்சியோஸ்பெர்ம்கள்
விடை : டெரிடோஃபைட்டுகள்
7. நன்கு வளர்ச்சியடைந்த ஸ்போரோபைடிக் தாவர உடலம் காணப்படுவது.
- பிரையோஃபைட்டுகள்
- டெரிடோஃபைட்டுகள்
- ஜிம்னோஸ்பெர்ம்கள்
- ஆஞ்சியோஸ்பெர்ம்கள்
விடை : ஆஞ்சியோஸ்பெர்ம்கள்
8. இரு சொற்பெயரிடு முறையை முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு ……….
- 1970
- 1975
- 1978
- 1623
விடை : 1623
9. பெனிசிலின் ஒரு உயிர் எதிர்பொருள். இவை எதிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது?
- பாசிகள்
- பூஞ்சை
- பிரையோஃபைட்டுகள்
- டெரிடோஃபைட்டுகள்
விடை : பூஞ்சை
III சரியா? தவறா?
- பாலிபெட்டலேவில் இதழ்கள் தனித்தவை விடை : சரி
- இரு சொற்பெயரில் இரண்டுக்கு மேற்பட்ட சொற்களைக் கொண்டிருக்கும் விடை : தவறு
சரியான கூற்று : இரு சொற்பெயரில் இரண்டுக்கு சொற்களைக் கொண்டிருக்கும்
- செயற்கை முறை வகைப்பாடானது தாவரத்தின் உடல பண்புகளை அடிப்படையாகக் கொண்டது. விடை : சரி
- பூஞ்சைகளின் செல் சுவர் கைட்டினால் ஆனது. விடை : சரி
- பைனஸ் ஒரு மூடிய விதைத் தாவரம். விடை : தவறு
சரியான கூற்று : பைனஸ் ஒரு திறந்த விதைத் தாவரம்.
- பிரையோஃபைட்டுகளும் நீர் வாழ்த் தாவரங்களாகும். விடை : தவறு
சரியான கூற்று : பிரையோஃபைட்டுகளும் நீர் வாழ்த் தாவரங்கள் அல்ல.
- இரு விதையிலை தாவரங்கள் ஒரு விதையிலைத் தாவரங்களை விட நன்கு வளர்ச்சியடைந்த பண்புகளை கொண்டிருக்கிறது. விடை : சரி
- பிரையோஃபைட்டுகளில் மாஸ்கள் நன்கு வளர்ச்சியடைந்த தாவரமாகும். விடை : சரி
- பிரையோஃபைட்டுகளில் ஸ்போரோபைட்டிக் தாவர நிலை ஓங்கியது. விடை : தவறு
சரியான கூற்று : பிரையோஃபைட்டுகளில் கேமிட்டோபைட்டிக் தாவர நிலை ஓங்கியது.
- டெரிடோஃபைட்டுகளில் இரு மடிய (2n) நிலை ஓங்கியது. விடை : சரி
- ஆஞ்சியோஸ்பெர்ம்களில் விதைகள் சூலகப்பையினுள் உற்பத்தி செய்யப்படுகிறது. விடை : சரி
- ஜிம்னோஸ்பெர்ம்களில் சூல்கள் மலர்களிலிருந்து உருவாக்கப்பட்டது. விடை : தவறு
சரியான கூற்று : ஜிம்னோஸ்பெர்ம்களில் சூல்கள் கூம்புகளிலிருந்து உருவாக்கப்பட்டது.
IV பின்வருவனவற்றை பொருத்துக.
1. கீழக்கண்ட இணைகளில் சரியானவை எது?
அ) லாமினேரியா – அயோடின் ஆ) நாஸ்டாக் – நைட்ரஜன் நிலைநிறுத்தம்
இ) பாலிசைப்போனியா – பசும் பாசி ஈ) ரோடோஃபைசி -பியூகோசாந்தின்
- அ, ஆ, இ
- இ, ஈ
- அ, இ, ஈ
- அ, ஆ, இ, ஈ
விடை : இ, ஈ
- சரியான இணையை கண்டுபிடி
அ) ஃபில்லாந்தஸ் அமாரஸ் – யூபோர்பியேசி |
ஆ) சொலானம் ட்ரைலொபேட்டம் – சொலானேசி |
இ) அகாலிபா இன்டிகா – மால்வேசி |
ஈ) ஏகில் மார்மிலாஸ் – ரூட்டேசி |
- அ, ஆ
- இ, ஈ
- அ, ஆ, இ
- அ, ஆ, ஈ
விடை : அ, ஆ, ஈ
3. கீழ்க்கண்ட எந்த பண்புகள் ஆஞ்சியோஸ்பெர்ம்களுக்கு பொருத்தமானவையல்ல?
அ) வலைப்பின்னல்/ இணை போக்கு நரம்பமைவு, மூடிய விதைத் தாவரங்கள், புளோயத்தில் சல்லடை குழாய்கள் காணப்படுகின்றன
ஆ) திறந்த விதை, சூலகப்பை காணப்படுவதில்லை, கேமிட்டுகள் கூம்புகளில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இ) டிரக்கீடுகள் கடத்தும் செல்கள், ஃபுளோயத்தில் துணைச்செல்கள் காணப்படுவதில்லை
ஈ) மூவங்க அல்லது நாவங்க மலர்கள், மூடிய விதை, விதை உறையுடன் கூடிய விதை, கனி கொண்டுள்ளது.
- அ, ஆ
- ஆ, இ
- இ, ஈ
- அ, ஈ
விடை : ஆ, இ
4. பின்வரும் வரிசையில் சரியானது எது?
அ) பிரையோஃபைட்டுகளில் – கேமீட்டக தாவர நிலை – பால் உறுப்பு – கேமீட் இணைவு – கருமுட்டை – வித்தக தாய் செல்- வித்து – உடலம்
ஆ) ஆஞ்சியோஸ்பெர்ம்களில்- மகரந்தச்சேர்க்கை – கருவுறுதல் – கருமுட்டை – புதிய தாவரம்
இ) ஜிம்னோஸ்பெர்ம்களில்- ஆண் கூம்பு மற்றும் பெண்கூம்பு- நுணி வித்துகள் மற்றும் பெருவித்துகள்- கருமுட்டை- புதிய வித்தக தாவரம்
ஈ) டெரிடோஃபைட்டுகளில்- காற்றின் மூலம் மகரந்தச்சேர்க்கை- நீரில் கருவுறுதல்- கருமுட்டை-புரோதாலஸ்- புதிய தாவரம்
- அ, ஆ, இ
- அ, ஆ
- இ, ஈ
- ஆ, ஈ
விடை : அ, ஆ, இ
5. வரிசை I வரிசை II உடன் பொருத்துக
வரிசை I |
வரிசை II |
அ) பெனிசிலியம் நொட்டேட்டம் |
1) நெல்லின் வெப்பு நோய் |
ஆ) ஜிங்கோ பைலோபா |
2) அலங்காரத் தாவரம் |
இ) அரக்கேரியா பிட்வில்லி |
3) சேற்றுப் புண் |
ஈ) டீனியாபெடிஸ் |
4) பெனிசிலின் |
உ) பைரிகுலேரியா ஒரைசே |
5) உயிர்தொல்லுயிர் படிமம் |
- அ – 4, ஆ – 5, இ – 1, ஈ – 2, உ – 3
- அ – 4, ஆ – 5, இ – 2, ஈ – 3, உ – 1
- அ – 3, ஆ – 2, இ – 4, ஈ – 5, உ – 1
- அ – 4, ஆ – 2, இ – 1, ஈ – 5, உ – 3
விடை : அ – 4, ஆ – 5, இ – 2, ஈ – 3, உ – 1
V பின்வரும் வினாக்களுக்கு ஓரிரு வரிகளில் விடையளி
1. தாலஸ் வரையறு
- பாசிகளின் தாள் போன்ற தாவர உடலம் தாலஸ் எனப்படும்
2. இருசொற்பெயரிடு முறை என்பது என்ன? எடுத்துக்காட்டு தருக.
தாவரங்களின் இருசொற்களால் பெயரிடுதல் இருசொற்பெயரிடு முறை எனப்படும்
- மாமரம் – மாஞ்சிஃபெரா இண்டிகா
3. இரு விதையிலைத் தாவரங்களின் இரு பண்புகளை எழுதுக.
- இரண்டு விதையிலைகளைக் கொண்டுள்ளன.
- இலைகளில் வலைப்பின்னல் நரம்பமைவு உள்ளது.
- ஆணிவேரைக் கொண்டிருக்கும்.
- மலர்கள் நான்கு அல்லது ஐந்து அங்கங்களைக் கொண்டிருக்கும்.
4. ஜிம்னோஸ்பெர்ம் தாவரங்களின் விதைகள் திறந்தவை. ஏன்?
- ஜிம்னோஸ்பெர்ம் சூலானது சூற்பையால் சூழப்பட்டிருப்பதில்லை. எனவே இது திறந்த விதைத் தாவரங்கள் எனப்படுகிறது
5. பூஞ்சைகளின் ஏதேனும் இரு பொருளாதார முக்கியத்துவத்தை எழுதுக.
- நுண்ணியிர்க் கொல்லிகள் பூஞ்சைகளிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.
- உதாரணம் : பெனிசிலின் பெனிசிலியம் நொட்டேட்டத்திலிருந்து பெறப்படுகிறது
- நியோமைசின், ஜென்டாமைசின், ஈஸ்ட்டில் உள்ள இன்வர்டேஸ், சைமேஸ் போன்ற நொதிகள் சர்க்கரைக் கழிவிலிருந்து நொதித்தல் மூலம் ஆல்கஹாலை உருவாக்குகிறது.
VI பின்வரும் வினாக்களுக்கு சுருக்கமாக விடையளி
1. இயற்கை முறை வகைபாட்டினை சுருக்கமாக எழுதுக.
- தாவரங்களின் பல பண்புகளின் அடிப்படையில் இயற்கை வகைப்பாட்டு முறை உருவாக்கப்பட்டுள்ளது. பெந்தம் மற்றும் ஹுக்கரின் வகைப்பாட்டியல் முறை இதற்கு எடுத்துக்காட்டு ஆகும்.
- தாவரங்களின் புறத்தோற்றப் பண்பு, இனப்பெருக்கப் பண்பின் அடிப்படையில் இந்த முறை வகுக்கப்பட்டுள்ளது.
- உலர் தாவரத் தொகுப்பு மற்றும் தாவரவியல் பூங்காக்களில் தாவரங்களை வகைப்படுத்த இம்முறை பயன்படுத்தப்படுகிறது.
2. பாசிகளின் ஏதேனும் மூன்று பொருளாதார முக்கியத்துவத்தை எழுதுக.
வேளாண்மை
சில நீலப் பச்சைப் பாசிகள் வளி மண்டல நைட்ரஜனை மண்ணில் நிலைநிறுத்துகின்றன. இவை மண்ணின் வளத்தை அதிகரிக்கின்றன.
எ.கா. நாஸ்டாக், அனபீனா
அகார் அகார்
அகர் அகர் என்பது, சிவப்புப் பாசிகளிலிருந்து எடுக்கப்படுகிறது. இது ஆய்வகங்களில் வளர்ச்சி ஊக்கியாக விளங்குகிறது.
எ.கா. ஜெலீடியம், கிரேசிலேரியா
அயோடின்
பழுப்புப் பாசிகளிலிருந்து அயோடின் பெறப்படுகிறது.
எ.கா. லேமினேரியா
3. பாசிகளுக்கும் பூஞ்சைகளுக்கும் உள்ள வேறுபாடுகளை எழுதுக.
பாசிகள் |
பூஞ்சைகள் |
1. பாசிகள் தற்சார்பு உயிரிகள் |
பூஞ்சைகள் பிறசார்பு உயிரிகள் |
2. நிறமிகள் உள்ளது |
நிறமிகள் இல்லை |
3. சேகரிக்கும் உணவு ஸ்டார்ச் |
சேகரிக்கும் உணவு கிளைக்கோஜன் மற்றும் எண்ணெனய் |
4. சில பாசிகள் புரோகேரியாட்டிக் செல் அமைப்பைப் பெற்றுள்ளது |
அனைத்தும் யூகேரியாட்டிக் செல் அமைப்பைப் பெற்றுள்ளது |
எ.கா. சயனோ பாக்டீரியா (நாஸ்டாக் அனஃபீனா) |
எ.கா. அகாரிகஸ் |
4. பிரையோஃபைட்டுகளில் எத்தனை வகுப்புகள் உள்ளது? அவை யாவை?
- வகுப்பு 1 – ஹிப்பாட்டிக்கே (ஈரல் வடிவம்
- எ.கா. ரிக்சியா
- வகுப்பு 2 – ஆந்தோசெரட்டே (கொம்பு வடிவம்)
- (எ.கா.: ஆந்தோசெரஸ்)
- வகுப்பு 3 – மஸ்கி (மாசஸ்)
- எ.கா. ஃபியூனேரியா
5. டெரிடோஃபைட்டுகளின் ஏதேனும் நான்கு பண்புகளை எழுதுக.
- இவை முதன் முதலில் தோன்றிய உண்மையான நிலத் தாவரங்கள். கடத்துத் திசுக்களான சைலம் மற்றும் ஃபுளோயம் இவற்றில் உள்ளன. எனவே இவை கடத்துத் திசு பூவாத் தாவரம் என அழைக்கப்படுகின்றன.
- இவற்றில் சந்ததி மாற்றம் நடைபெறுகிறது. இருமய ஸ்போரோஃபைட் நிலையானது ஒருமய கேமீட்டோஃபைட் நிலையுடன் சந்ததி மாற்றம் நடைபெறுகிறது.
- தாவர உடலமானது ஸ்போரோஃபைட் எனப்படும். இது தாவரத்தின் ஓங்குநிலை ஆகும். இது வேர், தண்டு, இலை எனப் பிரிக்கப்பட்டுள்ளது.
- ஸ்போரோஃபைட்டானது ஸ்போர்கள் மூலம் இனப்பெருக்கம் செய்கிறது. ஸ்போர்கள், வித்தகத்தினுள் உருவாகின்றன.
VII பின்வரும் வினாக்களுக்கு விரிவாக விடையளி
1. பெந்தம் ஹுக்கர் வகைபாட்டு சுருக்க அட்டவணையை வரைக
2. ஒரு விதையிலை மற்றும் இரு விதையிலை தாவரங்களுக்கு இடையே உள்ள ஏதேனும் ஐந்து வேறுபாடுகளை எழுதுக.
ஒரு விதையிலை தாவரங்கள் |
இரு விதையிலை தாவரங்கள் |
1. விதை, ஒரு விதையிலையைக் கொண்டுள்ளது |
விதைகள், இரண்டு விதையிலைகளைக் கொண்டிருக்கும். |
2. இத்தாவரங்கள், சல்லி வேர்த் தொகுப்புடனும் இலைகள் இணைப் போக்கு நரம்பமைவுடனும் காணப்படுகின்றன. |
இவை ஆணிவேர்த் தொகுப்புடனும் இலைகள் வலைப்பின்னல் நரம்பமைவுடனும் காணப்படும். |
3. மலர்கள் மூன்று அடுக்கு உடையவை. |
மலர்கள் நான்கு அல்லது ஐந்து அங்கங்களைக் கொண்டிருக்கும். |
4. அல்லி மற்றும் புல்லி இதழ்கள் பிரிக்கப்படாமல் ஒரே வட்டத்தில் அமைந்திருக்கும். |
அல்லி மற்றும் புல்லி என இரண்டு இதழ் அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும். |
5. மகரந்தச் சேர்க்கை பெரும்பாலும் காற்றின் மூலம் நடைபெறும். |
மகரந்தச் சேர்க்கை பெரும்பாலும் பூச்சிகள் மூலம் நடைபெறும். |
எ.கா. புல், நெல், வாழை |
எ.கா. அவரை, மாமரம், வேப்பமரம |
3. ஜிம்னோஸ்பெர்ம் மற்றும் ஆஞ்சியோஸ்பெர்ம் தாவரங்களுக்கு இடையே உள்ள ஐந்து வேறுபாடுகளை எழுதுக.
ஜிம்னோஸ்பெர்ம் |
ஆஞ்சியோஸ்பெர்ம் |
1. ஜிம்னோஸ்பெர்ம் திறந்த விதை தாவரங்கள். |
ஆஞ்சியோஸ்பெர்ம்மூடிய விதை தாவரங்கள். |
2. சூலானது சூற்பையால் சூழப்பட்டு இருப்பதில்லை. |
சூலானது சூற்பையால் சூழப்பட்டு இருக்கும். |
3. ஜிம்னோஸ்பெர்மின் வாழ்க்கைச் சுழற்சியில் ஸ்போரோஃபைட், கேமீட்டோஃபைட் என்ற இருநிலைகள் காணப்படுகின்றன. |
ஆஞ்சியோஸ்பெர்ம் வாழ்க்கைச் சுழற்சியில் கேமீட்டோஃபைட் சுழற்சி மட்டுமே காணப்படுகின்றன. |
4. இவை பூக்கா தாவரங்கள். |
இவை பூக்கும் தாவரங்கள். |
5. இவை கனிகளை உருவாக்குவதில்லை |
இவை கனிகளை உருவாக்குகிறது |
4. ஜிம்னோஸ்பெர்ம்களின் பொருளாதார முக்கியத்துவத்தை எழுதுக.
- ஊசியிலைத் தாவரங்களின் மரக்கட்டையானது தாள்தொழிற்சாலைகளில் தாள் உற்பத்திக்குப் பயன்படுகிறது. எ.கா. பைனஸ், அகாத்திஸ்
- ஊசியிலைத் தாவரங்களின் மென்கட்டைகள் கட்டுமானத் தொழிலுக்கும் பொருள்களைப் பொதிவதற்கும் மற்றும் ஒட்டுப் பலகைத் தயாரிப்பிற்கும் பயன்படுகிறது. எ.கா. செட்ரஸ், அகாதிஸ்
- பைனஸ் தாவரத்தின் பசையிலிருந்து பெறப்படும் டர்பன்டைன், வண்ணப் பூச்சு தயாரிப்பிற்குப் பயன்படுகிறது. மேலும் இது மூட்டுவலி மற்றும் வலி நிவாரணியாகவும் பயன்படுகிறது
- பைனஸ் ஜெரார்டியானா என்னும் தாவரத்தின் விதைகள் உண்பதற்குப் பயன்படும்.
- எஃபிடிரின் என்னும் அல்கலாய்டு எஃபிட்ரா என்னும் தாவரத்திலிருந்து பெறப்படுகிறது. இது ஆஸ்துமா மற்றும் சுவாசக் கோளாறுகளுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.
- அராவ்கேரியா பிட்வில்லீ என்னும் தாவரம் அழகுத் தாவரமாகப் பயன்படுத்தப்படுகிறது.
5. மருத்துவத் தாவரங்களின் பெயர்களை எழுதி அதன் பயன்களை விவரிக்கவும்.
அகாலிஃபா இன்டிகா (குப்பைமேனி)
- இது யூஃபோர்பியேசி குடும்பத்தைச் சேர்ந்தது.
- இலையை அரைத்துப் பெறப்படும் பசை, தோலில் உள்ள கொப்புளங்களை ஆற்றுகிறது.
- இலைச் சாற்றை எலுமிச்சசைசாற்றுடன் கலந்து அருந்தினால் வயிற்றிலுள்ள உருளைப் புழுக்கள் அழியும்.
ஏகில் மார்மிலோஸ் (வில்வம்)
- இது ரூட்டேசி குடும்பத்தைச் சேர்ந்தது.
- இதன் காயானது செரிமானத்தைச் சரி செய்கிறது.
- இது தீராத வயிற்றுப்போக்கு, சீதபேதி ஆகியவற்றைக் குணப்படுத்துகிறது.
சொலானம் டிரைலொபேட்டம் (தூதுவளை)
- இது சொலனேசி குடும்பத்தைச் சேர்ந்தது.
- இதன் இலைகளும் கனிகளும் இருமல் மற்றும் சளிக்கு மருந்தாகப் பயன்படுகின்றன.
- இது காசநோய் மற்றும் ஆஸ்துமா நோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது.
ஃபில்லாந்தஸ் அமாரஸ் (கீழா நெல்லி)
- இது யூஃபோர்பியேசி குடும்பத்தைச் சேர்ந்தது.
- முழுத்தாவரமும் மஞ்சள் காமாலை நோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது.
- இது கல்லீரலுக்கு வலிமையைக் கொடுத்து, கல்லீரல் நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது
அலோ வெரா (சோற்றுக் கற்றாழை)
- இது லில்லியேசி குடும்பத்தைச் சேர்ந்தது.
- இதன் இலைகள் மூலநோய் மற்றும் தோலில் தோன்றும் அழற்சியைக் குணப்படுத்துகிறது.
- இது வயிற்றுப் புண்ணுக்குரிய மருந்தாகவும் பயன்படுகிறது.
VIII கூற்று மற்றும் காரணம்
கூற்று : பெனிசிலின் ஒரு உயிரெதிர்பொருள், பெனிசிலியம் நொட்டேட்டம் என்ற பூஞ்சையிலிருந்து பெறப்படுகிறது.
காரணம்: இது மற்ற நுண்ணுயிரிகளை கொல்லும் அல்லது வளர்ச்சியை தடை செய்யும்.
- கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானவை. காரணம் கூற்றை விளக்குகிறது.
- கூற்று மட்டும் சரியானது. காரணம் கூற்றை விளக்குவதில்லை.
- கூற்று சரியானது. காரணம் கூற்றைவிளக்குகிறது.
- கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானவையல்ல.
விடை : கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானவை. காரணம் கூற்றை விளக்குகிறது.
2. கூற்று : செயற்கை முறை வகைபாடு இனப்பெருக்க வகைபாடு என்றும் அழைக்கப்படுகிறது.
காரணம் : செயற்கை முறை வகைபாடு உடல பண்புகளை அடிப்படையாகக் கொண்டது.
- கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானவை.
- கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானவையல்ல.
- கூற்று சரியானது காரணம் சரியானவையல்ல.
- கூற்று சரியானவையல்ல காரணம் சரியானது.
விடை : கூற்று சரியானவையல்ல காரணம் சரியானது.
3. கூற்று : தாவர உலகத்தில் பிரையோபைட்டுகள் நீர் நில வாழ்வன என்று அழைக்கப்படுகிறது.
காரணம்: பிரையோஃபைட்டுகள் நில வாழ்த் தாவரங்கள் ஆனால் இவைகள் தன் வாழ்க்கை சுழற்சியை நிறைவு செய்ய நீர் தேவைப்படுகிறது.
- கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானவை.
- கூற்று சரியானவையல்ல காரணம் சரியானது
- கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானவை. காரணம் கூற்றை விளக்குகிறது.
- கூற்று மற்றும் காரணம் சரியானவையல்ல.
விடை : கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானவை. காரணம் கூற்றை விளக்குகிறது.