4th Tamil Guide Term 1 Lesson 8
4th Standard 1st Term Tamil Book Solution | Book Back Answers
TN State Board Syllabus 4th Standard Term 1 Lesson 8 – இயல் 8 விடியும் வேளை Book Back Answers / Guide Download PDF. 4th ennum ezhuthum work book answers download pdf. 4th Samacheer kalvi guide book in answers. Class 4th Books in English Medium and Tamil Medium PDF is provided by subject experts as per the latest syllabus guidelines. Enhance your subject knowledge and learn various topics of the subject easily. Download the Samacheer Kalvi 4th Books Solutions. 4th All Subject Guide.
4th Tamil Guide Term 1 Lesson 8 விடியும் வேளை
சரியான பலூன்களை எடுத்துப் பொருத்துக.
(தாமதப்படுத்துதல், முதிர்ந்த இலை, இளம் இலை, வேலை, நேரம், மெதுவாக, மூட்டை, தயார் செய்தல், பக்க அடுப்பு)
- வேளை – நேரம்
- பொதி – மூட்டை
- ஆயத்தப்படுத்துதல் – தயார் செய்தல்
- துளிர் – இளம் இலை
- கொடியடுப்பு – பக்க அடுப்பு
சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?
1. “சாலையெங்கும்” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________________
- சாலை + யெங்கும்
- சாலை + எங்கும்
- சால + எங்கும்
- சால + யெங்கும்
விடை : சாலை + எங்கும்
2. “சுண்டியிழுக்கும்” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______________
- சுண்டி + யிழுக்கும்
- சுண் + டியிழுக்கும்
- சுண்டு + இழுக்கும்
- சுண்டி + இழுக்கும்
விடை : சுண்டி + இழுக்கும்
3. “ஓடி + ஆடி” என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் __________________
- ஓடிஆடி
- ஓடியோடி
- ஓடியாடி
- ஒடியடி
விடை : ஓடியாடி
4. “காலை + பொழுது” என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் __________
- காலைபொழுது
- கால்பொழுது
- காலைப்பொழுது
- காலப் பொழுது
விடை : காலைப்பொழுது
5. “வரகு + அரிசி” என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _______________
- வரகரிசி
- வரகுஅரிசி
- வரக்கரிசி
- வரகுகரிசி
விடை : வரகரிசி
6. “உணவு + அளிக்க” என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _________
- உணவுஅளிக்க
- உணவளிக்க
- உணவுவளிக்க
- உணவ்வளிக்க
விடை : உணவளிக்க
வினாக்களுக்கு விடையளி
1. அழகிய மலைக் கிராமத்தின் பெயர் என்ன?
- அழகிய மலைக்கிராமத்தின் பெயர் மன்னவனூர் ஆகும்.
2. கிராமத்தில் உனக்குப் பிடித்த இயற்கைக் காட்சிகளை எழுதுக.
- மழை பெய்து ஓய்ந்திருந்தது, சாலையெங்கும் தண்ணீர் நிறைந்திருந்தது. மரங்கள் நனைந்து கிளைகள் இலைகள் முழுக்க நீர்த்திவலைகள் தெரிந்தன. பச்சைப்பசேல் என்ற வயல்வெளிகள்.
3. பிள்ளைகள் காலை உணவாக என்ன உண்டார்கள்?
- பிள்ளைகள் காலை உணவாக, வரகரிசிச் சோறும் பருப்புக் கடையலும் பிரண்டைத் துவையலும் சாப்பிட்டனர்.
பாடப்பகுதியில் இடம் பெற்றுள்ள வருணனைச் சொற்களை எடுத்து எழுதுக
எ.கா: பச்சைப்பசேல் என்ற வயல்வெளி
- கருத்த மண்சட்டியில் வெள்ளை வெளேரென வரகரிசிச்சோறு கொதித்துக் கொண்டிருந்தது.
- வாய்க்காலும் வரப்பும் நிறைந்த வயல்
- சிலுசிலுப்பான காற்ற கூடவே எழுந்தது
புதிய சொற்களை உருவாக்கலாமா?
- நகம்
- முகம்
- கனம்
- ஊனம்
- கறி
- ஊக்கம்
- கன்னம்
- நன்றி
பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.
சிறு தானிய உணவுகளே நம் ஆரோக்கியத்திற்கு ஏற்றது. குதிரை வாலி அரிசி, தினை, வரகரிசி, கேழ்வரகு, கம்பு, சோளம், பனிவரகு அரிசி, மாப்பிள்ளை சம்பா அரிசி, போன்றவை சிறு தானியங்கள் ஆகும். இந்தச் சிறு தானியங்களைக் கொண்டு பல உணவு வகைகளை மண் பானைகளில் தயாரித்துப் பயன்படுத்துவது மிகவும் நல்லது. நாம் உண்ட உணவு முழுமையாகச் செரித்தபிறகுதான் அடுத்த வேளை உணவை உண்ணவேண்டும். இதைத் தான் நம் முன்னோர்” பசித்துப் புசி” என்றனர். இவற்றைத் தவிர்த்துவிட்டுத் துரித உணவுகளைச் சாப்பிடத் தொடங்கியதே பல்வேறு நோய்கள் ஏற்படக் காரணமாகிறது.
சிறு தானிய உணவுகளை உண்போம்!
ஆரோக்கியமான வாழ்வைப் பெறுவோம்!
1. எவ்வகை உணவு முறை நமக்கு ஏற்புடையது?
சிறு தானிய உணவுகளே நமக்கு ஏற்புடையது
2. சிறு தானியங்களுள் ஏதேனும் நான்கினை எழுதுக.
குதிரை வாலி அரிசி, தினை, வரகரிசி, கேழ்வரகு, கம்பு, சோளம், பனிவரகு அரிசி, மாப்பிள்ளை சம்பா அரிசி
3. துரித உணவு வகைகளை உண்ணக் கூடாது, ஏன்?
துரித உணவுகளைச் சாப்பிடுவதனால் பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது. எனவே துரித உணவு வகைகளை உண்ணக் கூடாது.