You are currently viewing 5th Tamil Guide Term 1 Unit 3.4

5th Tamil Guide Term 1 Unit 3.4

5th Tamil Guide Term 1 Unit 3.4

5th Tamil Term 1 – Lesson 3 – இயல் 3.4 சொற்றொடர் அமைப்பு முறை

5th Standard 1st Term Tamil Book Solution | Book Back Answers

TN State Board Syllabus 5th Standard Term 1 Lesson 3 – இயல் 3.4 சொற்றொடர் அமைப்பு முறை Book Back Answers / Guide Download PDF. 5th ennum ezhuthum work book answers download pdf. 5th Samacheer kalvi guide book in answers. Class 5th Books in English Medium and Tamil Medium PDF is provided by subject experts as per the latest syllabus guidelines. Enhance your subject knowledge and learn various topics of the subject easily. Download the Samacheer Kalvi 5th Books Solutions. 5th All Subject Guide.

5th Tamil Term 1 Book Back Answers

 

I. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக.

1. எழுவாய் எப்போதும் _________ லாகவே இருக்கும்.

  1. வினைச்சொல்
  2. இடைச்சொல்
  3. பெயர்ச்சொல்
  4. உரிச்சொல்

விடை : பெயர்ச்சொல்

2. “பாடல் பாடினாள்” – இத்தொடரில் _________ இல்லை.

  1. எழுவாய்
  2. பயனிலை
  3. செயப்படுபொருள்
  4. சொல்

விடை : எழுவாய்

3. “அமுதன் ஓடினான்” – இத்தொடரில் _________ உண்டு

  1. பயனிலை
  2. செயப்படுபொருள்
  3. இடைச்சொல்
  4. உரிச்சொல்

விடை : செயப்படுபொருள்

II. எழுவாய், செயப்படுபொருள், பயனிலைகளை எடுத்து எழுதுக.

  1. மாதவி சித்திரம் தீட்டினாள்
  2. இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றினார்.
  3. அன்பழகன் மிதிவண்டி ஓட்டினான்
  4. கிளி பழம் தின்றது.
எழுவாய்
(யார், எது, எவை, யாவர்)
செயப்படுபொருள்
(யாரை, எதனை, எவற்றை)
பயனிலை
(முடிந்த செயல்)
மாதவி சித்திரம் தீட்டினாள்
இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றினார்
அன்பழகன் மிதிவண்டி ஓட்டினான்
கிளி பழம் தின்றது

III. எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் ஆகிய மூன்றும் இடம்பெற்றுள்ள தொடர்கள் நான்கு எழுதுக.

  1. முருகன் வள்ளியை மணந்தான்
  2. மாதவி சித்திரம் தீட்டினாள்
  3. திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார்.
  4. தென்றல் நடனம் ஆடினாள்

IV. எழுவாய், பயனிலை மட்டும் உள்ள தொடர்கள் மூன்று எழுதுக.

  1. தென்றல் ஆடினாள்
  2. ராமு ஓடினான்
  3. யானை தின்றது

V. பயனிலை, செயப்படுபொருள் மட்டும் உள்ள தொடர்கள் மூன்று எழுதுக.

  1. படம் பார்த்தான்
  2. பாடம் படித்தான்
  3. ஓட்டம் ஓடினாள்

VI. சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.

  1. அமைதியாக

விடை: வகுப்பறையில் மாணவர்கள் அமைதியாக இருந்தனர்

  1. தருகிறேன்

விடை: நன்றாக படி பரிசு தருகிறேன் என்றார் ஆசிரியர்

  1. சிறுவர்கள்

விடை: சிறுவர்கள் பள்ளிக்கு சென்றனர்

  1. முழக்கம்

விடை: இடி முழக்கம் பயம் தரும்

  1. தங்கம்

விடை: பெண்களுக்கு தங்கம் மிகவும் பிடிக்கும்

  1. விளைவு

விடை: கற்பதன் விளைவு நன்மதிப்பை தரும்

II. பொருத்தமான நிறுத்தக் குறியிடுக.

என் உடல் ஏழு நிறங்களால் ஆனது ஊதா கருநீலம் நீலம் பச்சை மஞ்சள் இளஞ்சிவப்பு சிவப்பு என்ற வரிசையில் நிறங்கள் அமைந்திருக்கும் எனது பெயரின் முன்பகுதி என் இருப்பிடம் பின்பகுதி என் வடிவம் என் பெயரைக் கண்டுபிடித்துவிட்டாயா

விடை:

என் உடல் ஏழு நிறங்களால் ஆனது. ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், இளஞ்சிவப்பு, சிவப்பு என்ற வரிசையில் நிறங்கள் அமைந்திருக்கும். எனது பெயரின் முன்பகுதி என் இருப்பிடம். பின்பகுதி என் வடிவம். என் பெயரைக் கண்டுபிடித்துவிட்டாயா?

III. பொருத்தமான சொற்களால் நிரப்புக.

(உறுதியாக, சொத்தையாக, பல்வலி, பல்துலக்க)

 மருத்துவர்: விமலா உன் உடம்புக்கு என்ன?

விமலா: எனக்கு பல்வலி ஐயா,

மருத்துவர்: எங்கே வாயைத் திற, பல்லெல்லாம் சொத்தையாக இருக்கிறதே.

விமலா: அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் ஐயா?

மருத்துவர்: இனிப்புகளை அதிகமாகச் சாப்பிடக்கூடாது. தினமும் இருமுறை காலையிலும், இரவிலும் பல்துலக்க வேண்டும். அப்பொழுதுதான் பற்கள் உறுதியாக இருக்கும்.

விமலா: நீங்கள் சொன்னதை நான் பின்பற்றுகிறேன் ஐயா.

விளம்பரம் படி ! விடையைக் கொடு.

1. சர்க்கஸ் நடைபெறும் இடம் எது?

  • நேரு விளையாட்டரங்கம், விழுப்புரம்.

2. விளையாடுபவர்கள் யார்?

  • கோமாளிக் குள்ளர்கள்.

3. குதிரையேறுபவர்கள் யார்?

  • கொஞ்சும் மழலைகள்.

4. சர்க்கஸ் நடைபெறும் அரங்கத்தின் பெயர் என்ன?

  • நேரு விளையாட்டரங்கம்.

5. சர்க்கஸின் பெயர் என்ன?

  • ஜம்போ சர்க்கஸ்.

 

IV. தடித்த சொல் விடையாக வருமாறு வினா அமைக்க.

1. என் நண்பனின் பெயர் தேனமுதன்.

விடை: என் நண்பனின் பெயர் என்ன?

2. பாட்டி எனக்குக்கதைகூறுவார்.

விடை: பாட்டி எனக்குக் என்ன கூறுவார்?

3. தினமும் மாலையில் விளையாடுவேன்

விடை: தினமும் எப்போது விளையாடுவேன்?

4. எனக்குமட்டைப் பந்துவிளையாட மிகவும் பிடிக்கும்.

விடை: எனக்கு எது விளையாட மிகவும் பிடிக்கும்?

5. உயிர்களிடத்தில் அன்பாகநட ந்துகொள்வேன்.

விடை: உயிர்களிடத்தில் எவ்வாறு நடந்துகொள்வேன்?

விடை தருக.

1. முத்துவின் தோட்டத்தில் எத்தனை நாய்க்குட்டிகள் இருந்தன?

  • நான்கு நாய்க்குட்டிகள்.

2. நண்பர்கள் இருவரும் முத்துவின் வீட்டிற்கு எதற்காக வந்தனர்?

  • விளையாடுவதற்காக வந்தனர்.

3. கென்னடியும் அன்வரும் என்ன செய்ய விரும்பினர்?

  • நாய்க்குட்டிகளைத் தங்கள் வீட்டிற்குக் கொண்டு செல்ல விரும்பினர்.

4. நண்பர்களுக்கு முத்துவின் அறிவுரை என்ன?

  • நண்பர்களே, பால் குடிக்கும் இந்த நாய்க் குட்டிகளைத் தாயிடமிருந்து பிரிக்க வேண்டாம். நம்மை நம் பெற்றோரிடமிருந்து யாராவது பிரித்தால் நாம் எவ்வளவு துன்பப்படுவோம். சிந்தித்துப் பாருங்கள்.

5. நண்பர்கள் நாய்க்குட்டிகளை எடுத்துச் சென்றனரா? ஏன்?

  • நண்பர்கள் நாய்க்குட்டிகளை எடுத்துச் செல்லவில்லை. முத்துவின் அறிவுரையால் நாய்க்குட்டியின் பெற்றோரிடமிருந்து பிரிக்க மனமில்லாமல் விட்டுச் சென்றனர்.

 

மொழியோடு விளையாடு

I. கண்டுபிடித்து எழுதுக.

  1. மணம் மிக்க மலர்

விடை: மல்லிகை

  1. சிலந்திக்கு எத்தனை கால்கள்?

விடை: எட்டு

  1. பந்தை அடிக்க உதவுவது

விடை: மட்டை

  1. பசுவின் உணவு

விடை: புல்

  1. மீன் பிடிக்க உதவும்

விடை: வலை

  1. ஒரு தின்பண்டம்

விடை: வடை

II. ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் எழுதுக.

  • Seashore – கடற்கரை
  • Morning – காலை
  • Field – வயல்
  • Mango tree – மாமரம்
  • Cyclone – புயல்
  • Nature – இயற்கை
  • Pearl – முத்து
  • Farmer – உழவர்
  • Project – செயல்திட்டம்
  • Circus – வித்தை

III. கலங்கரை விளக்கம் – இச்சொல்லிலிருந்து புதிய சொற்களை உருவாக்குக.

  • கலம்
  • கலகம்
  • கரை
  • கலக்கம்
  • விளக்கம்

IV. கடல் வளங்களைக் கண்டுபிடிப்போம்

  • சிப்பி
  • மீன்
  • முத்து
  • பவளம்
  • சங்கு
  • ஆமை

V. சரியான சொற்களை எடுத்துப் பொருத்துக

  1. வீட்டுக்கு ஒரு …………………… வளர்ப்போம். (மறம் / மரம்)

விடை: மரம்

  1. உயிர் கொடுப்பான் …………………… (தோழன் / தோலன்)

விடை: தோழன்

  1. நேர்மை எப்போதும் …………………… தரும். (நண்மை / நன்மை)

விடை: நன்மை

  1. கொடுத்து …………………. இன்பம். (மகிழ்வது / மகிள்வது)

விடை: மகிழ்வது

  1. …………………. இருக்கும் இடம் கலகலப்பாக இருக்கும் (குழந்தை / குலந்தை)

விடை: குழந்தை

VI. பின்வரும் சொற்களைக் கொண்டு சொற்றொடர் உருவாக்கலாமா!

மழை = மரம் வளர்ப்போம், மழை பெறுவோம்

மலை = உயர்ந்து நிற்பது மலை

கரி = யானையின் மறுபெயர் கரி

கறி = காரத்துடன் செய்யப்பட்ட ஒரு பதார்த்தம் கறி ஆகும்

தவளை = நீர் நிலைகளில் வாழக்கூடிய ஒரு விலங்கு தவளை ஆகும்

தவலை = தவலை என்பது தண்ணீர் சேமித்து வைக்கும் பாத்திரவகை

வழி = பாதையை குறிப்பது வழி

வலி = உடல் காயத்தினால் ஏற்படுவது வலி

அரை = ஒன்றில் பாதி அரை

அறை = கட்டிடத்தின் ஒரு பகுதி அறை

மனம் = உணர்வுநிலை சார்ந்த அம்சங்களின் தொகுப்பு மனம்

மணம் = மல்லிகையின் வாசனையை குறிப்பது மணம்

Leave a Reply