5th Tamil Term 1 Unit 1.2
5th Standard 1st Term Lesson 1 | Unit 1.2 அறிவா? பண்பா? கவிதைப் பட்டிமன்றம் | Book Back Answers
TN State Board Syllabus 5th Standard Term 1 Lesson 1 | Unit 1.2 கவிதைப் பட்டிமன்றம் Book Back Answers / Guide Download PDF. 5th ennum ezhuthum workbook answers download pdf. 5th Samacheer guide book in answers. Class 5th Books in English Medium and Tamil Medium PDF is provided by subject experts as per the latest syllabus guidelines. Enhance your subject knowledge and learn various topics of the subject easily. Download the Samacheer Kalvi 5th Books Solutions. 5th All Subject Guide.
I. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக.
1. “நற்றமிழ்” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________________
- நல் + தமிழ்
- நற் + றமிழ்
- நன்மை + தமிழ்
- நல்ல + தமிழ்
விடை : நன்மை + தமிழ்
2. ‘உலகம்‘ என்னும் பொருளைக் குறிக்காதல் __________________
- வானம்
- அண்டம்
- செகம்
- அகிலம்
விடை : வானம்
3. “அறிவு + ஆயுதம்” என்பதை சேர்த்து எழுதக் கிடைக் கும் சொல் ____________
- அறவாயுதம்
- அறிவாயுதம்
- அறிவு ஆயுதம்
- அறிவாய்தம்
விடை : அறிவாயுதம்
4. “புகழ்” இச்சொல்லின் எதிர்ச்சொல் __________________
- இகழ்
- மகிழ்
- திகழ்
- சிமிழ்
விடை : இகழ்
5. “வெளிச்சம்” இச்சொல்லைக் குறிக்காத சொல் __________________
- ஒளி
- தெளிவு
- விளக்கு
- இருள்
விடை : இருள்
கீழ்க்காணும் சொற்களைப் பிரித்து எழுதுக.
- செந்தமிழ் = செம்மை + தமிழ்
- கவியரங்கம் = கவி + அரங்கம்
வினாக்களுக்கு விடையளிக்க.
1. அறிவால் உயர்ந்தவர்களாக இன்சுவை யார் யாரைக் குறிப்பிடுகிறார்?
- அப்துல் கலாம்
- தாமஸ் ஆல்வா எடிசன்.
2. பண்பால் சிறந்தவர்களாக மதியொளி எவரையெல்லாம் குறிப்பிடுகிறார்?
- புத்தர்
- திருவள்ளுவர்.
3. உயிர் காக்கும் நெல்லிக்கனியை யார், யாருக்குக் கொடுத்தார்?
- உயிர் காக்கும் நெல்லிக்கனியை அதியமான், ஔவையாருக்குக் கொடுத்தார்.
4. நடுவர் கூறிய தீர்ப்பை உன் சொந்த நடையில் கூறுக.
- அறிவும் பண்பும் கண்ணின் இருவிழிக்கும் சமம் ஆகும். ஐம்பொறிகள் பண்பாகவும், உலகம் முழுவதும் அறிவாகவும் கொண்டு சுற்றி வரும். எனவே இவை இரண்டுமே சிறப்பு என்று நடுவர் தீர்ப்பு கூறினார்.
5. ஐம்பொறிகளுள் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. மற்ற நான்கையும் எழுதுக.
கண்,………………………………………………………………..
- கண், காது, வாய், மூக்கு, மெய்(உடல்).
6. தமிழைச் சிறப்பிக்கும் பெயர்களைப் பாடப் பகுதியிலிருந்து எடுத்தெழுதுக.
- செந்தமிழ்
- நறுந்தேன்
- செகம் போற்றும் செந்தமிழ்
- முத்தமிழ்
- நற்றமிழ்.
சிந்தனை வினாக்கள்.
1. கல்வி, செல்வம், வீரம் இவற்றுள் எது சிறந்தது என நீ கருதுகிறாய்? ஏன்?
- (i) கல்வி, செல்வம், வீரம் இவற்றுள் கல்வியே சிறந்தது என நான் கருதுகின்றேன்.ஏனென்றால், செல்வம் அழிந்து விடும். வீரம் வயதானால் குறைந்து விடும். அழியாமல், குறையாமல் இருப்பது கல்வி மட்டுமே! எனவே கல்வியே சிறந்தது என்பேன்.
- (ii) நிலையற்ற செல்வம், வீரம் ஆகியவற்றைவிட நிலையான கல்வியே சிறந்தது.
2. “வெறும் பண்பை வைத்துக்கொண்டு பெரும் பந்தல் போடலாமா?” இத்தொடருக்கான பொருளை உம் சொந்த நடையில் வகுப்பறையில் பகிர்ந்து கொள்க.
- “வெறும் பண்பை வைத்துக் கொண்டு பெரும் பந்தல் போடலாமா?” இத்தொடருக்கான பொருள் வெற்றுப் பண்பை வைத்து பெரிய பந்தல் போடமுடியுமா? என்பதே! வெறும் பண்பை வைத்துக் கொண்டு கீற்றுப் பந்தல் போட முடியாமல் போகலாம். ஆனால் வாழ்க்கைப் பந்தல் போடலாம்.