You are currently viewing 9th Geography Guide Lesson 3

9th Geography Guide Lesson 3

9th Geography Guide Lesson 3

9th Std Social Science – Geography Guide Unit 3 வளிமண்டலம்

9th Standard Social Science Geography Lesson 3 வளிமண்டலம் Book Back Answers. 9th Social Guide Geography Unit 3 Book Back Answers English Medium. 9 all Subject Book Answers. Class 9 Social Science All Unit Book in Answers TM & EM.

9th Social Science (History) Lesson -1 Book Back Answers

9th Geography Guide Lesson 3 வளிமண்டலம்

I. சரியான வி்டையைத் தேர்வு செய்க.

1. ………………………. உயிர்வாழ இன்றியமையாத வாயுவாகும்.

  1. ஹீலியம்
  2. கார்பன்-டை-ஆக்ஸைடு
  3. ஆக்ஸிஜன்
  4. மீத்தேன்

விடை : ஆக்ஸிஜன்

2. வளிமண்டலத்தில் கீழாக உள்ள அடுக்கு ………………….. ஆகும்.

  1. கீழடுக்கு
  2. மீள் அடுக்கு
  3. வெளியடுக்கு
  4. இடையடுக்கு

விடை : கீழடுக்கு

3. …………………………. வானாலி அலைகளை பிரதிபலிக்கிறது.

  1. வெளியடுக்கு
  2. அயன அடுக்கு
  3. இடையடுக்கு
  4. மீள் அடுக்கு

விடை : இடையடுக்கு

4. புவியின் மேற்பரப்பில் காணப்படும் வெப்பத்தின் சராசரி அளவு …………………..

  1. 12°C
  2. 13°C
  3. 14°C
  4. 15°C உ

விடை : 13°C

5. நிலநடுக்கோட்டுப் பகுதியில் இருந்து துருவம் நோக்கிச் செல்ல செல்ல வெப்பம்…………….

  1. கூடுகிறது
  2. மாற்றம் ஏதுமில்லை
  3. குறைகிறது
  4. நிலையாக இருக்கிறது.

விடை : குறைகிறது

6. வாயு நிலையிலிருந்து திரவ நிலைக்கு நீரானது மாறுகின்ற செயல்பாட்டினை …………………… என்று அழைக்கிறோம்.

  1. பொழிவு
  2. ஆவியாதல்
  3. நீராவிப்போக்கு
  4. சுருங்குதல்

விடை : சுருங்குதல்

7. ……………………… புவியின் முக்கிய ஆற்றல் மூலமாகும்.

  1. சூரியன்
  2. சந்திரன்
  3. நட்சத்திரங்கள்
  4. மேகங்கள்

விடை : சூரியன்

8. ……………………… 5 வடக்கு முதல் 5 தெற்கு அட்சம் வரை பரவியுள்ளது.

  1. நிலநடுக்காேட்டு தாழ்வழுத்த மண்டலம்
  2. துணை வெப்ப உயர் அழுத்த மண்டலம்
  3. துணை துருவ தாழ்வழுத்த மண்டலம்
  4. துருவ உயர் அழுத்த மண்டலம்

விடை : நிலநடுக்காேட்டு தாழ்வழுத்த மண்டலம்

9. அனைத்து வகை மேகங்களும் ……………………………..ல் காணப்படுகிறது.

  1. கீழடுக்கு
  2. அயன அடுக்கு
  3. இடையடுக்கு
  4. மேலடுக்கு

விடை : கீழடுக்கு

10. ……………………….. செம்மறி ஆட்டு மேகங்கள் என்று அழைக்கப்படுகிறது.

  1. இடைப்பட்ட திரள் மேகங்கள்
  2. இடைப்பட்ட படை மேகங்கள்
  3. கார்படை மேகங்கள்
  4. கீற்றுப்படை மேகங்கள்

விடை : இடைப்பட்ட திரள் மேகங்கள்

11. பருவக்கோற்று என்பது ………………………..

  1. நிலவும் காற்று
  2. காலமுறைக் காற்றுகள்
  3. தலக்கோற்று
  4. மேற்கண்ட எதுவுமில்லை

விடை : காலமுறைக் காற்றுகள்

12. பனித்துளி பனிப்படிகமாக இருந்தால் …………………… என்று அழைக்கின்றோம்.

  1. உறைபனி
  2. மூடுபனி
  3. பனி
  4. ஆலங்கட்டி

விடை : பனி

 

13. …………………….. புயலின் கண் என்று அழைக்கப்படுகிறது.

  1. அழுத்தம்
  2. காற்று
  3. சூறாவளி
  4. பனி

விடை : சூறாவளி

14. காற்றின் செங்குத்து அசைவினை …………………………… என்று அழைக்கின்றோம்.

  1. காற்று
  2. புயல்
  3. காற்றோட்டம்
  4. நகர்வு

விடை : காற்றோட்டம்

II. பொருத்துக

  1. வானிலையில் – காற்றின் வேகம்
  2. காலநிலையில் – காற்றின் திசை
  3. காற்று வேகமானி – கீற்று மேகம்
  4. காற்று திசைமானி – காலநிலை பற்றிய படிப்பு
  5. பெண் குதிரை வால் – வானிலை பற்றிய படிப்பு
  6. காற்று மோதாப்பக்கம் – ஆஸ்திரேலியோ
  7. வில்லி வில்லி – மழை மறைவுப் பகுதி

விடை : 1 – உ, 2 – ஈ, 3 – அ, 4 – ஆ, 5 – இ, 6 – எ, 7 –

III. சுருக்கமாக விடையளி.

வளிமண்டலம் – வரையறு.

  • புவியைச் சூழ்ந்து காணப்படும் காற்றுப் படலம் வளிமண்டலம் என்று அழைக்கப்படுகிறது.
  • புவியை வளிமண்டலம் சூழ்ந்து காணப்படுவதற்கு அதன் ஈர்ப்பு விசையே காரணமாகும்
  • வாயுக்கள், நீராவி, மற்றும் தூசுகள் வளிமண்டலத்தில் வேறுபட்ட விகிதத்தில் கலந்து காணப்படுகின்றன.

2. வளிமண்டல அடுக்குகள் யாவை?

  1. கீழ் அடுக்கு (ட்ரோபோஸ்பியர்)
  2. இடை அடுக்கு (மீசோஸ்பியர்)
  3. வெளி அடுக்கு (எக்சோஸ்பியர்)
  4. மீள் அடுக்கு (ஸ்ட்ரேட்டோஸ்பியர்)
  5. வெப்ப அடுக்கு (தெர்மோஸ்பியர்)

3. காலநிதலதயப் பாதிக்கும் காரணிகள் யாதவ?

  1. நில நடுக்கோட்டிலிருந்து தூரம்
  2. கடல் மட்டத்திலிருந்து உயரம்
  3. கடலிலிருந்து தூரம்
  4. வீசும் காற்றின் தன்மை
  5. மலைகளின் இடையூறு
  6. மேகமூட்டம்
  7. கடல் நீரோட்டங்கள்
  8. இயற்கைத் தாவரங்கள்.

4. வெப்பத்தை அளக்கும் அளவைகள் யாவை?

  • ஃபாரன்ஹீட் மற்றும் செல்சியஸ்

5. வெயிற்காய்வு என்றால் என்ன?

  • சூரியனிடமிருந்து வெளிப்படும் வெப்பம் குறுகிய அலைகளாக புவியை வந்தடைகிறது. இதனை வெயிற்காய்வு அல்லது சூரியக் கதிர்வீச்சு என்கிறோம்.

6. சமவெப்பக் காேடுகள் என்றால் என்ன?

  • சமவெப்பநிலை உள்ள இடங்களை இணைக்க வரைபடத்தில் வரையப்படும் கற்பனைக் கோடு சமவெப்பக்கோடு ஆகும்.

7. வெப்பத்தலைகீழ் மாற்றம் – சிறு குறிப்பு வரைக

  • ஒவ்வோரு 165 மீட்டர் உயரத்திற்கும் 1oC வெப்பநிலை குறையும். இதனை வெப்பத்தலைகீழ் மாற்றம் என்கிறோம்.

8. வளிமண்டலத்தை வெப்பமாக்குகின்ற செயல் முறைகளை விளக்குக.

வளிமண்டலத்தை வெப்பமாக்குகின்ற செயல் முறைகள்

  1. வெப்பக்கடத்தல்
  2. வெப்பச்சலனம்
  3. வெப்பக்கிடை அசைவு

வெப்பக்கடத்தல்

வெப்பம் மிகுதியான பொளிலிருந்து வெப்பம் குறைவானப் பொருளுக்கு வெப்பம் கடத்தப்படுகிறது.

வெப்பச்சலனம்

காற்றுத் தொகுதியின் சுழற்சியின் காரணமாக வெப்பம் கடத்தப்படுவது

வெப்பக்கிடை அசைவு

காற்றுத் தொகுதியின் சுழற்சியின் காரணமாக வெப்பம் கடத்தப்படுவது

9. வளிமண்டல அழுத்தம் எவ்வாறு அளக்கப்படுகிறது?

வளிமண்டல அழுத்தம் பாதரச காற்றழுத்தமானியினால் அளக்கப்படுகிறது. இதனை அளக்கப் பயன்படுத்தும் அலகு மில்லிபார் எனப்படும்.

10. துருவக்கிழைக்காற்றுகள் மிகக் குளிர்ந்தும், வறட்சியாகவும் இருப்பதற்குக் காரணம் என்ன?

துருவ உயர் அழுத்த மண்டத்திலிருந்து துணை துருவ தாழ்வழுத்த மண்டலத்தை நோக்கி வீசுவதால் துருவக்கிழைக் காற்றுகள் மிகக் குளிர்ந்தும், வறட்சியாகவும் இருக்கும்.

11. கோள் காற்றுகளின் அமைப்பை விளக்குக.

  • வருடம் முழுவதும் நிலையாக ஒரே திசையை நோக்கி வீசும் காற்றுகள் கோள் காற்றுகள் எனப்படும்.
  • இவை “நிலவும் காற்று” எனவும் அழைக்கப்படுகிறது. “வியாபாரக்காற்றுகள்”, “மேலைக்காற்றுகள்”, “துருவகீழைக்காற்றுகள்” – கோள் காற்றுகள் ஆகும்.

12. சிறு குறிப்பு வரைக

அ) வியாபரக்காற்றுகள்

  • வட மற்றும் தென் அரைக்கோளங்களின் துணை வெப்ப மண்டல உயர் அழுத்த மண்டலங்களிலிருந்து நிலநடுக்கோட்டு தாழ்வழுத்த மண்டலங்களை நோக்கி வீசும் காற்று வியாபாரக்காற்று எனப்படும்.
  • இக்காற்றுகள் தொடர்ச்சியாகவும், அதிக வலிமையுடனும் வருடம் முழுவதும் ஒரே திசையில் நிலையாக வீசுகின்றன.

ஆ) கர்ஜிக்கும் நாற்பதுகள்

  • மேலைக் காற்றுகள் வட, தென் அரைக் கோளங்களின் வெப்பமண்டல உயர் அழுத்த மண்டலங்களிலிருந்து துணை துருவ தாழ்வழுத்த மண்டலத்தை நோக்கி வீசுகின்றன.
  • இவை வட அரைக்கோளத்தில் தென் மேற்கிலிருந்து வடகிழக்காகவும், தென் அரைக்கோளத்தில் வடமேற்கிலிருந்து தென்கிழக்காகவும் வீசுகின்றன.
  • மேலைக் காற்றுகள் மிகவும் வேகமாக வீசக் கூடியவை 40C அட்சத்தில் வீசும் இக்காற்றுகள் “கர்ஜிக்கும் நாற்பதுகள்” என அழைக்கப்படுகிறது.

13. மேகங்கள் எவ்வாறு உருவாகின்றன?

  • நீராவியிலிருந்து பெறப்பட்ட உப்புத்துகள்கள் புகை போன்றவற்றின் மீது குளிர்ந்த ஈரப்பதமான காற்று படிவதன் மூலம் மேகங்கள் உருவாகின்றன.
  • கண்களுக்கு புலப்படும்படியாக மிதந்து கொண்டிருக்கும் குளிர்ந்த நீர்த்திவலைகளே மேகங்களாகும்

14. மழைப் பாெழிவின் வகைகள் யாவை?

  • வெப்பச்சலன மழைப்பொழிவு
  • சூறாவளி மழைப்பொழிவு
  • மலைத்தடுப்பு மழைப்பொழிவு

15. பாெழிவு என்றால் என்ன?

  • சுருங்கிய நீரோவி நீரின் பல்வேறு வடிவங்களில் புவியை வந்தடைகின்ற நிகழ்வை பொழிவு எனப்படுகிறது.

பொழிவின் வகைகள்

  • சாரல்
  • மழை
  • பனிப்பொழிவு
  • பனிப்படிவு
  • ஆலங்கட்டி மழை

16. சிறு குறிப்பு வரைக

அ) சாரல்   ஆ) மழை   இ) பனி    ஈ) ஆலங்கட்டி   உ) வெப்பம்

அ) சாரல்

0.5 மில்லி மீட்டருக்கும் குறைவான விட்டமுள்ள நீர்த்துளிகள் சீராக புவியை வந்தடையும்பொழுது அதனை சாரல் என்றழைக்கிறோம்.

ஆ) மழை

  • உறைநிலைக்கும் அதிகமான வெப்பநிலை காணப்படும் போது மழைப் பொழிகிறது.
  • காற்றில் மிக அதிகமான ஈரப்பதம் இருந்தால் மட்டுமே மழைப்பொழிவு ஏற்படும்.

இ) பனி

  • உறையும் நிலைக்கு கீழாக நீர் சுருங்குதல் ஏற்படும்போது பனிப்பொழிவு ஏற்படுகிறது.
  • பகுதியாகவோ முழுமையாகவோ ஒளிபுகாத் தன்மையுடன் காணப்படும் பனித்துளிகள் படிகங்களை பனி என்று அழைக்கின்றோம்.

ஈ) ஆலங்கட்டி மழை

முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ ஒளிபுகும் தன்மையுடன் கூடிய மிகச்சிறிய பனி உருண்டையுடன் கூடிய மழைப்பொழிவு ஆலங்கட்டி மழை என்று அழைக்கப்படுகிறது.

உ) வெப்பம்

ஒரு பொருளைச் சூடாக்கும் ஆற்றலை வெப்ப ஆற்றல் எனப்படுகிறது. வெப்பநிலை என்பது ஒரு பொருளின் வெப்பத்தின் அளவு ஆகும்.

17. சூறாவளிகளை வகைப்படுத்து.

  • வெப்பச் சூறாவளிகள்
  • மிதவெப்பச் சூறாவளிகள்
  • கூடுதல் வெப்பச் சூறாவளிகள்

IV. வேறுபடுத்துக

1. வானிலை மற்றும் காலநிலை

வானிலை

காலநிலை

1. ஒரே நாளில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஏற்படும் வளிமண்ல மாற்றத்தைப் பற்றி அறிவது வானிலை ஆகும்

நீண்ட காலத்திற்கு மிகப் பரந்த நிலப்பரப்பில் ஏற்படும் வானிலையின் சராசரியே காலநிலை ஆகும்

2. ஓவ்வொரு மணி நேரத்திற்கும் ஒவ்வொரு நாளுக்கும் அடிக்கடி மாறக்கூடியதாக உள்ளது.

ஏறக்குறைய மாறுதலுக்கு உட்படாமல் இருக்கிறது.

3. வானிலையைப் பற்றிய படிப்பு வானிலையியல் ஆகும்.

காலநிலையைப் பற்றிய படிப்பு காலநிலையியல் ஆகும்.

2. நிலக்காற்று மற்றும் கடற்காற்று

நிலக்காற்று

கடற்காற்று

1. நிலப்பகுதியிலிருந்து வீசும் காற்று நிலக்காற்று எனப்படும்

கடல் பகுதியிலிருந்து நிலப்பகுதிக்கு வீசும் காற்று கடல் காற்று எனப்படும்.

இங்கு கண்ட காலநிலை நிலவுகிறது

இங்கு சமமான காலநிலை நிலவுகிறது.

 

3. வெயிற்காய்வு மற்றும் வெப்பம்

வெயிற்காய்வு

வெப்பம்

சூரியனிடமிருந்து வெப்பம் குறுகிய அலைகளாக புவியை வந்தடைவது வெயிற்காய்வு எனப்படும் அல்லது சூரியக்கதிர் வீச்சு எனப்படும்.

ஒரு பொருளைச் சூடாக்கும் ஆற்றலை வெப்ப ஆற்றல் எனப்படுகிறது. வெப்பநிலை என்பது ஒரு பொருளின் வெப்பத்தின் அளவு ஆகும்.

4. காற்று மாேதும் பக்கம் மற்றும் காற்று மாேதாப்பக்கம்

காற்று மாேதும் பக்கம்

காற்று மாேதாப் பக்கம்

1. வீசும் காற்றின் எதிர் திசையிலுள்ள
மலைப்பகுதி காற்று மோதும் பக்கம்
எனப்படும்.

காற்று வீசும் திசைக்கு மறைவாக
உள்ள பகுதியை “காற்று மோதாப் பக்கம்” என்று அழைக்கின்றோம்.

2. இங்கு அதிக மழைப்பொழிவு கிடைக்கின்றது.

2. இங்கு மிகவும் குறைவாக மழைப்பொழிவு கிடைக்கின்றது

5. வெப்பச் சூறாவளி மற்றும் மிதவெப்பச் சூறாவளி

வெப்பச் சூறாவளி

மிதவெப்பச் சூறாவளி

1.கடலோர பகுதிகளில் அதிகமான உயிர் சேதங்களையும் பொருளாதார சேதங்களையும் ஏற்படுத்தகிறது.

35o முதல் 65o வடக்கு மற்றும் தெற்கு அட்ச பகுதிகளில் வெப்பம் மற்றும் குளிர்காற்றுத் திரள்கள் சந்திக்கும் பகுதிகளில் உருவாகின்றன

2. நிலத்தை அடைந்தவுடன் வலுவிழந்துவிடும்

2. நிலத்தை அடைந்தவுடன் வலுவிழக்காது

V. காரணம் கூறு

1. நிலநடுக்காேட்டு தாழ்வழுத்த மண்டலம் ஒரு அமைதிப்பகுதி

  • நிலநடுக்கோட்டுப் பகுதிகளில் சூரியனின் செங்குத்தான கதிர்கள் அப்பகுதியை வெப்பமடையச் செய்கிறது
  • இதனால் காற்று விரிவடைந்து மேல்நோக்கிச் செல்வதால் தாழ்வழுத்தம் உருவாகிறது.
  • இதனால் இம்மண்டலம் அமைதி மண்டலம் என்று அழைக்கப்படுகிறது.

2. சூறாவளிகள் அதிக உயிர் சேதத்தையும் பொருட்சேதத்தையும் ஏற்படுத்துகிறது?

  • அதிக அழுத்தப் பகுதியிலிருந்து காற்று குறைந்த அழுத்தப் பகுதியை நோக்கி சூழல் வடிவில் வீசும் காற்று சூறாவளி ஆகும்.
  • காற்று 250 கி.மீ வேகத்திலும், கடலலை 20 கி.மீ வரை கடல்நீர் நிலத்திற்குள் உட்புகுவதால் பெரிய அளவில் உயிர்சேதம் மற்றும் பொருட்சேதத்தை ஏற்படுத்துகிறது.

3. மேக மூட்டத்துடன் இருக்கும் நாள்களை விட மேகமில்லாத நாள்கள் வெப்பமாக இருக்கிறது.

  • குளிர்ந்த ஈரப்பதமான காற்று படிவதன் மூலம் மேகங்கள் உருவாகின்றன. கண்களுக்கு புலப்படும் படியாக மிதந்து கொண்டிருக்கும குளிர்ந்த நீர்த்திவலைகளே மேகங்களாகும்
  • எனவே மேகமூட்டத்துடன் இல்லாத நாட்கள் வெப்பமாக இருக்கும்.

4. மூடுபனி பாேக்குவரத்துக்கு ஆபத்தாக உள்ளது.

  • மூடுபனி என்பது காற்று, தூசியுடன் கூடிய அடர்த்தியான பனி ஆகும். இதன் வழியே வெளிச்சம் ஊடுருவிச் செல்லாது ஆகையால் போக்குவரத்திற்கு ஆபத்தாக அமைகிறது.

5. வெப்பச்சலன மழை 4 மணி மழை என்று அழைக்கப்படுகிறது.

  • வெப்பச்சலன மழை புவியில் நிலநடுக்கோட்டுப் பகுதியில் மாலை வேளையில் 4 மணி அளவில் அடிக்கடி நிகழ்கிறது.
  • எனவே வெப்பச்சலன மழை 4 மணி மழை என்று அழைக்கப்படுகிறது.

6. துருவக் கீழைக்காற்றுகள் மிகக் குளிச்சியாகவும் வறண்டும் காணப்படுகின்றன.

  • துருவப் பிரதேசங்கள் பனிமூடிய பகுதிகளாக இருப்பதால் துருவக் கீழைக்காற்றுகள் மிக குளிர்ச்சியாகவும், துருவப்பிரதேசத்தில் ஆவியாதல் நடவடிக்கை மிகக் குறைவாக நடைபெறுவதால் வறண்டும் காணப்படுகின்றன.

VI. பத்தியளவில் விடையளி

1. வளிமண்டலத்தின் அமைப்பை பற்றி ஒரு பத்தியில் எழுதுக

வளிமண்டலம்

புவியைச் சூழ்ந்து காணப்படும் காற்று படலம் வளிமண்டலம் என்று அழைக்கபடுகிறது. புவியை வளிமண்டலம் சூழ்ந்து காணப்படுவதற்கு அதன் ஈர்ப்பு விசைேய காரணமாகும்.

வளிமண்டல கூட்டமைப்பு

வாயுக்கள், நீராவி மற்றும் தூசுக்கள் வளிமண்டலத்தில் வேறுபட்ட விகிதத்தில் கலந்து காணப்படுகின்றன.

வளிமண்டல வாயுக்கள்

ஆக்சிஜன் (21%) நைட்ரஜன் (76%) ஆர்கான் (0.93%) கார்பன்-டை-ஆக்ஸைடு (0.03%) நியான், ஹீலியம், ஓசோன், ஹைட்ரஜன், கிரிப்டான், செனான், மீதேன்

வளிமண்டலத்திலுள்ள மற்ற பொருட்கள்

நீராவி, தூசுத் துகள்கள், உப்புத் துகள்கள், மகரந்த துகள்கள், புகை, சாம்பல், எரிமலைச் சாம்பல்

வளிமண்டலத்திலுள்ள அடுக்குகள்

வளிமண்டலத்தில் ஐந்து அடுக்குள் உள்ளன

  • கீழ் அடுக்கு
  • மீள் அடுக்கு
  • இடை அடுக்கு
  • வெப்ப அடுக்கு
  • வெளியடுக்கு
  • கீழ் அடுக்கு

18 கி.மீ வரை காணப்படுகிறது. இவ்வடுக்கில் தான் அனைத்து வானிலை நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. இங்கு உயரே செல்ல செல்ல வெப்பநிலை குறையும்

மீள் அடுக்கு

கீழடுக்குக்கு மேல் உள்ள மீள் அடுக்கு. இங்கு ஓசோன் மூலக்கூறுகள் அதிகம் உள்ளதால், இது “ஓசோனோஸ்பியர்” என்று அழைக்கப்படுகிறது. இந்த அடுக்கு ஜெட் விமானங்கள் பறப்பதற்கு ஏதுவாக உள்ளது.

இடையடுக்கு

மீள் அடுக்குக்கு மேல் உள்ளது இடையடுக்கு. இங்கு உயரம் செல்ல செல்ல வெப்பநிலை கூடுகிறது. புவியிலிருந்து பெறப்படு வானொலி அலைகள் இவ்வடுக்கிலிருந்து தான புவிக்கு திருப்பி அனுப்பப்படுகிறது.

வெப்ப அடுக்கு

இடையடுக்கு மேல் உள்ளது வெப்ப அடுக்கு. இங்கு உயரம் செல்ல செல்ல வெப்பநிலை அதிகரிக்கிறது. இங்கு அயனிகளும், மின்னணுக்களும் காணப்படுகின்றன.

வெளியடுக்கு

வெப்ப அடுக்கிற்கு மேல் உள்ளது வெளியடுக்கு. இங்கு வாயுக்கள் மிகவும் குறைந்த காணப்படுகிறது. இவ்வடுக்கின் மேல்பகுதி படிப்படியாக அண்ட வெளியோடு கலந்து விடுகிறது.

2. நிலையான காற்றுகளின் வகைகளை விளக்குக

வருடம் முழுவது நிலையாக ஒரே திசையை நோக்கி வீசும் காற்றுக்கள் நிலையாகாற்றுகள் அல்லது கோள் காற்று எனப்படும். வியாபராக்காற்றுகள், மேலைக்காற்றுகள் மற்றும் துருவ கீழைக்காற்றுகள், கோள் காற்றுகள் ஆகும்.

வியாபாரக் காற்றுகள்

  • வட மற்றும் கோளங் தென் அரைக் களின் துணை வெப்ப மண்டல உயர் அழுத்த மண்டலங்களிலிருந்தும் நிலநடுக்கோட்டு தாழ்வழுத்த மண்டலங்களை நோக்கி வீசும் காற்று வியாபாரக் காற்று எனப்படும்.
  • இக்காற்றுகள் தொடர்ச்சியாகும், அதிக வலிமையுடன் வருடம் முழுவதும் ஒரே திசையில் நிலையாக வீசுகின்றன. வியாபாரிகளின் கடல்வழி பயணத்திற்கு இக்காற்று உதவியாக இருந்ததால் இக்காற்று “வியாபாரக்காற்று” என அழைக்கப்பட்டது

மேலைக் காற்றுகள்

  • மேலைக்காற்றுகள் நிலையான காற்றுகள் ஆகும். இவை வட அரைக்கோளத்தில் தென் மேற்கிலிருந்து வட கிழக்காகவும், தென் அரைக்கோளத்தில் வட மேற்கிலிருந்து தென் கிழக்காவும் வீசுகின்றன.
  • இவைகள் மிகவும் வேகமாக வீசுவதால் கர்ஜிக்கும் நாற்பதுகள், சீறும் ஐம்பதுகள், கதறும் அறுபதுகள் எனவும் அழைக்கப்படுகிறது.
  • துருவ கீழைக் காற்றுகள்
  • துருவ உயர் அழுத்த மண்டலத்திலிருந்து துணை துருவ தாழ்வழுத்த மண்டலத்தை நோக்கி வீசும் குளிர்ந்த, வறண்ட காற்றுகள் துருவ கீழைக்காற்றுகள் என்படுகின்றன. இக்காற்றுகள் வலுவிழந்தக் காற்றாகும்.

3. மேகங்களின் வகைகளை விவரி

உயரத்தின் அடிப்படையில் மேகங்களை மூன்றாகப் பிரிக்கலாம்

  1. மேல்மட்ட மேகங்கள்
  2. இடைமட்ட மேகங்கள்
  3. கீழ்மட்ட மேகங்கள்
  4. மேல்மட்ட மேகங்கள்

கீற்று மேகங்கள்

வளிமண்டலத்தில் 8000 முதல் 12000 மீட்டர் உயரத்தில் மெல்லிய, வெண்ணிற இழை போன்ற தாேற்றத்தில் காணப்படும். இது முற்றிலும் ஈரப்பதம் இல்லாத மேகங்களாகும். எனவே, இம்மேகங்கள் மழைப்பொழிவை தருவதில்லை.

கீற்று மேகங்கள்

கீற்றுத் திரள் மேகங்கள் வெண்மையான திட்டுக்ளளாகவோ, விரிப்பு  போன்றாே, அடுக்கடுக்காகவோ அமைந்திருக்கும். இவை பனிப்படிகங்களால் உண்டானவை ஆகும்.

கீற்றுப்படை மேகங்கள்

கீற்றுப்படை மேகங்கள் மென்மையாக பால் போன்ற வெள்ளை நிறத்தில் கண்ணாடி போன்று காணப்படும். இது மிகச்சிறிய பனித்துகள்களை காெண்ட மேகமாகும்

2. இடைப்பட்ட மேகங்கள்

இடைப்பட்ட படை மேகங்கள்

சாம்பல் அல்லது நீல நிறத்தில் சீராக மெல்லிய விரிப்பு போன்று காணப்படும் மேகங்கள் இடைப்பட்ட படை மேகங்களாகும். இவை உறைந்த நீர்த்திவலைகளைக் கொண்டிருக்கும்.

இடைப்பட்ட திரள் மேகங்கள்

தனித்தனியாக உள்ள மேகத்திரளக் ஒன்றொடொன்று இணைந்து பல்வேறு வடிவங்களில் காணப்படும். இதனை செம்மறியாட்டு மேகங்ள் அல்லது கம்பிளிகற்றை மேகங்கள் என்றும் அழைக்கின்றன

 கார் படை மேகங்கள்

புவியின் மேற்பரப்பை ஒட்டிய பகுதிகளில் தோன்றும் கருமையான மேகங்கள் கார் படை மேகங்கள் ஆகும். இவை மழை, பனி மற்றும் ஆலங்கட்டி மழையுடன் தொடர்புடையவை.

3. கீழ் மட்ட மேகங்கள்

படைத்திரள் மேகங்கள்

சாம்பல் அல்லது நீல நிறத்தில் வட்டத்திட்டுகளாக காணப்படும். இம்மேகங்கள் தோன்றும்போது அப்பகுதியில் தெளிவான வானிலை காணப்படும்.

படை மேகங்கள்

மிகவும் அடர்த்தியாக கீழ்மட்டத்தில் பனிமூட்டம் போன்று காணப்படும் மேகங்கள் படைமேகங்கள் எனப்படும். இவை மழை அல்லது பனிப்பொழிவைத் தரும்.

திரள் மேகங்கள்

தட்டையான அடிபாகமும், குவிமாடம் போனற “காலிபிளவர்” வடிவத்துடன் காணப்படும். இது தெளிவான வானிலையுடன் தொடர்புடைய மேகங்களாகும்

கார் திரள் மேகங்கள்

சூறாவளிகள் எவ்வாறு உருவாகின்றன? அதன் வகைகளை விவரி.

சூறாவளிகள்

அதிக அழுத்தமுள்ள பகுதிகளிலிருந்து காற்று குறைந்த அழுத்தமுள்ள பகுதிக்கு சூழல் வடிவத்தில் குவியும் காற்று சூறாவளி என்று அழைக்கப்படுகிறது.

சூறாவளியின் வகைகள்

வெப்ப சூறாவளிகள்

வெப்ப மண்டலங்களுக்கு இடையே காற்றை ஒருமுகப்படுத்தும் பகுதிகளில் உருவாகின்றன. நிலத்தை அடைந்தவுடன் வலுவிழந்துவிடுகின்றன. வெப்ப சூறாவளிகளின் மறு பெயர்கள் சூறாவளிகள், டைபூன்கள், ஹரிக்கேனக்ள, பேக்யுஸ், மற்றும் வல்லி வில்லி

மிதவெப்பச் சூறாவளி

35o முதல் 65o வடக்கு மற்றும் தெற்கு அட்ச பகுதிகளில் வெப்பம் மற்றும் குளிர்காற்றுத் திரள்கள் சந்திக்கும் பகுதிகளில் உருவாகின்றன. நிலத்தை அடைந்தாலும் வலுவிழக்காது. இந்தியாவில் இக்காற்று மேற்கத்திய இடையூறு காற்று என்று அழைக்கப்படுகிறது.

மிதவெப்பச் சூறாவளி

30o முதல் 60o வரை உள்ள வடக்கு மற்றும் தெற்கு அட்ச பகுதிகளில் வீசுகின்றன. லேசான சாரல் மழை முதல் பெருங்காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழைப்பொழிவையும், இடியுடன் கூடிய மழைப்பொழியும், பனிப்பொழிவையும் மற்றும் சுழல் காற்றையும் அளிக்கின்றன.

5. பொழிவின் வகைகளை விவரி

சாரல், மழை, பனிப்பொழிவு, ஆலங்கட்டி மழை, போன்றவை பொழிவின் வகைகளாகும்

சாரல்

0.5 மில்லி மீட்டருக்கும் குறைவான விட்டமுள்ள நீர்த்துளிகள் சீராக புவியை வந்தடையும்பொழுது அதனை சாரல் என்றழைக்கிறோம்.

மழை

  • உறைநிலைக்கும் அதிகமான வெப்பநிலை காணப்படும் போது மழைப் பொழிகிறது.
  • காற்றில் மிக அதிகமான ஈரப்பதம் இருந்தால் மட்டுமே மழைப்பொழிவு ஏற்படும்.

பனி

  • உறையும் நிலைக்கு கீழாக நீர் சுருங்குதல் ஏற்படும்போது பனிப்பொழிவு ஏற்படுகிறது.
  • பகுதியாகவோ முழுமையாகவோ ஒளிபுகாத் தன்மையுடன் காணப்படும் பனித்துளிகள் படிகங்களை பனி என்று அழைக்கின்றோம்.

ஆலங்கட்டி மழை

  • முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ ஒளிபுகும் தன்மையுடன் கூடிய மிகச்சிறிய பனி உருண்டையுடன் கூடிய மழைப்பொழிவு ஆலங்கட்டி மழை என்று அழைக்கப்படுகிறது.

கல்வாரி மழை

  • இடியுடன் கூடிய புயல் மற்றும் மழையுடன் கூடிய புயலின்போது 2 செ.மீட்டருக்கு மழை என்று அழைக்கப்படுகிறது. சிறிய கட்டிகள் போன்ற பயிர்களையும், மனித உயிர்களையும் பாதிக்கும் தன்மை கொண்டது.

Leave a Reply