9th Social Science History Guide Lesson 11
9th Social Science – History Guide Lesson 11 ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம்
9th Standard Social Science History Lesson 11 ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் Book Back Answers. 9th Social Guide Unit 11 Book Back Answers English Medium. 9 all Subject Book Answers. Class 9 Social Science All Unit Book in Answers TM & EM.
- 9th Social Science ( All Units ) – English Medium – Guide – Book Back Answers
- 9th Social Science ( All Units ) – Tamil Medium – Guide – Book Back Answers
9th Social Science – History Guide Lesson 11 ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம்
I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் .
1. பிரான்ஸிஸ் லைட் ______ பற்றி ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.
விடை : பினாங்குத் தீவு
2. 1896இல் _______ நாடுகள் ஒருங்கிணைக்கப்பட்டு மலாய் ஐக்கிய நாடுகள் உருவாக்கப்பட்டது.
- நான்கு
- ஐந்து
- மூன்று
- ஆறு
விடை : நான்கு
3. இந்தோ-சீனாவில் _____ மட்டுமே பிரான்சின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியாகும்
- ஆனம்
- டோங்கிங்
- கம்போடியா
- கொச்சின் – சீனா
விடை : கொச்சின் – சீனா
4. __________________ பகுதியில் தங்கம் கண்டுபிடிகக்கப்படட்டதானது பெருமளவிலான ஆங்கிலேய சுரங்கத் தொழில் செய்வோர் ஜோகன்னஸ்பர்க்கிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் குடியேற வழி வகுத்தது.
- டிரான்ஸ்வால்
- ஆரஞ்சு சுதந்திர நாடு
- கேப் காலனி
- ரொடீஷியா
விடை : டிரான்ஸ்வால்
5. இந்தியாவுடன் வணிக உறவை நிறுவிக் கொண்ட முதல் ஐரோப்பிய நாட்டினர் ______________
- போர்த்துகீசியர்
- பிரஞ்சுக்காரர்
- டேனிஷார்
- டச்சுக்காரர்
விடை : போர்த்துகீசியர்
6. எத்தியோப்பியா இத்தாலியை ____________ போரில் தோற்கடித்தது.
- அடோவா
- டஹோமி
- டோங்கிங்
- டிரான்ஸ்வால்
விடை : அடோவா
7. ஒப்பந்தக் கூலி முறையானது ஒரு வகை ____________
- ஒப்பந்தத் தொழிலாளர் முறை
- அடிமைத்தனம்
- கடனுக்கான அடிமை ஒப்பந்தம்
- கொத்தடிமை
விடை : கடனுக்கான அடிமை ஒப்பந்தம்
II கோடிட்ட இடங்களை நிரப்புக
- _______________ மாநாடு ஆப்பிரிக்காவை ஐரோப்பிய நாடுகளின் செல்வாக்கு மண்டலங்களாகப் பிரித்துக்கொள்வது எனத் தீர்மானித்தது.
விடை : பெர்லின் குடியேற்ற நாட்டு
- வங்காளம், பீகார், ஒரிசா ஆகிய பகுதிகளின் ஜமீன்தார்களோடு மேற்கொள்ளப்பட்ட தீர்வு______ என்றழைக்கப்படுகிறது.
விடை : நிரந்தர நிலவரித் திட்டம்
- ஆங்கிலேயரின் வருவாய்க்கு முக்கிய ஆதாரமாகத் திகழ்ந்தது __________ ஆகும்.
விடை : நிலவரி
- தமிழ் மொழி பேசப்பட்ட பகுதிகளில் _______ வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழிலில் இருந்தனர். விடை : நாட்டுக்கோட்டை செட்டியார்
III) பொருத்துக.
- லியோபோல்டு – எத்தியோப்பியா
- மெனிலிக் – வியட்நாம்
- சிசல் ரோடெஸ் – பெல்ஜியம்
- வங்காளப் பஞ்சம் – கேப் காலனி
- போ தெய் – 1770
விடை : 1 – இ, 2 – அ, 3 – ஈ, 4 – உ, 5 – ஆ
IV சரியான கூற்றைக் கண்டுபிடிக்கவும்
1. i) 19ஆம் நூற்றாண்டின் கடைசிக் காலாண்டுப் பகுதிவரை சகாராவுக்குத் தெற்கேயி ருந்த ஆப்பிரிக்கா வெளியுலகுக்கு தெரியாமல் இருந்தது.
ii) 1864ஆம் ஆண்டில் கோல்டு கோஸ்டில் அமைந்துள்ள கடற்கரைப் பகுதி நாடுகள் இங்கிலாந்தின் காலனிகளாயின.
iii) 500 ஆண்டு காலத்திற்கும் மேலாக ஸ்பெயின் பிலிப்பைன்ஸை ஆட்சி செய்தது.
iv) ஒடிசா பஞ்சம் 1876-78இல் நடைபெற்றது.
a.i) சரி
b.ii) சரி
c.ii) மற்றும் iii) சரி
d.iv) சரி
விடை : i) சரி
2. i) 1640இல் பிரெஞ்சுக்காரர்கள் ஜாவாவையும் சுமத்ராவையும் கைப்பற்றினர்.
ii) மலாக்காவைக் கைப்பற்றியதின் மூலம் ஆங்கிலக் குடியேற்றங்களைக் கைப்பற்றும் பணியை டச்சுக்காரர் தொடங்கினர்.
iii) காங்கோ ஆற்றின் வடிநிலத் தீரத்தோடு தொடர்புடைய அனைத்துப் பி ரச்சனைகளையும் பேசித் தீர்ப்பதற்காகவே பெர்லின் மாநாடு கூடியது.
iv) சுல்தான் ஜான்ஜிபாரின் பகுதிகள் பிரான்சு மற்றும் ஜெர்மனியின் செல்வாக்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டன.
a.i ) சரி
b.i) மற்றும் ii) சரி
c.iii) சரி
d.iv) சரி
விடை : iii) சரி
3. கூற்று: சென்னை மகாணத்தில் 1876-1878 ஆண்டுகளில் நிலவிய பஞ்சத்திற்கு முன்னர் பெரும் வறட்சி நிலவியது.
காரணம்: காலனியரசு உணவுதானிய வணிகத்தில் தலையிடாக் கொள்கையைப் பின்பற்றியது.
- கூற்று சரி, காரணம் தவறு
- கூற்று, காரணம் இரண்டுமே தவறு
- கூற்று சரி, காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கமல்ல
- கூற்று சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்
விடை : கூற்று சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்
4. கூற்று : பெர்லின் மாநாடு இராண்டாம் லியோபோல்டை சுதந்திர காங்கோ நாட்டில் ஆட்சி செய்ய அனுமதி வழங்கியது.
காரணம் : பெல்ஜியம் அரசர் இரண்டாம் லியோபோல்டு காங்கோவின் மீது அக்கறை கொண்டிருந்தார்.
- கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
- கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
- கூற்று சரி, காரணம் தவறு
- கூற்று தவறு, காரணம் சரி
விடை : கூற்று சரி, காரணம் தவறு
V சுருக்கமாய் விடையளிக்கவும்
1. காலனியாதிக்கம், ஏகாதிபத்தியம் – இரண்டையும் வேறுபடுத்திக் காட்டவும்.
காலனியாதிக்கம் |
ஏகாதிபத்தியம் |
1. காலனி என்னும் சொல் ‘கலோனஸ்’ என்னும் லத்தீன் வேர்ச்சொல்லிலிருந்து பிறந்ததாகும். இதன் பொருள் விவசாயி என்பதாகும் |
(இம்பீரியம் என்னும் லத்தீன் சொல்லிலிருந்து பிறந்தது. ஆதிக்கம் செய்தல் என்று பொருள் |
2. ஒரு புதிய இடத்தில் குடியேற்றுவது. குடியேறியவர்கள் அங்கேயே நிரந்தரமாகத் தங்கி வாழ்வர். |
ஒரு நாடு, குடியேறுதல் மூலமாகவோ இறையாண்மை செலுத்துதல் மூலமாகவோ மறைமுகமாகக் கட்டுப்படுத்தும் வழிகளிலோ வேறொரு நாட்டின் மீது அதிகாரம் செலுத்துவதைக் குறிக்கும். |
2. ஜூலு பூர்வகுடிகள் பற்றிச் சிறு குறிப்பு வரைக.
- ஜூலு பூர்வக்குடிகள் தங்களின் போர்த் திறனுக்காகப் பெயர் பெற்றவர்கள். புகழ் பெற்ற போராளிகளான சாக்கா ஜூலு போன்றவர்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டவர்கள்.
- தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் ஜூலு மக்களுக்கென ஒரு பெரிய நாட்டை உருவாக்குவதில் சாக்கா ஜூலு முக்கியப் பங்காற்றினார்.
- ஜூலு பகுதிகளைக் கைப்பற்றிய ஆங்கிலப் படைகள் அப்பகுதிகளைப் பதிமூன்று தலைமையுரிமைப் பகுதிகளாகப் பிரித்தனர்.
- ஜூலுக்கள் தங்கள் சுதந்திரத்தை மீண்டும் பெறவேயில்லை.
3. இந்தியப் பொருளாதாரம் காலனிமயமாக்கப்பட்டதின் மூன்று கட்டங்களைக் கூறுக.
இந்தியாவைக் காலனிநாடாக்கிய செயல்பாட்டை மூன்று கட்டங்களாகப் பிரித்துப் பார்க்கலாம்.
- முதற்கட்டம் : வாணிக முதலாளித்துவம்
- இரண்டாம் கட்டம்: தொழில்துறை முதலாளித்துவம்
- மூன்றாம் கட்டம்: நிதி மூலதன முதலாளித்துவம்
4. கர்னல் பென்னிகுயிக்.
- கர்னல் பென்னிகுயிக்: பென்னிகுயிக் ஓர் இராணுவப் பொறியாளரும், குடிமைப்பணியாளரும், சென்னை மாகாணச் சட்டமன்ற மேலவை உறுப்பினரும் ஆவார்.
- மேற்கு நோக்கி ஓடும் பெரியார் ஆற்றின் நீரை ஓர் அணையைக் கட்டி கிழக்குநோக்கித் திருப்பினால் வைகை ஆற்றைச் சார்ந்திருக்கும் இலட்சக்கணக்கான புன்செய் நிலங்களைப் பாசன வசதி கொண்டவையாக மாற்ற முடியும் என அவர் முடிவு செய்தார்.
- ஆங்கிலேய அரசிடமிருந்து போதுமான அளவுக்கு நிதியைப் பெறமுடியாத நிலையில் பென்னிகுயிக் இங்கிலாந்து சென்று தனது குடும்பச் சொத்துக்களை விற்று, அப்பணத்தைக் கொண்டு அணையைக் கட்டி முடித்தார்.
5. தாயகக் கட்டணங்கள் (Home Charges) பற்றி விளக்கவும்.
தாயகக் கட்டணம் என்ற பெயரில் கிழக்கிந்தியக் கம்பெனியின் பங்குதாரர்களுக்குச் சேர வேண்டிய லாபத்தில் பங்கு, வாங்கிய கடனின் மீதான வட்டி, ஊதியத்திலிருந்து பெறப்பட்ட சேமிப்பு, அதிகாரிகளுக்கான ஓய்வூதியம், லண்டனில் உள்ள இந்திய அலுவலகத்திற்கான செலவுகள் இந்தியாவிற்கு வரும் அல்லது இந்தியாவிலிருந்து செல்லும் ஆங்கிலப் படைகளுக்கான போக்குவரத்துச் செலவு எனும் பெயரால் கம்பெனி பெருமளவுப் பணத்தை ஆண்டுதோறும் இங்கிலாந்திற்கு அனுப்பிவைத்தது.
VI ஒவ்வொரு தலைப்பின் கீழும் கொடுக்கப்பட்டுள்ள அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் அளிக்கவும்
1. இந்தியாவில் காலனி ஆதிக்கம்
அ) கிழக்கிந்தியக் கம்பெனி எப்போது நிலவரி வசூலிக்கும் உரிமையைப் பெற்றது?
1765
ஆ) ஆங்கிலேயர் எப்போது கூர்கர்களை வென்றனர்?
816
இ) இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியில் அடிமைமுறை எப்பொழுது ஒழிக்கப்பட்டது?
1843
ஈ) கீழை உலகின் லங்காஷையர் என்னும் பெயரைப் பெற்றிருந்த நாடு எது?
இந்தியா
2. தென்னாப்பிரிக்கா
அ) தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலேயருக்குச் சொந்தமான நாடுகள் எவை?
நேட்டால், கேப்காலணி
ஆ) டச்சுக்காரர் கைவசமிருந்த பகுதிகள் எவை?
டிரான்ஸ்வால், சுதந்திர ஆரஞ்சுநாடு
இ) கேப்காலனியின் பிரதம அமைச்சர் யார்?
சிசில் ரோட்ஸ்
ஈ) போயர் போர்கள் எத்தனை ஆண்டுகள் நடைபெற்றன?
3 ஆண்டுகள் (1899 – 1902)
VII விரிவாக விடையளிக்கவும்
1. இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியின் பொருளாதாரத் தாக்கத்தை விவாதிக்கவும்.
வேளாண்மைச் சூழல்
- ரயத்துவாரி முறை என்பது தென்னிந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட வித்தியாசமான நிலவருவாய் வரி முறையாகும்.
- இம்முறையின்படி விவசாயி நிலத்தின் உரிமையாளர் ஆவார். அவரே வரி செலுத்துவார்.
- நிலவரியை ஒரு விவசாயி முறையாகச் செலுத்தும்வரை நிலம் அவருக்குச் சொந்தமானதாக இருக்கும்.
- நிலவரி செலுத்தத் தவறினால் அவர் நிலத்திலிருந்து வெளியேற்றப்படுவார்.
- மேலும் அவருக்குச் சொந்தமான கால்நடைகளையும் ஏனைய உடைமைகளையும் அரசு பறிமுதல் செய்துகொள்ளலாம்.
நிலவரி
- ஆங்கிலேயரின் வருவாய்க்கு முக்கிய ஆதாரமாகத் திகழ்ந்த நிலவரி பலவந்தமான முறைகளில் வசூல் செய்யப்பட்டது. பஞ்சக்காலங்களில் கூட நிலவரி செலுத்துவதிலிருந்து விவசாயிகளுக்கு விலக்கு அளிக்கப்படவில்லை.
- நிலப் பிரபுக்களுக்கு குத்தகைத் தொகை வழங்கவும், அரசுக்கு நிலவரியைச் செலுத்தவும், நிலம் உட்பட்ட தங்களது சொத்துக்களை விவசாயிகள் அடமானம் வைக்கும் அல்லது விற்றுவிடும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டனர்.
நீர்ப்பாசனம்
- மக்களின் நலனில் அக்கறை கொண்ட ஆர்த்தர் காட்டன், பென்னிகுயிக் போன்ற ஆங்கிலேய அதிகாரிகளும் பொறியாளர்களும் மேற்கொண்ட முன்முயற்சியால் பாதுகாக்கப்பட்ட நீர்ப்பாசன கால்வாய்கள் சில இடங்களில் சாத்தியமாயின.
- எங்கெல்லாம் இவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டனவோ அங்கெல்லாம் ஆங்கிலேயர் அதிகமான தீர்வை வசூலித்தனர். ஏற்கெனவே கொடூரமான நிலவரி வசூலின் கீழ் இருந்த விவசாயிகள் மேன்மேலும் அவதியுற நேர்ந்தது.
பஞ்சங்கள்
- காலனியரசின் சுதந்திர வணிகக் கொள்கையும் கடுமையான நிலவரி வசூல் முறையும் பஞ்சங்கள் தோன்றுவதற்கு வழியமைத்துக் கொடுத்தன.
- 1866–1867இல் ஏற்பட்ட ஒடிசா பஞ்சம் அப்பகுதியின் வரலாற்றில் நடைபெற்ற கொடூரமான நிகழ்வாகும். இப்பஞ்சத்தில் அப்பகுதிவாழ் மக்களில் மூன்றில் ஒரு பகுதியினர் இறந்தனர்.
- சென்னை மகாணத்தில் 1876–1878 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப் பெரும் பஞ்சத்தால் வறட்சி நிலவியது.
- ஒப்பந்தக் கூலி முறை
- ஒப்பந்தக் கூலி முறையானது பெற்ற கடனுக்காக உழைப்பை நல்கும் ஒரு ஒப்பந்த முறையாகும்.
- இதன் மூலம் 35 இலட்சம் இந்தியர்கள் பல ஆங்கிலேயக் குடியேற்றங்களுக்குப் பெரும் பண்ணைகளில் (பெரிதும் கரும்புத் தோட்டங்களில்) வேலை செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
2. ஆப்பிரிக்காவில் காலனி ஆதிக்கம் ஏற்ப்பட்டதை விவரி
தென்ஆப்பிரிக்கா
- தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலேயர் நேட்டால், கேப் காலனி ஆகிய பகுதிகளைப் பெற்றிருந்தனர். உள்நாட்டில் போயர் (Boer) என அறியப்பட்ட டச்சுக்காரர் டிரான்ஸ்வாலைச் சேர்ந்த நாடுகளையும் சுதந்திர ஆரஞ்சு நாட்டையும் பெற்றிருந்தனர். 1886இல் டிரான்ஸ்வாலில் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டவுடன் இங்கிலாந்தைச் சேர்ந்த சுரங்கத்தொழில் வல்லுநர்கள் ஜோகன்னஸ்பர்க்கிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் பெரும் எண்ணிக்கையில் குடியேறத் தொடங்கினர்.
- ஜூலு பூர்வக்குடிகள் தங்களின் போர்த் திறனுக்காகப் பெயர் பெற்றவர்கள். புகழ் பெற்ற போராளிகளான சாக்கா ஜூலு போன்றவர்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டவர்கள். தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் ஜூலு மக்களுக்கென ஒரு பெரிய நாட்டை உருவாக்குவதில் சாக்கா ஜூலு முக்கியப் பங்காற்றினார். ஜூலு பகுதிகளைக் கைப்பற்றிய ஆங்கிலப் படைகள் அப்பகுதிகளைப் பதிமூன்று தலைமையுரிமைப் பகுதிகளாகப் பிரித்தனர்.
ரொடிசியா
- 1889ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பிரிட்டிஷ் தென் ஆப்பிரிக்க கம்பெனி எனும் நிறுவனம் பிச்சுனாலந்துப் பகுதி முழுவதையும் காலனியாக மாற்றியது
- இக்குடியேற்றம் பின்னர் சிசில் ரோட்ஸ் பெயரால் ரொடீசியா என அழைக்கப்பட்டது.
மேற்கு ஆப்பிரிக்கா
கோல்டு கோஸ்டில் அமைந்துள்ள கடற்கரைப் பகுதி அரசுகள் 1864-ல ஆங்கிலேயர் காலனியாது.
பிரெஞ்சு மேற்கு ஆப்பிரிக்கா
பிரான்சுக்கு சொந்தமாகிய கினியா, ஐவரி, கோஸட், டகோமெய் ஆகியவை சகாராவுக்கு தெற்கிலிருந்த பகுதிகளோடு இணைக்கபட்டன.
கிழக்கு ஆப்பிரிக்கா
- 1886இல் ஜான்ஜிபார் சுல்தானுக்குச் சொந்தமான பல பகுதிகள் இங்கிலாந்து, ஜெர்மனி ஆகியவற்றின் செல்வாக்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டன.
- கென்யா, உகாண்டா, ஜான்ஜிபார் ஆகியவற்றைக் ஆண்ட அரசன பலவீனமானவர், திறமையற்றவர் என முத்திரைக் குத்தி உகாண்டாவின் மீது தனது மறைமுகமான ஆட்சியை இங்கிலாந்து நிறுவியது.