9th Social Science History Guide Lesson 2
9th Social Science – History Lesson 2 பண்டைய நாகரிகங்கள் Book Back Answers
9th Standard Social Science History Lesson 2 பண்டைய நாகரிகங்கள் Book Back Answers. 9th Social Guide Unit 2 Book Back Answers Tamil Medium. 9 all Subject Book Answers. Class 9 Social Science All Unit Book in Answers TM & EM.
- 9th Social Science ( All Units ) – English Medium – Guide – Book Back Answers
- 9th Social Science ( All Units ) – Tamil Medium – Guide – Book Back Answers
9th Social Science History Guide பாடம் 2 பண்டைய நாகரிகங்கள்
I. சரியான வி்டையைத் தேர்வு செய்க.
1. சொற்களைப் படங்கள் மூலம் உணர்த்தும் குறியீட்டு முறையை ________________ என்கிறோம்
- லோகோகிராபி
- பிக்டோகிராபி
- ஐடியாகிராபி
- ஸ்ட்ராட்டிகிராபி
விடை : பிக்டோகிராபி
2. எகிப்தியர்கள் இறந்ந உடல்களைப் பதப்படுத்தி பாதுகாத்த முறை ______________
- சர்கோபகஸ்
- ஹைக்சோஸ்
- மம்மியாக்கம்
- பல கடவுளர்களை வணங்குதல்
விடை : மம்மியாக்கம்
3. சுமேரியர்களின் எழுத்துமுறை ……………………… ஆகும்.
- அ) பிக்டோகிரோபி
- ஹைரோகிளிபிக்
- சோனோகிரோம்
- க்யூனிபார்ம்
விடை : க்யூனிபார்ம்
4. ரப்பர்கள் எழுத்துமுளற …………………….. ஆகும்.
- தங்கம் மற்றும் யானை
- குதிரை மற்றும் இரும்பு
- ஆடு மற்றும் வெள்ளி
- எருது மற்றும் பிளாட்டினம்
விடை : குதிரை மற்றும் இரும்பு
5. சிந்துநவளி மக்கள் லாஸ்ட் வேக்ஸ் முறையை அறிந்திருந்தார்கள் என்பதைத் தெரிவிக்கும் வெண்கலச்சிலை ………………………….. ஆகும்.
- ஜோடி
- மதகுரு அல்லது அரசன்
- நடனமாடும் பெண்
- பறவை
விடை : நடனமாடும் பெண்
6. i) மெசபடோமியோவின் மிகப்பழமையான நாகரிகம் அக்காடியர்களுடைய நாகரிகம் ஆகும்.
ii) சீனர்கள் ஹைரோகிளிபிக் முறையை வளர்த்தெடுத்தார்கள்
iii) யூப்டிரஸ், டைகிரிஸ் ஆகிய ஆறுகள் மன்னார் வளைகுடாவில் கலக்கின்றன.
iv) பாபிலோனிய அரசான ஹமுரோபி பெரும் சட்ட வல்லுனர் ஆவார்
a.(i) சரி
b.(i) மற்றும் (ii) சரி
c.(iii) சரி
d.(iv) சரி
விடை : (iv) சரி
9th Social Science History Guide Lesson 2
7. (i) யாங்சி ஆறு சீனாவின் துயரம் என்று அழைக்கப்படுகிறது.
(ii) வு – டி சீனப்பெருஞ்சுரைக் கட்டினார்
(iii) சீனர்கள் வெடிமருந்தைக் கண்டுபிடித்தனர்
(iv) தாவோயிசத்தை நிறுவியவர் மீனியஸ் என்று சீன மரபு கூறுகிறது.
a.(i) சரி
b.(ii) சரி
c.(iii) சரி
d.(iii) மற்றும் (iv) சரி
விடை : (iii) சரி
8. பின்வருவனவற்றுள் மெசபடோமியாவைச் சேர்ந்த நான்கு நாகரிகங்களின் சரியான காலவரிசை எது?
- சுமேரியர்கள் – அஸிரியர்கள் – அக்காடியர்கள் – பாபிலோனியர்கள்
- பாபிலோனியர்கள்– சுமேரியர்கள் – அஸிரியர்கள் – அக்காடியர்கள்
- சுமேரியர்கள் – அக்காடியர்கள் – பாபிலோனியர்கள்– அஸிரியர்கள்
- பாபிலோனியர்கள்– அஸிரியர்கள் – அக்காடியர்கள் – சுமேரியர்கள்
விடை : சுமேரியர்கள் – அக்காடியர்கள் – பாபிலோனியர்கள்– அஸிரியர்கள்
9. கூற்று – மெசபடோமிய நாகரிகத்தின் அஸிரியர்கள் சிந்துவெளி நாகரிகத்தின் சமகாலத்தவர் ஆவர்.
காரணம் – அஸிரிய ஆட்சியாளரின் ஆவணம் ஒன்று மெலுஹாவிலிருந்து வந்த கப்பல்கள் பற்றி கூறுகின்றது.
- கூற்றும் காரணமும் சரி; கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.
- கூற்றும் காரணமும் சரி; ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை.
- கூற்று சரி; காரணம் தவறு.
- கூற்றும் காரணமும் தவறானது.
விடை : கூற்றும் காரணமும் சரி; ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை.
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
- ______________ என்பது மனிதத் தலையும் சிங்க உடலும் கொண்ட, கல்லால் ஆன மிகப்பெரிய உருவம் ஆகும்.விடை : ஸ்பிங்க்ஸின்
- எகிப்தியர்கள் தொடக்க காலத்தில் பயன்படுத்திய உருவ எழுத்துகள் சார்ந்த முறை _________________ ஆகும். விடை : ஹைராேகிளிபிக் (சித்திர எழுத்து முறை)
- __________________________________ என்பது பல்வேறு குற்றங்களுக்கான சட்டங்களை விளக்கிக்கூறும் பண்டைய பாபிலோனியோவின் ஒரு முக்கியமான ஆவணம் ஆகும்.விடை : ஹமுராபியின் சட்டத் தொகுப்பு
- சௌஅரசின் தலமை ஆவணக்காப்பாளர் _____________ ஆவார். விடை : லாவாேட்சு
- ஹரப்பா நாகரிகம் நிலவிய இடங்களில் கண்டெடுக்கப்பட்ட பானைகளின் மீதுள்ள ____________ உருவங்களும் ஓவியங்களும் அவர்களின் கலைத்திறனை உணர்த்துகின்றன.விடை : சுடுமண்
III. சரியான கூற்றைத் தேர்வு செய்க.
- அ) ஹரப்பாவில் உள்ள பெருங்குளம் அருகில் சில அறைகள் நன்கு கட்டப்பட்டிருந்தது
ஆ) க்யூனிபார்ம் குறிப்புகள் கில்காமெஷ் காவியத்துடன் தொடர்புடையவை.
இ) சுடுமண்ணோல் செய்யப்பட்ட உருவங்களும், செம்பில் செய்யப்பட்ட நடனமாடும் பெண் உருவமும் எகிப்தியர்களின் கலைத்திறனை உணர்த்துகின்றன.
ஈ) மெசபடோமியர்கள் சூரிய நாள்காட்டி முறையை வகுத்தார்கள்
சரியான கூற்று : ஆ) க்யூனிபார்ம் குறிப்புகள் கில்காமெஷ் காவியத்துடன் தொடர்புடையவை.
- அ) பழங்கால எகிப்தில் அமாேன் கடவுளின் அரசனாகக் கருதப்பட்டார்.
ஆ) அரண்களால் சூழ்ந்த ஹரப்போ நகரத்தில் கோயில்கள் இருந்தன.
இ) பெரிய ஸ்பிங்ஸ் என்பது பழங்கால மெசபடோமியோவில் உள்ள பிரமிடு வடிவ நினைவுச்சின்னமாகும்.
ஈ) பானை வனைவதற்கான சக்கரத்தைக் கண்டுபிடித்த பெருமை எகிப்தியர்களைச் சாரும்.
சரியான கூற்று : அ) பழங்கால எகிப்தில் அமாேன் கடவுளின் அரசனாகக் கருதப்பட்டார்.
IV. பொருத்துக1. பாரோ
1. பாரோ |
ஒருவகைப்புல் |
2. பாப்பிரஸ் |
பூமியின் மிகப் பழமையான எழுத்துக் காவியம் |
3. பெரும் சட்ட வல்லுநர் |
மொகஞ்சதாரோ |
4. கில்காமெஷ் |
ஹமுராயி |
5. அரிக்கமேடு |
எகிப்திய அரசர் |
விடை : 1 – உ, 2 – அ, 3 – ஈ. 4 – ஆ, 5 – இ |
V. சுருக்கமான விடை தருக.
1. எகிப்தியர்கள் கலை கட்டக்கலையில் திறன் பெற்றவர்கள் – விளக்குக
- எகிப்தியர்கள் கட்டக்கலையிலும் பல்வேறு கலை வண்ணங்களிலும் சிறப்புறிருந்தன.
- அவர்களது எழுத்து முறை கூடச் சித்திர வடிவில் இருந்தது.
- பரோக்களின் சமாதிகளான பிரமிடுகள் இன்றும் பிரம்மாண்டமான நினைவுச் சின்னங்களாக உள்ளன.
- கெய்ரோவிற்கு அருகில் உள்ள கிஸா பிரமிடுகள் உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
- ஸ்பிங்ஸின் சிங்க உடலும் மனிதமுகமும் கொண்ட சிற்பங்களில் ஒன்றாகும்
2. சிகுரட்களின் முக்கியமான பண்புகளை கூறுக
- பண்டைய மெசபடோமியாவின் நகரின் மையத்தில் மேடை மீது சிகுராட் என்னும் கோவில்கள் கட்டப்பட்டன.
- கோவிலைச் சுற்றி சடங்குகளுக்கான தாழ்பாரங்கள், புனித இடங்கள் ஆண் மற்றும் பெண் மதருமார்களின் கல்லறைகள் சடங்குகளுக்கான விருந்து அரங்குகள் போன்ற வளாகங்கள் இருந்தன.
3. ஹமுராயின் சட்டம் முக்கிய சட்ட ஆவணமாகும் – விவரி
- பல்வேறு குற்றங்களுக்கான சட்டங்களைக் கூறும் ஒரு முக்கியமான சட்ட ஆவணம் ஹமுராபியன் சட்டத்தொகுப்பு ஆகும்.
- குடும்ப உரிமைகள், வணிகம், அடிமை முறை, வரிகள், கூலி – பற்றிய வழக்குகளின் 282 பிரிவுகள் ஆவணத்தில் இருந்தன.
- இது “கண்ணுக்குக் கண்” “பல்லுக்கு பல்” என்ற பழிவாங்கும் கொள்கையின் அடிப்படையில் அமைந்தது.
4. சீனப்பெருஞ்சுவர் பற்றி குறிப்பு வரைக
- உலக அதிசயங்களில் ஒன்றhன சீனப்பெருஞ்சுவர் வடக்கிலிருந்து (மங்கோலியர்களிடமிருந்து) வரும் ஊடுவல்களைத் தடுப்பதற்காக எடுக்கப்பட்ட மிகப்பெரிய முயற்சியாகும்.
- பொ.ஆ.மு.220ல் குவின் ஷி ஹீவாங் படையடுப்புகளைத் தடுப்பதற்காக, அதற்கு முன்னர் கட்டப்பட்டிருந்த ஏராளமான பழைய கோட்டைச் சுவர்களை இணைத்தார்.
- போ.ஆ.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து பொ.ஆ.17 ஆம் நூற்றாண்டு வளர இதன் விரிவாக்கப் பணிகள் நீடித்தன.
- கிழக்கே கொரிய எல்லையிலிருந்து மேற்கே ஆர்டோஸ் பாலைவனம் வரை மலைகள், சமவெளிகளை இணைத்தபடி இது 20,000 கிமீ தூரம் நீள்கிறது.
VI. தலைப்பு வினாக்கள்
ஒவ்வொரு தலைப்பின் கீழேயும் உள்ள அனைத்து வினாக்களுக்கும் விடையளி
1. தொடக்க கால நாகரிகம்
அ) நாகரிகம் என்றால் என்ன?
- நாகரிகம் என்பது ஒரு முன்னேறிய, முறைப்படுத்தப்பட்ட வாழ்க்கை முறை என்று கருதப்படுகிறது.
ஆ) தொடக்க கால நாகரிங்களின் பெயர்களை எழுதுக
- எகிப்திய நாகரிகம்
- மெசபடோமிய நாகரிகம்
- சிந்துவெளி நாகரிகம்
- சீன நாகரிகம்
2. எகிப்திய நாகரிகத்தின் பண்புகள்
அ) பிரமீடுகள் என்றால் என்ன? அதனை ஏன் கட்டினார்கள்?
- பாரோவின் சமாதிகளை பிரமிடுகள் என்றழைக்கப்பட்டது. இது பாரோவின் உடலை பாதுகாக்க கட்டப்பட்டது.
ஆ) மம்மி உருவாக்க முறையை கூறு
- சோடியம் கார்பனேட், சோடியம் பை கார்பனேட் ஆகியவற்றின் கலவையான “நாட்ரன் உப்பு” இறந்த உடல் மீது இடப்படும். 40 நாட்களில் உப்பு உடலில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சிய பின், உடலை மரத்தூளால் நிரப்பி, லினன் துண்டுகளால் சுற்றி துணியால் மூடி சார்க்கோபேகஸ் எனப்படும் சவப்பெட்டியில் பாதுகாப்பார்கள்.
இ) பழங்கால எகிப்தமியர்களின் நம்பிக்கைகளைப் பற்றி கூறு
- எகிப்தியர்கள் மரணத்திற்குப் பிறகு வாழ்வு இருப்பதாக நம்பினார்கள்
ஈ) பெரிய ஸ்பிங்ஸின் முக்கியத்துவத்தைக் கூறு
- ஸ்பிங்ஸின் பிரம்மாண்ட சிலை சிங்க உடலும் மனிதமுகமும் கொண்ட சுண்ணாம்புக்கல் படிமம் ஆகும். உலகின் உயரமான சிற்பங்களில் ஒன்றாகும். 73மீ நீளம் 20மீ உயரம் கொண்டது
3. பெரும்பாலான மக்களுக்கு வாழ்வாதாரமாக இருந்தவை எவை?
- வேளாண்மையும், கால்நடையும் பெரும்பாலான மக்களுக்கு வாழ்வாதாரமாக இருந்தன.
4. நாகரிகம் வடிவம் பெறத் தொடங்கியபோது என்ன நடந்தது?
- கிராமங்களில் மக்கள் பெரிய குழுக்களாக வாழத் தொடங்கினர். பண்பாட்டு வளர்ச்சி ஏற்பட்டது. மொழி, இலக்கியம், அறிவியல், கணிதம், வானவியல் பற்றிய ஆராய்ச்சிகள் வளர தொடங்கின
VII. விரிவான விடையளிக்கவும்
1. ஹரோகிளிபிக்ஸ், க்யூனிபார்ம் – இவற்றை அவற்றின் முக்கியமான கூறுகளுடன் விளக்குக
ஹரோகிளிபிக்ஸ்
- எகிப்தியாகிளன் சித்திர எழுத்து முறை ஹரோகிளிபிக்ஸ் என்று அழைக்கப்படுகிறது.
- இந்த எழுத்து வகை நினைவுச் சின்னங்களில் உள்ள முத்திரை மற்றும் இதர பொருட்களில் பயன்படுத்தப்பட்டது.
- இது பிக்டோகிராம் எனப்படும் சித்திர எழுத்து வடிவமாகும்.
- இந்த எழுத்தைப் பயன்படுத்தி ஏராளமான புத்தகங்களும், பிரதிகளும் எழுதப்பட்டன.
- பிரெஞ்சு அறிஞரான பிராங்குவோ சம்போலியன் எகிப்திய எழுத்துகளுக்கு பொருள் கண்டுபிடித்தார்.
- எகிப்திய கல்வெட்டு நெப்போலியனால் பிரான்சுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இப்போது லண்டன் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
க்யூனிபார்ம்
- சுமேரிய எழுத்து முறை க்யூனிபார்ம் என்று அழைக்கப்படுகிறது.
- எழுத்துக்கள் ஆப்பு வடிவத்தில் இருப்பதால் அதற்கு இப்பெயர் இடப்பட்டது.
- பொ.ஆ.மு. 3000-ல் உருவான இம்முறை உலகின் பழமையான எழுத்து முறைகளில் ஒன்றாகும்.
- இவ்வெழுத்துக்கள் சுட்ட களிமண் பலகைகளில் எழுதப்பட்டது.
2. தத்துவம், இலக்கியம் ஆகிய துறைகளில் சீனத்தின் தாக்கம் எந்தளவிலானது என்பதைக் கூறு.
ஹரோகிளிபிக்ஸ்
- சீன நாகரிகத்திற்கு பங்களித்த தத்துவ ஞானிகள் மற்றம் கவிஞர்கள். லாவோ-ட்-சு, கன்பூசியஸ், மென்சியஸ் மோ டி, தாவோ சின் சன்-ட்-சூ
- சீன நாகரிகத்தில் எழுதப்பட்ட முக்கிய நூல்கள்
சன்–ட்–சூ எழுதிய “போர்க் கலை அதிகாரப்பூர்வ சீன அரசு நூல்
தி ஸ்பிரிங் அண்ட் ஆடோம் அனல்ஸ் ( வசந்தகால, இலையுதிர் கால ஆண்டு குறிப்புகள்)
மஞ்சள் பேரரசரின்
கேனன்ஸ் ஆஃப் மெடிசின் (மருத்துவக் குறிப்புத் தொகுப்புகள்)
ஹரோகிளிபிக்ஸ்
லாவோ ட்சு – செள அரசின் தலைமை ஆவணக் காப்பாளராக இருந்தார். இவர்தான் தாவோயிசத்தைத் தோற்றுவித்தார். ஆசை தான் அனைத்து துன்பங்களுக்கு மூலக்காரணம் என வாதிட்டார்.
கன்பூசியஸ்
இவர் சீன தத்துவ ஞானி மற்றும் அரசியில் சீர்திருத்தவாதி. அவரது பெயருக்கு தலைவர் என்று பொருள். ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கை சீர்திருத்தப்பட்டால், அவரது குடும்ப வாழ்க்கை முறைப்படுத்தப்படும். குடும்பம் முறைப்படுத்தப்பட்டால், தேச வாழ்வு முறைப்படுத்துப்பட்டு விடும் என்று குறிப்பிட்டார்.