12th bio botany additional 5 marks
15. ஒரு பூக்கும் தாவரத்தின் மொத்த வாழ்க்கை சுழற்சியை ஒரு விளக்கப்படமாகத் தருக.

12th Bio-Botany Unit 6 Additional 5 Marks Tamil Medium

12th Bio-Botany Unit 6 Additional 5 Mark Question and Answers Tamil Medium

TN State Board Syllabus | Samacheer kalvi Guide

12th Bio-Botany Unit 6, Lesson 1 Tamil Medium Additional 5 Mark Question and Answers. HSC +2 Bio-Botany | Botany Unit 6 Important 5 Mark Additional Question and Answers. Students Guide 360 Help for 12th Students for Public Exam and NEET Exam for Tamil Medium Students. We Already Update Unit 6 Book Back with full answers and additional questions also. Already update 12th Bio-Botany Book Back Question and Answer Full Guide and also 1 Mark Additional Q&A, 2 Mark  Additional Question and answers.

12th Bio-Botany unit 6, Lesson 1. தாவரங்களில் பாலிலா இனப்பெருக்கம் மற்றும் பாலினப்பெருக்கம் Additional Five Marks Q&A. www.studentsguide360.com All Important Notes, Guide Book Answers because Free Students Guide 360. We help poor students because Education is More Power full to the students And we love Teaching.

12th Bio-Botany | Botany தாவரங்களில் பாலிலா இனப்பெருக்கம் மற்றும் பாலினப்பெருக்கம் கூடுதல் 5 மதிப்பெண் வினாக்கள்

12th Bio-Botany Unit 6 Additional 5 Marks Tamil Medium

12th Bio-Botany Additional 5 Mark Question and Answers.

IV. ஐந்து மதிப்பெண் வினாக்கள்

1. ஒரு விதையிலை (ஒரைசா) தாவர விதையின் அமைப்பை விவரி?

ஒரு விதையிலை கொண்ட நெல் விதை கேரியாப்சிஸ் எனப்படும்.

  • விதை பழுப்பு நிற உமியால் மூடப்பட்டிருக்கும்.
  • பழுப்பு நிற விதையுறை, விதையை நெருக்கமாக
  • ஒட்டியுள்ளது.
  • சேமிப்புத் திசுவான கருவூண் திசு பெரும் பகுதியில் உள்ளது.
  • கருவூண் திசு மேலடுக்கினால் (Epithelium) கரு வினின்று தனிமைப்பட்டுள்ளது.
  • விதையிலை கவச வடிவில் உள்ளது. இது ஸ்குட்டெல்லம் எனப்படும்.
  • ஸ்குட்டெல்லாம் கரு, அச்சின் பக்கவாட்டில்
    உள்ளது.
  • ஒரு குட்டையான அச்சில் முளைவேர், முளைக்
  • குருத்து உள்ளது.
  • முளைக்குருத்து, முளைக்குருத்து உறையால் (coleoptile) சூழப்பட்டுள்ளது. முளைவேர் முளை வேர் உறையால் (coleorhizae) சூழப்பட்டுள்ளது.
  • ஸ்குட்டெல்லம், உணவை கருவூண் திசுவில் இருந்து உறிஞ்சி, கருவிற்கு அளிக்கும்.

2. இரு விதையிலைத் தாவர விதையின் அமைப்பை விவரி? (PTA – 5)

  • முதிர்ந்த விதைகள், ஒரு விதைக்காம்பினால் களிச் சுவருடன் இணைந்துள்ளது.
  • இவ்விதைக்காம்பு மறைந்து விதைத்தழும்பை (hilum) ஏற்படுத்தும்.
  • விதைத்தழும்புக்குக் கீழ் விதைத்துளை (micropyle) உள்ளது. இது ஆக்சிஜன், நீர் எடுக்க உதவும்.
  • சூழ் உறைகளினின்று, விதையுறை உருவாகும். தடித்த வெளியுறை (testa), மெல்லிய உள்ளுறைச்
  • சவ்வு (tegmen) உள்ளது.
  • பட்டாணியின் விதையுறை உணவுப் பொருளைக் சேமிக்கும்.
  • ஆமணக்கில் விதையிலை, சேமிப்புப் பொருள் கொண்ட கருவூண் திசு உள்ளது. விதையினையத் தாண்டி முளைவேர் (கருவேர்) நீண்டு உள்ளது. மற்றொரு நுனயில் முளைக் குருத்து (plumule) உள்ளது.
  • விதையிலையின் மேற்பகுதி மேற்தண்டாகும் (Epicotyl) இடைப்பட்ட பகுதி அடித்தண்டாகும்(hypocotyl)

3. பல்கருநிலை (Pdyembryony) விளக்குக.

ஒரு விதையில் ஒன்றுக்கு மேற்ப்பட்ட கரு காணப்படுகிறது.

நான்கு வகைகள்

1. அ) பிளவு பல்கரு நிலை (எ.டு-ஆரிகிட்கள்)

2. ஆ) கருப்பை முட்டை தவிர மற்ற செல்களினின்று கருதோன்றல்.

  • (எ.டு) சினர்ஜிட்-அரிஸ்டேலோக்கியா
  • எதிரடி செல்கள் – அல்மஸ்
  • கருவூண் திசு- பலனோபோரோ

3. இ) ஒரு சூலிற்குள் ஒன்றுக்கு மேற்ப்பட்ட கருப்பைகள் வளர்ச்சியடைதல்

ஒன்று அல்லது அதற்கு மேற்ப்பட்ட பெருவித்து தாய் செல்லிருந்து தோன்றிய வழித்தோன்றல்கள் (எ.டு) கேசுரைனா.

4. ஈ) சூலிலுள்ள சில வித்தக தாவர செல்களின் செயல் பாடுகள் தூண்டப்படல் சூல்திசு.சூலுறை – சிட்ரஸ், சைஸிஜியம்.

4. மகேஸ்வரி கூறும் இனப்பெருக்கத்தின் வகைகள் யாவை? (PTA – 2)

  • குன்றல் பகுப்பும், கேமீட்களின் இணைவும் நடைபெறாத இனப்பெருக்கம் கருவுறா இனப்பெருக்கம் (Opomixis) எனப்படும்.

மகேஸ்வரி இதை 2 வகைகளாகப் பிரிக்கிறார்.

1. மீள்வகை கருவுறா இனப்பெருக்கம் (Recurrent opomixis)

  • தரைவழி இனப்பெருக்கம், பாலிணைவில்லாவிதைத்தன்மையை உள்ளடக்கியது.

 2.  மீளா வகை கருவுறா இனப்பெருக்கம் (NonRecurrent opomixis)

  • குன்றல் பகுப்புக்குப் பின் ஒரு முடிய கருப்பை உருவாக்கப்படும்.மீள்வகை கருவுறா இனப்பெருக்கத்தின் உருகோடு தழைவழி இனப்பெருக்கம் விதை தவிர மற்ற பாகங்கள் மூலம் பெருக்க மடைதல்
  • (எ.கா) குமிழ்மொட்டு – பிரட்டிலேரியா
  • குமிழ்தண்டு – அல்லியம்
    ஒடு தண்டு – புதினா
    தரைகீழ் உத்து தண்டு – சாமந்தி

பாலிணைவில்லா விதைத்தன்மை

  • குன்றல் பகுப்பு, கேமீட்டு இணைவின்றி கருஉருவாகும்.

வேற்றிடக் கருநிலை (Adventive Embryony)

  • சூல் திசு, சூல் உறையினின்று நேரடியாகக் கருஉருவாகும். இது வித்தகத் தாவர மொட்டு உருவாதல் எனப்படும். (எ.கா) சிட்ரஸ்.

உருவாக்க கருவுறா வித்து (Genenative apospory)

  • பெருவித்து தாய் செல் இரு முடிய கருப்பையாகிறது. குன்றல் பகுப்பில்லை (எ.டு) ஏர்வா.

கருவுறா வித்து (Apospory)

  • குன்றல் பகுப்பால் உருவாகும் 4 பெருவித்துக்களும் மடியும். சூலீதிசு செல் இருமடிய கருப்பையாகிறது. இது தழைவழி வேற்றிட வித்து (Somatic apospory) ஆகும். (எ.டு) பார்த்தீனியம்.

5. முதிர்ந்த மகரந்தப்பையின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை விவரி? (L.V. மார்ச் 2020)

இது இருமடலுடைய, இரு பை அமைப்பு, நான்கு விந்தகங்கள் உள்ளன.

12th Bio-Botany Additional 5 Mark Question and Answers.

1. மகரந்தப்பை சுவர்

அ) புறத்தோல்

  • ஓரடுக்கு செல்களாலான பாதுகாப்பு அடுக்கு.
  • பெரிதாகும் உட்புறத்திசுக்களுக்கு, ஈடு கொடுக்க தொடர்ச்சியாக பகுப்படையும்.

எண்டோதீசியம்

  • ஆரப்போக்கில் நீண்ட ஓரடுக்கு செல்களால் ஆனது.
  • தாவரங்களில் பாலிலா இனப்பெருக்கம் மற்றும் பாலினப்பெருக்கம் விளக்கப்படத் தோற்றம்
  • கிடைமட்டச்சுவர், ஆரச்சுவர் ஆகியவை செல்லு லோஸ், லிக்னினால் ஆனது.
  • இச்செல்கள் நீர் உறிஞ்சும் தன்மை கொண்டவை.
  • இரண்டு விந்தகங்களை இணைக்கும் மகரந்தமடல் பகுதியில் செல்களில் தடிப்பு இல்லை.
  • இப்பகுதி ஸ்டோமியம் எனப்படும். நீர் உறிஞ்சும் தன்மை மகரந்தப்பை வெடிப்புக்குஉதவும்.

இ) இடை அடுக்கு

  • எண்டோதீசியத்தை அடுத்துள்ள 2 அல்லது 3 அடுக்கு செல்கள்.
  • குறுகிய வாழ்தன்மை (Ephemeral) கொண்டஇவை, மகரந்தப்பை முதிரும்போது சிதைவடைகின்றன.

ஈ) டபீட்டம்

  • மகரந்தப்பை சுவரின் உட்புற அடுக்கு.
  • இரட்டை தோற்றமுடையது. ஒன்று அல்லது பன்மடிய உட்கரு இருக்கும்.
  • நுண் வித்துக்களுக்கு ஊட்டமளிக்கிறது.
  • ஸ்போரோபொலனின், போலன்கிட், டிரை ஃபைன்,ஒவ்வாத்தன்மை வினையக் கட்டுப்படுத்தும் புரத உற்பத்தியில் பங்கு கொள்கிறது.
  • மகரந்தத் துகள்களின் வளத்தன்மை, மலட்டுத் தன்மையை கட்டுப்படுத்தும்.

2. மகரந்த அறை

  • இளம் நிலையில் நுண் வித்துக்களாலும், முதிர்ந்த நிலையில் மகரந்தத் துகள்கால் நிறைந்திருக்கும்.

3. இணைப்புத்திசு

  • மகரந்தப்பை மடல்களுக்கு இடையில் உள்ளவளமற்ற திசு.
  • வாஸ்குல திசுக்களைக் கொண்டுள்ளது.
  • டபீட்ட உருவாக்கத்திற்கு பங்களிக்கிறது.

12th Bio-Botany Additional 5 Mark Question and Answers.

6. ஆண் கேமீட்டகத்தின் தாவரத்தின் வளர்ச்சியைவிவரி?

  • இதன் மூலம் செல் நுண் வித்து. இது ஒரு மடியமானது.
  • நுண் வித்தின் உட்கரு பகுப்படைந்து, ஒரு தழை வழி உட்கருவையும், ஒரு உருவாக்க உட்கருவை யும் உண்டாக்கும்.
  • இரண்டு செல் நிலையில் மகரந்தத்துகள்.மகரந்தப்பையினின்று வெளியேற்றப்படும்.
  • 60% மூடுவிதைத் தாவரங்களில், மகரந்தத் துகள் 2 செல் நிலையில் வெளியேற்றப்படும். சில தாவரங்களில் உருவாக்க செல் பகுப்படைந்து, 2 ஆண் கேமீட்டுகளைத் தோற்றுவிக்கும். எனவே 3 செல் நிலையில் மகரந்தத் துகள் வெளியேறும்.
  • சூலக முடியில், மகரந்தத்துகள் ஈரப்பசையை உறிஞ்சி உப்புதலடைகிறது.
  • இன்டைன் வார்துளையின் வழி மகரந்தக் குழாயாக வளரும்.

7. சூலின் வகைகளை படத்துடன் விவரி?

12th Bio-Botany Additional 5 Mark Question and Answers.
i) நேர்சூல் (Orthotropous)
  • சூல் காம்பு, சூல் துளை. சலாசா நேர்கோட்டில் இருக்கும் (எ.டு) பைப்பரேசி, பாலிகோனேசி.
ii) தலைகீழ் சூல் (Anatropous)
  • சூல் முழுமையாகத் தலைகீழாக இருக்கும். சூல்தளை,சூல்காம்பு அருகிலிருக்கும் (எ.டு) ஒரு விதையிலை இரு விதையிலைத் தாவரம்.
iii) கிடைமட்ட சூல் (Hemianatropous)
  • சூலின் உடல் குறுக்குவாட்டில், சூல் காம்புக்கு செங்குத்தாக இருக்கும். (எ.டு) பிரைமுலேசி.
iv) கம்பைலோட்ராபஸ் (Campylotropus)
  • சூல் துளைப்பகுதியில், சூலின் உடல் வளைந்து அவரை விதை வடிவிலிருக்கும். விதைத் தழும்பு, சூல்துளை, சலாசா அருகாமையிலிருக்கும். சூல் துளை,சூல் ஒட்டுத்திசுவை நோக்கி இருக்கும். (எ.டு) லெகுமினோசே.
v) ஆம்பிட்ரோபஸ் (Amphitropous)
  • சூல் திசுவும், கருப்பையும் குதிரை லாடம் போல வளைந்திருக்கும். (எ.டு) அலிஸ்மட்டேசி குடும்பம்.
vi) சிர்சினோட்ரோபஸ் (Circinotropous)
  • சூல் காம்பும் சூலை முழுவதும் சூழ்ந்துள்ளது. (எ.டு) காக்டேசி.

8. மாற்று சூலகத்தண்டு தன்மையிலிருந்து பாலுறுப்பு தனிப்படுத்தம் இருபால் மலர்களை வேறுபடுத்துக.

மாற்று சூலகத்தண்டு தன்மை

பாலுறுப்பு தனிப்படுத்தம்

சிலவகை தாவரங்கள் இரண்டு (அ) மூன்று வெவ்வேறு வகையான மலர்களைத் தோற்று விக்கின்றன. இவற்றில் மகரந்தத் தாள்களும், | சூலகத்தண்டும் வேறு பட்ட நீளத்தை பெற்றுள்ளன.

இரு பால் மலர்களில் உள்ள இன்றியமையாத உறுப்பு களான மகரந்தத்தாள்களும், சூலக முடியும் மலரில் அமைந்திருக்கும் விதம் தன் மகரந்தச்சேர்க்கை நடை பெறுவதைத் தடுக்கிறது.

மகரந்தச் சேர்க்கையானது சமநீளமுடைய இன உறுப்புக்களுக்கிடையே மட்டும் நடைபெறுகிறது இரு சூலகத்தண்டுத் தன்மை

(எ.கா) பிரைமுலா

எ.கா.குளோரியோசா சூபர்பா

9. காற்று மகரந்தச் சேர்க்கை மலர்களின் பண்புகள் யாவை? (PTA – 3)

  • தொங்கும் மஞ்சரி, தொங்கு கதிர் மஞ்சரி, கதிர் வகை மஞ்சரிகளில் மலர்கள் உள்ளன.
  • நீள மஞ்சரி அச்சினால், மலர்கள் இலைகளுக்கு மேலே நீண்டு காணப்படும்.
  • பூவிதழ்கள் இல்லாமல் அல்லது குன்றிக் காணப்படும்.
  • சிறிய, தெளிவற்ற, நிறமற்ற, மணமற்ற மலர்கள்
  • பூந்தேன் சுரக்காது. நீண்ட மகரந்தத்தாள்கள் எண்ணற்றவை. சுழலும் மகரந்தப்பை காணப்படும்.
  • சிறிய, எடை குறைவான, உலர்ந்த மகரந்தத் துகள்கள் அதிக அளவு உள்ளன. காற்றினால்
  • நீண்ட தூரம் செல்லும். மகரந்தப்பை பலமாக வெடிக்கும் (எ.கா – அர்டிகா) தன்மையுடையதாக இருக்கும்.
  • இறகு போல் கிளைத்த சூலகமுடி, மகரந்தத் துகளைப் பிடிக்கும் விதமாகக் காணப்படும்.
  • இலைகளுக்கு முன் மலர் தோன்றி, இடையூ றின்றி மகரந்தத்துகள் காற்றில் எடுத்துச் செல்ல ஏதுவாக இருக்கும்.

12th Bio-Botany Additional 5 Mark Question and Answers.

10. மக்காளச் சோள மகரந்தச் சேர்க்கையை விவரி?

  • ஒரு பால் மலர் உள்ளது.
  • ஆண் மஞ்சரி மேலும், பெண் மஞ்சரி கீழ் மட்டத்திலும் உள்ளது.
  • பெரிய, எடையுடைய மகரந்தத்துகள் காற்றால் எடுத்துச் செல்ல முடியாதவை.
  • காற்றால் ஆண் மஞ்சரி அசையும் போது, மகரந்தத்துகள்கள் கீழ் வருகின்றன.
  • பெண் மஞ்சரி மலர்களில் 23 செ.மீ நீளமுள்ளசூலக முடி உள்ளது.
  • இது இலைகளைத் தாண்டி நீண்டுள்ளது. கதிர்குஞ்சத்தில் இருந்து விழும் மகரந்தத்துகள்களைசூலக முடிகள் பற்றிக் கொள்ளும்.

11. சால்வியாவில் நெம்புகோல் இயங்கு முறை மகரந்தச் சேர்க்கை நடைபெறும் முறையைவிளக்கு?

  1. சால்வியாவில் தேனீக்கள் மூலம் மகரந்தச்சேர்க்கை நடைபெறும்.
  2. மலர் ஆண் முன் முதிர்வு தன்மை கொண்டது.
  3. அல்லி வட்டம் ஈருதடு வடிவமுடையது. இரு மகரந்தத் தாள்கள் உள்ளன.
  4. மகரந்தப்பையில் மேல்புறம் வளமான மகரந்தமடலும், கீழ்ப்புறம் வளமற்ற மகரந்த மடலும் உள்ளது.
  5. மகரந்த மடல்களுக்கு இடையே, நீண்ட இணைப்புத்திசு உள்ளது. இது மகரந்தப்பைஅசைந்தாட உதவும்.
  6. மலரின் கீழ்ப்புற உதடு தேனீ அமரும் தளமாகிறது. பூந்தேன் உறிஞ்ச தேனீ உள்ளே நுழையும் போது. தேனீயின் உடல் இணைப்புத் திசுவில் படுகிறது.
  7. இதனால் மகரந்தப்பையின் வளமான பகுதி. கீழிறங்கி. தேனீ முதுகில் மோதுகிறது. எனவே தேனீயின் உடலில் மகரந்தத்துகள்கள் படிகிறது.
  8. தேனீ மற்றொரு மலரில் நுழையும் போது. மகரந்ததுகள்கள் அம்மலரின் சூலக முடியில் விழுகின்றன. இவ்வாறாக மகரந்தச் சேர்க்கை நிறைவடைகிறது.

12. நீர் மேல் மகரந்தச்சேர்க்கையை விவரி? (Epihydrophily)

  • இவ்வகை மகரந்தச்சேர்க்கை, நீர்ப்பரப்பின் மேல் நடைபெறும் (எ.கா.) எலோடியா வாலிஸ்நேரியா, ஸ்பைராலாசிஜிஸ் மகரந்தச் சேர்க்கை.
  • இது நன்னீரில் மூழ்கி வேரூன்றி வளரும் ஒரு பால் தாவரம்.
  • பெண் தாவரங்கள். தனி மலர்களை, மகரந்தச் சேர்க்கைக்கு ஏதுவாக நீரின் மேற்பரப்பு வரைக் கொண்டு செல்லும்.
  • இதற்கு நீண்ட சுருள் போன்ற காம்பு உதவும். நீரின் மேற்பரப்பில், பெண் மலரைச் சுற்றி குழிந்த கோப்பை வடிவப் பள்ளம் உருவாகும். ஆண் மலர்கள் நீர்ப்பரப்பில் மிதக்கும்.
  • ஆண் மலர்கள், பெண் மலர்களைச் சூழ்ந்த குழிந்த கோப்பை வடிவப் பரப்பில் படிந்து விடும். அப்போது பெண் மலரின் சூலக முடியுடன் தொடர்பு கொண்டு மகரந்தச் சேர்க்கை நிகழ் கிறது.
  • மகரந்தச் சேர்க்கை அடைந்த பெண் மலரின் காம்பு சுருண்டு மலர்கள், நீரின் மேற்பரப்பி னின்று. நீருக்கடியில் கொண்டுவரப்பட்டு கனிகள் உருவாகும்.

13. அயல் மகரந்தச் சேர்க்கைக்கான உத்திகள் சில வற்றை விவரி?

1. ஒரு பால் தன்மை (ஈரிட பிரிதல்) (Dicliny, Unisexuality)

  • ஒரு பால் தன்மையுடைய மலர்கள் இருந்தால், அயல் மகரந்தச் சேர்க்கை மட்டும் நடைபெறும். இது 2 வகைப்படும்.

i) ஆண் பெண் மலர்த்தாவரங்கள் (Monoecious)

  • ஆண், பெண் மலர்கள் ஒரே தாவரத்தில் காணப்படும் (எ.கா) தென்னை.
  • ஆமணக்கு, சோளத்தில் தன் மகரந்தச்சேர்க்கை தடுக்கப்படும். கேய்ட்டினோகேமி நடைபெறும்.

ii) ஒரு பால் மலர்த்தாவரங்கள் (Diecious)

  • ஆண், பெண் மலர்கள் வெவ்வேறு தாவரங்களில் காணப்படும் (எ.கா) பேரீச்சை, இவற்றில் தன் மகரந்தச் சேர்க்கை, கேய்ட்டினோகேமி இரண்டுமே தடுக்கப்படும். (எ.கா) பேரீச்சை, பப்பாயா

2. ஓரிட அடைதல் (இருபால் தன்மை) (Monocliny or Bisexuality)

i) இரு கால முதிர்வு

அ) ஆண் முன் முதிர்வு (Protandry)

  • மகரந்தத் தாள்கள், சூலக முடிக்கு முன்னர் முதிர்ச்சியடையும் (எ.கா) ஹீலியாந்தஸ்

ஆ) பெண் முன் முதிர்வு (புரோடோகைனி, Protogyny) சூலக முடி, மகரந்தத்தாளுக்கு முன்னர் முதிரும் (எ.கா) அரிஸ்டலோக்கியா

(ii) பாலுறுப்பு தனிப்படுத்தல் (Herkogamy)

  • மகரந்தத்தாளும், சூலக முடியும் மலரில் அமைந்திருக்கும் விதம் தன் மகரந்தச்சேர்க்கை நடப்பதைத் தடுக்கும். (எ.கா) குளோரியோசா சூபர்பா.

iii) மாற்று சூலகத்தண்டுத் தன்மை (Hetrostyly)

  • வெவ்வேறு மலர்களில், மகரந்தத்தாள்களும், சூலகத்தண்டும் வேறுபட்ட நீளத்தைப்பெற்றுள்ளன.

அ) இரு சூலகத் தண்டுத் தன்மை (Distyly)

  • இரு வகை மலர்கள் உள்ளன. இதில் ஊசி மலர் நீண்ட சூலக தண்டு, குட்டையான மகரந்தத் தாள்கள் பெற்றவை. ஊசிக்கண் மலர் குட்டை யான சூலகத் தண்டு, நீண்ட மகரந்தத் தாள் கொண்டவை. (எ.கா. பிரைமுலா) எனவே ஊசிக்கண் மலரின் சூலக முடியும், ஊசி மலரின் மகரந்தப்பையும் ஒரே மட்டத்தில் இருக்கும்.

மூன்று சூலகத்தண்டு தன்மை (Tristyly)

  • சூலகத்தண்டு, மகரந்ததாளின் நீளத்தைப் பொறுத்து, 3 வகை மலர்கள் உண்டாகும். இதனால் ஒரு வகை மலரின் மகரந்தத்துகள்கள், மற்ற 2 வகை மலர்களில் மட்டும் மகரந்தச் சேர்க்கை நடத்தும். (எ.கா) லைத்ரம்.

iv) தன் மலட்டுத்தன்மை தன் ஒவ்வாத்தன்மை (Self Sterility, Self Incompatibility)

  • ஒரு மலரின் மகரந்தத்துகள், அதே மலரின் சூலக முடியில் முளைக்காது. இது மரபணுசார் செயல்பாடு.(எ.கா) அபுட்டிலான்.

12th Bio-Botany Additional 5 Mark Question and Answers.

14. வேறுபடுத்துக: நுண்வித்துருவாக்கம் மற்றும் பெருவித்துருவாக்கம்.

நுண்வித்துருவாக்கம்

பெருவித்துருவாக்கம்

இரு மடிய (2n) நுண்வித்து தாய் செல் குன்றல் பகுப்படைந்து ஒரு மடிய (n) நுண்வித்துகளை உருவாக்கும்.

இருமடிய (2n) பெருவித்து தாய் செல் குன்றல் பகுப்படைந்து ஒரு மடிய (n) நுண்வித்துக்களை உருவாக்கும்.

முதல்நிலை வித்து செல்கள் நேரடியாகவோ அல்லது சில குன்றலிலா பகுப்புகளுக்கு உட்பட்டு வித்துருவாக்க திசுவை தோற்றுவிக்கின்றது.

சூல் திசுவின் புறத்தோலடித் தோல் கீழ் அமைந்துள்ள ஒரு சூல் திசு செல் பெரிதாகி முன்வித்தாக செயல் படுகிறது. இவை குறுக்குவாட்டில் பகுப்படைந்து முதல்நிலை வித்துருவாக்க செல்லைத் தருகிறது.

வித்துருவாக்க திசுவின் கடைசி செல்கள் நுண் வித்து தாய் செல்லாக செயல்படுகின்றன.

முதல்நிலை வித்துருவாக்கச் செல் பெருவித்துத் தாய் செல்லாக செயல்படுகிறது.

ஒவ்வொரு நுண்வித்து தாய் செல்லும் குன்றல் பகுப்பிற்குட்பட்டு 4 ஒருமடிய (n) நுண்வித்துகளை தோற்றுவிக்கிறது.

பெருவித்து தாய் செல் குன்றல் பகுப்பிற்குட்பட்டு 4 ஒரு மடிய (n) பெருவித்துக்களை தோற்று விக்கிறது

ஒவ்வொரு நுண்வித்தும் மகரந்தத்துகள்களாக வளர்கின்றது.

கருப்பை வளர்ச்சியின் எண்ணிக்கையைப் பொறுத்து ஒன்று, இரண்டு அல்லது நான்கு பெருவித்துக்களும் கருப்பையாக வளர்கிறது.

மகரந்தத்துகள்கள் ஆண் கேமீட்டகத் தாவரமாக செயல்படுகின்றன.

கருப்பை பெண் கேமீட்டகத் தாவரமாக செயல் படுகின்றன.

15. ஒரு பூக்கும் தாவரத்தின் மொத்த வாழ்க்கை சுழற்சியை ஒரு விளக்கப்படமாகத் தருக.

12th bio botany additional 5 marks

16. இரண்டு பெருவித்துசார் கருப்பை உருவாக்கத்தை 4 பெருவித்து சார் கருப்பை உருவாக்கத்திலிருந்து வேறுபடுத்துக. (PTA – 1)

இரண்டு பெருவித்துசார் கருப்பை

நான்கு பெருவித்துசார் கருப்பை

நான்கு பெருவித்துகளில் இரு வித்துகள் கருப்பை உருவாக்கத்தில் ஈடுபட்டால் இரு பெருவித்துசார் கருப்பை வளர்ச்சி எனப்படுகிறது.

நான்கு பெருவித்துகளும் கருப்பை உருவாக்கத்தில் ஈடுபட்டால் அது நான்கு வித்துசார் கருப்பை வளர்ச்சி எனப்படும்.

எ.கா. அல்லியம்

எ.கா. பெப்பரோமியா

Leave a Reply