12th Bio-Botany Unit 6 Additional 2 Mark Question and Answers
Tamil Nadu State Board Syllabus 12th Standard Bio-Botany | Botany Unit 6, Lesson 1 Additional 2 Mark Question and Answers. TN Samacheer kalvi Guide. 12th Botany Guide TM. we Update already 12th Botany Unit 6 Full Book Back Answers, Additional 1 Marks, Additional 2 Marks, Additional 3 Marks, Additional 5 Marks, Students Guide 360. TN Start Board Syllabus 12th Standard Botany Samacheer kalvi guide Tamil Medium. 12th Bio-Botany | Botany Unit 6, Lesson 1. தாவரங்களில் பாலிலா இனப்பெருக்கம் மற்றும் பாலினப்பெருக்கம் Additional Two Marks Q&A. www.studentsguide360.com All Important Notes, Guide Book Answers Free
12th Bio-Botany | Botany தாவரங்களில் பாலிலா இனப்பெருக்கம் மற்றும் பாலினப்பெருக்கம் கூடுதல் 2 மதிப்பெண் வினாக்கள்
1. தாவர செல்லின் எந்த சிறப்புப் பண்பு தோட்டக் கலை, வனவியல், தாவரப்பெருக்கு தொழிற்சாலை களில் பயன்படுகிறது?
தகுந்த சூழ்நிலைகளில் ஒரு ழுழு தாவரத்தை, ஒரு தாவர செல் உண்டாக்கும் மரபணு சார் திறன், முழு ஆக்குத்திறன் எனப்படும் பண்பே தாவரப் பெருக்குத் தொழிற்சாலையின் அடிப்படை செயல் நுட்பமாகும்.
2. திசு வளர்ப்பு என்றால் என்ன?
தகுந்த கட்டுப்படுத்தப்பட்ட சூழலில், தாவரத் திசுக்களை தனிப்பட்ட வளர்ப்பு ஊடகத்தில் வளர்க்கும் முறை திசு வளர்ப்பு (Tissue culture) எனப்படும்.
3. பாலினப் பெருக்கத்தில் கேமீட்களின் 3 வகை இணைவு முறைகள் எவை?
- ஒத்த கேமிட்டுகளின் இணைவு
- சமமற்ற கேமீட்டுகளின் இணைவு
- முட்டைக் கருவுறுதல்.
4. நுண் வித்துருவாக்கம் என்றால் என்ன?
இருமடிய நுண்வித்து தாய் செல் குன்றல் பகுப்படைந்து ஒரு மடிய நுண் வித்துக்கள் உருவாகும் படிநிலைகளுக்கு, நுண் வித்துரு வாக்கம் என்று பெயர்.
5. அமீபா வகை டபீட்டம் என்றால் என்ன?
- மூன்றாவது வகை, டபீட்டமாகும்.
- செல்சுவர் இழக்கப்படாமல் மகரந்த அறையினுள் செல்கள் ஊடுருவுகின்றன.
- ஆண் மலட்டுத் தன்மையுடன் தொடர்புடையது.
- பெரிபிளாஸ்மோடிய வகை டபீட்டத்துடன் குழப்பக்கூடும்.
6. யுபிஷ் உடலங்கள் என்றால் என்ன?
யுபிஷ் உடலத்தின் மூலம், ஸ்போரோபொலனின் உற்பத்திக்கு டபீட்டம் உதவுகிறது. இவ்வாறாக மகரந்தச் சுவர் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றுகிறது.
7. எக்சைன், இன்டைன் வேறுபடுத்துக?
எக்சைன்
இன்டைன்
1. இது மகரந்தத்துக்களின் வெளிப்புற அடுக்கு
2. தடித்தது
3. சீரற்ற தடிப்பு
4. செல்லுலோஸ், ஸ்போரோபொலினின், போலன்கிட் கொண்டது
இன்டைன்
-
இது மகரந்ததுகளின் உட்புற அடுக்கு
-
மெல்லியது
-
சீரான தடிப்பு
-
பெக்டின், ஹெமிசெல்லுலோஸ், செல்லுலோஸ், காலோஸ், புரதங்கள் கொண்டது
எக்சைன் | இன்டைன் |
1. இது மகரந்தத்துக்களின் வெளிப்புற அடுக்கு 2. தடித்தது 3. சீரற்ற தடிப்பு 4. செல்லுலோஸ், ஸ்போரோபொலினின், போலன்கிட் கொண்டது |
|
8. எக்சைன் புறப்பரப்பின் அலங்காரப் பாங்குகள் யாவை?
எக்சைனின் புறப்பரப்பு தடிவடிவம், சிறு குரி யுடன், கரணை கொண்டு, சிறுபுள்ளியுடன் காணப்படும். இவை தாவரங்களை அடையாளம் கண்டு, வகைப்படுத்த பயன்படும்.
9. மகரந்தத்துகளின் பல்வேறு வடிவங்கள் யாவை?
கோளம், நீள்கோணம், கதிர்கோல், மடல், கோண, பிறை வடிவம்.
10. மகரந்தவியலின் பயன்கள் யாவை?
- இது பல்வேறு மகரந்தத் துகள்கள் அமைப்பு. பண்பு பற்றி அறியமுடிகிறது.
- நிலக்கரி, எண்ணெய் புலங்களின் பரவலாகக் கண்டறிய உதவும்.
- ஒரு பகுதியின் தாவரக் கூட்டத்தைப் பிரதி பலிக்கும். பல நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அரிதான தாவர இனங்களைப் பற்றி அறிய இயலும்.
11. மகரந்தத்துகள்களை தாவர மேம்பாட்டு செயல் திட்டங்களுக்காக எவ்வாறு சேமிக்கலாம்.
நீண்ட காலம், உயிர்ப்புத்தன்மையுடன், மகரந்தத் துகளை, திரவ நைட்ரஜனின் (-196°C] பாதுகாக்கலாம். இது உறைகுளிர்ப் பாதுகாப்பு எனப்படும்.
12.பூந்தேன் மகரந்தவியல் (Mellitopalynology)
பூந்தேன் மகரந்தம் பற்றிய அறிவியலின் பிரிவு.
13. “கேரட் கிராஸ்” பற்றி விளக்குக?
- பார்தீனியம் ஹிஸ்டிட்ரோபோரஸ், கேரட் கிராஸ் எனப்படும்.
- வெப்ப மண்டல அமெரிக்காவைப் பிறப்பிட மாகக் கொண்டது.
- கோதுமைத் தானியத்துடன், கலப்படமாக இந்தியாவுக்கு வந்தது.
- இதன் மகரந்தத்துகள் ஒவ்வாமை நோயை ஏற்படுத்தும்.
14. ஹைப்போஸ்டேஸ், எப்பிஸ்டேஸ் வேறுபடுத்துக?
15. முன்வித்து (Archesporium) என்றால் என்ன?
சூல் வளர்ச்சியடையும்போது, சூல்திசுவின் புறத்தோடித்தோல் கீழே உள்ள ஒரு சூல் திசு செல், பெரியதாகி முன்வித்தாகச் செயல்படும். பிற தாவரங்களில் இது பகுப்படையும்.
16. தாவரங்களுக்கும், விலங்கினங்களுக்கும் இடையே ஒரு கூட்டுப்பரிணாமம் உள்ளது (Co-evolution) விளக்குக?
பெரும்பாலான தாவரங்களில், மகரந்தச்சேர்க்கை குறிப்பிட்ட விலங்கின சிற்றினங்கள் மூலம் நடைபெறும். மகரந்தச்சேர்க்கைக்கு ஏற்றவாறு மலர்கள் மாறுபாடு அடைந்துள்ளன.
17. இந்த படத்தை வரைந்து பாகங்களை குறிப்பிடுக.
18. திறந்த மலர் மகரந்தச் சேர்க்கை (Chasmogamy) என்றால் என்ன?
பல மூடுவிதைத் தாவரங்களில், மலர் மலர்ந்து முதிர்ந்த மகரந்தப்பைகளையும், சூலக முடியையும் மகரந்தச் சேர்க்கைக்காக வெளிக்காட்டுகின்றன. இத்தகைய மலர்கள் திறந்த மலர்கள் (Chasmogamous) இந்நிகழ்ச்சி திறந்த மலர் மகரந்தச் சேர்க்கை (Chasmogamy) எனப்படும். எ.கா. காமிலினா, வயோலா.
19.மூடிவிதைத்தாவர, திறந்த விதைத் தாவர மகரந்தச் சேர்க்கைகளை வேறுபடுத்துக
திறந்த விதைத் தாவர மகரந்தச் சேர்க்கை | மூடுவிதைத் தாவர மகரந்தச் சேர்க்கை |
1. நேரடி நிகழ்வு | மறைமுக நிகழ்வு |
2. மகரந்தத் துகள்கள் திறந்த நிலையில் உள்ள சூல்களை நிலையில் உள்ள சூல்களை நேரடியாகச் சென்றடைகின்றன. எ.கா. ஜிம்னோஸ்பெர்ம். | மகரந்தத் துகள்கள் சூலக அலகின் சூலக முடியில் படியும். எ.கா. ஆஞ்சியோஸ்பெர்ம். |
20. இந்த படத்தை வரைந்து பாகங்களைக் குறி. (PTA – 3)
21. மூடிய மலர் மகரந்தச் சேர்க்கை என்றால் என்ன?
சில தாவரங்களில் மகரந்தசேர்க்கைக்கு மலர் திறக் காமலும், அவற்றின் இன உறுப்புகள் வெளிப் பாட்டையாமலும் இருக்கின்றன. இம்மலர்கள் மூடிய மலர்கள். இந்நிகழ்ச்சி மூடிய மலர் மகரந்தச் சேர்க்கை (Clcistogamy) எனப்படும்.
22. அங்கீகரிக்கும், நிராகரிக்கும் புரத வினைகளை விவரி?
பல மகரந்தத்துகள்கள், சூலக முடியில் விழுந்தாலும், அனைத்தும் முளைப்பதில்லை. ஈர சூலக முடியில், சூலக முடி பாய்மமும் (Stigmatic fluid)வறண்ட சூலக முடியில் உள்ள மெல்லிய உறையும் (pellicle) இணக்கத்திற்கு காரணமாய் உள்ளன. இவை இரண்டும், சூலக முடிக்கும். மகரந்த துகள்களுக்கும் இடையே நிகழும், புரத வினைகளை அங்கீரித்தோ, நிராகரித்தோ, இணையொத்த மற்றும் இணை ஒவ்வாத மகர்ந்த துகள்களை முடிவு செய்யும்.
23. விலங்கு மகரந்த சேர்க்கை விளக்குக?
விலங்கினங்களின் மூலம் நடைபெறும் மகரந்தச் சேர்க்கை விலங்கு மகரந்தச் சேர்க்கை எனப்படும் (Zoophily) (எ.கா) லெமூர், ஜெக்கோ பல்லிகள் மகரந்தச் சேர்க்கை முகவர்களாக செயல்படு கின்றன.
24. கிரிரோப்டெரோஃபில்லி என்றால் என்ன?
வௌவால்கள் மூலம் மகரந்தச் சேர்க்கை (Chirotrophily) எனப்படும். (எ.கா) அடன்சோனியா, டிஜிடேட்டோ.
25. மலாக்கோஃபில்லி (Malacophily) என்றால் என்ன?
இலை அட்டைகள் (Slugs), நத்தைகள் (Snails) மூலம் நடைபெறும் மகரந்தச் சேர்க்கை (எ.கா) ஏரேசி குடும்பத்தாவரம், நீர் நத்தைகளின் மூலம் நடைபெறும் மகரந்தச்சேர்க்கை. எ.கா.லெம்னா
26. மிர்மிக்கோபில்லி (Myrmecophily) என்றால் என்ன?
எறும்புகள் மூலம் நடைபெறும் மகரந்தச் சேர்க்கை மிர்மிக்கோபில்லி எனப்படும்.
27.கேப்பிளாக் (cap block) என்றால் என்ன?
மகரந்தக் குழாயை நுண்ணோக்கியால் பார்க்கும் போது, நுனிப்பகுதி, அரைவட்ட வடிவில், ஒளி ஊடுருவும் பகுதியாக உள்ளது. இப்பகுதி கேப் பிளாக் (cap block) எனப்படும். இது மறைந்தால் மகரந்தக் குழாயின் வளர்ச்சி நின்று விடும்.
28. வழிநடத்தியின் பணி என்ன?
மகரந்தக் குழாய், சூல் துளை வழியாக நுழைய வழிகாட்டும் அமைப்பே, வழிநடத்தி (Obtruator) ஆகும்.
29. கருவுறுதலுக்குப் பின் நிகழ்வன கூறு?
- கருவூண் திசு, கரு வளர்ச்சி
- கனி. விதை உருவாதல்.
30. சஸ்பென்ஸர் என்றால் என்ன?
- கரு வளர்ச்சியின் போது அடி செல்லிலுள்ள இரண்டு செல்கள் பலமுறை குறுக்குவாக்கு பகுப்படைந்து ஆறு முதல் பத்து செல்களுடைய சஸ்பென்ஸர் உருவாக்குகிறது.
- கருவின் இந்த அமைப்பு சஸ்பென்ஸர் எனப்படுகிறது.
- இது கரு கோள வடிவமடைகிறது.
- சஸ்பென்ஸர் கருவை கருவூண் திசுவினுள்ஊந்துவதற்கு உதவுகிறது.
31. கேலஸ் வரையறு.
திசு வளர்ப்பின் மூலம் பெறப்படும் வேறுபாடு அடையாத செல்களின் திரள் கேலஸ் ஆகும்.
32. அப்போமிக்ஸிஸ் என்றால் என்ன?
- அப்போமிக்ஸிஸ் என்பது இது வழக்கமாக நடை பெறும் பால் இனப்பெருக்க முறைக்கு பதிலாக நடைபெறும் ஒரு வித இனப்பெருக்கம் ஆகும்.
- இதில் குன்றல் பகுப்பும் கேமீட்டுகளின் இணைவும் நடைபெறுவதில்லை.
- இது விவசாயிகளுக்கு பெரிதும் பயன்படுகிறது.
33. எஸ்குடெல்லம் என்றால் என்ன?
- கவச வடிவில் விதையிலை காணப்படுகிறது.
- இதற்கு எஸ்குடெல்லம் என்று பெயர். இது கரு அச்சின் பக்கவாட்டை நோக்கி அமைந்துள்ளது.
- ஒரு விதையிலையைக் கொண்ட நெல் விதை கேரியாப்சிஸ் என்று அழைக்கப்படும்.
34. ஆம்பிட்ரோபஸ் என்பது யாது?
- ஆம்பிட்ரோபஸ் என்பது சூலின் ஒரு வகை ஆகும்.
- இவ்வகை சூல் ஏறத்தாழ தலைகீழ் சூலிற்கும், கிடைமட்ட சூலிற்கும் இடைப்பட்டதாகும்.
- இங்கு சூல்திசுவும், கருப்பையும் குதிரை லாடம் போன்று வளைந்திருக்கும்.
- சூல்துளை, சூல்காம்பு, சலாசா ஆகிய மூன்றும் அருகாமையில் அமைந்திருக்கும். எ.கா. ஒரு சில அலிஸ்மட்டேசி குடும்பத் தாவரங்கள்.
35. சூல் திசுவின் நடைமுறை பயன்பாடுகளை எழுதுக.
ஒரு விதையில் சூல் தவிர அதைச் சூழ்ந்துள்ள சூல்திசு, மற்றும் பிற செல்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கருவாக வளர்ச்சியடைதல் பல்கரு நிலை எனப்படும்.சிட்ரஸ் தாவரத்தில் சூல்திசுவிலிருந்து பெறப் படும் நாற்றுக்கள் பழப்பண்ணைக்கு நல்ல நகல் களாக உள்ளன.பல்கருநிலையின் வழியாக தோன்றும் கருக்கள் வைரஸ் தொற்றற்று நோயெதிர்ப்பு திறனுடையவைகளாகக் காணப்படுகின்றன.