9th Tamil Guide Unit 7.1
9th Tamil 7th Lesson Samacheer Kalvi Guide | TNPSC | TET | Book Back & Additional Question and Answers
9th Standard Tamil Nadu Start Board Syllabus Unit 7.1 இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு. Ninth Standard Tamil 7th Lesson Book Back and Additional Question and Answers. TN 9th All Unit Book Back and additional Answers for TNPSC, TNTET Exams. 9th Tamil Full Guide இயல் 1 to 9 Full Answers. Samacheer Kalvi 9th Tamil Book Solutions Guide Download Free PDF. 9th Tamil Full guide Book back Question and answer New syllabus ( TN TET, TNPSC ), Our https://www.studentsguide360.com/ website Update 9th Tamil New syllabus book back Questions and answer. 9th Tamil Free Online Test. Class 9 Full Study Materials.
- 9th Tamil Guide Unit 7 – Full Guide – Click Here
9th Tamil Samacheer Kalviuide Guide 7th Lesson – Unit 7.1 இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு
7.1. இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு
I. பலவுள் தெரிக
1. இந்திய தேசிய இராணுவம் இன் தலைமையில் உருவாக்கினர்.
- சுபாஷ் சந்திரபோஸ், இந்தியர்
- சுபாஷ் சந்திரபோஸ், ஜப்பானியனர்
- மோகன் சிங், ஜப்பானியர்
- மோகன் சிங், இந்தியர்
விடை : மோகன் சிங், ஜப்பானியர்
2. கூற்று – இந்திய தேசிய இராணுவப்படைத் தலைவராக இருந்த தில்லான், “இந்திய தேசிய இராணுவத்தின் இதயமும் ஆத்மாவும் தமிழர்தான்” என்றார்.
காரணம் – இந்திய தேசிய இராணுவத்திற்கு வலுசேர்த்த பெருமைக்குரியவர்கள் தமிழர்கள்.
- கூற்றும், காரணமும் சரி
- கூற்று சரி, காரணம் தவறு
- கூற்று தவறு, காரணம் சரி
- கூற்றும், காரணமும் தவறு
விடை : கூற்றும், காரணமும் சரி
II. குறு வினா
1. இந்திய தேசிய இராணுவத்தில் குறிப்பிடத் தகுந்த தமிழர்கள் யாவர்?
- பசும்பொன் முத்துராமலிங்கனார்
- ஜானகி
- இராஜமணி
- கேப்டன் லட்சுமி
- சிதம்பரம் லோகநாதன்
2. தாய் நாட்டுக்காக உழைக்க விரும்பினால் எப்பணியைத் தேர்ந்தெடுப்பீர்கள்? ஏன்?
- தாய் நாட்டுக்காக உழைக்க விரும்பினால் இராணுவப் பணியைத் தேர்ந்தெடுப்பேன்.
- காரணம் – என் தாய்நாட்டையும், தாய்நாட்டு மக்களையும் காப்பாற்றுவதற்காக.
3. டெல்லி நோக்கிச் செல்லுங்கள் என்ற முழுக்கம் யாரால் எப்போது செய்யப்பட்டது?
- சிங்கப்பூரில் இந்திய தேசிய இராணுவத்தின் பொறுப்பு ஏற்க வந்தபோது 1943-ம் ஆண்டு ஜூலை மாதம் 9-ம் தேதி மாபெரும் கூட்டத்தில் டெல்லி நோக்கி செல்லுங்கள் என்ற முழக்கம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களால் செய்யப்பட்டது.
III. சிறு வினா
குறிப்பு வரைக – “டோக்கியோ கேடட்ஸ்”
- இந்திய தேசிய இராணுவத்தில் இருந்து 45வீரர்கள் நேதாஜியால் தேர்வு செய்யப்பட்டு, வான்படைத் தாக்குதலுக்கான சிறப்புப் பயிற்சி பெறுவதற்காக, ஐப்பானில் உள்ள இம்பீரிலியல் மிலிட்டரி அகடமிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அந்த 45 பேர் கொண்ட பயிற்சிப் பிரிவின் பெயர் தான் டோக்கியோ கேடட்ஸ்.
2. பனியிலும், மலையிலும் எல்லைக் காக்கும் இந்திய வீரர்களின் பணியைப் பாராட்டி உங்கள் கையெழுத்து இதழுக்கு ஒரு துணுக்குச் செய்தி எழுதுக
- இந்திய இராணுவ வீரர்களின் தியாகம்
- நாட்டையும் தன் நாட்டு மக்களையும் காக்க தன் குடும்பம் மறந்து பணி செய்வோர் இராணுவ வீரர்கள்.
- கடும் வெயில், கடுங்குளிர், புயல் மழை, சூறாவளி, சுனாமி, பூகம்பம் என எது வந்தாலும் தாய்நாட்டு மக்களைக் காக்கும் தகைசால் மாமனிதர்கள் இராணுவ வீரர்கள்.
- குண்டு மழை பொழியும் போர்களத்தில் நெஞ்சம் நிமிர்த்திப் பேராடும் பண்பாளர்கள் அவர். தன் நாட்டுக்காகத் தன்னுயிரைக் கொடுக்கும் தியாக வள்ளல்கள்.
- மெழுகுவர்த்தி போல தன்னைத் தன் நாட்டிற்காக உருக்கிக் கொள்பவர்கள். அவர்கள் பணிக்கு எங்கள் நெஞ்சார்ந்த வணக்கங்கள்.
IV. நெடு வினா
இந்திய தேசிய இராணுவததின் தூண்களாக திகழ்ந்தவர்கள் தமிழர்கள் என்பதை கட்டுரை வழி நிறுவுக.
முன்னுரை:-
இந்திய விடுதலைப்போரில் இந்திய தேசிய இராணுவத்தின் தூண்களாகத் திகழ்தவர்கள் தமிழர்கள். அவர்களைப் பற்றி இங்கு காண்போம்.
பசும்பொன் முத்துராமலிங்கனார்:-
1943 இல் அன்றைய ஆங்கில அரசை இந்திய தேசிய இராணுவப்படை எதிர்த்தபோது, பசும்பொன் முத்துராமலிங்கனார் விடுதலை உணர்வு கொண்ட வலிமை மிக்க தமிழர்ப் பட்டாளங்களை ஒன்றிணைத்து, இந்திய இராணுவத்திற்கு வலு சேர்த்தார். அதனால், இந்திய தேசிய இராணுவத்தின் இதயமும், ஆத்மாவும் தமிழர்கள் என்றால் தில்லான்.
இரண்டாம் உலகப்போர்:-
தமிழர் துணையுடன் போராடிய நேதாஜியை, ஆங்கிலப் பிரதமர் சர்ச்சில் கோபம் அடைந்து, “மலேயாவில் உள்ள தமிழர்களின் இரத்தம் நேதாஜியின் மூளையில் கட்டியாக உள்ளது” என்றார். அதற்கு நேதாஜி ” தமிழினம் தான் ஆங்கிலேயரை அழிக்கும்” என்றார்.
மகளிர்ப்படை:-
ஜான்சி ராணி பெயரில் பெண்கள் படை உருவாக்கப்பட்டது. இதன் தலைவர் டாக்டர் லட்சுமி. இதில் தமிழகப் பெண்கள் பலர் பங்கேற்றனர். தலைசிறந்தவர்களாக ஜானகி, இராஜாமணி ஆகியோர் விளங்கினார். நேதாஜி அமைத்த தற்காலிக அரசில் கேப்டன் லட்சுமி, சிதம்பர லோகநாதன் முதலான தமிழர்கள் அமைச்சர்களாக விளங்கினர்.
வான் படை:-
இந்திய தேசிய இராணுவத்தில் இருந்து 45வீரர்கள் நேதாஜியால் தேர்வு செய்யப்பட்டு, வான்படைத் தாக்குதலுக்கான சிறப்புப் பயிற்சி பெறுவதற்காக, ஐப்பானில் உள்ள இம்பீரிலியல் மிலிட்டரி அகடமிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அந்த 45 பேர் கொண்ட பயிற்சிப் பிரிவின் பெயர் தான் டோக்கியோ கேடட்ஸ். இதில் பெரும்பாலானோர் தமிழர்கள். அதில் சிறந்து விளங்கியவர் கேப்டன் தாசன். இவர் இந்தியாவில் செசல்ஸ் நாட்டுத் தூதுவராகப் பணியாற்றியவர்.
முடிவுரை-
நாட்டிற்காக உயிர் கொடுத்த முகம் தெரியாத தமிழர்களின் உணர்வைப் போற்றி வழிபடுவோம் அவர்தம் உன்னத செயல்களை உலகறிய செய்வோம்.
இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு – கூடுதல் வினாக்கள்
I. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. ________________ மோகன்சிங்கிற்கு பிறகு இந்திய இராணுவத்திற்கு பொறுபேற்றார்.
விடை : நேதாஜி
2. நேதாஜி __________-ல் இந்திய இராணுவத்திற்கு தலைமையேற்றார்.
விடை : 1943
3. ________________ பெயரில் இந்திய தேசிய இராணுவத்தில் பெண்கள் படை உருவாக்கப்பட்டது
விடை : ஜான்சிராணி
4. மா.சு. அண்ணாமலை ________________ என்னும் நூலை எழுதினார்.
விடை : இந்திய தேசிய இராணுவம் – தமிழர் பங்கு
V. குறு வினா
1. இந்திய தேசிய இராணுவம் – குறிப்பு வரைக
- இரண்டாம் உலகப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் ஆங்கிலேயப் படைகள் ஜப்பானியரிடம் சரணடைந்தன். இப்படையில் இந்திய வீரர்களும் இருந்தனர். அவ்வீரர்களை கொண்டு ஜப்பானியர்கள். மோகன்சிங்க என்பவர் தலைமையில் உருவாகியதே இந்திய தேசிய இராணுவம் ஆகும்.
2. பசும்பொன் முத்துராமலிங்கனால் இந்திய தேசிய இராணுவத்திற்கு செய்த பணி யாது?
- 1943 இல் அன்றைய ஆங்கில அரசை இந்திய தேசிய இராணுவப்படை எதிர்த்தபோது, பசும்பொன் முத்துராமலிங்கனார் விடுதலை உணர்வு கொண்ட வலிமை மிக்க தமிழர்ப் பட்டாளங்களை ஒன்றிணைத்து, இந்திய இராணுவத்திற்கு வலு சேர்த்தார்.
4. நேதாஜி அமைத்த தற்காலிக அரசில் அமைச்சர்களாக இருந்த தமிழர்கள் யாவர்?
- கேப்டன் லட்சுமி
- சிதம்பர லோகநாதன்
5. நேதாஜி தமிழக வீரர்களைப் பற்றி என்ன கூறியதாக பசும்பொன் முத்துராமலிங்கனார் கூறுகிறார்?
- நேதாஜி தமிழக வீரர்களைப் பாராட்டி நான் மறுபடியும் பிறந்தால் ஒரு தென்னிந்திய தமிழனாகப் பிறக்க வேண்டும் என்று நேதாஜி கூறியதாகப் பசும்பொன் முத்துராமலிங்கனார் கூறுகிறார்
6. இந்திய தேசிய இராணுவத்தில் உருவாக்கிய மகளிர் படை குறித்து எழுதுக.
- ஜான்சிராணி பெயரில் பெண்கள் படை உருவாக்கப்பட்டது.
- இதன் தலைவர் டாக்டர் லட்சுமி.
- இதில் தமிழகப் பெண்கள் பலர் பங்கேற்றனர்.
- தலைசிறந்தவர்களா ஜானகி, இராஜாமணி ஆகியோர் விளங்கினர்.