You are currently viewing 9th Tamil Guide Unit 6.1

9th Tamil Guide Unit 6.1

9th Tamil Guide Unit 6.1

9th Tamil 4th Lesson Samacheer Kalvi Guide | TNPSC | TET | Book Back & Additional Question and Answers

9th Standard Tamil Nadu Start Board Syllabus Unit 6.1 சிற்பக்கலை Book Back and Additional Question and Answers. TN 9th All Unit Book Back and additional Answers for TNPSC, TNTET Exams. 9th Tamil Full Guide இயல் 1 to 9 Full Answers. Samacheer Kalvi 9th Tamil Book Solutions Guide Download Free PDF. 9th Tamil Full guide Book back Question and answer New syllabus ( TN TET, TNPSC ), Our https://www.studentsguide360.com/ website Update 9th Tamil New syllabus book back Questions and answer. 9th Tamil Free Online Test. Class 9 Full Study Materials.

  • 9th Tamil Guide Unit 6 – Full Guide – Click Here

9th Tamil Guide Unit 6

9th Tamil Samacheer Kalviuide Guide 6th Lesson – Unit 6.1 சிற்பக்கலை

6.1. சிற்பக்கலை

I. பலவுள் தெரிக.

1. பல்லவர் காலச் சிற்பக்கலைக்குச் சிறந்த சான்று ___________
  1. மாமல்லபுரம்
  2. பிள்ளையார்பட்டி
  3. திரிபுவனவீரேசுவரம்
  4. தாடிக்கொம்பு
விடை : மாமல்லபுரம்
 
2. திருநாதர்குன்றில் ஒரு பாறையில் புடைப்புச் சிற்பங்களாக உள்ளவை ________ .
  1. விலங்கு உருவங்கள்
  2. தீர்த்தங்கரர் உருவங்கள்
  3. தெய்வ உருவங்கள்
  4. நாட்டியம் ஆடும் பாவை உருவங்கள்
விடை : தீர்த்தங்கரர் உருவங்கள்
 

II. குறு வினா

1. செப்புத் திருமேனிகள் பற்றிக் குறிப்பு வரைக.
  • சோழர் காலத்தில் மிகுதியான செப்புத் திருமேனிகள் உருவாக்கப்பட்டன.
  • கடவுளின் உருவங்களும் மிகுந்த கலை நுட்படத்தோடு வடிவமைக்கப்பட்டன.
  • செப்புத் திருமேனைகளில் பொற்காலம் எனபர்.
2. நடுகல் என்றால் என்ன?
  • போரி்ல் விழுப்புண் பட்டு இறந்த வீரருக்குக் கல்லில் வீரரின் உருவம் பொறிக்கப்பட்டு நடுவது நடுகல் ஆகும்.
3. இசைத் தூண்கள் யார் காலத்தில் அமைக்கப்பட்டவை?
  • இசைத் தூண்கள் விஜய நகர மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பட்டவை.

III. சிறு வினா

1. முழு உருவச் சிற்பங்கள் – புடைப்புச் சிற்பங்கள் இரண் டிற்கும் உள்ள வேறுபாடு யாது?
  • முழு உருவச் சிற்பங்கள் புடைப்புச் சிற்பங்கள்
  • உருவத்தின் முன், பின் பகுதிகள் தெளிவாக முழு உருவத்துடன் அமைந்த சிற்பங்கள் முழு உருவச் சிற்பங்கள் உருவத்தின் முன்பகுதி மட்டும் தெரியும்படி அமைக்கப்பட்ட சிற்பங்கள் புடைப்புச் சிற்பங்கள்.
2. நாயக்கர் காலச் சிற்பங்களின் நுட்பங்கள் யாவை?
  • கோவைக்கு அண்மையில் உள்ள பேரூர் சிவன் கோவிலின் சிற்பங்கள் நாயக்கர் காலச் சிற்பக் கலைநுட்பத்தில் உச்சநிலைப் படைப்பு எனலாம்.
  • விழியோட்டம், புருவ நெளிவு, நக அமைப்பு என மிகமிக நுட்பகமாகக் கலைநயத்துடன் அமைக்கப்பட்டுள்ளன.

IV. நெடு வினா

1. தமிழ்நாட்டுச் சிற்பங்கள் கலை நயம் மிக்கனவாகவும் வரலாற்றுப் பதிவுகளாகவும் இருப்பதை நிறுவுக.
  • பல்லவர் கால மாமல்லபுரச் சிற்பங்கள் பெரும்பாைறகளைச் செதுக்கிப் பற்பல உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. பஞ்சபாண்டவர்கள் இரதத்தில் உள்ள சிற்ப வேலைப்பாடுகள் அழகாக உள்ளன. காஞ்சி கைலாசநாதர் கோவில் சுற்றுச்சுவர் சிற்பங்களின் கலைக்கூடமாக திகழ்கின்றன.
  • தஞ்சைப் பெரிய கோவிலில் காணப்படும் 14 அடி உயரமுள்ள வாயிற்காவலர் உருவங்களும், நந்தியும் வியப்பூட்டும் வண்ணம் உள்ளது.
  • விஜய நகர மன்னர்கள் காலத்தில் மிக உயர்ந்த கோபுரங்கள் சிற்ப வேலப்பாடுகளுடன் அமைக்கப்பட்டன. பல்வேறு ஓசைகளை எழுப்பும் இசைக் கற்றூண்களையும் அமைத்தன.
  • நாயக்கர் மன்னர்கள் சிற்ப வேலைபாடுடன் ஆயிரங்களால் மண்டபத்தை அமைத்தனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆயிரம் கால் மண்டபத்து தூண்களில் கண்ணப்பர், குறவன், குறத்தி போன்ற சிற்பங்கள் உள்ளன. அரிச்சந்திரன். சந்திரமதி சிற்பங்களில் ஆடை ஆபரணங்கள் கலை நயத்துடன் காணப்படுகின்றன. இறந்த மைந்தனைக் கையில் ஏந்தியபடி சந்திரமதி சிற்பம் நயம் மிக்கது.
  • கோவைக்கு அண்மையில் உள்ள பேரூர் சிவன் கோவிலில் உள்ள சிற்பங்கள் நாயக்காலச் சிற்பக் கலைநுடபத்தின் உச்சநிலைப் படைப்பு எனலாம்.
  • விழியோட்டம், புருவ நெளிவு, நக அமைப்பு என மிகமிக நுட்பமாகக் கலைநயத்துடன் அவை அமைக்கப்பட்டுள்ளன.
  • இவை அனைத்தும் கலைநயத்திற்கும், வரலாற்றுப் பதிவுகளும் தக்க சான்றுகளாகும்.

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. தமிழர் _________ நாம் காணும் சிற்பங்கள்.
விடை : அழகியலின் வெளிப்பாடு
2. தமிழ்ச் சிற்பிகள் கல்லில் வடித்த கவிதைகளே _________.
விடை : சிற்பங்கள்
3. சிற்பத் தொழிலுக்குரிய உறுப்புகளைப் பற்றிக் கூறும் நூல்கள் _________, _________
விடை : திவாகர நிகண்டு, மணிமேகலை
4. சிற்பிகளை _________ என்று சிறப்பிக்கின்றனர்.
விடை : கற்கவிஞர்கள்
5. அரசு கவின் கலைக் கல்லூரிகள் உள்ள இடங்கள் _________, _________
விடை : சென்னை, கும்பகோணம்

II. குறு வினா

1. மனித நாகரிக வளர்ச்சியின் தொடக்கமாக எதைக் கொள்ளலாம்?
  • கல்லிலும், உலோகத்திலும் கருவிகள் செய்த மனிதன், அவற்றில் சிற்பமென்னும் நுண்கலையை வடிக்கத் தொடங்கினான். மனித நாகரிக வளர்ச்சியின் தொடக்கமாக இதைக் கொள்ளலாம்.
2. பல்லவர்கள் காலச் சிறப்பங்களர் அமைந்துள்ள இடங்கள் யாவை?
  • மாமல்லபுரம்
  • காஞ்சிபுரம்
  • திருச்சி
  • மலைக்கோட்டை
3. சிற்பங்களின் நிலைகள் யாவை? 
சிற்பங்களின் நிலைகள் 4வகைப்படும்
  • தெய்வ உருவங்கள்
  • கற்பைன உருவங்கள்
  • இயற்கை உருவங்கள்
  • முழு வடிவ உருவங்கள்
4. பல்லவர் காலத்தில் தூண்களில் பொறிக்கப்பட்டவை எவை?
  • யாளி
  • சிங்கம்
  • தாமரை மலர்
  • நுட்பனமான வேலைப்பாடுகள் அமைந்த வட்டங்கள்
5. எவை வரலாற்றின் வாயில்களாக விளங்குகின்றன?
உயிரற்ற கல்லிலும், உலோகத்திலும் தமிழர் மன உணர்வுகளையும், நிகழ்வுகளையும் செதுக்கி வைத்த சிற்பங்கள் , இன்றும் வரலாற்றின் வாயில்களாக விளங்குகின்றன.
6. சிற்பக்கலை என்றால் என்ன?
கல், உலோகம், செங்கல், மரம் முதலியவற்றைக் கொண்டு கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் உருவங்கள் அமைக்கும் கலையே சிற்பக்கலை எனலாம்.
7. சிற்பங்களின் வகைகள் யாவை
சிற்பங்களை அவற்றின் உருவ அமைப்பு அடிப்படையில்
முழு உருவச் சிற்பங்கள்
புடைப்புச் சிற்பங்கள் – என இரண்டாகப் பிரிக்கலாம்.
8. முழு உருவச் சிற்பங்கள் என்றால் என்ன?
உருவத்தின் முன்பகுதியும் பின்பகுதியும் தெளிவாகத் தெரியும் வகையில் முழு உருவத்துடன் அமைந்த சிற்பங்களை முழு உருவச் சிற்பங்கள் என்று கூறலாம்.
9. புடைப்புச் சிற்பங்கள் என்றால் என்ன?
முன்பகுதி மட்டும் தெரியும்படி அமைக்கப்பட்ட சிற்பங்களைப் புடைப்புச் சிற்பங்கள் எனலாம்.
10. புடைப்புச் சிற்பங்களை எங்கு காணலாம்?
  • கோவிலின் தரைப் பகுதி
  • கோபுரம், தூண்கள்
  • நுழைவாயில்கள்
  • சுவர்களின் வெளிப்புறங்கள்
  • என எல்லா இடங்களிலும் புடைப்புச் சிற்பங்களைக் காணலாம்.

III. சிறு வினா

1. பாண்டியர் காலச் சிற்பங்களுக்கு சான்றுகள் கூறுக.
  • பாண்டியர் காலத்தில் அமைக்கப்பட்ட குகைக்கோவில்களில் சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்துள்ளன. அவற்றைத் திருமயம், பிள்ளையார்பட்டி, குன்றக்குடி, திருப்பரங்குன்றம் முதலிய இடங்களில் உள்ள கோவில்களில் காணலாம்.
  • கோவில்பட்டிக்கு மேற்கே கழுகுமலை வெட்டுவான் கோவிலில் அமைந்துள்ள சிற்பங்களும் பாண்டியர் காலச் சிற்பக்கலைக்குச் சான்றுகளாகும்.

Leave a Reply