9th Tamil Guide Unit 5.5
9th Tamil 4th Lesson Samacheer Kalvi Guide | TNPSC | TET | Book Back & Additional Question and Answers
9th Standard Tamil Nadu Start Board Syllabus Unit 5.5 இடைச்சொல் – உரிச்சொல் Book Back and Additional Question and Answers. TN 9th All Unit Book Back and additional Answers for TNPSC, TNTET Exams. 9th Tamil Full Guide இயல் 1 to 9 Full Answers. Samacheer Kalvi 9th Tamil Book Solutions Guide Download Free PDF. 9th Tamil Full guide Book back Question and answer New syllabus ( TN TET, TNPSC ), Our https://www.studentsguide360.com/ website Update 9th Tamil New syllabus book back Questions and answer. 9th Tamil Free Online Test. Class 9 Full Study Materials.
- 9th Tamil Guide Unit 5 – Full Guide – Click Here
9th Tamil Samacheer Kalviuide Guide 5th Lesson – Unit 5.5 இடைச்சொல் – உரிச்சொல்
5.5. இடைச்சொல் – உரிச்சொல்
VI. பலவுள் தெரிக.
1. மாறுபட்டுள்ள குழுவினைக் கண்டறிக.
- கலைக்கூடம், திரையரங்கம், ஆடுகளம், அருங்காட்சியகம்
- கடி, உறு, கூர், கழி
- வினவினான், செப்பினான், உரைத்தான், பகன்றான்
- இன், கூட, கிறு, அம்பு
2. கீழ்க்காண்பவற்றுள் உணர்ச்சித் தொடர் எது?
- சிறுபஞ்ச மூலத்தில் உள்ள பாடல்கள் பெரும்பாலும் மகடூஉ முன்னிலையில் அமைந்துள்ளன.
- இந்திய நூலகவியலின் தந்தையென அறியப்படுபவர் யார்?
- என்னண்ணே! நீங்கள் சொல்வதை நம்பவே முடியவில்லை!
- வாழ்க்கையில் அடிப்படைத் தேவைக ளுக்கு அடுத்த இடத்தைப் புத்தகசாலைக்குத் தருக.
3. சரியான கூற்றினைத் தெரிவு செய்க.
- ஆ, இ சரி; அ தவறு
- அ, இ, சரி; ஆ தவறு
- மூன்றும் சரி
- மூன்றும் தவறு
இடைச்சொல் – உரிச்சொல் – கூடுதல் வினாக்கள்
1. இடைச்சொற்கள் பற்றித் தொல்காப்பியர் கூறுவன யாவை?
- இடைச் சொற்கள் , பெயரையும், வினையையும் சார்ந்து இயங்கும் இயல்பை உடையன; தாமாகத் தனித்து இயங்கு இயல்பை உடையன அல்ல என்கிறார் தொல்காப்பியர்.
2. இடைச்சொற்கள் சிலவற்றை கூறுக.
3. தற்காலத் தமிழில் மிகுதியாகப் பயன்படும் இடைச்சொற்கள் யாவை?
4. எவற்றை சார்ந்து வந்து உரிச்சொற்கள் பொருள் உணர்த்துகின்றன?
5. உரிச்சொற்கள் நன்னூலார் கூறுவன யாவை?
6. இடைச்சொற்களின் வகைகளை கூறுக
- வேற்றுமை உருபுகள் ஐ, ஆல், கு, இன், அது, கண்
- பன்மை விகுதிகள் கள், மார்
- திணை, பால் விகுதிகள் ஏன், ஓம், ஆய், ஈர்(கள்), ஆன், ஆள், ஆர், ஆர்கள், அது, அ
- கால இடைநிலைகள் கிறு, கின்று,…
- பெயரெச்ச, வினையெச்ச விகுதிகள் அ, உ, இ, மல்,…
- எதிர்மறை இடைநிலைகள் ஆ, அல், இல்
- தொழிற்பெயர் விகுதிகள் தல், அம், மை
- வியங்கோள் விகுதிகள் க, இய
- சாரியைகள் அத்து, அற்று, அம்,…
- உவம உருபுகள் போல, விட, கா ட்டிலும், மாதிரி
- இணைப்பிடைச் சொற்கள் உம், அல்லது, இல்லையென்றால் , ஆனால் , ஓ, ஆகவே, ஆயினும், எனினும்,…
- தத்தம் பொருள் உணர்த்தும் இடைச் சொற்கள் உம், ஓ, ஏ, தான், மட்டும், ஆவது, கூட, ஆ, ஆம்
- சொல்லுருபுகள் மூலம், கொண்டு, இருந்து, பற்றி, வரை
- வினா உருபுகள் ஆ, ஓ
கற்பவை கற்றபின்
I. பத்திகளில் இடம்பெற்றுள்ள இடைச்சொற்களைக் கண்டறிந்து எழுதுக.
இடைச்சொற்கள்
- பழத்தான் தான் – (தான்) இருந்ததை விட – (விட)
- வீடும் நாடும் – (உம்) வசதிகள் – (கள்)
- சமுதாயத்தின் – (இன்) அவர்களின் – (இன்)
- பெண்களுக்கும் – (உம்) பாடசாலைக்கு – (கு)
- உரிமைகளும் – (உம்) வீட்டுக்கு – (கு)
- ஆடவியில், ஆற்றோரத்தில் – (இல்)
II. உம், ஓ, ஏ, தான், மட்டும், ஆவது, கூட, ஆ, ஆம், ஆகிய இடைச்சொற்களைப் பயன்படுத்திச் சொற்றொடர்களை உருவாக்குக.
- உம் – தலைவர்களும் போற்றும் தலைவர் காமராஜர்
- ஓ – அவனோ இவனோ இதைச் செய்தது
- ஏ – அவன் படித்தே முன்னேறினான்
- தான் – அவன் தான் பார்த்தான்
- மட்டும் – உங்களில் ஒருவர் மட்டும் முன்னால் வாருங்கள்
- ஆவது – என்றைக்காவது நூலகம் போயிருக்கிறாயா?
- கூட – ஒருவர் கூட சாட்சி சொல்லவில்லை
- ஆ – அவன் படித்தானா?
- ஆம் – தலைமை ஆசிரியர் உள்ளே வரலாம் என்றார்
- ஆகிய – தேனாகிய அமுது மொழி தமிழ்
III. பொருத்தமான இடைச்சொற்களைப் பயன்படுத்துக.
III. பொருத்தமான உரிச்சொற்களை எழுதுக.
- மாபெரும் பொதுக் கூட்டம் (கடி, மா)
- கடி விடுதும் (உறு, கடி)
- வாள் நுதல் (வாள் , தவ )
- சால சிறந்தது ( சால , மழ)
- கடி மனை ( கடி, தட )
சிந்தனை வினா
1) “தான்” என்னும் இடைச்சொல்லை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?
- ’தான்’ என்னும் இடைச்சொல்லும் அழுத்தப் பொருளில் பயன்படுத்தலாம்
- எந்தச் சொல்லுடன் வருகிறதோ, அ தனை முதன்மைபப்படுத்தும் வகையில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தலாம்.
- சான்று : நிர்மலாதான் பாடினாள்
2. அவர்களுக்குப் பரிசு தருவேன் – இத்தொட ரில் “ஆ” என்னும் இடைச்சொல்லைச் சேர்த்து வினாக்களை அமைக்க.
- அவர்களுக்கா பரிசு தருவேன்?
- அவர்களுக்குப் பரிசு தருவேனா?
3) செய்யுளில் உரிச்சொற்கள் எத்தகைய பொருள்களில் இடம் பெறுகின்றன?
- உரிச்சொற்கள் செய்யுளுக்கே உரியன என்றும் அவை,
- ஒரு சொல் பல பொருளுக்கு உரியது
- பல சொல் ஒரு பொருளுக்கு உரிது என இடம் பெறும்
4) தற்காலத் தமிழ்ப் பயன்பாட்டில் காண ப்படுகின்ற உரிச்சொற்களை எழுதுக.
- மா, உறு, தவ, நனி, கடி, கூர், கழி முதலியவை தற்காலத் தமிழ்ப் பயன்பாட்டில் காணப்படுகினற் உரிச்சொற்கள்
- மேலும் மழ, குழு, விழுமம், செழுமை என்பனவும் பயன்பாட்டில் உள்ளன.
5) ’ஆ’ என்னும் இடைச்சொல் எதிர்மறைப் பொருளில் எப்படி வரும் என்பதை எழுதுக
- “ஆ” என்னும் இடைச்சொல் எதிர்மறைப் பொருளில் “ஐயம்” தோன்ற வரும்.
- சான்று : அவனா பேசினான்
6. இடைச் சொற்களைப் பயன்படுத்திக் கீழ்க் காணும் சொற்றொடர்களை மாற்றியமைத்துக் காண்க.
மொழியை ஆள்வோம்
I. மொழிபெயர்க்க.
II. பிழை நீக்கி எழுதுக.
III. இடைச் சொற்களைக் கொண்டு தொடர்களை இணைக்க.
VIII. விளம்பரத்தைச் செய்தித்தாள் செய்தியாக மாற்றி அமைக்க.
IX. நிகழ்வினைப் படித்து, வினாக்களுக்கு விடையளிக்க.
- தமிழக முதலமைச்சராக அண்ணா பொறுப்பேற்ற காலகட்டத்தில், அரிசி வெளிமாநிலங்களுக்குச் செல்லக் கூடாது என்ற கட்டுப்பாடு இருந்தது. ஒரு நாள் அண்ணா விருத்தாசலம் கூட்டத்தை முடித்து விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தார்.
- வழியில் சோதனைச் சாவடியில் அவரது வண்டி நிறுத்தப்பட்டது. அங்கிருந்த வருவாய் அலுவலர், முதலமைச்சரின் மகிழுந்து என்று அறியாமலே திறந்துகாட்டச் செய்தார்.
- மகிழுந்தின் பின்பக்கம் முழுவதும் மாலைகள், கைத்தறி ஆடைகள், வாழ்த்துமடல்கள் இருந்தன. அவற்றைப் பார்த்த பிறகுதான் அந்த அலுவலருக்கு வந்திருப்பது யார் என்பது புரிந்தது. உடனே அவர் அண்ணாவின் அருகில் சென்று,” தெரியாமல் நடந்து விட்டது பொறுத்துக் கொள்ளுங்கள் ” என்றார். ஆனால், அண்ணா அவர் உதவியாளரிடம், “இந்த அலுவலரின் பெயரைக் குறித்துக் கொள்ளுங்கள் “என்றார்.
- அந்த அலுவலர் தனக்கு ஏதோ நடந்து விடப்போகிறது என அச்சப்பட்டு அழாத குறையாக கெஞ்சினார். உடனே, அண்ணா, “ நாங்கள் போடும் சட்டங்களைச் சரியான முறையில் நிறைவேற்றும் பொறுப்பு உங்களைப்போன்ற அலுவலரின் கையில்தான் இருக்கிறது. இன்று நேரில் உங்கள் செயலைப் பார்த்தேன். உங்களைப் போன்றவர்கள்தாம் உயர் பதவிக்கு வரவேண்டும் . அதற்காகத்தான் உங்கள் பெயரைக் கேட்டேன்” என்றார்.
1. மகிழுந்தில் வந்திருப்பது அண்ணா என்பதை வருவாய் அலுவலர் எப்படி அறிந்தார்?
2. அண்ணாவிடம் ஏன் வருவாய் அலுவலர் பொறுத்துக் கொள்ளச் சொன்னார்?
3. அண்ணா, வருவாய் அலுவலரின் செயலை எவ்வாறு பாராட்டினார்?
4. பத்தியில் இடம்பெ றும் இடைச் சொற்களைக் கொண்டு இரு புதிய சொற்றொடர்களை உருவாக்குக.
5. நிகழ்வுக்குப் பொருத்தமான தலைப்பு இடுக.
மொழியோடு விளையாடு
I. சொற்களைப் பயன்படுத்தித் தொடர்களை உருவாக்குக
- மாணவர்கள் ஆசிரியர் பாடவேளை கரும்பலகை
- புத்தகம் எழுதுகோல் அழிப்பான் வழிபாட்டுக் கூட்டம்
- அறை கல்லூரி உயர்நிலை சீருடை
- மடிக்கணினி
- வழிபாட்டுக் கூட்டத்தில் மாணவர்கள் சீருடையுடன் நின்றனர்.
- மாணவர்கள் உயர்நிலை அடைய வேண்டும் என்றார் ஆசிரியர்
- “மாணவர்களே! எழுதுகோலும், அழிப்பானும் கொண்டு வாருங்கள்” என்றார் ஆசிரியர்,
- பாடவேளையின் பொழுது ஆசிரியர் கரும்பலகையில் எழுதினார்
- மாணவர்கள் பாடவேளைக்குரிய புத்தகங்களைக் கொண்டு வரவில்லை
- வழிபாட்டுக் கூட்டத்தில் மடிக்கணினி வழஙகப்பட்டது
II. அகராதியில் காண்க.
III. படங்களை இணைத்தால் கிடைக்கும் நூல்களின் பெயர்களைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
(ஒரு கிராமத்து நதி, கிழவனும் கடலும், கருப்பு மலர்கள், சாக்ரட்டீஸின் சிவப்பு நூலகம், தண்ணீர்தண்ணீர்)
1. நா. காமராசனின் கவிதை நூல்
கருப்பு மலர்கள்
2. திரைப்படமாக வெளிவந்த கோமல் சுவாமி நாதனின் நாடக நூல்.
தண்ணீர்தண்ணீர்
3. நோபல் பரிசு பெற்ற எர்ன ஸ்ட் ஹெமிங்வேவின் குறுநாவல்
கிழவனும் கடலும்
4. சாகித்திய அகாதெமி பரிசுபெற்ற சிற்பியின் கவிதை நூல்
ஒரு கிராமத்து நதி
சாக்ரட்டீஸின் சிவப்பு நூலகம்
கலைச்சொல் அறிவோம்
- சமூக சீர்திருத்தவாதி – Social Reformer
- தன்னார்வலர் – Volunteer
- களர்நிலம் – Saline Soil
- சொற்றொடர் – Sentence