You are currently viewing 9th Tamil Guide Unit 5.1

9th Tamil Guide Unit 5.1

9th Tamil Guide Unit 5.1

9th Tamil 4th Lesson Samacheer Kalvi Guide | TNPSC | TET | Book Back & Additional Question and Answers

9th Standard Tamil Nadu Start Board Syllabus Unit 5.1 கல்வியில் சிறந்த பெண்கள் Book Back and Additional Question and Answers. TN 9th All Unit Book Back and additional Answers for TNPSC, TNTET Exams. 9th Tamil Full Guide இயல் 1 to 9 Full Answers. Samacheer Kalvi 9th Tamil Book Solutions Guide Download Free PDF. 9th Tamil Full guide Book back Question and answer New syllabus ( TN TET, TNPSC ), Our https://www.studentsguide360.com/ website Update 9th Tamil New syllabus book back Questions and answer. 9th Tamil Free Online Test. Class 9 Full Study Materials.

  • 9th Tamil Guide Unit 5 – Full Guide – Click Here

9th Tamil Guide Unit 5

9th Tamil Samacheer Kalviuide Guide 5th Lesson – Unit 5.1 கல்வியில் சிறந்த பெண்கள்

இயல் 5.1. கல்வியில் சிறந்த பெண்கள்

I. குறு வினா

1. சாரதா சட்டம் எதற்காகப் போடப்பட்டது?
பெண்கள் முன்னேற்றத்திற்குத் தடைக்கல்லாய் இருப்பது குழந்தைத் திருமணம். எனவே அதைத் தடுக்க 1929-ம் ஆண்டு சாரதா சட்டம் போடப்பட்டது.

II. சிறு வினா

1. சங்க கால பெண்பாற் புலவர்களின் பெயர்களை எழுதுக
  • ஔவையார்
  • ஒக்கூர் மாசாத்தியார்,
  • ஆதிமந்தியார்
  • வெண்ணிக் குயத்தியார்
  • பொன்முடியார்
  • அள்ளூர் நன்முல்லையார்
  • நக்கண்ணையார்
  • காக்கைப்பாடினியார்,
  • வெள்ளிவீதியார்
  • காவற்பெண்டு
  • நப்பசலையார்
2. இன்றைய பெண்கல்வி என்னும் தலைப்பின் வில்லுப்பாட்டு வடிவில் பாடல் எழுதுக.
  • “தந்தனத்தோம் என்று சொல்லியே வல்லினில் பாட
  • ஆமாம் வில்லினில் பாட
  • வந்தருள்வாய் தமிழ் மகளே!
  • இன்றைய பெண்கல்வி பற்றிப் பாடப்போகிறோம்!
  • ஆமாம்! பாடப்போகிறோம்.
  • மருத்துவம் படித்து மருத்துவ மாேமேதைகள் தான்
  • இன்று பெண்கள்…
  • சட்டம் படித்து சட்ட மாமேதைகள் தான்
  • இன்று பெண்கள்…
  • பொறியில் படித்து பொறியியல் மாமேதைகள் தான்
  • இன்று பெண்கள்…
  • ஆமாம்!
  • வாழிய வாழிய பெண்கல்வி
  • ஆமாம் வாழிய வாழியவே!”
3. முத்துலெட்சுமி – குறிப்பு வரைக. (அல்லது) மருத்துவர் முத்துலெட்சுமியின் சாதனைகளை குறிப்பிடுக.
  • தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர்
  • இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர்.
  • சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர்.
  • சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி.
  • தேவதாசிமுறை ஒழிப்புச் சட்டம், இருதார தடைச்சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம், குழந்தைத் திருமணத் தடைச்சட்டம் ஆகியவை நிறைவேற காரணமாக இருந்தவர்.
  • அடையாற்றில் 1930இல் அவ்வை இல்லம், 1952இல் புற்றுநோய் மருத்துவமனை ஆகியவற்றை நிறுவியவர்.
4. நீலாம்பிகை அம்மையாரின் தமிழ்ப்பணி குறித்த சிறப்பங்களை எழுதுக.
  • மறைமலையடிகளின் மகள் ஆவார்.
  • தந்தையைப் போலவே தனித்தமிழ்ப் பற்றுடையவர்
  • இவரது தனித்தமிழ்க் கட்டுரை, வடசொல் – தமிழ் அகரவரிசை, முப்பெண்மணிகள் வரலாறு, பட்டினத்தார் பாராட்டிய மூவர் ஆகிய நூல்கள் தனித்தமிழில் எழுத விரும்புவோர்க்கு மிகவும் பயனுள்ளனவாக விளங்குகின்றன.

II. நெடு வினா

நீங்கள் அறிந்த சாதனைப் பெண்கள் குறித்த செய்திகளை விவரிக்க
மூவலூர் இராமாமிர்தம்:-
தமிழகத்தின் சமூகச் சீர்திருத்தவாதி, எழுத்தாளர்
திராவிட இ யக்க அரசியல் செயல்பாட்டாளர்.
தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேறத் துணைநின்றவர்.
தமிழக அரசு, 8ஆம் வகுப்புவரை படித்த இளம் பெண்களுக்கான திருமண உதவித் தொகையை இவரின் பெயரில் வழங்கிவருகிறது.
முத்துலெட்சுமி:-
தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர்
இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர்.
சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர்.
சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி.
தேவதாசிமுறை ஒழிப்புச் சட்டம், இருதார தடைச்சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம், குழந்தைத் திருமணத் தடைச்சட்டம் ஆகியவை நிறைவேற காரணமாக இருந்தவர்.
அடையாற்றில் 1930இல் அவ்வை இல்லம், 1952இல் புற்றுநோய் மருத்துவமனை ஆகியவற்றை நிறுவியவர்.
நீலாம்பிகை அம்மையார்:-
மறைமலையடிகளின் மகள் ஆவார்.
தந்தையைப் போலவே தனித்தமிழ்ப் பற்றுடையவர்
இவரது தனித்தமிழ்க் கட்டுரை, வடசொல் – தமிழ் அகரவரிசை, முப்பெண்மணிகள் வரலாறு, பட்டினத்தார் பாராட்டிய மூவர் ஆகிய நூல்கள் தனித்தமிழில் எழுத விரும்புவோர்க்கு மிகவும் பயனுள்ளனவாக விளங்குகின்றன.

கல்வியில் சிறந்த பெண்கள் – கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. கல்வி பெறுதலே _________ அழகு.
விடை : பெண்களுக்கு
2. பெண் கல்விக்கு _________  முதன் முதலில் பரிந்துரை செய்தது.
விடை : ஹண்டர் குழு
3. _________ மாநிலம் இந்தியாவில் முதன் முதலாக பெண்களுக்கான பள்ளியை தொடங்கியது.
விடை : மராட்டியம்
4. தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர்  _________
விடை : முத்துலெட்சுமி
5. 1952-ல் புற்றுநோய் மருத்துவமனையை நிறுவியவர் _________ ஆவார்.
விடை : முத்துலெட்சுமி
6. _________வேலூரில் இலவச மருத்துவம் அளித்தவர்.
விடை : ஐடாஸ் சோபியா ஸ்கட்டர்
7. பாகிஸ்தானில், பெண்கல்வி வேண்டுமென்று மலாலாவின் தனது _________ வயதில் போராடினார்.
விடை : பன்னிரண்டு
8. மூவலூர் இராமாமிர்தம் தேவதாசி சட்டம் நிறைவேற துணை நின்றார்.
விடை : தேவதாசி சட்டம்
9. இந்திய நாட்டின் முதல் பெண் ஆசிரியர் _________
விடை : சாவித்திரபாய் பூலே
10. _________ நோபல் பரிசு வாங்கி சிறுமி ஆவார்.
விடை : மலாலா
11. கைலாஷ் சத்தியமூர்த்தி _________ என்ற அமைப்பை நிறுவினார்.
விடை : குழந்தையைப் பாதுகாப்போம்
12. தடைகளை மீறி கல்வி கற்று பண்டிதர் ஆகியவர் _________
விடை : பண்டித ரமாபாய்
13. 2014-ல் நோபல் பரிசு வாங்கியவர் _________
விடை : கைலாஷ் சத்யார்த்தி.

II. குறு வினா

1. இறைவனுக்குப் பாமாலை சூட்டின பெண்கள் யாவர்?
  • காரைக்கால் அம்மையார்
  • ஆண்டாள்
2. பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்வர்கள் யார்?
  • மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்
  • தந்தை பெரியார்
  • பாரதியார்
  • பாரதிதாசன்
3. சாவித்திரிபாய் பூலே ஆற்றிய பணி யாது?
  • 1848-ல் பெண்களுக்கெனத் தொடங்கப்பட்ட பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவர்.
  • நாட்டின் முதல் பெண் ஆசிரியர்.
4. ஒருவரின் வாழ்வின் இறுதி வரையிலும் கை கொடுப்பது?
கையிலுள்ள செல்வத்தைக் காட்டிலும் நிலைத்த புகழுடைய கல்விதான் ஒருவருக்கு வாழ்வின் இறுதி வரையிலும் கை கொடுக்கிறது.
5. பெண்களுக்கான நலத்திட்டங்கள் எவை?
  • ஈ.வெ.ரா. – நாகம்மை இலவசக் கல்வி உதவித் திட்டம் பட்டமேற்படிப்பிற்கு உரியது.
  • சிவகாமி அம்மையார் கல்வி உதவித்திட்டம் – கல்வி, திருணம உதவித் தொகை ஆகியவற்றுடன் தொடர்புடையது.

III. சிறு வினா

1. ஈ.த. இராஜேஸ்வரி அம்மையார் பற்றி குறிப்பு வரைக
  • தமிழ், இலக்கியம், அறிவியல் ஆகிய துறைகளிலும் சிறந்து விளங்கினார்.
  • திருமந்திரம், தொல்காப்பியம், கைவல்யம் போன்ற நூல்களிலுள்ள அறிவியல் உண்மைகள் குறித்துச் சொற்பொழிவு ஆற்றியுள்ளார்.
  • இராணி மேரி கல்லூரியில் அறிவியல் பேராசிரியாகப் பணியாற்றினார்.
  • சூரியன், பரமாணுப் புராணம் போன்ற அறிவியல் நூல்களை எழுதியுள்ளார்.

Leave a Reply