You are currently viewing 9th Tamil Guide Unit 3.3

9th Tamil Guide Unit 3.3

9th Tamil Guide Unit 3.3

9th Tamil 3rd Lesson Samacheer Kalvi Guide | TNPSC | TET | Book Back & Additional Question and Answers

9th Standard Tamil Nadu Start Board Syllabus Unit 3.3 அகழாய்வுகள் Book Back and Additional Question and Answers. TN 9th All Unit Book Back and additional Answers for TNPSC, TNTET Exams. 9th Tamil Full Guide இயல் 1 to 9 Full Answers. Samacheer Kalvi 9th Tamil Book Solutions Guide Download Free PDF. 9th Tamil Full guide Book back Question and answer New syllabus ( TN TET, TNPSC ), Our https://www.studentsguide360.com/ website Update 9th Tamil New syllabus book back Questions and answer. 9th Tamil Free Online Test. Class 9 Full Study Materials.

  • 9th Tamil Guide Unit 3 – Full Guide – Click Here

9th Tamil Guide Unit 3

9th Tamil Samacheer Kalviuide Guide 3rd Lesson – Unit 3.3 அகழாய்வுகள்

3.3. அகழாய்வுகள்

I. குறு வினா

தொல்லியல் சான்றுகள் காணப்படும் இடங்களை அகழாய்வு செய்ய வேண்டும் ஏன்?
நமக்கு இதுவரை கிடைத்துள்ள பழங்காலப் பொருட்கள் நாம் வாழ்ந்த காலத்தை மட்டுமன்றி பழம்பெரும் வரலாற்றைப் பறை சாற்றகின்றன.
நமது நாகரிகத்தை எடுத்துக் காட்டுகின்றன. எனவே தொல்லியல் சான்றுகள் காணப்படும் இடங்களை அகழாய்வு செய்ய வேண்டும்.

II. குறு வினா

வியத்தகு அறிவியல் விரவிக் கிடக்கும் நிலையில் அகழாய்வின் தேவை குறித்து உங்களது கருத்துகளைத் தொகுத்துரைக்க
அறிவியல் மிகவும் வேகமானது. ஒரு கருவி கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்து அதுவே சில ஆண்டுகளில் மாற்றம் அடைந்து முன்னது காணாமல் போய்விடுகின்றது.
கணினியை வைரஸ் அழித்து விடும். ஆனால், மண்ணாலும், கல்லாலும் ஆன பழம் பொருட்களை எந்த வைரஸூம் கூட அழிக்க முடியாது.
பழமையே புதுமை என்பதை மனதில் கொண்டு அகழாய்வை மேலும் மேற்கொள்ள வேண்டும்.

III. நெடு வினா

வியத்தகு அறிவியல் விரவிக் கிடக்கும் நிலையில் அகழாய்வின் தேவை குறித்து உங்களது கருத்துகளைத் தொகுத்துரைக்க
முன்னுரை:-
நமது பண்பாட்டை எண்ணிப் பார்பதற்கும் கடந்த காலத்தைப் புரிந்து கொள்வதற்கும் துணை நிறபவை அகழாய்வுகள்.
அரிக்கமேடு அகழாய்வு:-
அரிக்கமேடு அகழாய்வில் பொ.ஆ. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த கட்டிடங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இவற்றில் காணப்பட்ட தொட்டிகளில் சாயம் தோய்க்கப் பட்டிருந்ததாகத் தெரிகின்றது.
அரிக்கமேடு அகழாய்வில் ரோமானிய மட்பாண்டங்கள் கிடைத்தன.
அதனால் ரோமானியர்களுக்கும் நமக்கும் இருந்த வாணிபத் தொடர்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அரிக்கமேடு அகழாய்வு:-
ஆதிச்சநல்லூர் அகழாய்வில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இது பழம்பெரும் பழங்கால அடையாளமாக உள்ளன.
கீழடி அகழாய்வு:-
மதுரை அருகே கீழடி என்னும் இடத்தடில் நடத்தப்பட்ட அகழாய்வில் சுடுமண் பொருட்கள், உலோகப் பொருட்கள், முத்துக்கள், கிளிஞ்சல் பொருள்கள், மான் கொம்புகள், சோழிகள், கிண்ணங்கள், துளையிடப்பட்ட பாத்திரங்கள், இரத்தினக்கல் வகைகள், பழுப்பு, கறுப்பு, சிவப்பு – கறுப்புப் பானைகள், சதுரங்க்காய்கள், தானியங்களைச் சேமித்து வைக்கும் கலன்கள், செம்பு, சங்கு வளையல்கள், தமிழ்-பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், கற்கருவிகள், உறைக்கிணறுகள் போன்ற தொல்லியல் பொருள்கள் கிடைத்துள்ளன.
இவை 2300 ஆண்களுக்கு முற்பட்டவை என கருதப்படுகின்றன. இதுவரை கிடைத்த அகழாய்வில் இறப்பு தொடர்பான தடயங்கள் கிடைத்துள்ளன.
ஆனால் கீழடியில் வாழ்விடப்பகுதிகளே முழுமையான அளவில் கிடைத்துள்ளன. செங்கல் கட்டுமானங்கள் தமிழரின் உயரிய நாகரிகத்தைக் காட்டும் சாட்சிகளாக அமைந்துள்ளன.
முடிவுரை:-
தமிழகர்களின் உணவு, உடை, வாழிடம் முதலியன இயற்கையைச் சிதைக்காத இயல்புகளைக் கொண்டவை என்பதற்கு அகழாய்வில் கண்ட சான்றுகள் ஆவணங்களாகத் திகழ்கின்றன.

அகழாய்வுகள் – கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. ____________ தோன்றிப் பல்லாயிரம் ஆண்டுகள் கடந்துவிட்டன.
விடை : மனிதன்
2. அகழாய்வு ____________ முழுமை பெற உதவுகிறது.
விடை : வரலாறு
3. வணிக அறிவியல், ____________ பெருக்குவதற்காகப் பொருள்களைக் கண்டுபிடிக்கிறது.
விடை : மூலதனத்தைப்
4. இயற்கையோடு இணைந்த பண்பாட்டு வாழ்க்கை நம்முடையது என்பதனை அறிவதே ____________
விடை : மக்கள் அறிவியல்.

II. குறு வினா

1. எதற்காக தமிழகத்தின் தொன்மையான பகுதிகளை அகழாய்வு செய்தல் இன்றியமையாதது?
இன்றும் பண்பாட்டு அளவில் சிறந்த வாழ்வை வெளிப்படுத்திய தமிழர்களின்
வரலாற்றை அறிந்து கொள்ள தமிழகத்தின் தொன்மையான பகுதிகளை அகழாய்வு செய்தல் இன்றியமையாதது.
2. அகழாய்வு செய்தல் என்பது என்ன?
அகழாய்வு செய்தல் என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட நிலப்பகுதியில் செதுக்கிச்
செதுக்கி ஆராய்தல் ஆகும்.
3. அகழாய்வில் கிடைத்த பொருள்கள் எவற்றையெல்லாம் உணர்த்துகின்றன?
அகழாய்வில் கிடைத்த பொருள்கள் நாம் வாழ்ந்த காலத்தை மட்டுமன்றி, நமது வரலாற்றையும் உணர்த்துகின்றன.
4. பட்டிமண்டபம் பற்றிய செய்திகளைக் கூறும் இலக்கியங்கள் யாவை
  • சிலப்பதிகாரம்
  • திருவாசகம்
  • மணிமேகலை
  • கம்பராமாயணம்
5. இந்தியாவில் கண்பிடிக்கப்பட்ட கல்லாயுதம் எது?
1863 ஆம் ஆண்டு இராபர்ட் புரூஸ்பு ட் என்னும் தொல்லியல் அறிஞர்  ன்னைப் பல்லாவரம் செம்மண் மேட்டுப்பகுதியில் எலும்பையும் கற்கருவியையும்  கண்டுபிடித்தார். இந்தக் கற்கருவிதான் இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட முதல் கல்லாயுதம்.
6. எங்கு நடைபெற்ற அகழாய்வில் முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன?
1914ஆம் ஆண்டு ஆதிச்சநல்லூரில் நடத்தப்பட்ட அகழாய்வில் முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன
7. எதற்கு அகழாய்வில் சான்றுகள் ஆவணங்களாகத் திகழ்கின்றன?
தமிழர்களின் உணவு, உடை, வாழிடம் முதலியன இயற்கையைச் சிதைக்காத இயல்புகளைக் கொண்டவை என்பதற்கு அகழாய்வில் கண்ட சான்றுகளே ஆவணங்களாகத் திகழ்கின்றன
8. எதற்கு அகழாய்வு துணை நிற்கின்றது?
மக்கள் அறிவியல் என்கிற மகத்தான சிந்தனையைப் புரிந்து கொள்வதற்கும் நமது பண்பாட்டின் மேன்மைகளை இன்றைய தலைமுறை எடுத்துக் கொண்டு சிறப்பாக வாழ்வதற்கும் அகழாய்வு துணை நிற்கின்றது.
9. அறிவியலின் வகைகளை கூறுக
அறிவியலில் இரண்டு வகையுண்டு.
வணிக அறிவியல்
மக்கள் அறிவியல்

Leave a Reply