9th Tamil Guide Unit 3.2
9th Tamil 3rd Lesson Samacheer Kalvi Guide | TNPSC | TET | Book Back & Additional Question and Answers
9th Standard Tamil Nadu Start Board Syllabus Unit 3.2 மணிமேகலை Book Back and Additional Question and Answers. TN 9th All Unit Book Back and additional Answers for TNPSC, TNTET Exams. 9th Tamil Full Guide இயல் 1 to 9 Full Answers. Samacheer Kalvi 9th Tamil Book Solutions Guide Download Free PDF. 9th Tamil Full guide Book back Question and answer New syllabus ( TN TET, TNPSC ), Our https://www.studentsguide360.com/ website Update 9th Tamil New syllabus book back Questions and answer. 9th Tamil Free Online Test. Class 9 Full Study Materials.
- 9th Tamil Guide Unit 3 – Full Guide – Click Here
9th Tamil Samacheer Kalviuide Guide 3rd Lesson – Unit 3.2 மணிமேகலை
3.2. மணிமேகலை
I. சொல்லும் பொருளும்
- சமயக் கணக்கர் – சமயத் தத்துவவாதிகள்
- பாடைமாக்கள் – பல மொழிபேசும் மக்கள், குழீஇஒன்றுகூடி
- தோம் – குற்றம்
- கோட்டி – மன்றம்
- பொலம் – பொன்
- வேதிகை – திண்ணை
- தூணம் – தூண்
- தாமம் – மாலை
- கதலிகைக் கொடி -சிறு சிறு கொடியாகப் பல கொடிகள் கட்டியது,
- காழூன்று கொடி – கொம்புகளில் கட்டும் கொடி
- விலோதம் – துணியாலான கொடி
- வசி – மழை
- செற்றம் – சினம்
- கலாம் – போர்
- துருத்தி – ஆற்றிடைக்குறை (ஆற்றின் நடுவே இருக்கும் மணல்திட்டு).
II. சொல்லும் பொருளும்
- தோரணவீதியும் – எண்ணும்மை
- தோமறு கோடடியும் – எண்ணும்மை
- காய்க்குலை கழுகு – இரணடாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
- பூக்கொடிவல்லி – இரணடாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
- முத்துத்தாமம் – இரணடாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
- மாற்றுமின் – ஏவல் வினைமுற்று
- பரப்புமின் – ஏவல் வினைமுற்று
- உறுபொருள் – உரிச்சொல் தொடர்
- தாழ்பூந்துறை – வினைத்தொகை
- பாங்கறிந்து – இரண்டாம் வேற்றுமைத் தொகை
- நன்பொருள் – பண்புத்தொகை
- தண்மணல் – பண்புத்தொகை
- நல்லுரை – பண்புத்தொகை
III. பகுபத உறுப்பிலக்கணம்.
1. பரப்புமின் = பரப்பு +மின்
பரப்பு – பகுதி
மின் – முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி
2. அறைந்தான் = அறை + த்(ந்) + த் +அன் + அன்
அறை – பகுதி
த் – சந்தி (ந்) ஆனது விகாரம்
த் – இறந்த கால இடைநிலை
அன் – சாரியை
அன் – ஆண்பால் வினைமுற்று விகுதி
IV. பலவுள் தெரிக.
ஐம்பெருங்குழு, எண்பேராயம் – சொற்றொடர்கள் உணர்த்தும் இலக்கணம்
- திசைச்சொற்கள்
- வடசொற்கள்
- உரிச்சொற்கள்
- தொகைச்சொற்கள்
விடை : தொகைச்சொற்கள்.
V. சிறு வினா
1. பழமணல் மாற்றுமின் புதுமணல் பரப்புமின் – இடஞ்சுட்டி பொருள் விளக்குக
இடம்:-
மணிமேகலை விழாவறைக் காதையில் முரசு கொட்டுபவன் இவ்வரிகளை கூறினான்
பொருள் விளக்கம்:-
புகார் நகரில் 28 நாட்கள் இந்திர விழா நடைபெறுவதால், தெருக்களிலும் மன்றங்களிலும் பழைய மணலை மாற்றிப் புது மணலைப் பரப்புங்கள் என்று முரசு கொட்டுபவன் தெரிவித்தான்.
2. பட்டிமண்டபம், பட்டிமன்றம் இரண்டும் ஒன்றா? விளக்குக எழுதுக
பட்டிமன்றம், பட்டிமண்டபம் இரண்டும் ஒன்றே!
விளக்கம்:-
புலவர்கள் சொற்போரிட்டு வாதிடும் இடம் பட்டிமண்டபம் ஆகும். இவையே இன்று பட்டிமன்றம் என்றும் அழைக்கப்டுகிறது.
VI. குறு வினா
1.உங்கள் ஊரில் நடைபெறுகின்ற விழா முன்னேற்பாடுகளை இந்திரவிழா நிகழ்வுகளுடன் ஒப்பிடுக.
ஊரில் நடைபெறுகின்ற விழா முன்னேற்பாடுகள்:-
தோரணம் கட்டுதல், தெருக்களையும், கோவில் மண்டபங்களையும் தூய்மைப்படுத்தி வண்ணம் அடித்தல், கோலமிடுதல் போன்றவற்றை செய்தனர்.
பனையோலை, மாவிலை தோரணங்களை கட்டுவர். வாழை மரங்களை கட்டி வைப்பர்.
நாடகம், இசைக்கச்சேரி, பட்டிமன்றம் ஆகியவை நடக்க ஏற்பாடு செய்வர்.
இந்திரவிழா நிகழ்வுகள்:-
தெருக்கள், மன்றங்கள் ஆகியவற்றில் அழகுப் பொருட்கள் பலவற்றை அழகுபடுத்தினர்.
பாக்கு, வாழை, வஞ்சிக் கொடி, பூங்கொடி, கரும்பு ஆகியவற்றை நட்டு வைத்தனர்.
தெருக்கள், மன்றங்கள் ஆகியவற்றில் புது மணலைப் பரப்பினர்.
பட்டிமண்டபத்தில் வாதிட ஏற்பாடு செய்தனர்.
மணிமேகலை – கூடுதல் வினாக்கள்
I. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. அல்லும் பகலும் உழைப்பில் திளைக்கின்ற மக்களை உற்சாகப்படுத்தி ஓய்வு தரும் வாயில் ____________
விடை : விழா
2. மக்களின் வாழ்வின் நிகழ்வுகளில் விழா தனக்கென ஒரு ____________ பெறுகிறது.
விடை : தனியிடம்
3. மணிமேகலை பெண்மையை முதன்மைபடுத்தும் ____________
விடை : முதற்காப்பியம்
4. மணிமேகலை கதை அடிப்படையில் ____________ தொடர்ச்சி என்று கூறுவர்
விடை : சிலப்பதிகாரத்தின்
II. சிறு வினா
1. மனித மாண்புகளை எடுத்துரைக்கும் விழா எவ்வாறு திகழ்கிறது?
மனித மாண்புகளை எடுத்துரைக்கும் விழா, பண்பாட்டின் வெளிப்பாடாகவும் திகழ்கிறது.
2. பூம்புகாரில் இந்திர விழா எத்தனை நாட்கள் நடைபெறும்?
பூம்புகாரில் இந்திர விழா 28 நாட்கள் நடைபெறும்
3. இந்திர விழாவினைக் காண வந்தோர் யாவர்?
- சமயவாதிகள்
- காலக்கணிதர்
- மக்கள் உருவில் கடவுளர்
- பல மொழி பேசும் அயல்நாட்டின் ஐம்பெருங்குழு
- எண்பேராயம்
4. இந்திர விழா நடைபெறும் இடங்கள் யாவை?
- வெண்மையான மணற்குன்றுகள்
- பூஞ்சோலைகள்
- ஆற்றிடைக் குன்றுகள்
- மரக்கிளைகள் நிழல் தரும் தண்ணீர்த் துறைகள்
5. விழா கொண்டாடுவதன் நோக்கம் யாது?
- ஒன்று கூடுதல்
- கொண்டாடுதல்
- கூடி உண்ணுதல்
- மகிழ்ச்சியைப் பகிர்தல்
6. ஐம்பெருங்குழுவில் உள்ளவர்கள் யாவர்?
- அமைச்சர்
- சடங்கு செய்விப்பாேர்
- படைத்தலைவர்
- தூதர்
- சாரணனர் (ஒற்றர்)
III. குறு வினா
1. எண்பேராயம் குழுவில் உள்ளவர்கள் யார்?
- கரணத்தியலவர் (கணக்கு எழுதுபவர்)
- கருமவிதிகள் (புரோகிதர்)
- கனகச்சுற்றம் (பொருட்காப்பாளர்)
- கடைக்காப்பாளர் (வாயிற்காப்பாளர்)
- நகரமாந்தர் (மக்கள் சார்பாளர்)
- படைத்தலைவர்
- யானை வீரர்
- இவுளி மறவர் (குதிரை வீரர்)
2. மணிமேகலை – குறிப்பு வரைக
- ஐப்பெருங்காப்பியங்களுள் ஒன்றானது,
- மணிமேகலைத் துறவு என்பது இதன் வேறு பெயராகும்.
- பெண்மையை முதன்மைப்படுத்தும் புரட்சிக்காப்பியம்
- பண்பாட்டுக் கூறுகளை காட்டும் தமிழ்க்காப்பியம்
- சொற்சுவையும், பொருட்சுவையும் இயற்கை வருணைனைகளும் நிறைந்தது.
- பெளத்த சமயம் சார்புடையது.
- மணிமேகலை கதை அடிப்படையில் சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சி என்று கூறுவர்.
- இது 30 காதையாக அமைந்துள்ளது.
3. சீத்தலைச் சாத்தனார் பற்றிய குறிப்புகளை எழுதுக
- மணிமேகலை காப்பியத்திலன் ஆசிரியர் சீத்தலைச் சாத்தனார்.
- சாத்தன் என்பது இவரது இயற்பெயர்.
- தானிய வணிகம் செய்ததால் கூல வாணிகன் சீத்தலை சாத்தனார் என்பர்.
- இவரின் வேறுபெயர் – தண்டழிச் சாத்தன், தண்டமிழ்ப்புலவன்.
- கி.பி. 2-ம் நூற்றாண்டைச் சார்ந்தவர்.
- திருச்சி சீத்தலையில் பிறந்து மதுரையில் வாழ்ந்தவர் என்பர்.