You are currently viewing 9th Social Science History Guide Lesson 9

9th Social Science History Guide Lesson 9

9th Social Science History Guide Lesson 9

9th Social Science Guide – History Lesson 9 புரட்சிகளின் காலம்

9th Standard Social Science History Lesson 9 புரட்சிகளின் காலம் Book Back Answers. 9th Social Guide Unit 9 Book Back Answers English Medium. 9 all Subject Book Answers. Class 9 Social Science All Unit Book in Answers TM & EM.

9th Social Science (History) Lesson -1 Book Back Answers

9th Social Science – History Guide – பாடம் 9. புரட்சிகளின் காலம்

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் .

1. அமெரிக்காவில் ஏற்படுத்தப்பட்ட முதல் ஆங்கிலேய காலனி ________ ஆகும்

  1. நியூயார்க்
  2. பிலடெல்பியா
  3. ஜேம்ஸ்டவுன்
  4. ஆம்ஸ்டெர்டாம்

விடை : ஜேம்ஸ்டவுன்

2. பிரெஞ்சுப் புரட்சியின் முன்னோடியாக, வாஷிங்டனுடன் கூட்டுச் சேர்ந்து ஆங்கிலேயருக்கு எதிராக போராடியவர் ________

  1. டான்டன்
  2. லஃபாயெட்
  3. நெப்போலியன்
  4. ஆபிரகாம் லிங்கன்

விடை : லஃபாயெட்

3. ___________லஃபாயட், தாமஸ் ஜெபர்சன், மிரபு ஆகியோரால் எழுதப்பட்டது

  1. சுதந்திர பிரகடனம்
  2. பில்னிட்ஸ் பிரகடனம்
  3. மனிதன் மற்றும் குடிமகன் உரிமைகள் பற்றிய பிரகடனம்
  4. மனித உரிமை சாசனம்

விடை : மனிதன் மற்றும் குடிமகன் உரிமைகள் பற்றிய பிரகடனம்

4. ________ இல் ஆங்கிலேயரின் தோல்வி பிரான்சிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நட்புக்கு வழிவகுத்தது

  1. டிரென்டன்
  2. சாரடோகா
  3. பென்சில் வேனியா
  4. நியூயார்க்

விடை : சாரடோகா

5. பிரான்சில் அரச சர்வாதிகாரத்தின் சின்னமாக _______ இருந்தது

  1. வெர்சே மாளிகை
  2. பாஸ்டில் சிறைச்சாலை
  3. பாரிஸ் கம்யூன்
  4. ஸ்டேட்ஸ் ஜெனரல்

விடை : வெர்சே மாளிகை

6. ஆஸ்திரியா மற்றும் பிரஷ்யாவின் படைகள், பிரெஞ்சுப் புரட்சியாளர் படைகளால் _________ போர்க்களத்தில் தோற்கடிக்கப்பட்டன

  1. வெர்ணா
  2. வெர்சே
  3. பில்னிட்ஸ்
  4. வால்மி

விடை : வால்மி

7. ‘கான்டீட்’நூலை எழுதியவர்________

  1. வால்டேர்
  2. ரூசோ
  3. மாண்டெஸ்கியூ
  4. டாண்டன்

விடை : வால்டேர்

8. பதினாறாம் லூயியின் கீழ்க் குறைந்தபட்ச அதிகாரங்களைக் கொண்ட முடியாட்சியைத் தக்கவைத்துக்கொள்ள விரும்பிய மிதவாத தாராளவாதிகள் _________

  1. ஜெரோண்டியர்
  2. ஜேக்கோபியர்
  3. குடியேறிகள்
  4. அரச விசுவாசிகள்

விடை : ஜெரோண்டியர்

9. ________ ஆம் ஆண்டில் பாரிஸ் உடன்படிக்கையின்படி அமெரிக்க சுதந்திரப் போர் முடிவுக்கு வந்தது

  1. 1776
  2. 1779
  3. 1781
  4. 1783

விடை : 1783

10. தாமஸ் பெயின் எழுதிய புகழ்வாய்ந்த நூல் _______ ஆகும்

  1. இயல்பறிவு
  2. மனித உரிமைகள்
  3. உரிமைகள் மசோதா
  4. அடிமைத்தனத்தை ஒழித்தல்

விடை : இயல்பறிவு

 

II கோடிட்ட இடங்களை நிரப்புக

  1. இரண்டாம் கண்டங்கள் மாநாட்டால் அஞ்சல்துறை தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் _________ விடை : பெஞ்சமின் பிராங்களின்
  2. பங்கர் குன்றுப் போர் நடைபெற்ற ஆண்டு _______ விடை : 1775 ஜூன் 17
  3. _______சட்டம்கடனைத் தங்கமாகவும் வெள்ளியாகவும் திரும்பச் செலுத்த வற்புறுத்தியது. விடை : செலவாணிச்
  4. பிரான்சின் தேசியச் சட்டமன்றத்தின் தலைவர் _________ ஆவார் விடை : மிரபு
  1. சுதந்திரத்திற்கும் பகுத்தறிவிற்கும் பெரும்விழா நடத்திய _________ கில்லட்டினால் கொல்லப்பட்டார். விடை : ஹெபர்ட்
  2. பதினாறாம் லூயி பிரான்சை விட்டு தப்பியோட முயன்றபோது _______ நகரில் அவர் தனது குடும்பத்துடன் கைது செய்யப்பட்டார் விடை : வெர்னே

 

III சரியான கூற்றினைக் கண்டுபிடி

1. i) கடலாய்வுப் பயணங்களை மேற்கொண்டதில் போர்த்துகீசியர் முன்னோடியாவர்

ii) பென் என்ற குவேக்கரால் புதிய பிளைமவுத் பெயரிடப்பட்டது

iii) குவேக்கர்கள் போருக்கு ஆதரவாக இருந்தமைக்கு நற்பெயர் பெற்றனர்

iv) ஆங்கிலேயர்கள் நியூ ஆம்ஸ்டர்டாமை நியூயார்க் என பெயர் மாற்றம் செய்தனர்

a.i) மற்றும் ii) சரியானவை

b.iii) சரி

c.iv) சரி

d.i) மற்றும் iv) சரியானவை

விடை : i) மற்றும் iv) சரியானவை

2. i) அமெரிக்க விடுதலைப் போர் இங்கிலாந்துடன் செய்யப்பட்ட போராக மட்டுமல்லாது உள்நாட்டுப் போராகவும் அமைந்தது.

ii) ஆங்கிலேயப் படைகள் யார்க்டவுனில் வெற்றி பெற்றன

iii) வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்தினரைப் பிரெஞ்சு பிரபுக்கள் ஆதரித்தனர்

iv) ஆங்கிலேய நாடாளுமன்றம் காகிதத்தின் மீதான வரி நீங்கலாக ஏனைய பொருட்களின் மீதான டவுன்ஷெண்ட் சட்டங்களை ரத்து செய்தது

a.i) மற்றும் ii) சரியானவை

b.iii) சரி

c.iv) சரி

d.i) மற்றும் iv) சரி

விடை : i) மற்றும் iv) சரி

3. கூற்று : ஆங்கிலேயப் பொருட்களைப் பாஸ்டன் வணிகர்கள் புறக்கணித்தனர்.

காரணம் :ஆங்கிலேயநிதி அமைச்சர், அமெரிக்க காலனிகளில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் மீது புதிய வரி அறிமுகப்படுத்தினார்

  1. கூற்று சரி, காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல
  2. கூற்று தவறு, காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல
  3. கூற்று சரி, காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்
  4. கூற்றும் காரணமும் தவறானவை

விடை : கூற்று சரி, காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்

4. கூற்று : கட்டாய இராணுவச் சேவைக்கு எதிராக வெண்டி என்னுமிடத்தில் விவசாயிகள் ஒரு பெரும்புரட்சி செய்தனர்.

காரணம் : அரசரின் ஆதரவாளர்கள் விவசாயிகள் அவருக்கெதிராகப் போரிட விரும்பவில்லை.

  1. கூற்றும் காரணமும் தவறானவை
  2. கூற்றும் காரணமும் சரியானவை
  3. கூற்று சரி, காரணம் தவறு
  4. கூற்று தவறு, காரணம் சரி

விடை : ) கூற்று சரி, காரணம் தவறு

IV) பொருத்துக.

1. ஜான் வின்திராப்

பிரான்சின் நிதி அமைச்சர்

2. டர்காட்

ஜூலை 4

3. சட்டத்தின் சாரம்

இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ்

4. மேரி அண்டாய்னெட்

மாசாசூசட்ஸ் குடியேற்றம்

5. ஏழாண்டுப் போர்

பதினாறாம் லூயி

6. அமெரிக்கச் சுதந்திர தினம்

மான்டெஸ்கியூ

விடை : 1 , 2 , 3 , 4 , 5 , 6

 

V கீழ்க்காணும் வினாக்களுக்குச் சுருக்கமான விடையளி

1. பியூரிட்டானியர் என்போர் யார்? அவர்கள் இங்கிலாந்தை விட்டு ஏன் வெளியேறினர்?

  • இங்கிலாந்து திருச்சபையைச் சீர்திருத்த வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டவர்கள் பியூட்டானியர் என அறியப்பபட்டனர்.க்ஷ
  • இவர்கள் மேற்கொண்ட முயற்சிகளை முதலாம் ஜேம்ஸ், முதலாம் சார்லஸ் ஆகிய ஸ்டூவர்ட் வம்ச அரசர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை.
  • இவ்வரசர்கள் மேற்கொண்ட அடக்குமுறை நடவடிக்கைகளால் பெருவாரியான பியூரிட்டானியர் இங்கிலாந்திலிருந்து புலம் பெயர்ந்து வேறு பகுதிகளில் குடியேறினர்.

2. குவேக்கர் பற்றி நீவிர் அறிவதென்ன?

  • குவேக்கர்கள் இங்கிலாந்தில் ஜார்ஜ் பாக்ஸ் என்பவரால் நிறுவப்பட்ட நண்பர்கள் குழாம் என்னும் கிறித்துவ மதக் குழுவின் உறுப்பினர் ஆவர்.
  • புனித ஆவிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த இவர்கள் சடங்குச் சம்பிரதாயங்களையும், சமயக் குருமார் அமைப்பையும் எதிர்த்தனர்.
  • இவர்கள் போருக்கு எதிராகவும் அமைதிக்கு ஆதரவாகவும் மேற்கொண்ட பணிகளுக்காக நற்பெயர் பெற்றவர்களாவர்.

3. ‘பாஸ்டன் தேநீர் விருந்தின்’ முக்கியத்துவத்தைக் குறிப்பிடுக

  • இங்கிலாந்து நிதியமைச்சர் சார்லஸ் டவுன்ஷெண்ட் 1767இல் இறக்குமதிப் பண்டங்களின் மீதான புதிய வரிகளை அறிமுகம் செய்தார்.
  • இச்சட்டங்கள் குடியேற்றங்கள் இறக்குமதி செய்யும் கண்ணாடி, காகிதம், வர்ணப்பூச்சு (paint), தேயிலை, ஈயம் ஆகியவற்றின் மீது வரி விதித்தன.
  • இதனால் கோபமுற்ற மக்களில் சிலர் 1773 டிசம்பரில் அமெரிக்கப் பூர்வ குடிமக்களைப் போல் மாறுவேடம் பூண்டு சரக்குக் கப்பல்களின் மேலேறி அதிலிருந்து தேயிலையைக் கடலில் வீசினர். இந்நிகழ்வு பாஸ்டன் தேநீர் விருந்து (Boston Tea Party) என வர்ணிக்கப்பட்டது

4. செப்டம்பர் படுகொலை பற்றி ஒரு குறிப்பு வரைக

  • அரசரின் ஆணைப்படி சுவிட்சர்லாந்து நாட்டு காவலர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலர் கொல்லப்பட்டதால் ஆத்திரம் கொண்ட பொதுமக்கள் அரச ஆதரவாளர்களை மாரட் என்பவரின் தலைமையில் வேட்டையாடினர்.
  • செப்டம்பர் மாதம் 2ஆம் நாள் தொடங்கி மூன்று நாட்களில் மாற்றுக் கருத்துடைய எதிரிகள் என்ற சந்தேகத்தின் பேரில் 1,500 நபர்கள் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைகக்கப்பட்டனர்.
  • விசாரணைக்குப் பின்னர் அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். பிரான்ஸ் நாட்டு வரலாற்றில் இது ‘செப்டம்பர் படுகொலை’ என அழைக்கப்படுகிறது.

5. பிரான்சின் மூன்று வர்க்கங்களின் அமைப்பு (Three Estates) பற்றி எழுதுக

  1. முதல் வர்க்கம்

மதகுருமார்கள் (சமயப் பணிகளுக்காகப் பணியமர்த்தப்பட்ட ஆண்களும் பெண்களும்)

  1. முதல் வர்க்கம்

பிரபுக்கள் மற்றும் வழக்கறிஞர்கள், பணம்படைத்த வர்த்தகர்கள்,

வணிகர்கள், வங்கியாளர்கள், செல்வராக இருந்த நிலவுடைமையாளர்கள் அடங்கிய பொதுமக்கள்

  1. மூன்றாவது வர்க்கம்

பொதுமக்களின் பிரதிநிதிகள்

6. பிரெஞ்சு புரட்சியில் லஃபாயட்டின் பங்கினை எழுதுக

  • லஃபாயட் பிரெஞ்சுப் புரட்சியின்போது பிரெஞ்சு தேசியப் பாதுகாவலர்கள் என்ற படைப்பிரிவுக்குத் தலைமையேற்றார்.
  • ஜெபர்சனின் உதவியோடு இவர் ‘மனிதன் மற்றும் குடிமகனின் உரிமைகள்
  • பற்றிய பிரகடனம்’ என்பதை எழுதினார்.
  • இதைத் தேசியச் சட்டமன்றம் 1789 ஆகஸ்ட் 27இல் ஏற்றது.

7. பாஸ்டில் சிறைச்சாலை தகர்ப்பிற்கான பின்னணி என்ன?

  • பிரெஞ்சு நாடாளுமன்றத்தின் மூன்றாம் வர்க்கத்தை சார்ந்த பிரதிநிதிகள் பிரபுக்களும், அரசரின் ஆணைக்கு அடிபணிய மறுத்த டென்னிஸ் மைதானத்தில் ஒன்று கூடினர்.
  • அரசருக்கு அடிபணிய மறுத்த மக்களை சுட்டுத்தள்ள அயல்நாட்டுப் படைகளைத் வருவிக்க ஈடுபட்டார்.
  • இதனால் பாஸ்டில் சிறையைத் தகர்த்து அங்கே சிறை வைக்கப்பட்டிருந்தவர்களை விடுதலை செய்தனர்.
  1. பிரெஞ்சு புரட்சியின்போது விவசாயிகள் செலுத்த வேண்டிய வரிகள் யாவை?
  2. டெய்லே வரி (நிலவரி)
  3. காபெல்லே (உப்பு வரி)
  4. பொதுப்பணிக்கு கார்வி எனப்படும் இலவச உழைப்பையும் வழங்கினர்

VI ஒவ்வொரு தலைப்பின் கீழும் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடையளி

1. டவுன்ஷெண்ட் சட்டம்

அ) இச்சட்டத்தை அறிமுகப்படுத்தியவர் யார்?

சார்லஸ் டவுன்ஷென்ட்

ஆ) எந்த ஆண்டு இச்சட்டம் கொண்டுவரப்பட்டது?

1767

இ) குடியேற்ற மக்கள் இச்சட்டத்தை ஏன் எதிர்த்தனர்?

இறக்குமதி பண்டங்களின் மீத புதிய வரிகள் விதித்தால் மக்கள் மக்கள் இச்சட்டத்தை எதிர்த்தனர்

ஈ) பாஸ்டன் வணிகர்கள் ஆங்கிலேய பொருட்களை ஏன் எதிர்த்தனர்?

தேயிலை மீது விதிக்கப்பட்டிருந்த வரிகள் விலக்கப்படாமல் இருந்ததால்

2. பிரான்ஸின் சமூக நிலை

அ) பிரான்ஸில் திருச்சபை வசூலித்த வரியின் பெயர் என்ன?

டித்

ஆ) டான்டன் என்பவர் யார்?

தேதிய பேரவையின் முக்கிய தலைவர்

இ) பதினெட்டாம் நூற்றாண்டில் பிரான்ஸின் கலைக்களஞ்சியச் சிந்தனையாளர்கள் யாவர்?

தீதிரா, ஜீன் டிஆலம்பெர்ட்

ஈ) பொதுச்சாலைகளின் கட்டுமானத்திற்கான இலவச உழைப்பை வழங்கியவர் யார்?

விவசாயிகள்

VII விரிவான விடையளிக்கவும்

1. ‘பிரதிநிதித்துவம் இல்லாமல் வரி விதிப்பு இல்லை.’ இக்கூற்று அமெரிக்க

சுதந்திரப்போருக்கு எவ்வாறு வழிவகுத்தது என்பதை விளக்குக.

  • ஏழாண்டு போரில் இங்கிலாந்து பிரான்சை தோற்கடித்து கனடாவை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது.
  • இதற்கு இங்கிலாந்து பெருமளவில் பணம் செலவு செய்ய நேர்ந்தது.
  • செலவானத் தொகையில் ஒரு பகுதியை அமெரிக்க குடியேற்ற நாடுகள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என இங்கிலாந்து அமைச்சர்கள் சிலர் கருத்து தெரிவித்தனர்.
  • இதனால் குடியேற்ற நாடுகள்னி மீது ஒன்றன்பின் ஒன்றாக பல வரிகள் விதிக்கப்பட்டன.
    • 1764 – சர்க்கரை சட்டம்
    • 1764 – செலவாணிச் சட்டம்
    • 1765 – முத்திரைத்தாள் சட்டம்
    • 1766 – பிரகடனச் சட்டம்
    • 1767 – டவுன்ஷென்ட் சட்டம்
  • இச்சட்டங்கள் மூலம் விதிக்கப்பட்ட அனைத்து வரிகளையும் அமெரிக்க குடியேற்ற நாடுகள் எதிர்த்தன.
  • தங்கள் விருப்பத்திற்கு மாறாக தங்கள் மீது வரி விதிக்கும் ஆங்கிலேய நாடாளுமன்றத்தின் உரிமைக்கு எதிராக அவர்கள் அறைகூவல் விடுத்தனர்.
  • குடியேற்ற நாடுகளின் படைகளும் ஜார்ஜ் வாஷிங்டன் தலைமையேற்றார்.
  • பிரதிநிதித்துவம் இல்லாமல் வரிவிதிப்பு இல்லை என்பது புகழ்பெற்ற முழக்கமாக இருந்தது.

2. 1789ஆம் ஆண்டுப் புரட்சிக்குப் பிரெஞ்சுத் தத்துவஞானிகளின் பங்களிப்பினை விளக்கவும்.

வால்டேர்

  • வால்டேர் எழுத்தாற்றல் கொண்டவரும் செயல்பாட்டளருமாவார்
  • தனது எழுத்துக்களில் திருச்சபையை கடுமையாக விமர்சித்தார்
  • கான்டீட் வால்டேரின் மிகவும் புகழ்பெற்ற நூலாகும்.
  • பகுத்தறிவு மற்றும் அறிவியல் பற்றி எழுதியவர் வால்டேர். வால்டேர்மான் டெஸ்கியூ, ரூசோ ஆகியோர் அன்று பிரான்ஸிஸ் நிலவிய நிலைமைகளை விமர்சித்தனர்.

ரூசோ

ரூசோ தன்னுடைய சமூக ஒப்பந்தம் என்னும் நூலில் பதிவு செய்துள்ள புகழ் பெற்ற கூற்று மனிதன் சுதந்திரமாகப் பிறக்கிறான் ஆனால் எங்கும் சங்கிலிகளால் பிணைக்கபட்டுள்ளான் என்பதாகும்.

ரூமான்டெஸ்கியூ

  • “பாரசீக மடல்கள்” “சட்டத்தின் சாரம்” என்னும் நூல்கனை எழுதிய இவர் சுதந்திரத்திற்கு ஆதரவாக வாதாடினார்.
  • அவர் அதிகாரப் பிரவினை எனும் கோட்பாட்டை முன்வைத்தார்.

கலைக்களஞ்சியம்

  • பாரிசில் வெயிளிடப்பட்ட கலைக்களஞ்சியம் தீதரா, ஜீன்-டி ஆலம்பெரட் ஆகிய சிந்தனையாளர்களால் வடிவமைக்கபட்டிருந்தது.
  • இத்தத்துவவாதிகளும் சிந்தனையாளர்களும் மத சகிப்பின்மையைச் சாடினார்.
  • ஒரு சிலரே அனுபவிக்கும் அரசியல் சமூகச் சலுகைகளை எதிர்த்தனர்.

Leave a Reply