9th Social Science History Guide Lesson 4
9th Social Science – History Guide Lesson 4 அறிவு மலர்ச்சியும், சமூக-அரசியல் மாற்றங்களும்
9th Standard Social Science History Lesson 4 அறிவு மலர்ச்சியும், சமூக-அரசியல் மாற்றங்களும் Book Back Answers. 9th Social Guide Unit 4 Book Back Answers English Medium. 9 all Subject Book Answers. Class 9 Social Science All Unit Book in Answers TM & EM.
- 9th Social Science ( All Units ) – English Medium – Guide – Book Back Answers
- 9th Social Science ( All Units ) – Tamil Medium – Guide – Book Back Answers
9th Social Science History Guide பாடம் 4 அறிவு மலர்ச்சியும், சமூக-அரசியல் மாற்றங்களும்
I. சரியான வி்டையைத் தேர்வு செய்க.
1. ஒரு தத்துவப் பிரிவை நிறுவிய ……………………. எளிமைக்கும் தன்னல மறப்பிற்கும் உதாரணமாக விளங்கினோர்.
- புத்தர்
- லாவோட்சே
- கன்ஃபூசியஸ்
- ஜொராஸ்டர்
விடை : புத்தர்
2. மகாவீரர்களின் போதனைகளால் ஈர்க்கப்பட்ட மகத அரசர்?
- தனநந்தர்
- சந்திரகுப்தர்
- பிம்பிசாரர்
- சிசுநாகர்
விடை : பிம்பிசாரர்
3. வடக்கில் காபூல் பள்ளதாக்கிலிருந்து தெற்கில் கோதாவரி வரை பரவியிருந்த வட இந்தியாவின் _________________ எனப்பட்ட பதினாறு மாநிலங்களின் அரசர்களின் எழுச்சி ஏற்பட்டது.
- மஹாஜனபதங்கள்
- கனசங்கங்கள்
- திராவிடம்
- தட்சிணபதா
விடை : மஹாஜனபதங்கள்
4. மும்மணிகள் (திரி ரத்னா) என்ற மூன்று கொள்கைகளை போதித்தவர் ______________
- புத்தர்
- மகாவீரர்
- லாவோட்சே
- கன்ஃபூசியஸ்
விடை : மகாவீரர்
5. மெளரிய ஆட்சி அமைப்பு மற்றும் சமூகம் குறித்த செய்திகளைத் தன் குறிப்புகளால் அளித்தவர்
- மார்க்கோ போலோ
- ஃபாஹியான்
- மெகஸ்தனிஸ்
- செல்யூகஸ்
விடை : மெகஸ்தனிஸ்
6. i) மகத அரசர்களின் கீழ் இருந்த மகாமாத்ரேயர்கள் அமைச்சர்களுக்கு செயலாளர்களாகச் செயல்பட்டார்கள்.
ii) மெகஸ்தனிஸ் எழுதிய “இண்டிகா” என்னும் வரலாற்றுக் குறிப்பு மெளரிய ஆட்சி அமைப்பு மற்றும் சமூகம் குறித்த ஆவணமாக விளங்குகிறது.
iii) ஒரு பேரரசைக் கட்டமைக்க நந்தர் செய்த முயற்சியமை மொரிய அரசை உருவாக்கிய அசோகர் தடுத்து நிறுத்தினார்.
iv) மரபுகளின் படி, சந்திரகுப்தர் அவரது வாழ்வின் இறுதியில் புத்த சமயத்தின் தீவிரமான ஆதரவாளராக இருந்தார்.
a.(i) சரி
b.(ii) சரி
c.(i) மற்றும் (ii) சரி
d(iii) மற்றும் (iv) சரி
விடை : (ii) சரி
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
- வெவ்வேறு காலகட்டங்களைச் பிரார்த்தனைகளும் மரபுவழிக் கதைகளும் அடங்கிய புனித இலக்கியத் தொகுப்பு ________________________
விடை : ஜென்ட் அவெஸ்தா
- கங்கைச் சமவெளியில் ______________ வேளாண்மைக்கு மாடுகளின் தேவை அவசியமானது. விடை : இரும்பு – கலப்பை
- _______________________ தீர்த்தங்கரர்களின் நீண்ட மரபில் வந்தவர் என்றும் 24-வது மற்றும் கடைசி தீர்த்தங்கரர் என்றும் நம்புகிறார்கள். விடை : மகாவீரர்
- புத்தருக்கு ஞானோதயம் ஏற்பட்ட இடத்தில் கட்டப்பட்டுள்ள மஹாபோதி இன்றும் ______________ இல் உள்ளது. விடை : புத்தகயா
- மௌரியப் பேரரசைப் பற்றியும் குறிப்பாக அசோகரின் தர்மம் சார்ந்த ஆட்சியைப் பற்றியும் அறிந்து கொள்ள ______________________ பாறைக் குறிப்புகள் பெரிதும் உதவுகின்றன விடை : அசாேகரின்
III. சரியான கூற்றைத் தேர்வு செய்க.
1. அ) வெண்கலக் கருவிகளின் வரவால் கங்கை ஆற்றங்கரையில் இருந்த அடர்த்தியான காடுகளை அகற்றுவது எளிதானது.
ஆ) அசிவிகம் மேற்கு இந்தியாவில் சிறு அளவில் பரவியிருந்தது.
இ) குறிப்பிட்ட இனக்குழுக்கள் ஆதிக்கம் செலத்திய நிலத்தொகுதிகள் மெளரியர்களுக்கு முற்பட்ட அரசர்கள் எனப்பட்டன.
ஈ) இலக்கியங்களில் குறிப்பிடப்படும் அரசுகளில் காசி, கோசலம், மகதம் ஆகியவை வலிமை படைத்தவையாக இருந்தன.
சரியான கூற்று : ஈ) இலக்கியங்களில் குறிப்பிடப்படும் அரசுகளில் காசி, கோசலம், மகதம் ஆகியவை வலிமை படைத்தவையாக இருந்தன.
2. அ) மகதத்தின் முதல் முக்கிய மான அரசன் அஜாதசத்ரு
ஆ) நிர்வாகத்துக்கான ஒரு வரிவான கட்டமைப்பை உருவாக்குவதில் பிம்பிசாரர் வெற்றிகரமாகச் செயல்பட்டார்
இ) வட இந்தியாவில் ஆட்சி செய்த சத்ரியர் அல்லாத அரச வம்சங்களில் முதலாமவர்கள் மெளரியர்களாகும்.
ஈ) ஒரு பேரரசுக்கான கட்டமைப்பை உருவாக்க நந்தர் மேற்கொண்ட முயற்சியை அசோகர் தடுத்து நிறுத்தினார்.
சரியான கூற்று : ஆ) நிர்வாகத்துக்கான ஒரு வரிவான கட்டமைப்பை உருவாக்குவதில் பிம்பிசாரர் வெற்றிகரமாகச் செயல்பட்டார்.
IV. சரியான கூற்றைத் தேர்வு செய்க.
1.எண் வழிப்பாதை |
மிக உயரமான சமணச்சிலை |
2. பாகுபலி |
அரசியல் அறநெறிகளில் சட்டத்தொகுப்பு |
3. வசந்த மற்றும் இலையுதிர் கால வரலாற்றுப் பதிவேடு |
சட்டங்குளும் புராணக்கதைகளும் அடங்கிய புனித இலக்கியம் |
4. ஜெண்ட் அவெஸ்தா |
முதல் தீர்த்தங்கரர் |
5. ரிஷபா |
தூய மனநிலையை அடைவதற்கான பாதை |
விடை : 1 – உ, 2 – அ, 3 – ஆ, 4 – இ, 5 – ஈ |
V. சுருக்கமான விடை தருக.
1. இரும்பை உருக்கும் முறை கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வு உற்பத்தி மற்றும் போர் முறையை மாற்றியமைத்து – இதை நிறுவுக
- இரும்பை அதன் தாதுவிலிருந்து பிரித்தெடுக்கும் முறை கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வு, உற்பத்தி மற்றும் போர் முறைகளில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தது.
- செம்பும் அதன் கலப்பு உலோகமான வெண்கலமும் பயன்படுத்தப்பட்டு வந்தன.
- செம்பும், வெண்கலத்தால் ஆன ஆயுதங்களில் கூர்முனை விரைவில் மழுங்கப் போகும் தன்மையுடையதால் அவற்றை திறம்பட பயன்படுத்த முடியாது.
- இரும்புத்தாது இயற்கையில் அபிரிமிதமாகக் கிடைக்கிறது. மேலும் இரும்புக் கோடரி விவசாயத்தில் சான்றாகப் பயன்பட்டது.
- இரும்புக் கோடரி காடுகளைத் திருத்தவும், இரும்புக் கலப்பை இறுகிய நிலத்தைப் பிளக்கவும் பயன்பட்டன.
2. மும்மணிகள் (திரி ரத்னா) – இச்சொல்லை விளக்கிக் கூறு.
மும்மணிகள் என்பது மூன்று கொள்கையை குறிக்கிறது. அவை
- நன்னம்பிக்கை
- நல்லறிவு
- நன்னடத்தை
3. அஜாதசத்ருவைப் பற்றிக்கூறு?
- பிம்பிசாரதை கொன்று விட்டு அவர் மகன் அஜாதசத்ரு அரியணை ஏறியதாக சொல்லப்படுகிறது.
- ஐந்து மலைகளால் சூழப்பட்ட ராஜகிருஹ கோட்டையை வலுப்படுத்தினார்.
- கங்கைக் கரையில் பாடலிபுத்திரத்தில் மற்றொரு கோட்டையை கட்டினார்.
- பின்னர் மெளரியத் தலைநகர் பாடலிபுத்திரமாக மாறியது. அஜாதசத்ரு பொ.ஆ.மு. 461-இல் இறந்தார்.
4. கலிங்கா கல்வெட்டுக் குறிப்பு கூறுவது என்ன?
- கலிங்கா கல்வெட்டில் போர் மற்றும் வெற்றிக்காக நடந்த படுகொலைகளைப் பார்த்து தாம் மனவேதனை அடைந்ததாக அசோகர் பதிவு செய்துள்ளார்.
- மற்றொரு கல்வெட்டில், தாம் இனிமேல் கலிங்கப்போரில் நடந்த படுகொலைகளில் நூற்றில் ஒரு பங்கைக் கூட பொறுத்துக் கொள்ளப் போவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
5. புத்த சமயத்தைப் பரப்ப அசோகர் மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன?
- உயிர்காக்கும் பொருட்டு விலங்குகளை பலியிடுவதை அசோகர் தடை செய்தார்.
- விலங்குகளுக்கான மருத்துவமனைகள் திறக்கபட்டன.
- அசோகர் தனது மகன் மகேந்திரனையும், மகள் சங்கமித்திரையையும் தம்மத் குறித்த செய்திகளை பரப்புவதற்காக இலங்கைக்கு அனுப்பினார்
VI. தலைப்பு வினாக்கள்
ஒவ்வொரு தலைப்பின் கீழேயும் உள்ள அனைத்து வினாக்களுக்கும் விடையளி
1.ஜொராஸ்ட்ரியனிசம்
அ) இதைத் தோற்றுவித்தவர் யார்?
ஜொராஸ்டர்
ஆ) அவர் “ஒளியின் கடவுள்” என யாரைப் பிரகடனம் செய்தார்?
ஜொராஸ்டர் ஒளியின் கடவுள்” அஹுர மஸ்தா என்ற கடவுளை பிரகடனம் செய்தார்
இ) ஜொராஸ்ட்ரியர் எதனைப் போதித்தார்?
ஒரு மதம் அல்லது அரசு அல்லது சமூகத்தின் முதன்மையான நோக்கம் ஒழுக்கத்தை வளர்ப்பது தான் என்று போதித்தார்
ஈ) வழிபாட்டின் உயர்ந்த வடிவம் எது?
வழிபாட்டின் உயர்ந்த வடிவம் தீயை வணங்குவது
2. கெளதம புத்தர்
அ) புத்தரின் இயற்பெயர் என்ன?
புத்தரின் இயற்பெயர் சித்தார்த்தர்
ஆ) புத்தர் பிறந்த ஊர் என்ன?
நேபாளத்தின் கபிலவஸ்து புத்தர் பிறந்த ஊர்
இ) அவருக்கு எங்கே ஞானோதயம் ஏற்பட்டது?
புத்தருக்கு பீஹாரில் உள்ள புத்தகயாவில் ஞானோதயம் ஏற்பட்டது
ஈ) புத்தர் முதல் போதனையை எங்கு நிகழ்த்தினார்?
புத்தர் முதல் போதனையை சாரநாத்தில் நிகழ்த்தினார்
VII. விரிவான விடையளிக்கவும்
- கன்பூசியஸின் ஐந்து முக்கியமான கோட்பாடுகளை விளக்கிக் கூறு?
கன்பூசியஸின் ஐந்து முக்கியமான கோட்பாடுகள்
- மனிதத்தன்மை
- நேர்மை
- நன்னடத்தை
- மெய்யறிவு
- நம்பகத்தன்மை
மனிதத்தன்மை
மெய்யறவு குடும்பத்திலிருந்தான் வளரும் என்றார்
நேர்மை
ஓர் ஒழுங்கான குடும்பத்தின் கட்டுப்பாடு மிக்க தனிநபர் தான் சமுகத்தின் அடித்தளம் என்றார்.
நன்னடத்தை
மனிதர் என்பவர் வெறும் அறிவொளியாகவோ, அறிஞராகவோ மட்டும் இல்லாமல் முன்மாதிரியான நடத்தை கொண்டவராகவும் இருக்க வேண்டும்.
மெய்யறிவு
உத்தரவு தவறென்றால், ஒரு மகன் தனது தந்தையை எதிர்க்க வேண்டும். ஓர் அமைச்சர் அரசரை எதிர்க்க வேண்டும் என்று தெளிவாக முன்மொழிகிறார்.
நம்பகத்தன்மை
ஒரு அரசிற்கு மூன்று விசயங்கள் அவசியமாவை. நாட்டில் போதுமான உணவு, போதுமான இராணுவத் தளவாடங்கள், மக்களுக்குத் தம் ஆட்சியாளர் மீது நம்பிக்கை ஆகிய இருக்க வேண்டும்.
2. சமண, புத்த சமயக் கொள்கைகளுக்கு இடையேயான ஒற்றுமைகளையும் வேறுபாடுகளையும் எழுதுக?
- சமண, புத்த சமயக் கொள்கைகளுக்கு இடையேயான ஒற்றுமைகள்
- சமணம், புத்தம் இரண்டும் பொ.ஆ.ம 6-ம் நூற்றாண்டில் தோன்றியது.
- யாகம், சடங்குகளுக்காக விலங்குகளை பலியிடுவதை எதிர்த்தன.
- இவை இரண்டும் துறவு, சொத்துக்களை துறந்து வாழும் முறை போன்றவைகளை ஆதரித்தது.
- மகாவீரரும், புத்தரும் தூய வாழ்க்கை வாழ்ந்தார்கள்,
- எளிமைக்கும், தன்னல மறுப்பிற்கும் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தார்கள்.
சமண, புத்த சமயக் கொள்கைகளுக்கு இடையேயான வேறுபாடுகள்
- மகாவீரரின் போதனைகள் மும்மணிகள் (திரிரத்னா) எனப்பட்டது. புத்தரின் போதனைகள் எண்வழிப்பாதை எனப்பட்டது.
- சமணம் திகம்பரர் என்றும் சுவேதாம்பரர் என்றும்இரண்டாகப் பிரிந்தது. புத்தம் ஹீனயானம், மஹாயானம் என இரண்டாகப் பிரிந்த்து.
- சமணத்தை தனந்தர், சந்திரிகுப்தர் மெளரியர், காரவேலன் போன்ற அரசர்கள் ஆதரித்தனர். பெளத்தம் மத்திய ஆசியா, இலங்கை, திபெத், தென்கிழக்கு ஆசியா, சீனா, மங்கோலியா, கொரியா, ஜப்பான், வியட்நாம் நாடுகளுக்கும் பரவியது.