9th Social Science Economics Guide Lesson 5
9th Std Social Science – Economics Guide Lesson 5 இடம்பெயர்தல்
9th Standard Social Science Economics Lesson 5 இடம்பெயர்தல் Book Back Answers. 9th Social Guide Economics Unit 5 இடம்பெயர்தல் Book Back Answers English Medium. 9 all Subject Book Answers. Class 9 Social Science All Unit Book in Answers TM & EM.
- 9th Social Science ( All Units ) – English Medium – Guide – Book Back Answers
- 9th Social Science ( All Units ) – Tamil Medium – Guide – Book Back Answers
9th Social Science Economics Guide Lesson 5 இடம்பெயர்தல்
I சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும் .
1. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்தியாவின் மக்கள் தொகை
- 121 கோடி
- 221 கோடி
- 102 கோடி
- 100 கோடி
விடை : 121 கோடி
2. வெளிகுடியேற்றப் பதிவில் முன்னிலை வகிக்கும் மாவட்டம்
- இராமநாதபுரம்
- கோயம்புத்தூர்
- சென்னை
- வேலூர்
விடை : சென்னை
3. 2015 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிலிருந்து இ ட ம்பெயர்ந்தவர்களில் கல்வியறிவற்றோரின் சதவீதம்
- 7%
- 75%
- 23%
- 9%
விடை : 7%
4. ஏழை மக்கள் இடப்பெயர்வை மேற்கொள்வது
- வாழ்வாதாரத்திற்காக
- வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக்கொள்ள
- சேவைக்காக
- அனுபவத்தைப் பெறுவதற்காக
விடை : ஏ
II கோடிட்ட இடங்களை நிரப்புக.
- ……………………………….. மற்றும் ……………………………….. அடிப்படையில் இடப்பெயர்வு கணக்கிடப்படுகிறது. விடை : பிறப்பு, வாழிடம்
- மக்களின் நகர்வு, நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் ……………………………….. காணப்படுகின்றன. விடை : அதிகமாக
- 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கிராமப்புற இந்தியாவில் ……………………………….. சதவீத மக்கள் இடம் பெயர்ந்தவர்களாகக் கணக்கிடப்பட்டுள்ளது. விடை : 37%
- பெண்கள் அதிக அளவில் இடம் பெயர்வதற்கான காரணம் ……………………………….. விடை : திருமணம்
- இடம்பெயர்வு நகர்வு என்பது ……………………………….. உள்நகர்வுகளைக் கொண்டதாகும். விடை : பல்வேறு வகைப்பட்ட
III. பொருத்துக
1. இடம்பெயர்வு கொள்கை |
வேலை |
2. பெண் இடப்பெயராளர் |
வெளி குடியேற்றம் குறைவு |
3. சென்னை |
வெளி குடியேற்றம் அதிகம் |
4. வசதி, வாய்ப்புடைய இடப்பெயராளர் |
திருமணம் |
5. சேலம் |
இடம்பெயர்தலின் அளவைக் குறைப்பது |
6. ஆண் இடப்பெயராளர் |
வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ள |
விடை : 1 – உ, 2 – ஈ, 3 – இ, 4 – ஊ, 5 – ஆ, 6 – அ |
IV. சுருக்கமாக விடையளி
1. இடப்பெயர்தலுக்கான காரணங்களைப் பட்டியலிடுக
- வேலை
- வாழ்வாதாரம்
- கல்வி
- திருமணம்
- வாழ்க்கை தரத்தை மேம்படுத்த
- இன்னும் பிற காரணிகள்
2. இந்தியாவில் பெண்கள் இடப்பெயர்தலுக்கான முக்கியக் காரணங்கள் யாவை?
இந்தியாவிலும் தமிழகத்திலும் திருமணமும் திருமணம் சார்ந்த இடப்பெயர்வும் பெண்களின் அதிக அளவிலான இடப்பெயர்வுக்கு முக்கிய காரணமாக விளங்குகிறது.
- மிகக் குறைவான எண்ணிக்கையில் வெளி இடப்பெயர்வைக் கொண்ட தமிழ்நாட்டிலிலுள்ள நான்கு மாவட்டங்களின் பெயர்களைக் கூறுக
- கடலூர்
- திருவண்ணாமலை
- நாமக்களல்
- திண்டுக்கல்
- நீலகிரி
- கரூர்
- வேலூர்
- சேலம்
4. ஏழை மக்கள் மற்றும் வசதி வாய்ப்புடைய மக்கள் இடப்பெயர்வதற்கான காரணங்கள் யாவை?
ஏழை மக்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்கும், வசதி வாய்ப்புடைய மக்கள் தங்களில் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ளவும் இடப்பெயர்கின்றன.
5. தமிழ்நாட்டிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் செல்லும் நான்கு நாடுகள் மற்றும் சதவீதத்தினைப் பட்டியலிடுக.
- சிங்கப்பூர் – 20%
- ஐக்கிய அரபு எமிரேட்ஸ் – 18%
- சவுதி அரேபியா – 16%
- அமெரிக்க ஐக்கிய நாடுகள் – 13%
6. இடப்பெயர்ந்தோர்களால் மேற்கொள்ளப்பட்ட தொழில்களைப் பற்றி ஆய்வுகள் வெளிப்படுத்துவது யாது?
- இடம்பெயர்ந்தவர்கள் மேற்கொள்ளும் வேலையின் தன்மை குறித்த ஆய்வில் மிகவும் திறமை வாய்ந்த வேலைகளிலும், சாதரணமாக செய்யக்கூடிய வேலைகளிலும், நடுத்தரமான வேலைகளிலும் இவர்கள் ஈடுபடுகின்றன.
V. விரிவான விடையளி
1. இடப்பெயர்வு கொள்கையின் நோக்கங்கள் யாவை?
இடம்பெயர்தலின் அளவை குறைப்பதற்கான வழிகள்:
- அதிக அளவிலான இடப்பெயர்தல் கிராமப்புறத்தில் காணப்படும் வறுமை மற்றும் பாதுகாப்பற்ற தன்மையினைப் பிரதிபலிக்கிறது. எனவே கிராமப்புறங்களின் மீது தலையீட்டின் கவனம் இருத்தல் வேண்டும்.
- ஏழ்மை மற்றும் பாதுகாப்பற்ற தன்மையை குறைக்கும் விதமான கிராம வளர்ச்சித்திட்டங்கள் அதிக அளவிலான இடம்பெயர்தலை குறைப்பதற்கு உதவியாக அமையும்.
இடம்பெயர்ந்து நகர்தலைத் திசைதிருப்புதல்:
- பெருநகரங்கள் நோக்க குவியும் இடம் பெயர்தலைத் திசைமாற்றி அமைத்திடும் கொள்கைகள் விரும்பத்தக்க கொள்கை முடிவுகள் ஆகும்.
- நிலப்பரப்புச் சார்ந்த குடி பெயர்தலால் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை குறைப்பதற்கு, நகர்புறங்களை பரவலாக்கும் வடிவமைப்புகள் பொருத்தமான உத்திகளாக அமைகின்றன.
2. தமிழ்நாட்டின் இடப்பெயர்வில் காணப்படும் ஆர்வமுள்ள தகவல்கள் சிலவற்றைத் தெளிவுபடுத்துக.
- 2011 கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மொத்த2 கோடி மக்களில் 3.13 கோடி மக்கள் இடம்பெயர்ந்தவர் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
- இந்திய நாட்டின் இடம்பெயர்வு 37 % இருந்த சமயத்தில், தமிழ்நாட்டின் இடம்பெயர்வு உச்சமாக 43 % திகழ்ந்தது.
- நகர்ப்புறங்களை விட மக்களின் நகர்வு கிராமப்புறங்களில் அதிகமாகக் காணப்படுகிறது
- கிராமப்புறங்களில் 37% இடம்பெயர்ந்தவர்கள் நர்புறங்களில் 27% இடம்பெயர்ந்தவர்கள் தான்.
- இடம்பெயர்வு ஆண்களை விட பெண்கள் தான் அதிக சதவீதம் பெற்றுள்ளனர்
- திருமணமும் திருமணம் சார்ந்த இடப்பெயர்வும் பெண்களின் அதிக அளவிலான இடப்பெயர்வுக்கு முக்கிய காரணமாக விளங்குகிறது. வேலையும் வேலைவாய்ப்பும் ஆண்களுக்கு இடையில் இடப்பெயர்விற்கான உந்து சக்தியாக விளங்குகிறது.
- வியாபாரம், வணிகம்,
- வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு காரணங்களுக்காகத் தமிழர்கள் பலணாடு நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
- காலனியாதிக்கத்தின் போது தொழிலாளர்கள் வேலை தேடியும், வருமானத்திற்காகவும் பிற காலனி நாடுகளை நோக்கி இடம் பெயர்ந்துள்ளனர்.
- அண்மைக்காலங்களில் தமிழகத்திலிருந்து வளைகுடா நாடுகள், ஐக்கிய அமெரிக்க நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு மிக அதிக அளவில் தொழிலாளர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
4. 2015 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிலிருந்து இடம்பெயர்ந்தவர்களின் கல்வித் தகுதியை ஆய்வு செய்க.
- 2015ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிலிருந்து குடியேறுபவர்களின் கல்வித்தகுதி குறித்த கேள்விக்கு
- கல்வியறிவு அற்றவர்கள் – 7%
- பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் – 30% –
- பன்னிரண்டாம் வகுப்பு வரை முடித்தவர்கள் – 10 %
- தொழில் பயிற்சி பெற்றவர்கள் – 15 %
- பட்டப்படிப்பு படித்தவர்கள் – 11 %
- தொழிற்கல்வி முடித்தவர்கள் – 12 %
- முதுகலை பட்டதாரிகள் – 11 %
- உள்ளனர் என்றும் இவ்வாய்வு தெளிவுபடுத்துகிறது
VI. சரியான தொடரை எழுதுக
1. சமீபகாலமாக வேலையாட்கள் தமிழ்நாட்டிலிருந்து ஆப்பிரிக்கவிற்குச் செல்கின்றனர்.
சமீபகாலமாக வேலையாட்கள் தமிழ்நாட்டிலிருந்து வளைகுடா நாடுகள், ஐக்கிய அமெரிக்க நாடுகள் மற்றும் ஆதிரேலியா ஆகிய நாடுகளுக்கு செல்கின்றனர்.
2. தமிழ்நாட்டில் இடப்பெயர்வின் பரவலானது, கிராமப்புறங்களோடு ஒப்பிடும்போது நகர்ப்புறங்களில் அதிகம்
தமிழ்நாட்டில் இடப்பெயர்வின் பரவலானது, கிராமப்புறங்களோடு ஒப்பிடும்போது நகர்ப்புறங்களில் குறைவு
3. இடம்பெயர்வின் நகர்வானது ஒரே மாதிரியான உள் நகர்வினைக் கொண்டதாகும்.
இடம்பெயர்வின் நகர்வானது பல்வேறு வகையான உள் நகர்வினைக் கொண்டதாகும்.
4. பத்து நபர்களில் இருநபர்கள் இடம்பெயர்பவர்கள் ஆவர்.
ஐந்து நபர்களில் இருநபர்கள் இடம்பெயர்பவர்கள் ஆவர்.