9th Social Science Economics Guide Lesson 4
9th Std Social Science – Economics Guide Lesson 4 தமிழக மக்களும் வேளாண்மையும்
9th Standard Social Science Economics Lesson 4 தமிழக மக்களும் வேளாண்மையும் Book Back Answers. 9th Social Guide Economics Unit 4 தமிழக மக்களும் வேளாண்மையும் Book Back Answers English Medium. 9 all Subject Book Answers. Class 9 Social Science All Unit Book in Answers TM & EM.
- 9th Social Science ( All Units ) – English Medium – Guide – Book Back Answers
- 9th Social Science ( All Units ) – Tamil Medium – Guide – Book Back Answers
9th Social Science Economics Guide Lesson 4 தமிழக மக்களும் வேளாண்மையும்
I சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும் .
1. பயிர் செய்யப்படும் பரப்பளவில் பாசன வசதி பெற்ற நிலத்தின் பரப்பளவு
- 27%
- 57%
- 28%
- 49%
விடை : 57%
2. இவற்றுள் உணவல்லாத பயிர் எது?
- கம்பு
- கேழ்வரகு
- சோளம்
- தென்னை
விடை : தென்னை
3. 2014-15ஆம் ஆண்டில் நெல் உற்பத்தித் திறன்
- 3,039 கி.கி
- 4,429 கி.கி
- 2,775 கி.கி
- 3,519 கி.கி
விடை : 4,429 கி.கி
4. தமிழகத்தின் வேளாண் உற்பத்தித்திறன் மற்றும் உணவு உற்பத்தி ஆகிய இரண்டுமே
- குறைந்துள்ளது
- எதிர்மறையாக உள்ளது
- நிலையாக உள்ளது
- அதிகரித்துள்ளது
விடை : அதிகரித்துள்ளது
5. தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை பொழியும் மாதங்கள்
- ஆகஸ்டு – அக்டோபர்
- செப்டம்பர் – நவம்பர்
- அக்டோபர் – டிசம்பர்
- நவம்பர் – ஜனவரி
விடை : அக்டோபர் – டிசம்பர்
II கோடிட்ட இடங்களை நிரப்புக.
- தமிழக மக்களில் பெரும்பான்மையினர் _______________ தொழிலையே சார்ந்திருக்கின்றனர். விடை : வேளாண்
- தமிழகத்திற்குப் பெரும் நீர் ஆதாரமாக இருப்பது _______________ பருவ மழையாகும். விடை : வட கிழக்கு
- தமிழகத்தின் மொத்தப் புவியியல் பரப்பு ____________ ஹெக்டேர்கள் ஆகும்.
விடை : 1,30,33,000
III. பொருத்துக
- உணவல்லாத பயிர்கள் – 7 9,38,000
- பருப்பு வகைகள் செய்வோர் – ஒரு ஹெக்டேருக்கும் குறைவான பரப்பில் சாகுபடி
- வடகிழக்குப் பருவமழை – அக்டோபர் – டிசம்பர்
- குறு விவசாயிகள் – உளுந்து, துவரை, பாசிப்பயிறு
- 2015 இல் விவசாயிகளின் எண்ணிக்கை – தென்னை
விடை : 1 – உ, 2 – ஈ, 3 – இ, 4 – ஆ, 5 – அ
IV குறுகிய வினாக்களுக்கு விடையளி
- உணவுப்பயிர்களுக்கு இரண்டு எடுத்துக்காட்டுகளும், உணவல்லாத பயிர்களுக்கு இரண்டு எடுத்துக்காட்டுகளும் எழுதுக.
- உணவுப்பயிர்கள் – நெல், சோளம், கம்பு, கேழ்வரகு
- உணவல்லாத பயிர்கள் – தென்னை, பனை
2. பயிர்கள் பயிரிடப்படும் பரப்பளவு மாறுவதற்கான காரணிகள் யாவை?
- மழைப்பொழிவு
- நீர் இருப்பு
- காலநிலை
- சந்தை விலை
3. நிலத்தடி நீரின் அளவையும் தன்மையையும் யாரால் கண்காணிக்கப்படுகிறது?
4. நெல் உற்பத்தித் திறனை 1965 முதல் 2015 வரை பட்டியலிடுக.
ஆண்டு |
நெல்லின் உற்பத்தித்திறன் |
1965-66 |
1,409 கிலோ |
1975-76 |
2,029 கிலோ |
10 ஆண்டுகளுக்கு பிறகு |
2,712 கிலோ |
2010–11 |
3,039 கிலோ |
2014-15 |
4,429 கிலோ |
5. பயிர்களின் விளைச்சல் எதனைச் சார்ந்து இருக்கிறது?
பயிர்களின் விளைச்சல் பயிரிடப்படும் பரப்பளவு மட்டுமின்றி பயிர்களின் உற்பத்தித் திறனையும் சார்ந்து இருக்கிறது
6. சிறு மற்றும் குறு விவசாயிகளை வேறுபடுத்துக.
சிறு விவசாயிகள் |
குறு விவசாயிகள் |
1-2 ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்வோர் |
1 ஹெக்டேருக்கும் குறைவான பரப்பில் சாகுபடி செய்வோர் |
2. இவர்கள் விவசாயம் செய்யும் பரப்பளவு 26 விழுக்காடு ஆகும் |
இவர்கள் விவசாயம் செய்யும் பரப்பளவு மொத்த சாகுபடி பரப்பளவில் 36 விழுக்காடு ஆகும் |
3. தமிழகத்தில் சிறு விவசாயிகள் 14% உள்ளனர் |
தமிழகத்தில் குறு விவசாயிகள் 14% உள்ளனர் |
V விரிவான விடையளி
1. தமிழகத்தின் நீர் ஆதாரம் பற்றி சிறு குறிப்பு வரைக.
- தமிழகத்தில் வற்றாத நதிகள் இல்லை. தமிழகம் தனது தேவைக்கான நீரை வடகிழக்கு மற்றும் தென்மேற்குப் பருவ மழைகளிலிருந்து பெறுகிறது
- தமிழகத்திற்குப் பெரும் நீர் ஆதாரமாக இருப்பது வடகிழக்குப் பருவ (அக்டோர் – டிசம்பர்) மழையாகும்.
- வடகிழக்குப் பருவமழை நீரைத் தேக்கங்களிலும், கண்மாய்கள், ஏரிகளிலும் தேக்கி வேளாண்மையை மேற்கொள்கின்றனர்.
- தமிழக வேளாண்மைக்கான நீரை வாய்க்கால்கள், ஏரிகள், குளங்கள், கிணறுகள் ஆகியவை வழங்குகின்றன.
- தமிழகத்தில் 2,239 வாய்க்கால்கள் ஏறத்தாழ 9,750 கிலோமீட்டர் தூரம் பாய்கின்றன.
- சிறு ஏரிகள் 7,985ம் பெரிய ஏரிகள் 33,142ம் உள்ளன.
- திறந்த வெளி கிணறுகள் 15 இலட்சம் உள்ளன.
- 3,54,000 ஆழ்துளைக் கிணறுகள் பயன்படுத்தப்படுகின்றன.
- இந்த ஆதாரங்களைக் கொண்டே தமிழகத்தில் வேளாண்மை மேற்கொள்ளப்படுகிறது.
2. வேளாண்மைக்கு நிலத்தடி நீரைப் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் யாவை?
- தமிழக வேளாண்மை பெரும் அளவிற்கு நிலத்தடி நீரையே நம்பி இருக்கிறது.
- நிலத்தடி நீரை வேளாண்மைக்குப் பயன்படுத்துவது பல இன்னல்களையும் உருவாக்கவல்லது.
- நிலத்தடியிலிருந்து நீரை எடுக்கும் அளவும் மழைப் பாெழிவின் பாேது நிலத்தடிக்குச் செல்லும் நீரின் அளவும் சமமாக இருந்தால் துன்பம் இல்லை.
- மாறாக எடுக்கும் அளவு கூடக்கூட நீர் மட்டம் கீழே செல்லும். ஒன்று நீர் முற்றிலும் வற்றிப் போகலாம் அல்லது பாசனத்திற்கு உதவாத நீராக மாறவும் வாய்ப்புண்டு.
3. வேளாண் நீர் ஆதாரம் பற்றி ஆய்வு செய்க.
- தமிழகத்தில் 2,239 வாய்க்கால்கள் ஏறத்தாழ 9,750 கிலோமீட்டர் தூரம் பாய்கின்றன.
- சிறு ஏரிகள் 7,985ம் பெரிய ஏரிகள் 33,142ம் உள்ளன.
- திறந்த வெளி கிணறுகள் 15 இலட்சம் உள்ளன.
- இவையல்லாது 3,54,000 ஆழ்துளைக் கிணறுகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ஆதாரங்களைக் கொண்டே தமிழகத்தில் வேளாண்மை மேற்கொள்ளப்படுகிறது.
- ஏரிகளிலிருந்து பாசன வசதி பெறும் நிலத்தின் பரப்பளவுதான் மிகவும் குறைவானது.
- ஏறத்தாழ68 லட்சம் ஹெக்டேர் பரப்பு ஏரிகளின் வாயிலாக நீர் பெறுகின்றன. வாய்க்கால்கள் 6.68 இலட்சம் ஹெக்டேர் பரப்பளவிற்கு நீர் வழங்குகின்றன.
- ஆழ்துளைக் கிணறுகள்93 இலட்சம் ஹெக்டேருக்கும் திறந்த வெளிக் கிணறுகள் 11.91 இலட்சம் ஹெக்டர் நிலத்திற்கும் பாசன வசதி வழங்குகின்றன.
4. தமிழத்தில் விளையும் பயிர்களைப் பட்டியலிடுக.
- தமிழகத்தில் பயிரிடப்பட்ட நிலத்தின் மொத்தப் பரப்பளவில் 2014 – 15 ஆம் ஆண்டில் 59இலட்சத்து 94 ஆயிரம் ஹெக்டேர்களாக இருந்தது. இதில் 76 விழுக்காடு பரப்பளவில் உணவல்லாத பயிர்கள் பயிரிடப்பட்டன.
- நெல் சாகுபடி தான் பெரிய அளவில் 30 விழுக்காடு மேற்காெள்ளப்படுகிறது.
- இதர உணவுப் பயிர்கள் 12 விழுக்காடு பரப்பிலும் பயிரிடப்படுகின்றன. சிறுதானிய சாகுபடி குறைந்த அளவிலேயே நடைபெறுகிறது.
- சோளம் 7 விழுக்காடு நிலப்பரப்பிலும் கம்பு ஒரு விழுக்காடு பரப்பிலும் கேழ்வரகு7 விழுக்காடு பரப்பிலும் இதர சிறுதானியங்கள் 6 விழுக்காடு பரப்பிலும் 2014 – 15 ஆண்டில் பயிரிடப்பட்டன.
- மழைப்பொழிவு, நீர் இருப்பு, காலநிலை, சந்தை விலை போன்ற பல காரணிகளின் விளைவாகப் பயிர்கள் பயிரடப்படும் பரப்பளவு ஆண்டுக்கு ஆண்டு மாறும்.