9th Social Science Civics Guide Lesson 5
9th Std Social Science | Civics Guide Lesson 5 உள்ளாட்சி அமைப்புகள் | Tamil Guide
9th Standard Social Science Civics Lesson 5 உள்ளாட்சி அமைப்புகள் Book Back Answers. 9th Social Guide Geography Unit 5 உள்ளாட்சி அமைப்புகள் Book Back Answers English Medium. 9 all Subject Book Answers. Class 9 Social Science All Unit Book in Answers TM & EM.
- 9th Social Science ( All Units ) – English Medium – Guide – Book Back Answers
- 9th Social Science ( All Units ) – Tamil Medium – Guide – Book Back Answers
9th Social Science Civics Guide Lesson 5 உள்ளாட்சி அமைப்புகள்
I. பயிற்சிகள்
1. 1985 ஆம் ஆண்டு திட்டக் குழுவினால் நிறுவப்பட்ட குழு எது?
- பல்வந்ராய் மேத்தா குழு
- அசோக் மேத்தா குழு
- GVK ராவ் மேத்தா குழு
- LM சிங்வி மேத்தா குழு
விடை : GVK ராவ் மேத்தா குழு
2. _______காலத்தில் இருந்த உள்ளாட்சி அமைப்புப் பற்றி உத்திரமேரூர் கல்வெட்டு தெரிவிக்கிறது.
- சோழர்
- சேரர்
- பாண்டியர்
- பல்லவர்
விடை : சோழர்
3. 73 மற்றும் 74வது அரசமைப்புத் திருத்தச் சட்டங்கள் இவ்வாண்டில் நடைமுறைக்கு வந்தன.
- 1992
- 1995
- 1997
- 1990
விடை : 1992
4. ஊராட்சிகளின் ஆய்வாளராகச் செயல்படுகின்றவர்_______ ஆவார்.
- ஆணையர்
- மாவட்ட ஆட்சியர்
- பகுதி உறுப்பினர்
- மாநகரத் தலைவர்
விடை : மாவட்ட ஆட்சியர்
II. கோடிட்ட இடத்தை நிரப்புக
- ‘உள்ளாட்சி அமைப்புகளின்’ தந்தை என அழைக்கப்படுபவர்__________.
விடை : ரிப்பன் பிரபு
- நமது விடுதலைப் போராட்டத்தின் போது மறுசீரமைப்பு என்பது__________ஆக விளங்கியது. விடை : பஞ்சாயத்து
- சோழர் காலத்தின் போது கிராம சபை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்த இரகசிய தேர்தல் முறை__________ என்றழைக்கப்பட்டது.விடை : குடவோலை முறை
- கிராமங்களில் செயல்படும் உள்ளாட்சி அமைப்பு__________ஆகும்.
விடை : கிராம ஊராட்சி
- பேரூராட்சிகளின் நிர்வாகத்தினைக் கண்காணிப்பவர்__________ஆவார்.
விடை : செயல் அலுவலர்
III. பொருத்துக
- மாவட்ட ஊராட்சி – கிராமங்கள்
- கிராம சபைகள் – மாநகரத் தலைவர்
- பகுதி குழுக்கள் – பெருந்தலைவர்
- ஊராட்சி ஒன்றியம் – மாவட்ட ஆட்சியர்
- மாநகராட்சி – நகராட்சிகள்
விடை : 1 – ஈ, 2 – அ, 3 – உ, 4 – இ, 5 – ஆ
IV. தவறுகளைக் கண்டறிந்து பிழை திருத்தி எழுதவும்
1. ஊராட்சி ஒன்றியம் பல மாவட்டங்கள் ஒன்றிணைவதால் உருவாகின்றது.
- ஊராட்சி ஒன்றியம் பல கிராமங்கள் ஒன்றிணைவதால் உருவாகின்றது.
2. ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு மாவட்ட ஊராட்சி ஒன்றியம் அமைந்துள்ளது.
- ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மாவட்ட ஊராட்சி ஒன்றியம் அமைந்துள்ளது.
3. நகராட்சி ஆணையர் ஓர் இந்திய அரசுப் பணிகள் அலுவலர் ஆவார்.
- மாநகராட்சி ஆணையர் ஓர் இந்திய அரசுப் பணிகள் அலுவலர் ஆவார்.
4. ஊராட்சிகளில், ஊராட்சித் தலைவர் மற்றும் பகுதி உறுப்பினர்கள் மக்களால் தேர்த்நெடுக்கப்படுகின்றனர்.
- ஆம் சரியான கூற்று
V. சுருக்கமான விடையளி:
1. கிராம ஊராட்சிகளால் விதிக்கப்படும் வரிகள் யாவை?
- சொத்து வரி
- தொழில் வரி
- வீட்டு வரி
- குடிநீர் இணைப்புக்கான கட்டணம்
- நில வரி
- கடைகள் மீது விதிக்கப்படும் வரிகள்
2. 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் சிறப்பம்சங்கள் யாவை?
- மூன்று அடுக்கு அமைப்பு
- கிராம சபை
- தேர்தல் ஆணையத்தினை நிறுவுதல்
- நிதி ஆணையத்தினை நிறுவுதல்
- மக்கள் தொகைக்கு ஏற்ற விகிதத்தில் பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் ஆகியோருக்கு இட ஒதுக்கீடு
- பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு
- மாவட்ட திட்டக்குழுக்களை அமைத்தல்.
3. கிராம ஊராட்சிகளின் முக்கிய பணிகள் யாவை?
- குடிநீர் வழங்குதல்
- தெருவிளக்குகளைப் பராமரித்தல்
- சாலைகளைப் பராமரித்தல்
- கிராம நூலகங்களைப் பராமரித்தல்
- சிறிய பாலங்களைப் பராமரித்தல்
- வீட்டுமனைகளுக்கு அனுமதி அளித்தல்
- வடிகால் அமைப்புக்களைப் பராமரித்தல்
- தொகுப்பு வீடுகளைக் கட்டுதல்
- தெருக்களைச் சுத்தம் செய்தல்
- இடுகாடுகளைப் பராமரித்தல்
- பொதுக்கழிப்பிட வசதிகளைப் பராமரித்தல்.
4. உள்ளாட்சி அமைப்புகளின் விருப்பப்பணிகள் யாவை?
- கிராமங்களிலுள்ள தெரு விளக்குகளைப் பராமரித்தல்
- சந்தைகளையும் திருவிழாக்களையும் நடத்துதல்
- மரங்களை நடுதல்
- விளையாட்டு மைதானங்களைப் பராமரித்தல்
- வண்டிகள் நிறுத்தப்படும் இடங்களில் உள்ள வாகனங்கள், இறைச்சி கூடங்கள் மற்றும் கால்நடைகளின் கொட்டகை ஆகியவற்றைப் பராமரித்தல்
- பொருட்காட்சிகள் நடைபெறும் இடங்களைக் கட்டுப்படுத்துதல்
5. மாவட்ட ஊராட்சி ஒன்றியத்தின் தலைவர் யார்?
பகுதி உறுப்பினர்கள மக்களால் நேரடியாகத் தேர்ந்கதடுக்கப்படுகின்றனர். இவ்வுறுப்பினர்கள் தங்களில் ஒருவரை தலைவராகத் தேர்ந்தெடுக்கின்றனர். அவரது பதவிக்காலம் 5 ஆண்டுகளாகும்.
6. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் யாவை?
- பேரூராட்சி – 10,000 அதிகமான மக்கள் வாழும் பகுதி
- நகராட்சி – ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாழும் பகுதி
- மாநகராட்சி – பல லட்சம் மக்கள் தொகை கொண்ட பெரும் நகரப் பகுதி
VI. ஒரு பத்தியில் விடையளி
1. 1992 ஆம் ஆண்டு 73 மற்றும் 74வது அரசமைப்பு திருத்தச் சட்டத்தின் சிறப்பம்சங்கள் யாவை?
- ஊராட்சி மற்றும் நகராட்சிகள் ‘உள்ளாட்சி அமைப்பு’ நிறுவனங்களாகச் செயல்படும்.
- குடியரசு அமைப்பின் அடிப்படை அலகுகள்: வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ள உரிய வயதுடையோரைக் கொண்ட கிராம சபைகள் (கிராமங்கள்) மற்றும் பகுதி குழுக்கள் (நகராட்சிகள்) ஆகியன.
- கிராமங்கள் இடையில் காணப்படும் வட்டாரம் / வட்டம் / மண்டலம் மற்றும் மாவட்ட அளவில் ஊராட்சிகள் என மூன்றடுக்கு முறையில் செயல்படுகின்றன. இரண்டு மில்லியனுக்கும் குறைவான மக்கள் தொகையை உடைய சிறு மாநிலங்களில் பஞ்சாயத்துக்கள் ரண்டடுக்கு முறையில் இயங்குகின்றன.
- நேரடித் தேர்தலின் மூலம் அனைத்து அளவிலும் இடங்கள் நிரப்பப்படுகின்றன.
- அனைத்து அளவு நிலைகளில் பஞ்சாயத்து தலைவர்களுக்கான இடங்களில் பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் ஆகியோருக்கு, மக்கள்தொகை விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிக்கப்படும்.
- பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான ஒதுக்கீட்டில் பெண்களுக்கும் மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. எல்லா அளவு நிலைகளிலும் தலைவர்கள் பதவிக்கு மூன்றில் ஒரு பங்கு இடம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
- ஒரே மாதிரியான ஐந்தாண்டு பதவிக்காலம் மற்றும் பதவிக்காலம் நிறைவடையும் முன்பாகவே தேர்தல்கள் நடத்தப்பெற்று, புதிய அமைப்புகள் உருவாக்கப்படுதல் வேண்டும். ஆட்சி கலைக்கப்பட்டால், ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்படுதல் வேண்டும்.
2. உள்ளாட்சி அமைப்புகள் எதிர்கொள்ளும் முக்கிய சிக்கல்கள் மற்றும் சவால்கள் யாவை?
- உள்ளாட்சி அமைப்புகளின் பணிகள் மற்றும் அதிகாரங்களைப் பற்றிய தெளிவான வரையறையின்மை.
- நிதி ஒதுக்கீடு மற்றும் தேவைகளின் மதீப்பீடு ஒத்துப்போவதில்லை.
- உள்ளாட்சி அமைப்புகள் எடுக்கும் முக்கிய முடிவுகளில் சாதி, வகுப்பு மற்றும் சமயம் ஆகிய மூன்றும் முக்கியப் பங்காற்றுகின்றன.
- மக்களாட்சியின் அடிப்படை நிலையிலுள்ள அலுவலர்கள் மற்றும் தேர்ந்ததெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பொறுப்பற்ற நிலை.