You are currently viewing 9th Social Science Civics Guide Lesson 2

9th Social Science Civics Guide Lesson 2

9th Social Science Civics Guide Lesson 2

9th Std Social Science | Civics Guide Lesson 2 தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அர்த்தக் குழுக்கள் | Tamil Medium

9th Standard Social Science Civics Lesson 2 தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அர்த்தக் குழுக்கள் Book Back Answers. 9th Social Guide Geography Unit 2 தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அர்த்தக் குழுக்கள் Book Back Answers English Medium. 9 all Subject Book Answers. Class 9 Social Science All Unit Book in Answers TM & EM.

9th Social Science (History) Lesson -1 Book Back Answers

9th Social Science Civics Guide Lesson 2 தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அர்த்தக் குழுக்கள்

I. சரியான வி்டையைத் தேர்வு செய்க.

1. கீழ்க்கண்ட நாட்டின் தேர்தல் முறையினை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது.

  • அமெரிக்க ஐக்கிய நாடுகள்
  • இங்கிலாந்து
  • கனடா
  • ரஷ்யா

விடை : இங்கிலாந்து

2. இந்திய தேர்தல் ஆணையம் ஒரு

  • சுதந்திரமான அமைப்பு
  • சட்டபூர்வ அமைப்பு
  • தனியார் அமைப்பு
  • பொது நிறுவனம்

விடை : சுதந்திரமான அமைப்பு

3. இந்திய தேர்தல் ஆணையம் அமைக்க வழிவகை செய்யும் அரசியலமைப்பு பிரிவு

  • ரிவு 280
  • பிரிவு 315
  • பிரிவு 314
  • பிரிவு 325

விடை : பிரிவு 314

4. இந்திய அரசியலமைப்பின் எந்த பகுதி தேர்தல் ஆணையத்தைப் பற்றி கூறுகிறது?

  • பகுதி III
  • பகுதி XV
  • பகுதி XX
  • பகுதி XXII

விடை : பகுதி XV

5. பல்வேறு அரசியல் கட்சிகளைத் தேசியக் கட்சியாகவோ அல்லது மாநிலக் கட்சியாகவோ அங்கீகரிப்பவர்/அங்கீகரிப்பது.

  • குடியரசுத் தலைவர்
  • தேர்தல் ஆணையம்
  • நாடாளுமன்றம்
  • தேர்தல் ஆணையத்தின் ஆலோசனையின் பேரில் குடியரசுத் தலைவர்
விடை : தேர்தல் ஆணையம்

6. கூற்று (A) : இந்திய அரசியலமைப்புச் சுதந்திரமாக செயல்படும் தேர்தல் ஆணையத்திற்கு வழிவகைச் செய்கிறது.

காரணம் (R) : இது நாட்டின் சுதந்திரமான நியாயமான தேர்தலை நடத்த உறுதி செய்கிறது.

  • (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது.
  • (A) மற்றும் (R) இரண்டும் சரியானது(R), (A) வை விளக்கவில்லை.
  • (A) சரியானது மற்றும் (R) தவறானது.
  • (A) தவறானது மற்றும் (R) சரியானது.

விடை : (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது.

7. நோட்டா (NOTA) முறை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு

  • 2012
  • 2013
  • 2014
  • 2015

விடை : 2014

8. அழுத்தக்குழுக்கள் எனும் சொல்லினை உருவாக்கிய நாடு

  • அமெரிக்க ஐக்கிய நாடுகள்
  • இங்கிலாந்து
  • முன்னாள் சோவியத் யூனியன்
  • இந்தியா

விடை : அமெரிக்க ஐக்கிய நாடுகள்

9. கூற்று (A) : இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலோன அழுத்தக் குழுக்கள் காணப்படுகின்றன.

காரணம் (R) : அமெரிக்க ஐக்கிய நாட்டில் இருப்பதை போல இந்தியோவில் அழுத்தக் குழுக்கள் வளர்ச்சியடையவில்லை.

  • (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது.
  • (A) மற்றும் (R) இரண்டும் சரியானது(R), (A) வை விளக்கவில்லை.
  • (A) சரியானது மற்றும் (R) தவறானது.
  • (A) தவறானது மற்றும் (R) சரியானது.

விடை : (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது.

II. காேடிட்ட இடங்களை நிரப்புக

  1. இந்திய தேர்தல் ஆணையம் _______________ உறுப்பினர்களை உள்ளடக்கியுள்ளது.

விடை : மூன்று

  1. தேசிய வாக்காளர்கள் தினம் அனுசரிக்கப்படும் நாள் _______________

விடை : ஜனவரி 25

  1. இந்தியாவில் _______________ கட்சி முறை பின்பற்றப்படுகிறது.

விடை : பல கட்சி

  1. 2017 ல் அங்கீகரிக்கப்பட்ட தேசியக் கட்சிகளின் எண்ணிக்கை _______________

விடை : 7

  1. நர்மதா பச்சோவோ அந்தோலன் என்பது ஒரு _______________

விடை : அழுத்தக்குழுக்கள்

III. பொருத்துக

  1. தேசியக் கட்சி – வணிகக் குழுக்கள்
  2. ஒரு கட்சி ஆட்சி முறை – அமெரிக்க ஐக்கிய நாடுகள்
  3. இரு கட்சி ஆட்சி முறை – சீனா
  4. அழுத்தக் குழுக்கள் – ஏழு
விடை : 1 – ஈ, 2 – இ, 3 – ஆ, 4 – அ

IV. சிறுவினாக்கள்

1. இந்தியாவிலுள்ள தேர்தல் முறைப்பற்றி விவரி

  • இந்திய தேர்தல் முறை, இங்கிலாந்தில் பின்பற்றப்படும் தேர்தல் முறையினைப் பின்பற்றி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
  • தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்துகின்றது.
  • தேர்தல் ஆணையம் தலைமை ஆணையர் மற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்களை உள்ளடக்கியது.
  • தேர்தல் ஆணையம் நாட்டின் சுதந்திரமான, நியாயமான தேர்தலை பாராளுமன்றத்திற்கம், சட்டசபைகளுக்கும் நடத்துகிறது.

2. அரசியல் கட்சி என்பதன் பொருள் விளக்குக

  • ஒர் அரசியில் கட்சி என்பது அரசாங்கத்தில் ஆதிக்கம் செலுத்துவதற்குத் தேர்தலில் போட்டியிடுவதற்கான நிகழ்ச்சி நிரல்களையும், குறிப்பிட்டக் கொள்கைகளையும் கொண்ட மக்கள் குழுவின் அமைப்பாகும்.
  • தலைவர், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் எனும் மூன்று அங்கங்களை ஒரு அரசியல் கட்சி பெற்றுள்ளது.

3. இரு கட்சி ஆட்சி முறை மற்றும் பல கட்சி ஆட்சி முறையினை வேறுபடுத்துக.

இரு கட்சி ஆட்சி முறை    

  • இரு கட்சி ஆட்சி முறையில் இரு முக்கிய கட்சிகள் மட்டும பங்கு பெறுகின்றன.  
  • எ.கா: அமெரிக்க ஐக்கிய நாடுகள், இங்கிலாந்து

பல கட்சி ஆட்சி முறை

  • பல கட்சி ஆட்சி முறையில் இரண்டிற்கும் மேற்பட்ட பல கட்சிகள் பங்கு பெறுகின்றன
  • எ.கா: இந்தியா, இலங்கை, பிரான்ஸ்

4. அழுத்தக் குழுக்கள் என்றால் என்ன?

அழுத்தக் குழுக்கள் என்ற சொல் அமெரிக்க ஐக்கிய நாட்டில் உருவாக்கப்பட்டது. பொது நலன்களைப் பாதுகாக்கவும், ஊக்குவிக்கவும், தீவிரமாக செயல்படும் குழு அழுத்தக் குழு என்று அழைக்கப்படுகிறது.

அரசின் மீது அழுத்தம் செலுத்தி அரசின் கொள்கைகளில் மாற்றம் கொண்டு வரும்படி நெருக்கடி தருவதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது.

V. பின்வரும் வினாக்களுக்கு விரிவான விடையளி

1. நேரடித் தேர்தலின் நிறைகள் மற்றும் குறைகள் விவாதி

நேரடித் தேர்தல்

தங்கள் பிரதிநிதிகளை வாக்காளர்கள் நேரடியாக தேர்ந்தெடுக்கும் முறை நேரடித் தேர்தல் எனப்படும்.

நிறைகள்

  • வாக்காளர்கள் தங்களது பிரதிநிதிகளை நேரடியாகத் தேர்ந்தெடுப்பதால், வலுவான மக்களாட்சி கொண்டதாகக் கருதப்படுகிறது.
  • அரசாங்க நடவடிக்கைகள் பற்றிய விழுப்புணர்வும், தகுதியான பிரதிநிதிகளைத் தேர்ந்நதடுக்கவும் மக்களுக்குக் கற்பிக்கிறது.
  • மேலும் மக்கள் அரசியலில் முக்கிய பங்கு வகிக்க ஊக்கமளிக்கிறது.
  • மக்களைத் தீவிரமான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடத் தூண்டுகிறது.

குறைகள்

  • நேரடித் தேர்தல் முறை அதிக செலவு கொண்டதாக உள்ளது.
  • எழுத்தறிவற்ற வாக்காளர்கள், சிலநேரங்ளின் சாதி, மதம் பிற பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும் பொய்யானப் பரப்புரைகளால் தவறாக வழி நடத்தப்படுகிறார்.
  • நேரடித் தேர்தல் நடத்துவது மிகப்பெரும் பணியோக இருப்பதால், ஒவ்வொரு வாக்கு மையங்களிலும் சுதந்திரமான, நியாயமான தேர்தல் முறையை உறுதி செய்வது என்பது ஒரு பெரும் சவாலாகும்.
  • சில அரசியல் கட்சி வேட்பாளர்கள், வாக்காளர்கள் மீது பணம், பொருள் (அ) பணிகள் மூலமான தங்களது செல்வாக்கைச் செலுத்துவது என்பது ஒரு மற்றொரு சவாலாகும்.
  • தேர்தல் பரப்புரைகளின் போது சில நேரங்களில் வன்முறைகள், பதற்றங்கள், சட்டம் – ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட்டு மக்களின் அன்றாட வாழ்க்கை முறை பாதிக்கப்படுகிறது.

2. அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் யாவை?

  • கட்சிகள் தேர்தல்களில் போட்டியிடுகின்றன. பெரும்பாலான மக்களாட்சி நாடுகளில் கட்சிகளால் நிறுத்தப்படும் வேட்பாளர்கள் இடையே தான் கடும் போட்டிகள் நிலவுகின்றன.
  • கட்சிகள் தங்களைத் தேர்ந்தெடுக்க அவர்களது கொள்கைகளையும், திட்டங்களையும் தேர்தல் தொகுதிகளில் முன்னிறுத்துகின்றனர்.
  • முறையான சட்டங்கள் நாடாளுமன்றங்களிலும், சட்டமன்றங்களிலும் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படுகின்றன.
  • அரசியில் கட்சிகள் அரசாங்கத்தினை அமைத்து, அவற்றை வழி நடத்துகின்றனர்.
  • தேர்தலில் தோல்வியடைந்த கட்சிகள் எதிர்கட்சியாகப் பங்களிப்பு செய்கின்றன. இவை அரசின் குறைகள் மற்றும் தவறான கொள்கைகளை எதிர்த்து விமர்சனம் செய்கின்றன.
  • மக்களின் கருத்திற்கு அரசியல் கட்சிகள் வடிவம் கொடுக்கின்றன. மேலும் முக்கிய நிகழ்வுகளை மக்களின் கவனத்திற்குக் கொண்டு வருகின்றன.
  • அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் இடையில் ஒரு பாலமாக அரசியில் கட்சிகளின் செயல்பாடுகள் இருக்கின்றன.

3. இந்தியாவில் அழுத்தக் குழுக்களின் செயல்பாடுகள் யாவை?

அரசியல் பங்கேற்பு

மனுக்கள், பேரணிகள் மற்றும் ஆர்பாட்டங்கள் மூலம் மக்களின் ஆதரவைத் திரட்டி தங்கள் செல்வாக்கினை விரிவுபடுத்துகின்றன.

கல்வி

பல அழுத்தக் குழுக்கள் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளுவது, இணையதளம் பராமரிப்பு, அரசு கொள்கைகள் மீது கருத்துக்கள் வெளியிடுவது மற்றும் கல்வியாளர்கள், அறிவியலாளர்கள் முக்கிய பிரபலங்களிடமிருந்து கருத்துக்களை திரட்டி வல்லுனர்களின் ஆதரவைப் பெறுவது ஆகிய செயல்பாடுகளில் ஈடுபடுகின்றன

கொள்கை உருவாக்கம்

அரசுக்கு தகவல் அளிப்பது, ஆலோசனைகள் வழங்குவது மூலம் அரசின் கொள்கை உருவாக்க பணிகளில் அழுத்தக் குழுக்கள் உதவுகின்றன.

Leave a Reply