You are currently viewing 9th Science Unit 8 Book Back Answers

9th Science Unit 8 Book Back Answers

9th Science Unit 8 Book Back Answers

9th Std Science Lesson 8 ஒலி Solution in Tamil Medium

9th Science Book Back Answers Unit 8. 9th Science Lesson.8 ஒலி Book Back Answers. 9th Standard Science Samacheer kalvi Guide Book Back Answers download PDF Tamil Medium and English Medium book in answers. 9th All Subject Guide. Class 9 Science Questions and Answers. Class 1 to 12 All Subject Guide.  

9th Science Book Back Answers

9th Std Science Solution in Tamil Medium

9th Standard Science பாடம் 2. ஒலி

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. இசைக் கச்சேரிகளில் ஜால்ரா (cymbals) எனும் இசைக்கருவியை இசைக்கும் போது எது அதிர்வடைகிறது?

  1. நீட்டிக்கப்பட்ட கம்பி
  2. நீட்டிக்கப்பட்ட சவ்வு
  3. காற்றுத்தம்பம்
  4. உலோகத் தகடு

விடைஉலோகத் தகடு

2. காற்றில் எப்பொழுது ஒலி பயணிக்கும்?

  1. காற்றில் ஈரப்பதம் இல்லாதபோது.
  2. ஊடகத்தில் உள்ள துகள்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகரும் போது.
  3. துகள்களும் அதிர்வுகளும் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகரும் போது.
  4. அதிர்வுகள் நகரும் போது.

விடைதுகள்களும் அதிர்வுகளும் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகரும் போது.

3. ஒரு இசைக் கருவி தொடர் குறிப்புகளை உண்டாக்குகிறது. சாதாரண செவித்திறன் கொண்ட ஒருவரால் இக்குறிப்புகளை உணர முடியவில்லை. எனில், இக்குறிப்புகள் கீழ்கண்டவற்றுள் எதன் உள்ளே புகுந்து செல்ல முடியும்?

  1. மெழுகு
  2. வெற்றிடம்
  3. நீர்
  4. வெறுமையான பாத்திரம்

விடை : வெற்றிடம்

4. ஒரு அலையின் வேகம் 340 மி/வி மற்றும் அதிர்வெண் 1700 Hz எனில், அதன் அலைநீளம் (செ. மீ. அளவில்) என்ன?

  1. 34
  2. 20
  3. 15
  4. 2

விடை : 20

5. கீழ்கண்டவற்றுள் எந்த வாக்கியம் அதிர்வெண்னை சரியாக விளக்குகிறது?

  1. ஒரு விநாடியில் ஏற்படும் முழமையான அதிர்வுகளின் எண்ணிக்கை.
  2. ஒரு விநாடியில் அலை ஒன்று கடந்த தொலைவு.
  3. இரு அடுத்தடுத்த முகடுகளுக்கிடையே உள்ள தொலைவு.
  4. அலை ஒன்று ஏற்படுத்தும் பெரும அதிர்வு.

விடை : ஒரு விநாடியில் ஏற்படும் முழமையான அதிர்வுகளின் எண்ணிக்கை.

6. செவியுணர் ஓலியினால் ஏற்படும் அதிர்வுகளின் பெரும வேகம், கீழே கொடுக்கப்பட்டுள்ள எவற்றில் பயணிக்கும் போது ஏற்படும்?

  1. கடல் நீர்
  2. கண்ணாடி
  3. உலர்ந்த காற்று
  4. மனித இரத்தம்

விடை : கண்ணாடி

7. அதிர்வடையும் இசைக்கலவை ஒன்று ஏற்படுத்தும் அதிர்வுகளின் படம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் அரை அலைநீளம் எதைக் குறிக்கும்?

  1. BD
  2. AB
  3. AE
  4. DE

விடை :  BD

8. __________________ ல் ஒலி அலைகள் வேகமாக பயணிக்கும்.

  1. திரவங்களில்
  2. வாயுக்களில்
  3. திடப்பொருளில்
  4. வெற்றிடத்தில்

விடை : திடப்பொருளில்

9. ஆர்மோனியத்தில் உண்டான இசைக்குறிப்பின் சுருதியைக் குறைக்கும் போது அதன் அலை நீளம் _________

  1. முதலில் குறைந்து பின்பு அதிகரிக்கும்
  2. குறையும்
  3. மாறாது
  4. அதிகரிக்கும்

விடைஅதிகரிக்கும்

10. நான்கு வெவ்வேறு ஊடகத்தில் ஒலியின் வேகம் (மீ/வி) கொடுக்கப்பட் டுள்ளது, இவற்றுள், கடலுக்கடியில் வெகு தொலைவில் உள்ள இரு திமிங்கலங்கள் செய்யும் சமிஞ்சைகள் வேகமாக செல்வதற்கு ஏற்ற வேகம் எது?

  1. 5170
  2. 1280
  3. 340
  4. 1530

விடை :  1530

11. வெவ்வேறு சூழ்நிலையில், நெட்டலை மற்றும் குறுக்கலைகளை இவற்றில் எதைக்கொண்டு உருவாக்க முடியும்?

  1. தொலைக்காட்சி அலைப்பரப்பி
  2. இசைக்கலவை
  3. நீர்
  4. சுருள்வில்

விடைநீர்

12. P, Q, R, S என்ற நான்கு வெவ்வேறு ஊடகங்களில் ஒலியின் திசைவேகம் (கிமீ/மணி) 1800, 0, 900 மற்றும் 1200 எனில் இவற்றுள் எது திரவ ஊடகமாக இருக்க வாய்ப்பு உள்ளது?

  1. P
  2. Q
  3. R
  4. S

விடை : S

II. கோடிட்ட இடங்களை நிரப்பு.

  1. அதிர்வுரும் பொருட்கள்_________ உருவாக்குகின்றன.விடை : ஒலியை
  2. ஒலி என்பது _________ அலை. எனவே ஒலி ஊடுருவ ஊடகம் தேவை.

விடைநெட்டலை

  1. ஒரு விநாடியில் உருவாகும் அதிர்வுகளின் எண்ணிக்கை _________ எனப்படும்.

விடைஅதிர்வெண்

  1. திடப்பொருளில் ஒலியின் திசைவேகமானது, திரவத்தில் உள்ள திசைவேகத்தை விட _________ விடை : அதிகம்
  2. ஒலிச் செறிவா னது _________ன் இரு மடங்கிற்கு நேர்த்தகவில் உள்ளது.

விடை : வீச்சு

  1. ஒலியின் அதிர்வெண் 4 கிலோ ஹெர்ட்ஸ் மற்றும் அலைநீளம் 2m எனில், ஒலியின் திசைவேகம் _________ விடை : 8 Km/s
  2. உடலில் ஏற்படும் ஒலிகளை உணர பயன்படுத்தப்படும் மருத்துவக் கருவி _________ விடை : இதயத் துடிப்பளவி

IMAGE

 

  1. ஒலியை நீட்டிக்கும் தொடர் எதிரொலித்தளுக்கு_________என்று பெயர்

விடை : எதிர்முழக்கம்

  1. மீயொலியைப் பயன்படுத்தி_________ல் உள்ள குறை மற்றும் விரிசல்களை கண்டறியலாம். விடை : உலோகப்பட்டை
  2. காதுகளின் உட்பகுதியில், அழுத்த மாறபாடுகளை மின் சமிஞ்சைகளாக _________மாற்றுகிறது. விடை : காக்னியா

III. பொருத்துக

1. இசைக்கலவை

காற்றின் அடர்த்தி அதிகமாக உள்ள புள்ளி

2. ஒலி

சமநிலையில் இருந்து ஏற்படும் பெரும இடப்பெயர்ச்சி

3. அழுத்தங்கள்

20000 ஐ விட அதிகமாக அதிர்வெண் கொண்ட ஒலி

4. வீச்சு

நெட்டைலைகள்

5. மீயொலியியல்

ஒலியின் உற்பத்தி

விடை : 1 – , 2 – , 3 – , 4 – , 5 –

IV. பொருத்துக

ஒலிச்செறிவு

ஒரு வினாடியில் ஏற்படும் அதிர்வெண்களின் எண்ணிக்கை

டெசிபல்

காலம்

எழுப்பப்பட்ட ஒலியின் அளவு

மீட்டர்

வீச்சு

ஓரலகு காலத்தில் ஒலி கடந்த தொலைவு

ஹெர்ட்ஸ்

ஒலியின் திசைவேகம்

ஒரு முழு அலையை தோற்றுவிக்க தேவையான காலம்

மீட்டர் / வினாடி

அதிர்வெண்

மையப் புள்ளியிலிருந்து அடையும் பெரும இடப்பெயர்ச்சி

வினாடி

விடை : 1 – , 2 – , 3 – , 4 – , 5 –

V. சுருக்கமாக விடையளி.

1. ஆய்வகங்களில் ஒலியை உண்டாக்கும் கருவிகளைப் பற்றி கூறுக.

இசைக்கவை

  1. இரும்பு மற்றும் நீர் – இவற்றில் எதன் வழியே ஒலி வேகமாக செல்லும். காரணம் கூறு

ஒலியானது இரும்பின் வழியே வேகமாக செல்லும்

காரணம்

  • ஒலியின் வேகம் அடர்த்தியை சார்ந்தது
  • இரும்பின் அடத்தி நீரின் அடத்தியை விட அதிகம்

3. ஒலியை எழுப்ப, ஒரு பொருள் என்ன செய்ய வேண்டும்?

 

  • பொருள் இயக்கத்தில் அல்லது அதிர்வடைய சார்ந்தது
  • பொருள் அதிர்வடையும் போது ஒலி உருவாகிறது.
  • இதனால் பொருளின் அருகில் உள்ள காற்று மற்றும் பொருட்கள் அதிர்வடைந்து ஒலியை எழுப்புகிறது.

4. வெற்றிடத்தில் ஒலி பயணம் செய்யுமா?

வெற்றிடத்தில் ஒலி பரவாது. ஒலி பரவ ஊடகம் தேவை

5.எந்த இயற்பியல் பண்பளவு ஹெர்ட்ஸ் (Hz) என்ற அலகினைக் கொண்டுள்ளது அதனை வரையறு.

அதிர்வடையும் பொருள் ஒரு நொடியில் ஏற்படுத்தும் அதிர்வுகளின் எண்ணிக்கையானது அதன் அதிர்வெண் எனப்படும். இது ‘n’ என்ற எழுத்தால் குறிப்பிடப்படுகிறது. அதிர்வெண்ணின் SI அலகு ஹெர்ட்ஸ் அல்லது செ-1 ஆகும்.

 

6.சூப்பர் சோனிக் வேகம் என்றால் என்ன?

ஒரு பொருளின் வேகமானது, காற்றில் ஒலியின் வேகத்தை விட (330 மீ.வி-1) அதிகமாகும் போது அது மீயொலி வேகத்தில் செல்கிறது. துப்பாக்கி குண்டு, ஜெட் விமானம், ஆகாய விமானங்கள் போன்றவை மீயொலி வேகத்தில் செல்பவையாகும். இதுவே சூப்பர் சோனிக் வேகம் எனப்படும்.

7.அதிர்வடையும் பொருட்கள் ஏற்படுத்தும் ஒலி எவ்வாறு நமது செவிகளை வந்தடைகிறது?

காற்று ஊடகத்தில் ஒரு நெகிழ்ச்சி உண்டாகும்போது, செவிப்பறையானது, வெளிப்புறம் தள்ளப்படுகிறது. இவ்வாறாக செவிப்பறையானது அதிர்வடைகின்றது. இந்த அதிர்வானது, நடுச்செவியிலுள்ள மூன்று எலும்புகளால் (சுத்தி, பட்டை மற்றும் அங்கவடி) பலமுறை பெருக்கமடைகிறது. ஒலி அலையிலிருந்து பெறப்பட்டு பெருக்கமடைந்த அழுத்தவேறுபாடானது, நடுச்செவிலிருந்து உட் செவிக்குக் கடத்தப்படுகிறது . உட் செவியினுள் கடத்தப்பட்ட அழுத்த வேறுபாடானது, காக்ளியா (Cochlea) மூலம் மின்சைகைகளாக மாற்றப்படுகின்றது. இந்த மின் சைகைகள் காது நரம்பு வழியே மூளைக்கு செலுத்தப்படுகின்றன. மூளையானது அவற்றை ஒலியாக உணர்கின்றது.

8.நீயும் உனது நண்பரும் நிலவில் இருக்கிறீர்கள். உனது நண்பன் ஏற்படுத்தும் ஒலியை உன்னால் கேட்க முடியுமா?

  • கேட்க இயலாது
  • ஒலி பரவுவதற்கு ஊடகம் தேவை
  • நிலவின் மேற்பரப்பில் வளிமண்டலம் கிடையாது

 

Leave a Reply