9th Science Unit 5 Book Back Answers
9th Std Science Guide Lesson 5 காந்தவியல் மற்றும் மின்காந்தவியல்
9th Science Book Back Answers Unit 5. 9th Science Lesson 5 காந்தவியல் மற்றும் மின்காந்தவியல் Book Back Answers. 9th Standard Science Samacheer kalvi Guide Book Back Answers download PDF Tamil Medium and English Medium book in answers. 9th All Subject Guide. Class 9 Science Questions and Answers. Class 1 to 12 All Subject Guide.
9th Std Science Solution in Tamil Medium
9th Science பாடம் – 5 காந்தவியல் மற்றும் மின்காந்தவியல் Answers Tamil Medium
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. பின்வருனவற்றுள் எது மின் ஆற்றலை இயந்திர ஆற்றலாக மாற்றுகிறது
- மோட்டார்
- மின்கலன்
- மின்னியற்றி
- சாவி
விடை : மோட்டார்
2. ஒரு மின்னியற்றி
- மின் ஆற்றலை இயந்திர ஆற்றலாக மாற்றுகிறது
- இயந்திர ஆற்றலை வெப்ப ஆற்றலாக மாற்றுகிறது
- மின் ஆற்றலை மின்ஆற்றலாக மாற்றுகிறது
- இயந்திர ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றுகிறது.
விடை : இயந்திர ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றுகிறது.
3. மின்னாேட்டத்தை AC மின்னியற்றியின் சுருளிலிருந்து வெளிச் சுற்றுக்கு எடுத்துச் செல்லும் மின்னியற்றியின் பகுதி
- புலக் காந்தம்
- பிளவு காந்தம்
- நழுவு வளையங்கள்
- தூரிகைகள்
விடை : தூரிகைகள்
4. கீழ்கண்டவற்றில் மின்மாற்றி வேலை செய்கிறது
- AC இல் மட்டும்
- DC இல் மட்டும்
- AC மற்றும் DC
- AC யை விட DC இல் அதிகமாக
விடை : AC இல் மட்டும்
5. காந்தப் பாய அடர்த்தியின் அலகு
- வெபர்
- வெபர்/மீட்டர்
- வெபர்/மீட்டர்2
- வெபர் மீட்டர்2
விடை : வெபர்/மீட்டர்2
II. கோடிட்ட இடத்தை நிரப்புக.
- காந்தப் புலத்தூண்டலின் SI அலகு …………………………. ஆகும். விடை : டெஸ்லா
- காந்தப்புலத்திற்கு …………………………… இருக்கும் போது மின்னாேட்டக் கடத்தியில் எந்த விசையும் செயல்படாது. விடை : இணையாக
- உயர் மாறுதிசை மின்னாேட்டத்தை குறைந்த மாறுதிசை மின்னாேட்டமாக மாற்றுவதற்குப் யன்படுத்தப்படும் கருவிகள் …………………………………………. ஆகும்.
விடை : இறக்கு மின்மாற்றிகள்
- மின் மாேட்டார் ………………………………………….. மாற்றுகிறது.
விடை : மின் ஆற்றலை எந்திர ஆற்றலாக
- மின்னாேட்டத்தை உருவாக்குவதற்கான ஒரு கருவி …………………………………… ஆகும். விடை : மின்கலன் / மின்னியற்றி
II. பாெருத்துக
1. காந்தப் பொருள் |
ஓர்ஸ்டெட் |
2. காந்தமல்லாத பொருள் |
இரும்பு |
3. மின்னோட்டம் மற்றும் காந்தவியல் |
தூண்டல் |
4. மின்காந்தத் தூண்டல் |
மரம் |
5. மின்னியற்றி |
ஃபாரடே |
விடை: : 1 – ஆ, 2 – ஈ, 3 – அ, 4 – உ, 5 – இ |
III. சரியா தவறா? எனக் கூறுக
- ஒரு மின்னியற்றி இயந்திரஆற்றலை மின்ஆற்றலாக மாற்றுகிறது. – ( சரி )
- காந்தப் புலம் காேடுகள் எப்போதும் ஒன்றையாென்று விலக்குகின்றன மற்றும் ஒன்றையாென்று வெட்டாது. – ( சரி )
- ஃப்ளெமிங்கின் இடது கை விதி மின்னியற்றி விதி எனவும் அழைக்கப்படுகிறது. ( தவறு )
விடை : ஃப்ளெமிங்கின் வலக்கை விதி மின்னியற்றி விதி எனவும் அழைக்கப்படுகிறது.
- சுருளின் பரப்பைக் குறைப்பதன் மூலம் மின் மாேட்டாரின் சுழற்சி வேகத்தை அதிகரிக்கலாம். ( தவறு )
விடை : சுருளின் பரப்பைக் அதிகரிப்பதன் மூலம் மின் மாேட்டாரின் சுழற்சி வேகத்தை அதிகரிக்கலாம்.
- ஒரு மின்மாற்றி நேர்திசை மின்னாேட்டத்தை மாற்றுகிறது. ( தவறு )
விடை : ஒரு மின்மாற்றி மாறுதிசை மின்னாேட்டத்தை மாற்றுகிறது.
- ஒரு இறக்கு மின்மாற்றியில் முதன்மைச் சுற்றில் உள்ள சுருள்களின் எண்ணிக்கை துணைச் சுற்றில் உள்ள சுருள்களின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது. – ( சரி )
V. சுருக்கமாக விடையளிக்க
1. ஃப்ளெம்மிங்கின் இடக்கை விதியைக் கூறுக.
இடது கரத்தின் பெருவிரல், ஆள்காட்டி விரல், நடுவிரல் ஆகியவை மூன்றும் ஒன்றுக்காென்று செங்குத்தாக இருக்கும்போது, மின்னாேட்டத்தின் திசையை நடுவிரலும் சுட்டு விரல் காந்தப் புலத்தின் திசையும் குறித்தால் பெருவிரலானது கடத்தி இயங்கும் திசையைக் குறிக்கிறது.
2. காந்தப் பாய அடர்த்தி வரையறுக்க.
காந்த விசைக் காேடுகளுக்கு செங்குத்தாக அமைந்த ஓரலகு பரப்பை கடந்து செல்லும் காந்த விசைக் காேடுகளின் எண்ணிக்கை காந்தப் பாய அடர்த்தி என்று அழைக்கப்படும்.
3. மின் மோட்டோரின் முக்கிய பகுதிகளைப் பட்டியலிடுக.
- நிலைக்காந்தம்
- திசைமாற்றி
- கார்பன்தூரிகைகள்
- கம்பிச் சுருள்
- DC யின் வழங்கி
4. ĄC மின்னியற்றியின் படம் வரைந்து பாகங்களைக் குறிக்கவும்
5. DC யை விட AC ன் சிறப்பியல்புகளைக் கூறுக.
- AC மின்னாேட்டம் DC மின்னாேட்டத்தை விட மலிவானது.
- AC மின்னாேட்டத்தை எளிதில் DC மின்னாேட்டமாக மாற்ற முடியும்.
- ஏற்று மின்மாற்றி மற்றும் இறக்கு மின் மாற்றிகளை AC யுடன் மட்டுமே இணைக்க முடியும்.
- AC மின்சாரத்தை தாெலை தூரத்திற்குக் கடத்தும்போது மிகக் குறைந்த மின் இழப்பே ஏற்படுகிறது. எனவே மின்னாேட்டம் DC யைக் காட்டிலும் பல வழிகளில் சிறந்தது ஆகும்.
6. ஏற்று மின்மாற்றிக்கும் இறக்கு மின்மாற்றிக்கும் உள்ள வேறுபாடுகளைத் தருக.
ஏற்று மின்மாற்றி |
இறக்கு மின்மாற்றி |
1. குறைந்த மாறுதிசை மின்னழுத்தத்தை உயர் மாறுதிசை மின்னழுத்தமாக மாற்றும் கருவி |
உயர் மாறுதிசை மின்னழுத்தத்தை குறைந்த மாறுதிசை மின்னழுத்தமாக மாற்றும் கருவி |
2. முதன்மைச் சுருளில் உள் கம்பிச் சுருள்களின் எண்ணிக்கையை விட துணை சுருளில் உள்ள கம்பிச் சுருள்களின் எண்ணிக்கை அதிகம். |
முதன்மைச் சுருளில் உள் கம்பிச் சுருள்களின் எண்ணிக்கையை விட துணை சுருளில் உள்ள கம்பிச் சுருள்களின் எண்ணிக்கை குறைவு. |
7. ஒரு வானாெலிபெட்டியில் அது வீட்டின் முதன்மைச சுற்றிலிருநது மின்சாரம் ஏற்று இயங்கும் வண்ணம் ஒரு மின்மாற்றி பாெருத்தப்பட்டுள்ளது. இது ஏற்று மின்மாற்றியா அல்லது இ்றக்கு மின்மாற்றியா?
இறக்கு மின்மாற்றி
8. காப்பிடப்பட்ட கம்பிகளைக் கொண்ட A மற்றும் B இரண்டு கம்பிச்சுருள்கள் ஒன்றுக்கொன்று அருகில் வைக்கப்பட்டுள்ள கம்பிச்சுருள் A கால்வானா மீட்டருடனும் கம்பிச்சுருள் B சாவி வழியாக மின்கலனுடனும் இணைக்கப்பட்டுள்ளன.
(அ) சாவியை அழுத்தி கம்பிசசுருள் B யின் வழியாக மின்சாரம் பாயும் பாெழுது
என்ன நிகழும்?
சாவியை இணைத்தவுடன், கால்வனா மீட்டரில் ஒரு விலகல் ஏற்படுகிறது. அதுபோல், சாவியை அனைக்கும் பொழுது, மீண்டும் ஒரு விலகல் ஏற்படுகிறது.
ஆனால் இது எதிர் திசையில் நிகழ்கிறது. இதிலிருந்து மின்னாேட்டம் உற்பத்தியாவது நிரூபிக்கப்படுகிறது.
(ஆ) கம்பிசசுருள் B யில் மின்னாேட்டம் தடைபடும்பாெழுது என்ன நிகழும்?
கால்வனா மீட்டரின் முள் சிறிது நேரம் எதிர்த்திசையில் விலகல் அடைகிறது. இதற்கு A என்ற கம்பிச் சுருளில் எதிர்த் திசையில் மின்சாரம் பாய்கிறது எனப் பொருளாகும்.
9. ஃபாரடேயின் மின் காந்தத் தூண்டல் விதிகளைத் தருக.
கடத்தியுடன் இணைந்த காந்தப் பாயம் மாறும் போது, கடத்தி வழியாக ஒரு மின்னியக்கு விசையை உற்பத்தி செய்ய முடியும். இதுவே காந்த ஃபாரடேயின் மின் காந்தத் தூண்டல் விதி ஆகும்.