9th Science Guide Unit 15
9th Std Science Solution Lesson 15 கார்பனும் அவற்றின் சேர்மங்களும்Book Back Answers
9th Science Book Back Answers Unit 15. 9th Science Lesson 15 கார்பனும் அவற்றின் சேர்மங்களும் Book Back Answers. 9th Standard Science Samacheer kalvi Guide Book Back Answers download PDF Tamil Medium and English Medium book in answers. 9th All Subject Guide. Class 9 Science Questions and Answers. Class 1 to 12 All Subject Guide.
Class 9 Science Lesson 15 கார்பனும் அவற்றின் சேர்மங்களும்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. ஒரு தனிமம் வேறுபட்ட அமைப்பையும், ஒரே மூலக்கூறு வாய்ப்பாட்டையும் கொண்டிருப்பது.
- மாற்றியம்
- புறவேற்றுமை வடிவம்
- சங்கிலித் தொடராக்கம்
- படிகமாக்கல்
விடை : புறவேற்றுமை வடிவம்
2. கிராஃபைட் கார்பனிலுள்ள தனித்த எலக்ட்ரான்களின் எண்ணிக்கை
- ஒன்று
- இரண்டு
- மூன்று
- நான்கு
விடை : ஒன்று
3. ஃபுல்லரினிலுள்ள கார்பன் அணுக்களின் அமைப்புகள்.
அ. நான்முகி மற்றும் ஐங்கரம்
ஆ. ஐங்கரம் மற்றும் அறுங்கோணம்
இ. அறுங்கோணம் மற்றும் எழுகோணம்
ஈ. எழுகோணம் மற்றும் எண்முகி
விடை : ஐங்கரம் மற்றும் அறுங்கோணம்
4. கார்பன் அதிகப்படியான கரிமச் சேர்மங்களை உருவாக்கக் காரணம்
- புறவேற்றுமை வடிவம்
- மாற்றியம்
- நான்கு இணைதிறன்
- சங்கிலித் தொடராக்கம்
விடை : சங்கிலித் தொடராக்கம்
5. வைரம் ஒரு சிறந்த மின்கடத்தி அல்ல ஏனெனில்,
- அதன் கடினத் தன்மை
- அதில் கட்டுறா எலக்ட்ரான்கள் இல்லை
- அதன் சீரான வடிவம்
- அது நீரில் கரைவதில்லை
விடை : அதில் கட்டுறா எலக்ட்ரான்கள் இல்லை
6. கீழ்க்கண்டவற்றுள் இரட்டைப் பிணைப்பு இல்லாதது எது?
- CO2
- C2H4
- HCl
- O2
விடை : HCl
7. கீழ்க்கண்டவற்றுள் அதிக நச்சுத்தன்மை வாய்ந்தது எது?
- கார்பன் டைஆக்ஸைடு
- கார்பன் மோனாக்ஸைடு
- கால்சியம் கார்பனேட்
- சோடியம் பைகார்பனேட்
விடை : கார்பன் மோனாக்ஸைடு
8. ராகவ் பள்ளிக்கு மதிய உணவு கொண்டுவரும் (நெகிழி) கலனானது குறியீடு 5 உடைய ரெசினால் ஆனது. அந்த நெகிழிக் கலன் எதனால் தயாரிக்கப்பட்டிருக்கும்?
- பாலிஸ்டைரீன்
- பி.வி.சி
- பாலிபுரொப்பலீன்
- எல்.டி.பி.இ
விடை : பாலிபுரொப்பலீன்
9. பாலி கார்பனேட் (PC) மற்றும் அக்ரைலோ நைட்ரைல் பியுட்டாடைஈன் ஸ்டைரின் (AB) முலம் தயாரிக்கப்படும் நெகிழியானது எந்த குறியீடு உடைய ரெசினால் ஆனது?
- 2
- 5
- 6
- 7
விடை : 7
10. கீழ்க்கண்டவற்றுள் எந்த நெகிழி தமிழக அரசால் ஜனவரி 1, 2019 முதல் தடை செய்யப்பட்டுள்ளது?
- நெகிழித் தாள்
- நெகிழித் தேநீர் குவளை
- நெகிழித் தண்ணீர் பைகள்
- மேற்கண்ட அனைத்தும்
விடை : மேற்கண்ட அனைத்தும்
11. கிராஃபைட்டை உராய்வுக் குறைப்பானாக எந்திரங்களில் பயன்படுத்தக் காரணம் என்ன?
- அது நல்ல மின்கடத்தி
- அது வழவழப்பான படலங்களால் ஆனது மற்றும் அதிக உருகுநிலை கொண்டது.
- அதன் அதிக அடர்த்தி
- அது வலிமையானது மற்றும் மிருதுவானது
விடை : அது வழவழப்பான படலங்களால் ஆனது மற்றும் அதிக உருகுநிலை கொண்டது.
12. பென்சில் முனையில் இருப்பது எது?
- கிராஃபைட்
- வைரம்
- காரியம்
- கரி
விடை : கிராஃபைட்
13. ஓரடுக்குக் கார்பன் அணுக்களால் ஆன கிராஃபீன் எதிலிருந்து கிடைக்கிறது?
- வைரம்
- ஃபுல்லரின்
- கிராஃபைட்
- வாயு கார்பன்
விடை : கிராஃபைட்
14. நெகிழிக் குறியீடானது மூன்று தொடர் அம்புக் குறிகளால் உருவாக்கப்பட்ட _____________ டன் கூடிய எண்கள் மற்றும் எழுத்துக்களால் (நெகிழி வகையின் சுருக்கக் குறியீடு) குறிக்கப்பட்டிருக்கும்.
- சின்னம்
- மறு சுழற்சி
- சதுரம்
- முக்கோணம்
விடை : முக்கோணம்
15. நெகிழி மாசுபாட்டைத் தடுக்கும் நடைமுறைகள் _________ பாதுகாப்புச் சட்டம் 1988 ன் கீழ் வருகின்றன.
- வனத்துறை
- வனவிலங்கு
- சுற்றுச்சூழல்
- மனித உரிமைகள
விடை : சுற்றுச்சூழல்
II. கோடிட்ட இடங்களை நிரப்பு.
- _____________ என்பவர் கார்பனுக்குப் பெயரிட்டர் ஆவார்,
விடை : ஆண்டனி லவாய்சியர்
- பக்மின்ஸ்டர் ஃபுல்லரின் _____________ கார்பன் அணுக்களைக் கொண்டது.
விடை : 60
- ஒரே மூலக்கூறு வாய்ப்பாட்டையும், வேறுபட்ட மூலக்கூறுக் கட்டமைப்பையும் கொண்ட சேர்மங்கள் ________________ விடை : மாற்றியங்கள்
- பல்வேறு முறைகளில் கார்பன் உருவாவதற்குக் காரணம் அதன் _____________
விடை : சங்கிலி தொடராக்கம்
- நெகிழி ரெசின் குறியீடுகளின் எண்ணிக்கை _____________ விடை : 7
III. பொருத்துக
1. அல்கைன் |
பளபளப்பான பந்து |
2. ஆண்ட்ரே ஜெம் |
ஆக்ஸிஜனேற்றம் |
3. C – 60 |
கிராஃபீன் |
4. தெர்மாக்கோல் |
முப்பிணைப்பு |
5. எரித்தல் |
பாலிஸ்டைரின் |
விடை : 1 – ஈ, 2 – இ, 3 – அ, 4 – உ, 5 – ஆ |
IV. மிகக் சுருக்கமாக விடையளி.
1. கார்பன் எத்தனை இணைதிறன் எலக்ட்ரான்களைக் கொண்டுள்ளது?
கார்பன் நான்கு இணைதிறன் எலக்ட்ரான்களைக் கொண்டுள்ளது
2. நவீன கரிம வேதியியலின் தந்தை என அழைக்கப்படுவர் யார்?
நவீன கரிம வேதியியலின் தந்தை என அழைக்கப்படுவர் ஃபிரடெரிக் ஹோலர்
3. ஆபத்தான மூன்று ரெசின் குறியீடுகள் எவை?
- 3 – PVC
- 6 – PS
- 7 – Other
V. சுருக்கமாக விடையளி.
1. வேறுபடுத்துக : கிராஃபைட் மற்றும் வைரம்
கிராஃபைட் |
வைரம் |
1. ஒவ்வொரு கார்பனும் நான்கு சகப்பிணைப்புகளைக் கொண்டுள்ளது |
ஒவ்வொரு கார்பனும் மூன்று சகப்பிணைப்புகளைக் கொண்டுள்ளது. |
2. கடினமானது, அடர்த்தியானது, ஒளிபுகும் தன்மை உடையது. |
மிருதுவானது, தொடுவதற்கு வழவழப்பானது, ஒளி புகாத்தன்மை உடையது. |
3. நான்முகி அலகுகள் முப்பரிமாண அமைப்பில் இணைக்கப்பட்டுள்ளன. |
அறுங்கோண அலகுகள் தள அடுக்குகளில் அமைந்துள்ளன. |
2. தெவிட்டிய மற்றும் தெவிட்டாத சேர்மங்கள் என்றால் என்ன?
தெவிட்டிய சேர்மங்கள்
கார்பனின் நான்கு இணைதிறன்களும் முழுமையாக நிறைவு செய்யப்பட்ட சேர்மங்கள் தெவிட்டிய சேர்மங்கள் (நிறைவுற்ற சேர்மங்கள்) எனப்படும்
எ.கா. ஒற்றைப் பிணைப்பு சேர்மங்கள்
தெவிட்டாத சேர்மங்கள்
கார்பனின் நான்கு இணைதிறன்களும் முழுமையாக நிறைவு செய்யப்பட்டாத சேர்மங்கள் தெவிட்டாத சேர்மங்கள் (நிறைவுற்ற சேர்மங்கள்) எனப்படும்
எ.கா. இரட்டைப் பிணைப்பு சேர்மங்கள்,முப்பிணைப்பு சேர்மங்கள்
3. கார்பன் அயனிச் சேர்மங்களை உருவாக்குவதில்லை, ஏன்?
கார்பனின் நான்கு இணைதிறன் எலக்ட்ரான்களைப் பெற்றிருப்பதால் எலக்ட்ரான்களை இழந்தோ அல்லது ஏற்றோ அயனிகா மாறுவதற்கான வாய்ப்பு குறைவு. எனவே கார்பன் சகபிணைப்பு எலக்ட்ரான் பகிர்வின் மூலம் ஊருவாக்குகிறது. இதனால் கார்பன் அயனிச் சேர்மங்களை உருவாக்குவதில்லை
4. கார்பன் மோனாக்ஸைடில் கார்பனின் இணைதிறன் என்ன?
ஒரு சேர்மத்திலுள்ள தனிமங்களின் ஆக்ஸிஜனேற்ற எண்களின் கூடுதல் பூஜ்ஜியம். இங்குள்ள ஆக்ஸிஜனின் ஆக்ஸிஜனேற்ற எண் – 2.
C-ன் ஆக்ஸிஜனேற்ற எண் X என்க
X – 2
C = 0
X – 2 = 0
X = +2
கார்பன் மோனாக்ஸைடில் (CO) கார்பனின் இணைதிறன் : 2
5. ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழிகள் ஆபத்தானவை ஏன்?
பயன்படுத்திய பின் தூக்கியெறியப்பட வேண்டிய நெகிழிகள், குறுகிய காலம் மற்றும் சுற்றுச் சூழல் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. உற்பத்தி செய்யப்படும் நெகிழியில் பாதியளவிற்கு மேலானவை பயன்படுத்திய பின் தூக்கியெறியப்பட வேண்டிய பொருள்களாகவோ பயன்படுகின்றன. இவை கழிவு நீர்க் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தி நீர் நிலைகளை பாதிக்கின்றன. இவ்வகை நெகிழிகள் தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு உடல்நலக்கேட்டை உண்டு பண்ணுகின்றன.
VI. கீழ்க்கண்டவைகளுக்கு விடை தருக.
1. இது கார்பனின் கடினமான புறவேற்றுமை வடிவம்.
வைரம்
2. இரட்டைப் பிணைப்பு கொண்ட கார்பன் அணுக்களால் உருவாகும் கரிமச் சேர்மங்கள்.
அல்கீன்
3. கார்பன் ஆக்ஸிஜனுடன் வினைபுரிந்து கிடைப்பது.
கார்பன்-டை-ஆக்ஸைடு
4. இந்த மூலக்கூறில், கார்பன் நான்கு ஹைட்ரஜன் அணுக்களுடன் இணைந்துள்ளது.
மீத்தேன்
5. கார்பன் மற்ற தனிமங்களுடன் ___________ பிணைப்பால் இணைகிறது.
விடை : சகபிணைப்பால்
6. வெடி மருந்து தயாரிக்கப் பயன்படுவது.
கரி
7. _____________ ஆல் தயாரிக்கப்பட்ட நெகிழி, ரெசின் குறியீடு 6 ஐப் பெற்றுள்ளது.
விடை : பாலிஸ்டைரின்
8. ஒரு முறை பயன்பாட்டு நெகிழி.
உறிஞ்சுகுழல்
9. ஒரு முறை பயன்படும் நெகிழி _____________ பாதிப்பை ஏற்படுத்தும்.
விடை : சுற்றுச்சூழல்
10. விரிவடைந்த பாலிஸ்டைரினின் வணிகவியல் பெயர்.
தெர்மோகோல்