9th Science Guide Lesson 18 Book Back Answers
9th Std Science Solution Lesson 18 திசுக்களின் அமைப்பு
9th Science Book Back Answers Unit 18. 9th Science Lesson 18 திசுக்களின் அமைப்பு Book Back Answers. 9th Standard Science Samacheer kalvi Guide Book Back Answers download PDF Tamil Medium and English Medium book in answers. 9th All Subject Guide. Class 9 Science Questions and Answers. Class 1 to 12 All Subject Guide.
9th Science பாடம் 7. திசுக்களின் அமைப்பு
I. கீழ்கண்டவற்றை பாெருத்துக
1. ஸ்கிளிரைடுகள் |
குளோரன்கைமா |
2. பசுங்கணிகம் |
ஸ்கிளிரன்கைமா |
3. எளியதிசு |
கோளன்கைமா |
4. துணை செல் |
சைலம் |
5. டிரக்கீடுகள் |
ஃபுளோயம் |
விடை: 1 – ஆ, 2 – அ, 3 – இ, 4 – உ, 5 – ஈ |
பிரிவு I |
பிரிவு II |
பிரிவு III |
தூண் எபித்திலியம் |
உறிஞ்சுதல் |
தசையை நிலைநிறுத்தல் |
எலும்புகள் |
ஆக்சான் |
ஒழுங்குமுனைப்புகள் |
நியூரான்கள் |
உடல்கட்டமைப்பு |
சுரத்தல் |
சிற்றிடை தசை |
தளப்பொருள் |
குறு இழைப்பு |
நாக்கு |
தொண்டை |
பைப்ரோஃபிளாஸ்ட் |
எபித்திலியம் |
வரித்தசை |
உள்ளுறுப்பு திசு |
விடை : : 1 – உ – ஈ, 2 – இ – அ, 3 – ஆ – ஆ, 4 – ஈ – உ, 5 – ஊ – ஊ, 6 – அ – இ |
II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. ஒரு ஆக்குத்திசு காெண்டிருப்பது
- பகுப்படையக் கூடிய மற்றும் நிலையில் உள்ள முதிர்ச்சியுள்ள செல்கள்
- முதிர்ந்த செல்கள்
- உயிரற்ற செல்கள்
- ஸ்கிளிரன்கைமா செல்கள்
விடை : பகுப்படையக் கூடிய மற்றும் நிலையில் உள்ள முதிர்ச்சியுள்ள செல்கள்
2. உயிருள்ள மெல்லிய சுவருடைய பலகாேணவடிவ செல்கள் காெண்டுள்ள திசு
- பாரன்கைமா
- காேலன்கைமா
- ஸ்கிளிரன்கைமா
- மேலே கூறிய எதுவும் இல்லை
விடை : மேலே கூறிய எதுவும் இல்லை
3. நார் காெண்டுள்ளது
- பாரன்கைமா
- ஸ்கிளிரன்கைமா
- காேலன்கைமா
- ஏதும் இல்லை
விடை : ஸ்கிளிரன்கைமா
4. குளாேரன்கைமா உருவாக்கம் _____________ ல் அறியப்பட்டது.
- குளோரோலோவின் சைட்டோபிளாசத்தில்
- பச்சை பூஞ்சாணம் அஸ்பர்ஜில்லாவின் மைசிலியத்தில்
- மாஸ்வுடைய ஸ்போர் கேம்சூலில்
- பைனாஸின் மகரந்த குழாயில்
விடை : குளோரோலோவின் சைட்டோபிளாசத்தில்
5. துணைசெல்கள் ____________ வுன் மிக நெருக்கமாக இணைந்துள்ளன.
- சல்லடைக் கூறுகள்
- பாத்திர கூறுகள்
- ட்ரைக்காேம்கள்
- துணை செல்கள்
விடை : சல்லடைக் கூறுகள்
6. கீழ்க்கண்ட எது ஒரு கூட்டுத் திசுவாகும்.
- பாரன்கைமா
- காேலன்கைமா
- சைலம்
- ஸ்கிளிரன்கைமா
விடை : சைலம்
7. ஏரேன்கைமா எதில் கண்டறியப்பட்டது.
- தாெற்று தாவரம்
- நீர்வாழ் தாவரம்
- சதுப்புநில தாவரம்
- வறண்ட தாவரம்
விடை : நீர்வாழ் தாவரம்
8. கீழ் உள்ளவற்றில் எது ஒன்று சாத்தியம்? ஒரு மனிதனின் நீண்ட கை எலும்புகள் இரண்டு விதத்தில் இடம்மாறி அமைய பெற்றது.
- தசைநார்
- எலும்புக்கூடு தசை உருவாதல்
- தசை நார் கிழிதல்
- சிற்றிடை திசு விரிசல் அடைவது
விடை : தசை நார் கிழிதல்
9. வரியில்லா தசை எதில் கண்டறியப்பட்டது
- இரத்த நாளங்கள்
- இரைப்பை பாதை
- சிறுநீர்ப்பை
- இவை அனைத்திற்கும்
விடை : இவை அனைத்திற்கும்
10. கீழ்கண்டவற்றில் எது நியூரானில் இல்லை
- சார்க்கோலெம்மா
- ஒருங்கு முனைப்புகளில்
- நியூராேலம்மா
- ஆக்ஸான்
விடை : சார்க்கோலெம்மா
11. நீண்ட கிளைகளற்ற பல உட்கரு செல்கள்
- வரித்தசை செல்கள்
- மென் தசைகள்
- இதய தசைகள்
- இவற்றில் ஏதுமில்லை
விடை : வரித்தசை செல்கள்
12. இணைப்புத்திசுவின் வெள்ளை நார்கள் காெண்டுள்ளது
- இலாஸ்டின்
- ரெடிகுலார் நார்கள்
- கொலாஜன்
- மையாேசின்
விடை : கொலாஜன்
13. தூரிகை எல்லை எபிதிலியம் எதில் கண்டறியப்பட்டுள்ளது
- இரைப்பை
- சிறுகுடல்
- அண்டக் குழல்
- தொண்டை
விடை : தொண்டை
14. மிருதுவான தசை காணப்படுவது
- கர்ப்பப்பை
- தமணி
- சிறை
- இவை அனைத்திலும்
விடை : இவை அனைத்திலும்
15. எந்த தசை தன்னிச்சையற்றதாக செயல்படும்
- வரித் தசைகள் 2. மென் தசைகள்
- இதய தசைகள் 4. எலும்புச் சட்டக தசைகள்
- 1 மற்றும் 2
- 3 மற்றும் 4
- 2 மற்றும் 3
- 1 மற்றும் 4
விடை : 2 மற்றும் 3
16. நரம்பு செல்கள் பெற்றிறாதது
- ஆக்சான்
- நரம்பு நுனி
- தசை நாண்கள்
- டென்ட்ரைட்
விடை : தசை நாண்கள்
17. தசை நாண்களை இணைப்பது
- குருத்தெலும்பை தசைகளுடன்
- எலும்பை தசைகளுடன்
- தசை நார்கள் தசைகளுடன்
- எலும்பை எலும்புகளுடன்
விடை : எலும்பை தசைகளுடன்
18. சில வகை செல்களில் இரட்டைமைய எண்ணிக்கை குராேமாேசாேம்கள் அரை எண்ணிக்கையாக குறைகிறது. இவ்வகையான செல் பகுப்பு எதில் நடைபெறுகிறது.
- விந்தகத்தில் மட்டும்
- கருப்பையில் மட்டும்
- கருப்பை மற்றும் விந்தகம் இரண்டிலும்
- அனைத்து உடல் செல்களில்
விடை : கருப்பை மற்றும் விந்தகம் இரண்டிலும்
9th Science Guide Lesson 18 Book Back Answers
III. கோடிட்ட இடத்தை நிரப்புக:
- …………………………………… திசுக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வகை செல்களால் உருவானது மற்றும் இவைகள் ஒற்றிணைந்து ஒரு அலகாக வேலை செய்கிறது.
விடை : கூட்டுத்திசு
- உள்ளுறுப்புகளுக்கு …………………………………… திசுக்கள் உறுதியை அளிக்கின்றன.
விடை : கோலன்கைமா
- பாரன்கைமா, குளாேராேன்கைமா, ஸ்கிளிரன்கைமா ஆகியவை …………………………………… வகையான திசு விடை : எளிய வகை
- …………………………………… மற்றும் …………………………………… ஆகியவை கூட்டுத்திசுக்களாகும்.
விடை : சைலம் மற்றும் புளோயம்
- குறுயிலை காெண்ட எபிதீலிய செல்கள் நமது உடலின் ……………………………………. , ……………………………………. , ……………………………………. பகுதியில் உள்ளன.
விடை : சுவாசக்குழாய், சிறுநீரகக்குழல், அண்டக்குழல்
- சிறுகுடலின் புறணி ……………………………………………. ஆல் ஆனது.
விடை : தூண் எபிதீலியம்
- இருவகையான எலும்பு இணைப்புத் திசுக்கள் ……………………… மற்றும் …………………………………….. ஆகும். விடை : எலும்பு மற்றும் குருத்தெலும்பு
- மனிதனில் 46 குராேமாேசாேம்கள் உள்ளன. அவர்களின் விந்து மற்றும் முட்டைகள் ஒவ்வொன்றும் ……………………….. குராேமாேசாேம்கள் பெற்றிருக்கும். விடை : 23
- மியாஸிஸ் நிகழ்ச்சியில் குராேமாேசாேம்கள் ஜோடியிடும் போது, …………………………. குராேமாேசாேம்கள் ஒன்றின் பக்கம் ஒன்றாக அமைந்திருக்கும். விடை : ஒத்திசைவான
IV. சரியா தவறா எனக் கூறுக. தவறு எனில் சரியா கூற்றை எழுதுக.
- எபிதீலிய திசு விலங்கு உடலின் பாதுகாப்பு திசுவாகும். ( தவறு )
விடை: கூட்டு எபிதீலியம் விலங்கு உடலின் பாதுகாப்பு திசுவாகும்.
- எபிதீலிய அடுக்கு உடல் மற்றும் சுற்றுப்புற சூழலுக்கு இடையே பொருள் பரிமாற்றம் நடைபெறுதை ஒழுங்குபடுத்துவதில்லை. ( தவறு )
விடை : எபிதீலியம் உறிஞ்சுதலையும், கழிவுகளை அகற்றுவதையும் ஒழுங்குப்படுத்துகிறது.
- எலும்பு மற்றும் குருத்தெலும்பு ஆகியவை சிற்றிதை இணைப்பு திசுவின் இரு வகையாகும். ( தவறு )
விடை : எலும்பு மற்றும் குருத்தெலும்பு ஆகியவை எலும்பு இணைப்பு திசுவின் இரு வகையாகும்.
- வரி கொண்ட மற்றும் வரி அற்ற திசுக்கள் எபிதீலிய திசுக்கள் வகைகளாகும். ( தவறு )
விடை : வரி கொண்ட மற்றும் வரி அற்ற திசுக்கள் தசைகளின் வகைகளாகும்.
- ஒரு தனி நபரின் வளர்ச்சியின் போது தோல் செல்களில் பிளவுறுதல் புறப்பரப்பில் உள்ள இழந்த செல்களுக்கு பதிலாக புதிய செல்களை உருவாக்குவதற்கு மட்டுமே ஏற்படும். ( தவறு )
விடை : தாேல் செல்களில் பிளவுறுதல் வளர்ச்சிக்கும் இறந்த செல்களைப் புதுப்பிக்கவும் பயன்படும்.
- பாரன்கைமா ஒரு எளிய திசு. ( சரி )
- ஃபுளோயம் கூட்டுத்திசுக்களால் ஆனது. ( தவறு )
விடை : ஃபுளாேயம், சல்லடைக் குழாய்கள், துணை செல்கள், ஃபுளாேயம் பாரன்கைமாவால் ஆனவை.
- கோலன்கைமாவில் நாளங்கள் காணப்படுகின்றன. ( தவறு )
விடை : நாளங்கள் சைலம் திசுக்களில் காணப்படுகின்றன.
V. மிகச் சுருக்கமாக விடையளி.
1. இருவகை ஸ்கிளிரன்கைமாவை பற்றி எழுதுக.
ஸ்கிளிரன்கைமா இருவகை செல்களால் ஆனது. அவை
- நார்கள்
- ஸ்கிளீரைடுகள்
2. சைலம் மற்றும் ஃபுளோயமின் கூறுகளின் பெயரை எழுதுக.
சைலத்தின் கூறுகள்
- சைலம் டிரக்கீடுகள்
- சைலம் நார்கள்
- சைலக்குழாய்கள்
- சைலம் பாரன்கைமா
ஃபுளோயத்தின் கூறுகள்:
- சல்லடைக் குழாய் கூறுகள்
- துணை செல்கள்
- ஃபுளாேயம் பாரன்கைமா
- ஃபுளாேயம் நார்கள்.
3. மனிதனில் தசையை எலும்புடன் இணைக்கும் திசுவின் பெயர் என் ?
தசை நாண்கள்.
4. நமது உடலில் கொழுப்பை சேமிக்கும் திசுவின் பெயர் என்ன?
அடிப்போசைட் எனப்படும் காெழுப்புத்திசு.
5. திரவு அணியுடன் உள்ள இணைப்பு திசுவின் பெயர் எழுது.
- இரத்தம்
- நிணநீர்.
6. மூளையில் உள்ள திசுவின் பெயர் எழுது.
- நரம்புச் செல்கள்
- நியூரான்கள்.
VI. சுருக்கமாக விடையளி
1. இடை ஆக்குத்திசு யாவை? எவ்வாறு அவை மற்ற ஆக்குத் திசுவிலிருந்து வேறுபடுகின்றன.
- இடை ஆக்குதிசு இலையின் அடிப்பகுதியிேலா (எ.கா. பைனஸ் தாவரம்) கணுவிடைப்பகுதியின் அடியிலோ (எ.கா.. புற்கள்) காணப்படுகின்றன
- இடைப்பட்ட நிலையான திசுக்கள் முதல்நிலை ஆக்குத் திசுவிலிருந்து உருவாகுவதால், முதல்நிலை ஆக்குத்திசுவின் ஒரு பகுதி பிரிந்து நிலையான திசுப்பகுதிகளுக்கு இடையே இவை காணப்படுகின்றன.
- தண்டின் கணு இடைப்பகுதி நீள் வளர்ச்சிக்கு காரணம் இவையே
2. நீ எவ்வோறு ஆக்குத்திசுவையும் நிலைத்த திசுவையும் வேறுபடுத்துவாய்?
ஆக்குத்திசு |
நிலைத்த திசு |
1. இதன் செல்கள் அளவில் சிறியவை. கோள அல்லது பல்கோண வடிவமுள்ளவை மற்றும் வேறுபாடற்றவை |
இதன் செல்கள் அளவில் பெரியவை. வேறுபட்டவை. பல்வேறு வடிவமுடையவை |
2. சைட்டோபிளாசம் அடத்தியானது வெற்றிடங்கள் காணப்படுவதில்லை |
உயிருள்ள நிலைத்த செல்களின் மையத்தில் பெரிய வெற்றிடங்கள் உள்ளன |
3. செல்களுக்கு இடையே இடைவெளி இல்லை |
செல்களுக்கு இடையே இடைவெளி உண்டு |
4. செல்சுவர் மெல்லிய மற்றும் நெகிழும் தன்மையுடையது |
செல் சுவர் தடித்தது |
5. செல்கள் தொடர்ந்து வளரும் மற்றும் பகுப்படையும் |
5. செல்கள் சாதரணமாக பகுப்படைவது இல்லை |
3. கூட்டுதிசு என்றால் என்ன? பல்வேறு வகையான கூட்டுதிசுவின் பெயர்களை எழுது.
ஒன்றுக்கு மேற்பட்ட பலவகை செல்களால் ஆனவை கூட்டுத்திசுக்கள் ஆகும். அந்த செல்கள் அனைத்தும் ஒன்றாக ஒரு குறிபிட்ட பணியை மேற்கொள்ளும். இவை பாரன்கைமா மற்றும் ஸ்கிளீரன்கைமா செல்களையும் கொண்டுள்ளன. இருந்த போதிலும் கோலன்கைமா செல்கள் இந்த திசுவில் காணப்படுவதில்லை
உதாரணம் : சைலம் மற்றும் ஃபுளோயம்
4. ஸ்கிளீரைட்களிலிருந்து நார்களை வேறுபடுத்துக.
ஸ்கிளீரைடுகள் |
நார்கள் |
1. வழக்கமாக அகன்றது |
நீண்ட குறுகிய இழை போன்றவை |
2. சுவரின் முடிவில் மழுங்கியவை |
சுவரின் முடிவில் கூர்மையானவை |
3. ஒற்றையாகக் காணப்படுகிறது |
கற்றையாகக் காணப்படுகிறது |
4. குழிகள்ஆழமானவை |
குழிகள் குறுகியவை |
5. அதிக அளவு நமது உடலில் காணப்படும் தசை திசுக்களை குறிப்பிடுக. அவற்றின் செயல்பாட்டினை வகுத்துரை.
- நமது உடல் அதிக அளவு காணப்படும் தசை திசு வரித்தசை ஆகும்.
செயல்பாடுகள்
- இந்த தசைகள் எலும்புகளுடன் ஒட்டியுள்ளன. உடலின் அசைவிற்குக் காரணமாக உள்ளன.
- நம் உடலின் உணர்வுகளின் கட்டுப்பாட்டின கீழ் செயல்படுகின்றன
- இவை மூட்டுத் தசைகளில் காணப்படுகின்றன.
6. எந்த திசுவானது தசைநாண் மற்றும் நார்களின் முக்கிய பொருளாகும்? எப்படி அவை செயலில் வேறுபடுகிறது?
தசைநாண் மற்றும் தசைநார்களின் முக்கிய பொருள்
நார்கள் மற்றும் ஃபைப்ராேபிளாஸ்ட்கள் கொண்ட அடர்த்தியாக கட்டப்பட்ட ஒரு நார் இணைப்புத்திசு ஆகும்.
தசைநாண் |
தசைநார் |
1. தசைகளை எலும்புடன் இணைக்கின்றன |
எலும்புகளை எலும்புடன் இணைக்கின்றன |
2. அதிக வலிமை மற்றும் குறைந்த நெகிழ்வுடையவை |
மிகவும் நெகிழும் அமைப்புடையவை |
3. கொலாஜன் நார்களைக் கொண்ட கட்டுகளாகும். இடையில் ஃபைப்ரோ பிளாஸ்ட்டுகள் உள்ளன |
மிக குறைந்த மேட்ரிக்ஸை பெற்றுள்ளன |
7. தளர்ந்த இணைப்பு திசுவின் மேட்ரிக்ஸ்ஸில் உள்ள நார்கள் எவை?
- காெலாஜன் நார்கள்
- மீள் நார்கள்
- ஃபைப்ராேபிளாஸ்ட் செல்கள்
8. அடர்ந்த இணைப்பு திசுவில் எவ்வாறு கொலாஜன் நார்கள் ஏற்படுகிறது?
அடர்ந்த இணைப்புத் திசு காெலாஜன் நார்களை கொண்ட கட்டுக்களால் ஆனது. இது தசைநாண்கள் மற்றும் தசை நார்களின் முதன்மைக் கூறாகும்.
9th Science Guide Lesson 18 Book Back Answers
9. எலும்பு இணைப்புத் திசு என்றால் என்ன? எப்படி அவை நமது உடல் செல்கள் செயல்பட உதவுகிறது.
ஆதார அல்லது எலும்பு சட்டக இணைப்புத் திசுக்கள் முதுகெலும்பிகளின் உடல் அமைப்பை உருவாக்குகின்றன. இவை உடலுக்கு வலுவையும், உள் உறுப்புகளுக்கு பாதுகாப்பையும் வழங்குவதோடு நகர்தலுக்கும் உதவி புரிகின்றன. ஆதார திசு குருத்தெலும்பு மற்றும் எலும்பை உள்ளடக்கியது.
10. திசு செல்களுக்கு மற்றும் இடத்ததிற்கு இடையேயுள்ள இடைத்தரவுகள் என்று அழைக்கப்படும் திசு எது? ஏன்?
- சிற்றிடை விழையம் / சிற்றிடை இணைப்பு திசு
- இவை தசை, இரத்த நாளங்கள் சுற்றி காணப்படுகிறது
- திசுவின் மேட்ரிக்ஸ், சிறிய இரத்த நாளங்களிலிருந்து ஆக்ஸிஜன் மற்றும் சத்துக்கள் பரவுதலில் முக்கிய பங்கு வகிக்கிறது.
11. பாலினப் பெருக்கத்தின்போது ஏன் கேமிட்டுகள் மியாஸிஸ் மூலம் உருவாக வேண்டும்?
- மியாசிஸ் பகுப்பின் மூலம் நிலைத்த குரோமோசோம் எண்ணிக்கை பராமரிக்கப்படுகிறது
- மியாசிஸ் பகுப்பின் போது ஒற்றை மைய கேமிட்டுகள் உருவாகின்றது.
- கருவுருதலின் போது ஒற்றை மைய கேமிட்டுகள் இணைந்து இரட்டைய மைய சைகோட்டை உருவாக்கிறது.
12. மைட்டாசிஸின் எந்த நிலையில் குரோமோசோம்கள் செல்லில் மையப்பகுதியில் அமைகின்றன? எப்படி?
நகலுற்ற குரோமோசோம்கள் செல்லின் மையப்பகுதியில் ஒருங்கமைந்து மெட்டா நிலை தட்டை தோற்றுவிக்கின்றன. ஒவ்வொரு குரோமோசோமும் ஸ்பிண்டில் இழைகள் மூலம் சென்ட்ரோமியருடன் இணைவுற்று இருப்பதால் குரோமோசோம் இழைகள் என்று அழைக்கப்டுகிறது. ஒவ்வொரு குரோமோசோமின் சென்ட்ரோமிரும் இரண்டாகப் பகுப்படைந்து அவை ஒவ்வொன்றும் குரோமேடிட்டுடன் ஒன்றிணைந்துள்ளன.
13. ஒரு வேறுபாடு எழுதுக
- எலும்பு மற்றும் குறுத்தெலும்பு
எலும்பு |
குறுத்தெலும்பு |
1. திடமான, விரைத்த, உறுதியான, இளக்க மற்ற இணைப்புத்திசு |
மிருதுவான, அரை விரைப்பு தன்மையுடைய இளக்கமான திசு |
2. எலும்பு செல்கள் ஆஸ்டியோசைட்ஸ் ஆகும் |
குருத்தெலும்பு செல்கள் கன்ரோசைட்ஸ்கள் ஆகும் |
3. உடல் முழுவதும் காணப்படுகிறது |
மூக்கு நுனி, வெளிக்காது, தொண்டை, குரல் வளையில் உள்ளது. |
b. எபிதீலியத் திசு மற்றும் கூட்டு எபிதீலியத் திசு
எபிதீலியத் திசு |
கூட்டு எபிதீலியத் திசு |
1. ஒற்றை அடுக்கு செல்களால் உருவானது |
ஒன்றுக்கு மேற்பட்ட செல் அடுக்குகளைப் பெற்று பல அடுக்குகளாகத் தோற்றமளிக்கிறது. |
2. உடற்குழி மற்றும் நாளங்களின் உட்பூச்சு இவற்றில் உள்ளன |
தோலின் உலர்ந்த பகுதி, வாய்க்குழி மற்றும் தொண்டைப் பையின் ஈரமான புறப்பகுதியை சுற்றியுள்ளன. |
14. ஏன் இரத்தம் ஒரு இணைப்பு திசுவாக கருதப்படுகிறது
இரத்தம் உடலின் பல பகுதிகளை இணைக்கிறது. இதில் செல்கள் இடைவெளி காணப்படுகின்றன மற்றும் இவை செல்லிடை மேட்ரிக்ஸில் பதிந்துள்ளன எனவே இரத்தம் ஒரு இணைப்பு திசு ஆகும்
15. ஏன் மியாசிஸ் குன்றில் பகுப்பு என்றும் மற்றும் மைட்டாஸிஸ் சமபிளத்தல் என்றும் அழைக்கப்படுகின்றன?
மைட்டாசிஸ்
- ஒரு பகுப்பைக் கொண்டது
- இரு இருமய சேய் செல்களை உருவாக்கிறது
- ஒத்த சேய் செல்கள் உருவாகின்றன
- எனவே இது சமபிளத்தல் என அழைக்கப்படுகிறது
மியாசிஸ்
- இரு பகுப்பைக் கொண்டது
- நான்கு ஒருமய சேய் செல்களை உருவாக்கிறது
- சேய் செல்கள் தாய் செல்லை ஒத்திருப்பதில்லை. குரோமோசோம் எண்ணிக்கை குறைகிறது
- எனவே குன்றல் பகுப்பு என அழைக்கப்படுகிறது
VII. கூற்று மற்றும் காரணம்
கூற்று : கீழ்கண்ட ஒவ்வொரு கேள்விகளுக்கும் கூற்று ஒன்றும் அதற்கு சரியான காரணமும் கொடுக்கப்ட்டுள்ளன. கீழ்க்கொடுக்கப்பட்டுள்ள கூற்றுக்கு சரியான பதிலைக் குறியிடுக
- கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும், காரணமும் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
- கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
- கூற்று சரி ஆனால் காரணம் தவறு.
- கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
- கூற்று : இயற்கையாக வரியற்ற தசைகள் தன்னிச்சையானது என்று கூறப்படுகிறது.
காரணம் : வரியற்ற தசைகள் நமது விருப்பத்தின் கட்டுப்பாட்டில் உடையது ஆகும்.
விடை : கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
- கூற்று : எபிதிலீயம் மற்றும் இணைப்புத் திசுக்களுக்கு இடையே பொருட்கள் பரிமாற்றம் பரவுதல் மூலம் நடைபெறுகிறது.
காரணம் : எபிதீலிய செல்களில் இரத்த நாளங்கள் இல்லை.
விடை : கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும், காரணமும் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.