8th Tamil Refresher Course Answer key Topic 9
8th Tamil Refresher Course Answer key Topic 9. TN 8th Standard Refresher Course ACTIVITY 9 Answer key. எட்டாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 9. பிறமொழிச் இணையான தமிழ்ச் சொற்கள், கலைச்சொற்களை அறிதல். 8th TAMIL ACTIVITY 9. QUESTION & ANSWER. 2nd to 12th All Subject Refresher Course Modle Books and Answer key 2021. 8th STD All Subject Refresher Course Books Download PDF. Students Guide 360.
- Class: 8
- Subject: Tamil புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
- Topic: 9
- செயல்பாடு 9. பிறமொழிச் இணையான தமிழ்ச் சொற்கள், கலைச்சொற்களை அறிதல்
8th Tamil Refresher Course Answer key 9
மதிப்பீட்டுச் செயல்பாடு
எட்டாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி செயல்பாடு 9. பிறமொழிச் இணையான தமிழ்ச் சொற்கள், கலைச்சொற்களை அறிதல் Answers. 8TH TAMIL AVTIVITY 9. பிறமொழிச் இணையான தமிழ்ச் சொற்கள், கலைச்சொற்களை அறிதல். QUESTION & ANSWER
9. பிறமொழிச் இணையான தமிழ்ச் சொற்கள், கலைச்சொற்களை அறிதல் | மதிப்பீட்டுச் செயல்பாடு
மதிப்பீட்டுச் செயல்பாடு 1
கீழ்க்காணும் பத்தியைப் படித்து, ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை எழுதுக.
மகிழன் காலையில் எழுந்தான் . தன் காலைக் கடன்களை முடித்தான் . காலைஉணவு சாப்பிட்டான் . 8.30 மணிக்குப் பள்ளி பேருந்தில் ஸ்கூலுக்குச் சென்றான் . பள்ளியில் காலை வழிபாட்டுக் கூட்டத்தில் கலந்து கொண்டான் . தனது வகுப்பில் டீச்சரிடம் அனைத்துப் பாடங்களையும் சூப்பராகப் படித்தான் . மதியஉணவு இடைவேளையில் பிரண்சுடன் லஞ்ச் சாப்பிட்டான் . மதியம் கணிதப் பாடவேளையில் ஆசிரியர் கொடுத்த ஆக்டிவிட்டி செய்தான் . ஈவினிங் 4.30 மணிக்கு ஸ்கூல்பெல் ஒலித்தது. பள்ளி முடிந்து அனைவரும் வீட்டிற்குச் சென்றனர். வீட்டிற்குச் செல்லும் வழியில் ரோட்டில் செல்லும் பஸ், கார் , லாரி, மிதிவண்டி போன்ற வாகனங்களைக் கண்டு இரசித்தான் . வீட்டிற்குச் சென்றவுடன் யுனிபார்மை மாற்றிக் கை , கால்களைக் கழுவினான் . மம்மி கொடுத்த ஸ்நாக்சைச் சாப்பிட்டுவிட்டு தனது நண்பர்களுடன் விளையாடச் சென்றான் .
ஆங்கிலச் சொற்கள் | தமிழ்ச் சொற்கள் |
ஸ்கூலுக்கு | பள்ளிக்கூடத்திற்கு |
டீச்சரிடம் | ஆசிரியரிடம் |
சூப்பராக | சிறப்பாக |
பிரண்சுடன் | நண்பர்களுடன் |
ஆக்டிவிட்டி | செயல்பாடு |
ஈவினிங் | மாலை |
ஸ்கூல்பெல் | பள்ளி மணி |
ரோட்டில் | சாலையில் |
பஸ் | பேருந்து |
கார் | மகிழுந்து |
லாரி | சரக்குந்து |
யுனிபார்ம் | சீருடை |
மம்மி | அம்மா |
ஸ்நாக்ஸ் | நொறுக்குத்தீனி |
மதிப்பீட்டுச் செயல்பாடு – 2
படத்தைப் பார்த்து ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை எழுதுக.
- நாள்காட்டி வைரம்
- நாடாளுமன்றம் இசைக்கருவிகள்
- வாழ்த்துகள் ஆமை
- வகுப்பறை இயங்கும்படிக்கட்டுநாள்காட்டி வைரம்
மதிப்பீட்டுச் செயல்பாடு – 3
பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
(ஆணை, பயன்பாடு, சிற்றுண்டி, அறிஞர், கருவூலம், பணி, வழிபாடு, இழப்பு)
பிறமொழிச் சொல் – தமிழ்ச்சொல்
- ஆபூர்வம் – புதுமை
- நஷ்டம் – இழப்பு
- ஆராதனை – வழிபாடு
- உத்தியோகம் – பணி
- கஜானா – கருவூலம்
- நிபுணர் – அறிஞர்
- நாஷ்டா – சிற்றுண்டி
- உபயோகம் – பயன்பாடு
- உத்தரவு – ஆணை
8th Tamil Refresher Course Full Answer key Topic 1-18 |