8th Tamil Refresher Course Answer key Topic 18
8th Tamil Refresher Course Answer key Topic 18. TN8th Standard Refresher Course ACTIVITY 18 Answer key. எட்டாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 18. துணைப்பாடம் – சொந்தக் கருத்து, திறனாய்வுக் கருத்தை எழுதுதல். 2nd to 12th All Subject Refresher Course Modle Books and Answer key 2021. 8th STD All Subject Refresher Course Books Download PDF. Students Guide 360.
- Class: 8
- Subject: Tamil புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
- Topic: 18
- செயல்பாடு 18. துணைப்பாடம் – சொந்தக் கருத்து, திறனாய்வுக் கருத்தை எழுதுதல்
மதிப்பீட்டுச் செயல்பாடு
எட்டாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி செயல்பாடு 18. துணைப்பாடம் – சொந்தக் கருத்து, திறனாய்வுக் கருத்தை எழுதுதல். Answers. 8TH TAMIL AVTIVITY 18 QUESTION & ANSWER.
18. துணைப்பாடம் – சொந்தக் கருத்து, திறனாய்வுக் கருத்தை எழுதுதல் | மதிப்பீட்டுச் செயல்பாடு
மதிப்பீட்டுச் செயல்பாடு 1
கீழக்காணும் துணைப்பாடப் பகுதியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.
இந்திய வனமகன் (நேர்காணல்)
கட்டெறும்புகளா ? அவை கடித்தால் உடம்பில் கடுமையான எரிச்சல் ஏற்படுமே ? ஆமாம். ஆனால் என்ன செய்வது? மண்ணின் தன்மையை மாற்ற வேண்டுமே .அதற்காக நாள் தோறும் நூற்றுக்கணக்கான எறும்புகளைக் கொண்டுவந்து இங்கு விட ஆரம்பித்தேன் . கட்டெறும்புகள் ஊர்ந்து செல்லச்செல்ல மண்ணின் தன்மை சிறிது சிறிதாக மாறத் தொடங்கியது. காடுகளில் ஆங்காங்கே பச்சைப் பசும்புற்கள் தலைகாட்டத் தொடங்கின. அப்பொழுது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை . அதன்பின்பு நான் நட்ட மரங்கள் அனைத்தும் வளர்ந்தன. இவ்வளவு மரங்களை வளர்ப்பதற்கு விதைகளும் உரமும் உங்களுக்கு எப்படிக் கிடைத்தன? கால்நடைகளை வளர்ப்பதுதான் என்னுடைய வேலை. அவற்றின் சாணத்தை ஒரு துளிகூட வீணாக்காமல் இயற்கை உரம் தயாரிக்கத் தொடங்கினேன் . ஒரு பழம் சாப்பிட்டால் கூட அதன் கொட்டையை வீசி எறியாமல் விதையாகச் சேர்த்து வைப்பேன் .பிறகு மழைக்காலம் தொடங்குவதற்குமுன் விதைகளை எடுத்து இத்தீவில் தூவத் தொடங்கிவிடுவேன் . இப்படி ஒவ்வோர் ஆண்டும் நான் தூவிய விதைகள்தாம் இப்போது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் இக்காடு. மழை இல்லாத காலங்களில் செடிக்கு எப்படித் தண்ணீர் ஊற்றினீர்கள்? ஆற்றின் கரையோரம் இருந்த செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவதில் எனக்குச் சிக்கல் ஏற்படவில்லை . ஆனால் தொலைவில் இருந்த செடிகளுக்கு நீர் ஊற்றுவது சற்றுக் கடினமான செயலாக இருந்தது. அதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தேன் . செடியைச்சுற்றி மூங்கில் குச்சிகளை நட்டுவைத்து அதில் ஒரு பானையைப் பொருத்தினேன் . அதில் ஒரு சிறுதுளை இட்டு, நீர் சொட்டுச் சொட்டாக வடிவதற்கான ஏற்பாடுகளைச் செய்தேன் . பிறகு அதில் நீர் நிரப்பினால் ஒரு வாரத்திற்குச் சிக்கல் இருக்காது. இப்படித்தான் மற்ற செடிகளை வளர்த்து வந்தேன் .
வினாக்கள்
1. செடிகள், மரங்கள் அதிகம் வளர என்ன செய்ய வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?
- நீர் ஊற்ற வேண்டும், மனிதர்கள், விலங்குகளிடமிருந்து பாதுகாக்க வேண்டும். மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
2. மழையற்ற கோடைக்காலத்தில் தாவரங்களைப் பாதுகாக்க ஏற்ற வழிகளை எழுதுக.
- சொட்டுநீர்ப் பாசன வசதி செய்ய வேண்டும்.
3. காடுகளால் நன்மை அடைவது மனிதர்களா? வன உயிரினங்களா? – இது சார்ந்து உங்கள் கருத்துகளை எழுதுக.
- காடுகளால் நன்மை அடைவது மனிதர்களும்தான் வன உயிரினங்களும்தான்.
- வன உயிரினங்களுக்குக் காடுகளே உறைவிடங்கள்.
- காடுகளால் மனிதர்களுக்குப் பலவித மூலிகைகள், மரங்கள், தேன், மழை, மண்ணரிப்பைத் தடுத்தல், வன உயிரினங்கள் ஊருக்குள் வராமை போன்ற நன்மைகள் கிடைக்கின்றன.
8th Tamil Refresher Course Full Answer key Topic 1-18 |