8th Tamil LO – Learning Outcomes
8th Standard Tamil LO – Learning Outcomes எட்டாம்வகுப்பு தமிழ் கற்றல் விளைவுகள். Class 6 Learning Outcomes, kattrel velaivugal download pdf.
எட்டாம் வகுப்பு தமிழ் கற்றல் விளைவுகள்
- T801 மாணவர்கள் பல்வேறு வகையான தலைப்புகளில் பாடப் பொருள்களின் மீது எழுதப்பட்டவற்றை படித்து கலந்துரையாட செய்தல் பாடப் பகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட பறவையின் விவரிப்புடன் பறவைகள் பற்றிய ஆய்வாளரான சலீம் அலி புத்தகத்தை தொடர்பு படுத்தி கூறல்
- T802 செய்தித்தாள்கள் , இதழ்கள் , கதைகள், தகவல் பகுதிகள்,இணையம் போன்றவற்றில் தமிழில் உள்ள பல்வேறு வகை எழுத்துக்களை படித்து புரிந்து கொண்டு அவற்றின் மீது கருத்துரை பகர்தல் முடிவு கூறல் மற்றும் விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்துதல் (வாய்மொழி வழி அல்லது சைகை வழி)
- T803 படித்தவற்றை பற்றி சிந்தனை செய்து வினாக்கள் எழுப்பி புரிதலை மேம்படுத்திக் கொள்ளல்
- T804 தமது சுற்றுப்புறத்தில் வழங்குகின்ற நாட்டுப்புற பாடல்கள் நாட்டுப்புறக் கதைகள் ஆகியவற்றை பற்றி பேசுதல்
- T805 எதையும் படித்து முடித்த பின்னர் தமக்குத் தெரியாத சூழல்கள், நிகழ்வுகள் பற்றி கற்பனை செய்து புதிய மனபிம்பங்களையும் சிந்தனைகளையும் உருவாக்கி வெளிப்படுத்துதல் (வாய்மொழி வழி சைகை மொழியில்)
- T806 ஜாதி மதம் நிறம் பாலினம் மரபுகள் போல்வன குறித்த உணர்வு பூர்வமான சிக்கல்கள் பற்றி நண்பர்கள் ஆசிரியர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் வினாக்கள் எழுப்புதல் (எடுத்துக்காட்டு ஒரு குறிப்பிட்ட விழா கொண்டாடப்படும் முறை பற்றி பேசுதல்)
- T807 கதைகள், பாடல்கள் ,கட்டுரைகள், அறிக்கைகள், நினைவுகள், நகைச்சுவை போன்ற பல்வேறு வகை பட்டவற்றை படிக்கும் போது அவற்றை நுட்பமாக ஆய்வு செய்து சில குறிப்பிட்ட செய்திகளை கண்டறிதலிலும் ஊகித்தறிதலிலும்
- T808 ஒரு கட்டுரையை படித்த பின்னர் அதன் சமூக மதிப்புகள் குறித்த கலந்துரையாடல் ,சில வினாக்களுக்கு விடை காண முற்படல் (எ.கா) தனது சுற்றுப்புறத்தில் வாழும் குடும்பங்கள் பற்றி சிந்தித்தல் இதன் தொடர்ச்சியாக ராமு மாமாவின் பெண் குழந்தை ஏன் பள்ளிக்குச் செல்லவில்லை ? என்ற வினாவை எழுப்புதல்
- T809 படித்தனவற்றை பற்றி நன்கு சிந்தித்து புரிதலை மேலும் சிறப்பாக்குதல்
- T810 பல்வேறு வகை படித்தல் பொருள்களில் காணப்படும் சொற்கள், தொடர்கள், மரபுத்தொடர்கள் ஆகியவற்றை புரிந்து கொண்டு நயம் பாராட்டுதல்
- T811 படித்த பிறகு பல்வேறு எழுத்தியியல் நடைகளையும், முறைகளையும்( விவரன முறை, வரைபட முறையில் புணர்ச்சி பூர்வமான நடை இயற்கை அழகின் வர்ணனை முறை போன்றவை )இனங்காணுதல்
- T812 படிக்கும்போது படைப்பாளியின் சொற் சித்திரத்தினை நயம்பட பாராட்டி தமது கல்வி நிலைக்கு ஏற்ப அதை வெளிப்படுத்துதல் ( பேச்சு எழுத்து, பிரெய்லி எழுத்து .சைகை மொழி வழியில்)
- T813 தேவைப்படின் பார்வை நூல்களாகிய அகராதிகள், தேசப்படங்கள், கலைக்களஞ்சியம் போன்றவற்றையும் இணையதளத்தையும் பொருத்தமான முறையில் பயன்படுத்துதல் பிறர் உதவியை நாடியும் இதனைச் செய்யலாம்
- T814 தான் எழுதுவதை படிப்பவர் மற்றும் எழுத்தின் நோக்கம் ஆகியவற்றை மனதில் கொண்டு பயன் விளைவிக்கும் வகையில் எழுதுதல்
- T815 தாம் அறிந்திடாத சூழல்களை பற்றி கற்பனை செய்தும் நிகழ்வுகள் பற்றி மனதில் உருவகித்தும் அவற்றைப் பற்றி சிந்தித்தும் எழுத்து வழி வெளிப்படுத்தல் (பிரெய்லி முறைமைகள் வழியும்)
- T816 மொழி பற்றிய நுட்பங்களை அறிந்து அவற்றை தம் மொழியில் எழுதும் போது பயன்படுத்துதல் ( சொற்களை மாற்றுவதன் மூலம் பாடலின் சந்தத்தில் ஏற்படும் ஓசை நயத்தை புரிந்து கொள்ளுதல் )
- T817 மற்றவர்கள் ஒரு குறிப்பிட்ட சூழலில் சொன்ன சொற்களை பிறிதொரு சூழலில் தனது மொழி நடையில் பயன்படுத்துதல் ( பள்ளி நிகழ்வுகள் விழாக்கள் பற்றி அறிக்கை தயார் செய்தல், கிராமசந்தையில் கடைக்காரருடன் வாடிக்கையாளர் உரையாடுதல்)
- T818 தமது சொந்த அனுபவங்களை தமக்கே உரிய மொழிநடையை பயன்படுத்தி வெவ்வேறு இலக்கிய வடிவங்களில் எழுதுதல் ( கதை , கட்டுரை , பாடல் வடிவில் அனுபவங்களை வெளிப்படுத்துதல் )
- T819 அன்றாட வாழ்வில் நிகழும் குறிப்பிடத்தக்க அனுபவங்களை ( நிகழ்வுகள், சூழல்கள் ) புத்தாக்க முறையில் வெவ்வேறு வழிகளில் ( சமூக ஊடகங்கள் , நோட்டுப் புத்தகம் பதிப்பாளருக்கு கடிதம் எழுதுதல் ) எழுதுதல்
- T820 கைவினைப் பொருட்கள் தயாரித்தல் கட்டிடக்கலை , உழவுத் தொழில் , விதை விதைத்தல் ,, நாட்டியம் , மெய்ப்பாடுகள் முதலான செயல்பாடுகளில் பயன்படும் சொற்களை பயன்படுத்தி எழுதுதல்
- T821 படிப்பவரின் தரம், எழுத்தின் நோக்கம் ஆகியவற்றை மனதிற்கொண்டு பயன் விளையுமாற் தன்னைத் தானே வெளிப்படுத்துதல்
- T822 பாடல் , கதை , கட்டுரை எழுதும் போது ,பல்வேறு புலப்பாட்டு உத்திகளையும் முறை களையும் இனம் கண்டு அவற்றை பயன்படுத்துதல்
- T823 தாம் படிக்கும் முன்னர் அறிந்திராத சூழல்கள் , நிகழ்வுகள் ஆகியன பற்றி கற்பனை செய்து அவற்றை மனப் படிமங்களாகவும் சிந்தனையாகவும் மாற்றி வெளிப்படுத்துதல் ( பொது எழுத்து , பிரெய்லி எழுத்து வழி )