8th Tamil Guide Unit 6.2
8th Standard Tamil Book Back Answers & Additional Question and Answers
8th Tamil Samacheer Kalvi Full Term Book Answers download PDF. 8th Tamil 6th Lesson இயல் 6.2 மழைச்சோறு 8th TN Text Books Download PDF. Class 8 Tamil Nadu Samacheer Kalvi Start Board Syllabus Book Back Answers. TNPSC, TNTET, TRB 8th Tamil Important Notes. 8th Tamil Free Online Test. 8th Tamil Full Term All Unit Answers Lesson 1 to 9.
- 8th Tamil Samacheer Kalvi Guide – Unit 6 Full Guide
6.2. மழைச்சோறு
I. சரியான விடையைத் தேர்தெடுத்து எழுதுக.
1. கனத்த மழை என்னும் சொல்லின் பொருள் _____.
- பெருமழை
- சிறு மழை
- எடைமிகுந்த மழை
- எடை குறைந்த மழை
விடை : பெருமழை
2. ‘வாசலெல்லாம்‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.
- வாசல் + எல்லாம்
- வாசல் + எலாம்
- வாசம் + எல்லாம்
- வாசு + எல்லாம்
விடை : வாசல் + எல்லாம்
3. ‘பெற்றெடுத்தோம்‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.
- பெறு+ எடுத்தோம்
- பேறு + எடுத்தோம்
- பெற்ற + எடுத்தோம்
- பெற்று + எடுத்தோம்
விடை : பெற்று + எடுத்தோம்
4. கால் + இறங்கி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.
- கால்லிறங்கி
- காலிறங்கி
- கால் இறங்கி
- கால்றங்க
விடை : காலிறங்கி
II. குறுவினா
1. மழைச்சோறு பாடலில் உழவர் படும் வேதனை எவ்வாறு கூறுப்படுகிறது?
- கடலைச் செடி, முருங்கைச் செடி, கருவேலங்காடு, காட்டுமல்லி என அனைத்தும் மழையில்லாமல் வாடிப்போனது.
- பெற்றெடுத்த குழந்தைகளின் பசியை தீர்க்க முடியவில்லை
- கலப்பை பிடிப்பவரின் கை சோர்ந்து விட்டது, ஏற்றம் இறைப்பவரி மனம் தவிக்கிறது என்றும் இதற்குக் காரணம் மழை இல்லாமையே இன்று உழவர் வேதனைப் படுகின்றனர்
2. மக்கள் ஊரைவிட்டு வெளியேறக் காரணம் என்ன?
- மழை இல்லாததால் உழவுத் தொழில் செய்ய முடியவில்லை எனவே மக்கள் ஊரைவிட்டு வெளியேறுகின்றனர்
III. சிறுவினா
1. கோலம் கரையாத நிலையை மழைச்சோறு பாடல் எவ்வாறு விளக்குகிறது?
- வாளியில் கரைத்த மாவால் வாசலில் கோலம் போட்டனர்
- இந்தக் கோலத்தை கரைக்க மழை வரவில்லை.
- பானையில் மாவைக் கரைத்து, பாதை எல்லாம் கோலம் போட்டனர்.
- அந்தக் கோலம் கரைக்கவும் மழை வரவில்லை.
2. மழையின்மையால் செடிகள் வாடிய நிலையை விளக்குக.
- கல் இல்லாத காட்டில் கடலைச் செடி நட்டு வளர்த்தார்கள். அதற்கும் மழை பெய்யவில்லை.
- முள் இல்லாத காட்டில் முருங்கைச் செடி நட்டு வளர்த்தார்கள். அதற்கும் மழை வரவில்லை.
- கருவேலங்காடும் மழையில்லாமல் பூக்கவில்லை
- மழை இல்லாததால் காட்டு மல்லியும் பூக்கவில்லை
3. மழைச்சோறு எடுத்தபின் எவ்வாறு மழை பெய்தது?
- மழைச்சோறு எடுத்த பின், பேய் மழையாக ஊசி போல கால் இறங்கி உலகமெல்லாம் பெய்கிறது.
- சிட்டுப் போல மின்னி மின்னி ஊரெங்கும் பெய்கிறது.
- ஊரெங்கும் செல்ல மழை பெய்கிறது.
மழைச்சோறு – கூடுதல் வினாக்கள்
I. சரியான விடையைத் தேர்தெடுத்து எழுதுக.
1. ஒரு நாட்டின் வளத்திற்கு அடிப்படையாக விளங்குவது _____.
- உணவு
- உடை
- பணம்
- மழை
விடை : மழை
2. கல் இல்லாக் காட்டில் _______________ போட்டனர்
- முருங்கைச் செடி
- கருவேலமரம்
- கடலைச் செடி
- காட்டு மல்லி
விடை : கடலைச் செடி
3. முள் இல்லாக் காட்டில் _______________ போட்டனர்
- கடலைச் செடி
- கருவேலமரம்
- முருங்கைச் செடி
- காட்டு மல்லி
விடை : முருங்கைச் செடி
II. பிரித்து எழுதுக
- பாதையெலாம் = பாதை + எலாம்
- முருங்கைச்செடி = முருங்கை + செடி
- வேலியிலே = வேலி + இலே
- பெற்றெடுத்தோம் = பெற்று + எடுத்தோம்
- காலிறங்கி = கால் + இறங்கி
- உலகமெங்கும் = உலகம் + எங்கும்
III. குறுவினா
1. எங்கெல்லாம் கோலம் இடப்பட்டது?
- வாசல் மற்றும் பாதைகளில் கோலம் இடப்பட்டது
2. வாடிப்போன செடிகள் எவை? காரணம் யாது?
- கடலைச் செடி, முருங்கைச் செடி, கருவேலங்காடு, காட்டுமல்லி என அனைத்தும் மழையில்லாமல் வாடிப்போனது.
III. சிறுவினா
1. மழைச்சோற்று நோன்பு பற்றிக் கூறு
- மழை இல்லாமல் பஞ்சம் ஏற்படும் நேரங்களில் சிற்றூர் மக்கள் வீடு வீடாகச் சென்று உப்பில்லாத சோற்றை ஒரு பானையில் வாங்குவார்கள்.
- ஊர் பொது இடத்தில் வைத்து அனைவரும் பகிர்ந்து உண்பர்.
- கொடிய பஞ்சத்தை காட்டும் அடையாளமாக இது நிகழும்.
- இதனைக் கண்டு மனம் இறங்கி மழை பெய்யும் என்பது மக்களின் நம்பிக்கை.
- இதனை மழைச்சோறு நோன்பு என்று கூறுவார்கள்.
கூடுதல் வினாக்கள்
நிரப்புக :
1. மன்பதை காக்கும் மாபெரும் சிறப்பு ………………….. உண்டு.
2. ‘கொங்குநாட்டு மழைச்சோற்று வழிபாடு’ என்னும் கட்டுரை …………………. என்னும் நூலில் உள்ளது.
3. பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள்’ என்னும் நூலின் பதிப்பாசிரியர் ………………….
Answer:
1. மாமழைக்கு
2. பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள்
3. அ. கௌரன்
விடையளி :
1.‘மழைச்சோறு’ பாடலில் மழை பெய்யாததால் மக்கள் என்ன செய்தனர்?
- மழை பொய்த்ததால் மக்கள் மூன்று அல்லது ஐந்து நாள்கள் பாடி வழிபாடு செய்தனர். அதன் பிறகும் மழை பெய்யாததால் காட்டிற்குச் செல்ல முடிவெடுக்கின்றனர்.
- பாடலைப் பாடிக்கொண்டே சோறு வாங்கிய பானை, அகப்பை, பழைய முறம் போன்றவற்றைத் தலையில் வைத்தவாறு ஊரைவிட்டு வெளியேறுகின்றனர்.
2.‘மழைச்சோற்று நோன்பு’ என்பது யாது?
- மழை பெய்யாமல் ஊரில் பஞ்சம் ஏற்படும் காலங்களில் சிற்றூர் மக்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று உப்பில்லாச் சோற்றை ஒரு பானையில் வாங்குவர்.
- ஊர்ப் பொது இடத்தில் வைத்து அச்சோற்றை அனைவரும் பகிர்ந்து உண்பர்.
- கொடிய பஞ்சத்தைக் காட்டும் அடையாளமாக நிகழும் இதனைக் கண்டு வானம் மனமிரங்கி மழை பெய்யும் என்பது மக்களின் நம்பிக்கை. இந்நிகழ்வு மழைச்சோற்று நோன்பு எனப்படுகிறது.
நூல் வெளி
- பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள் என்னும் நூலில் உள்ள கொங்குநாட்டு ‘மழைச்சோற்று வழிபாடு’ என்னும் கட்டுரையிலிருந்து இப்பாடல் எடுக்கப்பட்டுள்ளது. இந்நூலின் பதிப்பாசிரியர் அ. கௌரன்.
தெரிந்து தெளிவோம்
- மழை பெய்யாமல் ஊரில் பஞ்சம் ஏற்படும் காலங்களில், சிற்றூர் மக்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று உப்பில்லாச் சோற்றை ஒரு பானையில் வாங்குவர். ஊர்ப் பொது இடத்தில் வைத்து அச்சோற்றை அனைவரும் பகிர்ந்து உண்பர்.
- கொடிய பஞ்சத்தைக் காட்டும் அடையாளமாக நிகழும் இதனைக் கண்டு வானம் மனமிரங்கி மழை பெய்யும் என்பது மக்களின் நம்பிக்கை. இந்நிகழ்வை மழைச்சோற்று நோன்பு என்பர்.