8th Tamil Guide Unit 4.2
8th Standard Tamil Tamil Samacheer kalvi guide 4th Lesson Unit 4.2 புத்தியைத் தீட்டு Book Back and Additional Question answers. 8th Tamil TNPSC, TET Notes. 8th Tamil All Lesson Guide. 8th TN Text Books Download PDF. Tamil Nadu State Board Syllabus 8th standard Lesson 4 Full Guide book back and additional question & answer. 8th Tamil Guide Lesson 4 Book Back Question and Answers, 8th Standard Tamil guide Unit 4 Book Back and additional Question and answers. 8th Standard Tamil Samacheer Kalvi Guide, 8th Tamil Answer key Notes, 8th Tamil book Answers. 8th Tamil Lesson 1 to 9 Full Answer Key.
4.2. புத்தியைத் தீட்டு
கத்தியைத் தீட்டாதே – உந்தன்புத்தியைத் தீட்டுகண்ணியம் தவறாதே – அதிலேதிறமையைக் காட்டு!ஆத்திரம் கண்ணைமறைத்திடும் போதுஅறிவுக்கு வேலை கொடு உன்னைஅழித்திட வந்தபகைவன் என்றாலும்அன்புக்குப் பாதை விடு! (கத்தியைத்)மன்னிக்கத் தெரிந்தமனிதனின் உள்ளம்மாணிக்கக் கோயிலப்பா – இதைமறந்தவன் வாழ்வுதடம் தெரியாமல்மறைந்தே போகுமப்பா! (கத்தியைத்)இங்கே இருப்பது சில காலம்இதனால் உண்டோ ஒரு லாபம் – இதைஇதற்குள் ஏனோ அகம்பாவம்எண்ணிப்பாரு தெளிவாகும்! (கத்தியைத்)
-ஆலங்குடி சோமு
சொல்லும் பொருளும்
- தடம் – அடையாளம்
- அகம்பாவம் – செருக்கு
- புத்தி – அறிவு
- பாதை – அறிவு
- உள்ளம் – மனம்
- லாபம் – பலன்
- எண்ணி – நினை
நூல் வெளி
ஆலங்குடி சோமு திரைப்படப் பாடல் ஆசிரியராகப் புகழ்பெற்றவர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஆலங்குடி என்னும் ஊரில் பிறந்தவர். தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது பெற்றவர். இவரது திரையிசைப் பாடல் ஒன்று இங்குத் தரப்பட்டுள்ளது.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. என் நண்பர் பெரும் புலவராக இருந்தபோதும் _____ இன்றி வாழ்ந்தார்.
- சோம்பல்
- அகம்பாவம்
- வருத்தம்
- வெகுளி
விடை : அகம்பாவம்
2. ‘கோயிலப்பா ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.
- கோ + அப்பா
- கோயில் + லப்பா
- கோயில் + அப்பா
- கோ + இல்லப்பா
விடை : கோயில் + அப்பா
3. பகைவன் + என்றாலும் என்பதனைச் சேர்த்தெழுதக் கி்டைக்கும் சொல் _____.
- பகைவென்றாலும்
- பகைவனென்றாலும்
- பகைவன்வென்றாலும்
- பகைவனின்றாலும்
விடை : பகைவனென்றாலும்
குறு வினா
1. யாருடைய உள்ளம் மாணிக்கக் கோயில் போன்றது?
- மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்கக் கோயில் போன்றது ஆகும்
2. பகைவர்களிடம் நாம் நடந்துகொள்ள வேண்டிய முறை யாது?
- பகைவர்களிடம் நாம் நடந்துகொள்ள வேண்டிய முறை அன்பு காட்டுவது ஆகும்
சிறு வினா
புத்தியைத் தீட்டி வாழ வேண்டிய முறைகளாகக் கவிஞர் கூறுவன யாவை?
- கண்ணியம் தவறாமல் எடுத்த செயலில் தன்னுடைய திறமையைக் காட்ட வேண்டும்.
- ஆத்திரம் கண்ணை மறைந்து விடும் என்பதால் அறிவுக்கு வேலை கொடுத்து அமைதி காக்க வேண்டும்.
- பகைவன் அடிக்க வந்தாலும், அவரிடம் அன்பு காட்டி அரவணைக்க வேண்டும்.
- மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்கக் கல் போன்றது.
- இதனை மறந்து வாழ்பவன் வாழ்க்கை, தடம் தெரியாமல் மறைந்து போய்விடும்.
- வாழும் வாழ்க்கை சில காலமே! அதற்குள் ஏன் அகம்பாவம்? இதனால் இலாபமும் கிடைக்காது. எனவே, அகம்பாவத்தைக் காட்டாமல் வாழ வேண்டும்.
- இவற்றை எண்ணிப் பார்த்தால் வாழ்க்கை தெளிவாகும்.
புத்தியைத் தீட்டு – கூடுதல் வினாக்கள்
I. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. ஆலங்குடி சோமு தமிழ்நாடு அரசின் _______________ விருதினை பெற்றவர்
விடை : கலைமாமணி
2. _______________ என்ற கவிதை தொகுப்பினை எழுதியவர் ஆலங்குடி சோமு
விடை : புத்தியைத் தீட்டு
3. தீட்ட வேண்டியது _______________ ஆலங்குடி சோமு குறிப்பிடுகிறார்
விடை : புத்தியென
4. பகைவனிடம் _______________ காட்ட வேண்டும்.
விடை : அன்பு
5. மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம் _______________ போன்றது.
விடை : மாணிக்கக்கல்
6. கண்ணியம் தவறாமல் எடுத்த செயலில் தன்னுடைய _______________ காட்ட வேண்டும்.
விடை : திறமையைக்
II. பிரித்து எழுதுக
- எண்ணிப்பாரு = எண்ணி + பாரு
- தெளிவாகும் = தெளிவு + ஆகும்
- கோயிலப்பா = கோயில் + அப்பா
- போகுமப்பா = போகும் + அப்பா
III. “புத்தியைத் தீட்டு” பாடல் பகுதியில் உள்ள எதுகை மோனைச் சொற்களை எடுத்து எழுதுக
மோனைச் சொற்கள் :-
- தீட்டாதே – தீட்டு
- அறிவு – அழித்திட
- மன்னிக்க – மனிதனின்
- இங்கே – இருப்பது
- இதற்குள் – இதனால்
எதுகைச் சொற்கள் :-
- தீட்டாதே – தீட்டு
- கத்தியை – புத்தியை
- என்றாலும் – அன்புக்கு
- இதற்குள் – இதனால்
IV. குறு வினா
1. எவ்வாறு தன்னுடைய திறமையைக் காட்ட வேண்டும்?
- கண்ணியம் தவறாமல் எடுத்த செயலில் தன்னுடைய திறமையைக் காட்ட வேண்டும்.
2. எதற்காக அறிவுக்கு வேலை கொடுத்து அமைதி காக்க வேண்டும்?
- ஆத்திரம் கண்ணை மறைந்து விடும் என்பதால் அறிவுக்கு வேலை கொடுத்து அமைதி காக்க வேண்டும்.
3. யாருடைய வாழ்க்கை, தடம் தெரியாமல் மறைந்து போய்விடும்?
- மன்னிக்க மறந்து வாழ்பவன் வாழ்க்கை, தடம் தெரியாமல் மறைந்து போய்விடும்.
4. எவற்றை எண்ணிப் பார்க்க வேண்டும்?
- பூமியல் வாழ்வது சில காலமம். அதற்குள் ஏன் அகம்பாவம்? அகம்பாவத்தால் இலாபமும் கிடைக்காது. எனவே இவற்றை மனிதர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
5. நமக்குப் பெருமை என்பது எது?
- அறிவினாலும் அன்பினாலும் பிறரை வெல்லும் வெற்றியே நமக்குப் பெருமை ஆகும்
6. ஆலங்குடி சோமு – குறிப்பு வரைக
- ஆலங்குடி சோமு திரைப்படப் பாடல் ஆசிரியராக புகழ் பெற்றவர்
- சிவகங்கை மாவட்டத்திலுள் ஆலங்குடி என்னும் ஊரில் பிறந்தவர்
- தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது பெற்றவர்
கூடுதல் வினாக்கள்
நிரப்புக :
- 1. ஆலங்குடி சோமு ………………………… ஆசிரியராகப் புகழ் பெற்றவர்.
- 2. ஆலங்குடி சோமு தமிழ்நாடு அரசின் ………………….. விருது பெற்றவர்.
- 3. தீட்ட வேண்டியது ……………………
- 4. …………………… கண்ணை மறைத்துவிடும்.
- 5. மன்னிக்கத் தெரிந்தவனின் உள்ளம் ……………………..
- 6. அகம்பாவத்தினால் ஒரு …………………….. இல்லை.
- 7. பகைவனிடமும் ……………….. காட்ட வேண்டும்.
Answer:
- 1. திரைப்படப் பாடல்
- 2. கலைமாமணி
- 3. புத்தி
- 4. ஆத்திரம்
- 5. மாணிக்கக் கோயில்
- 6. லாபமும்
- 7. அன்பு
விடையளி:
1.ஆலங்குடி சோமு – குறிப்பு வரைக.
Answer:
(i) ஆலங்குடி சோமு திரைப்படப் பாடல் ஆசிரியராகப் புகழ்பெற்றவர்.
(ii) சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஆலங்குடி என்னும் ஊரில் பிறந்தவர்.
(iii) தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது பெற்றவர்.