You are currently viewing 8th Tamil Guide Unit 4.1

8th Tamil Guide Unit 4.1

8th Tamil Guide Unit 4.1

8th Standard Tamil Tamil Samacheer kalvi guide 4th Lesson Unit 4.1 கல்வி அழகே அழகு Book Back and Additional Question answers. 8th Tamil TNPSC, TET Notes. 8th Tamil All Lesson Guide. 8th TN Text Books Download PDF. Tamil Nadu State Board Syllabus 8th standard Lesson 4 Full Guide book back and additional question & answer. 8th Tamil Guide Lesson 4 Book Back Question and Answers, 8th Standard Tamil guide Unit 4 Book Back and additional Question and answers. 8th Standard Tamil Samacheer Kalvi Guide, 8th Tamil Answer key Notes, 8th Tamil book Answers. 8th Tamil Lesson 1 to 9 Full Answer Key.
8th Tamil Guide Unit 4

8th TamiGuide Unit 4.1. கல்வி அழகே அழகு

*கற்றோர்க்குக் கல்வி நலனே கலனல்லால்
மற்றோர் அணிகலம் வேண்டாவாம் – முற்ற
முழுமணிப் பூணுக்குப் பூண்வேண்டா யாரே
அழகுக்கு அழகுசெய் வார்*
-குமரகுருபரர்

👉சொல்லும் பொருளும்

  • கலன் – அணிகலன்
  • முற்றை – ஒளிர
  • வேண்டாவாம் – தேவையில்லை

நூல் வெளி

குமரகுருபரர் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். இவர் தமிழ்மொழிக்குப் பெருமை சேர்க்கும் பல சிற்றிலக்கியங்களைப் படைத்துள்ளார்.கந்தர் கலிவெண்பா, கயிலைக் கலம்பகம், சகலகலாவல்லி மாலை, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்ஆகியன அவற்றுள் சிலவாகும்.
மக்களின் வாழ்வுக்குத் தேவையான நீதிகளைச் சுட்டிக்காட்டுவதால் இந்நூல் நீதிநெறி விளக்கம் எனப் பெயர் பெற்றது. கடவுள் வாழ்த்து உட்பட 102 வெண்பாக்கள் இந்நூலில் உள்ளன. இந்நூலின் பதின்மூன்றாம் பாடல் நமக்குப் பாடப்பகுதியாகத் தரப்பட்டுள்ளது.
8th Tamil Guide Unit 4 Book Back Question and Answers 4.1. கல்வி அழகே அழகு tn students guide

பாடலின் பொருள்

ஒளிரும் மணிகளால் செய்யப்பட்ட அணிகலனுக்கு மேலும் அழகூட்ட வேறு அணிகலன்கள் தேவையில்லை; அதுபோலக் கல்வி கற்றவர்க்கு அவர் கற்ற கல்வியே அழகு தரும். ஆகையால் அழகு சேர்க்கும் பிற அணிகலன்கள் அவருக்குத் தேவையில்லை.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. கற்றவருக்கு அழகு தருவது ____

  1. தங்கம்
  2. வெள்ளி
  3. வைரம்
  4. கல்வி

விடை : கல்வி

2. ‘கலனல்லால்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____

  1. கலன் + லல்லால்
  2. கலம் + அல்லால்
  3. கலன் + அல்லால்
  4. கலன் + னல்லால்

விடை : கலன் + அல்லால்

சொற்றொடரில் அமைத்து எழுதுக

1. அழகு

  • அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.

2. கற்றவர்

  • கல்வி கற்றவர்கள் உலகில் சிறந்தவராய் விளங்குவார்கள்.

3. அணிகலன்

  • மனிதனுக்கு கல்விதான் சிறந்த அணிகலன்

குறுவினா

யாருக்கு அழகு செய்ய வேறு அணிகலன்கள் தேவையில்லை?

  • கல்வி கற்றவர்க்கு அவர் கற்ற கல்வியே அழகு தரும்.
  • ஆகையால் அழகு சேர்க்கும் பிற அணிகலன்கள் அவருக்குத் தேவையில்லை.

சிறுவினா

நீதிநெறி விளக்கப்பாடல் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.

  • ஒளிரும் மணிகளால் செய்யப்பட்ட அணிகலனுக்கு மேலும் அழகூட்ட வேறு
  • அணிகலன்கள் தேவையில்லை.கல்வி கற்றவர்க்கு அவர் கற்ற கல்வியே அழகு தரும்.ஆகையால் அழகு சேர்க்கும் பிற அணிகலன்கள் அவருக்குத் தேவையில்லை.

கல்வி அழகே அழகு – கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. குமரகுருபரரின் காலம் ______

  1. கி.பி. 15
  2. கி.பி. 17
  3. கி.பி. 18
  4. கி.பி. 16

விடை : கி.பி. 17

2. நீதிநெறி விளக்கத்தில் உள்ள வெண்பாக்கள்  ______

  1. 100
  2. 102
  3. 103
  4. 104

விடை : 102

3. “அழகு” என்பதற்கு பொருள்  ______

  1. எழில்
  2. வாய்மை
  3. பொய்
  4. நேர்மை

விடை : எழில்

3. “கலன்” என்பதற்கு பொருள்  ______

  1. அழகு
  2. வனப்பு
  3. அணிகலன்
  4. பாவை

விடை : அணிகலன்

எதிர்சொல் தருக

  • கற்றோர் x கல்லாதோர்
  • அழகு x அழகற்ற
  • ஒளி x இருள்
  • தேவை x தேவையற்ற
  • சேர்க்கும் x நீக்கும்
  • படைத்தல் x அழித்தல்

“கல்வி அழகே அழகு” என்ற பாடலில் உள்ள எதுகை, மோனைச் சொற்களை கூறுக.

மோனைச் சொற்கள் :-

  • ற்றோர் – ல்வி – லனல்லால்
  • முற்ற – முழுமணி
  • பூணுக்கு – பூண்வேண்டா
  • ழகுக்கு – ழகு

எதுகைச் சொற்கள் :-

  • னே – கனல்லால்
  • குக்கு – அகு

குறு வினா

1. குமரகுருபரர் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்?

  • குமரகுருபரர் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.

2. நீதிநெறி விளக்கம் என பெயர் பெறக் காரணம் யாது?

  • மக்களின் வாழ்வுக்கு தேவையான நீதிகளை சுட்டிக் காட்டுவதால் இந்நூல் நீதிநெறி விளக்கம் எனப் பெயர் பெற்றது.

3. நீதிநெறி விளக்கத்தில் எத்தனை வெண்பாக்கள் உள்ளது?

  • நீதிநெறி விளக்கத்தில் 102 வெண்பாக்கள் உள்ளது.

சிறு வினா

1. மனிதர்கள் பயன்படுத்திய உலோகங்கள் எதனால் செய்யப்பட்டவை?

  • மனிதர்கள் தங்களை அழகுபடுத்திக் கொள்ள எண்ணற்ற அணிகலன்களைப் பயன்படுத்துகின்றனர்.
  • அவை தங்கம், வெள்ளி போன்ற விலைமதிப்பு மிக்க உலோகங்களால் செய்யப்பட்டவையாக உள்ளன.

2. குமரகுருபரர் படைத்துள்ள சிற்றிலக்கியங்கள் எவை?

  • சுந்தர் கலிவெண்பா
  • கயிலைக் கலம்பகம்
  • சகலகலாவல்லி மாலை
  • மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
  • முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்

3. குமரகுருபரர் – குறிப்பு வரைக

  • குமரகுருபரர் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.
  • இவர் தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்கும் பல சிற்றிலக்கியங்களை படைத்துள்ளார்.
  • சுந்தர் கலிவெண்பா, கயிலைக் கலம்பகம், சகலகலாவல்லி மாலை, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் ஆகியன அவற்றுள் சிலவாகும்.

கூடுதல் வினாக்கள

நிரப்புக :

  • 1. ஒளிரும் மணிகளால் செய்யப்பட்டது ………………………
  • 2. குமரகுருபரர் ………………….. நூற்றாண்டைச் சேர்ந்தவர்.
  • 3. கந்தர் கலிவெண்பாவை இயற்றியவர் ……………………
  • 4. குமரகுருபரர் இயற்றிய பிள்ளைத்தமிழ் நூல்கள் ………………………………
  • 5. நீதிநெறி விளக்கம் ……………….. வெண்பாக்களை உடையது.
  • 6. மக்களின் வாழ்வுக்குத் தேவையான நீதிகளைச் சுட்டிக்காட்டும் குமரகுருபரரின் நூல் ……………………….
  • 7. கற்றவருக்கு அழகு சேர்க்க …………………….. தேவையில்லை.
Answer:
  • 1. அணிகலன்
  • 2. பதினேழாம்
  • 3. குமரகுருபரர்
  • 4. மீனாட்சியம்மை பிள்ளைத்த முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்
  • 5. 102
  • 6. நீதிநெறி விளக்கம்
  • 7. அணிகலன்கள்

விடையளி :

1.குமரகுருபரர் பற்றி எழுதுக.

(i) குமரகுருபரர் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.
(ii) இவர் தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்கும் பல சிற்றிலக்கியங்களைப் படைத்துள்ளார்.

2.குமரகுருபரர் இயற்றிய நூல்கள் யாவை?

இயற்றிய நூல்கள் :
(i) கந்தர் கலிவெண்பா
(ii) கயிலைக் கலம்பகம்
(iii) சகலகலாவல்லி மாலை
(iv) மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
(v) முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்

3.நீதிநெறி விளக்கம் – பெயர்க்காரணம் எழுதுக.

மக்களின் வாழ்வுக்குத் தேவையான நீதிகளைச் சுட்டிக்காட்டுவதால் இந்நூல் ‘நீதி நெறி விளக்கம் எனப் பெயர் பெற்றது. இந்நூலில் கடவுள் வாழ்த்து உட்பட 102 வெண்பாக்கள் உள்ளன.

கல்வி கரையில கற்பவர் நாள் சில
மெல்ல நினைக்கின் பிணி பல தெள்ளிதின்
ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப்
பாலுண் குருகின் தெரிந்து

Leave a Reply