8th Tamil Guide Unit 3.5
8th Standard Tamil Samacheer Kalvi Guide 3rd Lesson Unit 3.5 Book Back and additional Questions and answers. Class 8 Lesson 3 இயல் 3.5 எச்சம் Book Back answers. 8th Tamil Full Answers. Eight Tamil TN Text Book Download Here. 8th Tamil Guide Lesson 3 Question and Answers. 8th Tamil Guide Lesson 3 Question and Answers, 8th Standard Tamil guide Unit 3 Book Back and additional Question and answers. 8th Standard Tamil Samacheer Kalvi Guide, 8th Tamil Answers Notes, 8th Tamil book Answers.
8th Tamil 3rd Lesson Guide Unit 3.5. எச்சம்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் _____ எனப்படும்.
- முற்று
- எச்சம்
- முற்றெச்சம்
- வினையெச்சம்
விடை : எச்சம்
2. கீழ்க்காணும் சொற்களில் பெயரெச்சம் _____.
- படித்து
- எழுதி
- வந்து
- பார்த்த
விடை : பார்த்த
3. குறிப்பு வினையெச்சம் _____ வெளிப்படையாகக் காட்டாது.
- காலத்தை
- வினையை
- பண்பினை
- பெயரை
விடை : காலத்தை
பொருத்துக
- நடந்து – முற்றெச்சம்
- பேசிய – குறிப்புப் பெயரெச்சம்
- எடுத்தனன் உண்டான் – பெயரெச்சம்
- பெரிய – வினையெச்சம்
விடை: 1.ஈ, 2.இ, 3.அ, 4.ஆ
கீழ்க்காணும் சொற்களைப் பெயரெச்சம், வினையெச்சம் என வகைப்படுத்துக.
நல்ல, படுத்து, பாய்ந்து, எறிந்த, கடந்து, வீழ்ந்த, மாட்டிய, பிடித்து, அழைத்த, பார்த்து.
பெயரெச்சம் | வினையெச்சம் |
---|---|
நல்ல | படுத்து |
எறிந்த | பாய்ந்து |
வீழ்ந்த | கடந்து |
மாட்டிய | பிடித்து |
அழைத்த | பார்த்து |
சிறு வினா
1. எச்சம் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?
- பொருள் முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் எச்சம் எனப்படும்.
- இது பெயரெச்சம், வினையெச்சம் என்று இருவகைப்படும்
2. ‘அழகிய மரம்’ – எச்ச வகையை விளக்குக.
- ‘அழகிய மரம்’ – இத்தொடரில் உள்ள சிறிய என்னும் சொல்லின் செயலையோ காலத்தையோ அறிய முடியவில்லை. பண்பினை மட்டும் குறிப்பாக அறியமுடிகிறது.
- இவ்வாறு செயலையோ காலத்தையோ தெளிவாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாகக் காட்டும் பெயரெச்சம் குறிப்புப் பெயரெச்சம் எனப்படும்.
3. முற்றெச்சத்தைச் சான்றுடன் விளக்குக.
- சான்று : வள்ளி படித்தனள் மகிழ்ந்தாள்.
- இத்தொடரில் படித்தனள் என்னும் சொல் படித்து என்னும் வினையெச்சப் பொருளைத் தருகிறது.
- இவ்வாறு ஒரு வினைமுற்று எச்சப்பொருள் தந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது முற்றெச்சம் எனப்படும
4. வினையெச்சத்தின் வகைகளை விளக்குக
- வினையெச்சங்கள் தெரிநிலை வினையெச்சம், குறிப்பு வினையெச்சம் என இருவகைப்படும்
- எழுதி வந்தான் – இத்தொடரில் உள்ள எழுதி என்னும் சொல் எழுதுதல் என்னும் செயலையும் இறந்த காலத்தையும் தெளிவாகக் காட்டுகிறது. இவ்வாறு செயலையும் காலத்தையும் வெளிப்படையாகத் தெரியுமாறு காட்டும் வினையெச்சம் தெரிநிலை வினையெச்சம் எனப்படும்.
- மெல்ல வந்தான் – இத்தொடரில் உள்ள மெல்ல என்னும் சொல் காலத்தை வெளிப்படையாகக் காட்டவில்லை. மெதுவாக என்னும் பண்பை மட்டும் உணர்த்துகிறது. இவ்வாறு காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாக உணர்த்திவரும் வினையெச்சம், குறிப்பு வினையெச்சம் எனப்படும்.
எச்சம் – கூடுதல் வினாக்கள்
1. பெயரெச்சம் என்றால் என்ன?
- பெயரைக் கொண்டு முடியும் எச்சம் பெயரெச்சம் ஆகும்.
2. வினையெச்சம் என்றால் என்ன?
- இவ்வாறு வினையைக் கொண்டு முடியும் எச்சம் வினையெச்சம் எனப்படும்.
3. பெயரெச்சம் எத்தனை காலத்தில் வரும்? சான்று தருக.
- பெயரெச்சம் மூன்று காலத்திலும் வரும்
- பாடிய பாடல் – இறந்தகாலப் பெயரெச்சம்
- பாடுகின்ற பாடல் – நிகழ்காலப் பெயரெச்சம்
- பாடும் பாடல் – எதிர்காலப் பெயரெச்சம்
4. பெயரெச்சத்தின் வகைகளை விளக்குக
- பெயரெச்சம் தெரிநிலை பெயரெச்சம், குறிப்புப் பெயரெச்சம் என இருவகைப்படும்
- எழுதிய கடிதம் – இத்தொடரில் உள்ள எழுதிய என்னும் சொல் எழுதுதல் என்னும் செயலையும் இறந்தகாலத்தையும் தெளிவாகக் காட்டுகிறது. இவ்வாறு செயலையும் காலத்தையும் வெளிப்படையாகத் தெரியுமாறு காட்டும் பெயரெச்சம் தெரிநிலைப் பெயரெச்சம் எனப்படும்.
- சிறிய கடிதம் – இத்தொடரில் உள்ள சிறிய என்னும் சொல்லின் செயலையோ காலத்தையோ அறிய முடியவில்லை. பண்பினை மட்டும் குறிப்பாக அறியமுடிகிறது. இவ்வாறு செயலையோ காலத்தையோ தெளிவாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாகக் காட்டும் பெயரெச்சம் குறிப்புப் பெயரெச்சம் எனப்படும்.
மொழியை ஆள்வோம்!
பொருத்துக
- காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல – ஒற்றுமையின்மை
- கிணறு வெட்டப் பூதம் கிளம்பியது போல – பயனற்ற செயல்
- பசு மரத்து ஆணி போல – தற்செயல் நிகழ்வு
- விழலுக்கு இறைத்த நீர் போல – எதிர்பாரா நிகழ்வு
- நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினாற் போல – எளிதில் மனத்தில் பதிதல்
விடை : 1 – இ, 2 – ஈ, 3 – உ , 4 – ஆ, 5 – அ
உவமைத் தொடர்களைப் பயன்படுத்தித் தொடர் அமைக்க.
1. குன்றின் மேலிட்ட விளக்கைப் போல
விடை: குன்றின் மேலிட்ட விளக்கைப் போல திருக்குறளின் புகழ் உலகமெங்கும் பரவியுள்ளது.
2. வேலியே பயிரை மேய்ந்தது போல
விடை: வேலியே பயிரை மேய்ந்தது போல நாட்டை காப்பாற்ற வேண்டிய தலைவர்களே மக்களை துன்புறுத்துகின்றன.
3. பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல
விடை: பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல பரிசுத் தொகையாக இலட்சம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தவனுக்குக் கோடி கிடைத்தது.
4. உடலும் உயிரும் போல
விடை: உடலும் உயிரும் போல கணவனும் மனைவியும் அன்போடு வாழ்ந்தன.
5. கிணற்றுத் தவளை போல
விடை: கிணற்றுத் தவளை போல மூடர்கள் தம் பேச்சினாலே தம் அறியாமையை வெளிப்படுத்தி விடுவர்.
மொழியோடு விளையாடு
கீழ்காணும் படம் சார்ந்த சொற்களை எடுத்து எழுதுக
- உரல், உலக்கை, எண்ணெய், சுக்கு, மிளகு, கருஞ்சிரகம், சீரகம், பட்டை, கிராம்பு, அண்ணாச்சி பூ, வத்தல், வெற்றிலை, கடுகு, கொத்தமல்லி, வெந்தையம், ஏலக்காய், கசகசா, புதினா, மல்லி, சோம்பு, பூண்டு
வட்டத்திலுள்ள பழமொழிகளை கண்டுபிடித்து எழுதுக
- முயற்சி திருவினையாக்கும்
- அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு
- சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்
- அறிவே ஆற்றல்
- கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
- நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
- வருமுன் காப்போம்
- சுத்தம் சோறு போடும்
- பருவத்தே பயிர் செய்
- பசித்து புசி
நிற்க அதற்குத் தக…
- கலைச்சொல் அறிவோம்.
- நோய் – Disease
- பக்கவிளைவு – Side Effect
- மூலிகை – Herbs
- நுண்ணுயிர் முறி – Antibiotic
- சிறுதானியங்கள் – Millets
- மரபணு – Gene
- பட்டயக் கணக்கர் – Auditor
- ஒவ்வாமை – Allergyy
கூடுதல் வினாக்கள்
நிரப்புக :
- 1. பொருள் முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் …………….. எனப்படும்.
- 2. எச்சம் ……………… வகைப்படும்.
- 3. பெயரைக் கொண்டு முடியும் எச்சம் ………………..
- 4. பெயரெச்சம் ……………….. காலத்திலும் வரும்.
- 5. செயலையும் காலத்தையும் வெளிப்படையாகத் தெரியுமாறு காட்டும் பெயரெச்சம் ………………… பெயரெச்சம்.
- 6. பெயரெச்சம் ………………. வகைப்படும்.
- 7. செயலையோ காலத்தையோ தெளிவாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாகக் காட்டும் பெயரெச்சம் ……………….. பெயரெச்சம்.
- 8. வினையைக் கொண்டு முடியும் எச்சம் ………………….
- 9. செயலையும் காலத்தையும் வெளிப்படையாகத் தெரியுமாறு காட்டும் வினையெச்சம் ……………….. வினையெச்சம்.
- 10. காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாக உணர்த்தி வரும் வினையெச்சம் …………………..
Answer:
- 1. எச்சம்
- 2. இரண்டு
- 3. பெயரெச்சம்
- 4. மூன்று
- 5. தெரிநிலை
- 6. இரண்டு
- 7. குறிப்புப்
- 8. வினையெச்சம்
- 9. தெரிநிலை
- 10. குறிப்பு வினையெச்சம்
விடையளி :
- 1.எச்சம் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
- எச்சம் இரண்டு வகைப்படும். அவை பெயரெச்சம், வினையெச்சம் என்பனவாம்.
- 2.பெயரெச்சம் சான்றுடன் விளக்குக.
- பொருளைக் கொண்டு முடியும் எச்சம் பெயரெச்சம் ஆகும். பெயரெச்சம் மூன்று காலத்திலும் வரும்.
- (எ.கா) பாடிய பாடல் – இறந்தகாலப் பெயரெச்சம்
பாடுகின்ற பாடல் – நிகழ்காலப் பெயரெச்சம்
பாடும் பாடல் – எதிர்காலப் பெயரெச்சம்
- 3.தெரிநிலை பெயரெச்சம் என்றால் என்ன? சான்று தருக.
- செயலையும் காலத்தையும் வெளிப்படையாகத் தெரியுமாறு காட்டும் பெயரெச்சம் தெரிநிலைப் பெயரெச்சம் எனப்படும்.
- (எ.கா) எழுதிய கடிதம்.
- 4.குறிப்புப் பெயரெச்சம் என்றால் என்ன? சான்று தருக.
- செயலையோ காலத்தையோ தெளிவாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாகக் காட்டும் பெயரெச்சம் குறிப்புப் பெயரெச்சம் எனப்படும்.
- (எ.கா) சிறிய கடிதம்.
- 5.வினையெச்சம் என்றால் என்ன? சான்று தருக.
- வினையைக் கொண்டு முடியும் எச்சம் வினையெச்சம் எனப்படும்.
- (எ.கா) படித்து முடித்தான்.
- 6.தெரிநிலை வினையெச்சம் என்றால் என்ன?
- செயலையும் காலத்தையும் வெளிப்படையாகத் தெரியுமாறு காட்டும் வினையெச்சம் தெரிநிலை வினையெச்சம் எனப்படும்.
- (எ.கா) எழுதி வந்தான்.
- 7.குறிப்பு வினையெச்சம் என்றால் என்ன? சான்று தருக.
- காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாக உணர்த்தி வரும் வினையெச்சம் குறிப்பு வினையெச்சம் எனப்படும்.
- (எ.கா) மெல்ல வந்தான்.