8th Tamil Guide Unit 3.2
8th Standard Tamil Samacheer Kalvi Guide 3rd Lesson Unit 3.2 Book Back and additional Questions and answers. Class 8 Lesson 3 இயல் 3.2 வருமுன் காப்போம் Book Back answers. 8th Tamil Full Answers. Eight Tamil TN Text Book Download Here. 8th Tamil Guide Lesson 3 Question and Answers. 8th Tamil Guide Lesson 3 Question and Answers, 8th Standard Tamil guide Unit 3 Book Back and additional Question and answers. 8th Standard Tamil Samacheer Kalvi Guide, 8th Tamil Answers Notes, 8th Tamil book Answers.
3.2. வருமுன் காப்போம்
*உடலின் உறுதி உடையவரேஉலகில் இன்பம் உடையவராம்;இடமும் பொருளும் நோயாளிக்குஇனிய வாழ்வு தந்திடுமோ?சுத்தம் உள்ள இடமெங்கும்சுகமும் உண்டு நீயதனைநித்தம் நித்தம் பேணுவையேல்நீண்ட ஆயுள் பெறுவாயே! .காலை மாலை உலாவிநிதம்காற்று வாங்கி வருவோரின்காலைத் தொட்டுக் கும்பிட்டுக்காலன் ஓடிப் போவானே!*
⏩சொல்லும் பொருளும்
- நித்தம் நித்தம் -நாள்தோறும்
- வையம் – உலகம்
- மட்டு – அ்ளவு
- பேணுவயல் -பாதுகாத்தல்
- சுண்ட -நன்கு
- திட்டுமுட்டு -தடுமாற்றம்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. காந்தியடிகள் _____ போற்ற வாழ்ந்தார்.
- நிலம்
- வையம்
- களம்
- வானம்
விடை : வையம்
2. ’நலமெல்லாம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.
- நலம் + எல்லாம்
- நலன் + எல்லாம்
- நலம் + எலாம்
- நலன் + எலாம்
விடை : நலம் + எல்லாம்
3. இடம் + எங்கும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்_____.
- இடவெங்கும்
- இடம்எங்கும்
- இடமெங்கும்
- இடம்மெங்கும்
விடை : இடமெங்கும்
“வருமுன்காப்போம்” – இப்பாடலில் இடம்பெற்றுள்ள மோனை, எதுகை, இயைபுச் சொற்களை எடுத்து எழுதுக.
மோனை
உடலின் – உலகில்
காலை – காற்று
இடமும் – இனிய
சுத்தமுள்ள – சுகமும்
அருமை – அடையும்
திட்டு – தினமும்
எதுகை
உடலின் – இடமும்
கூழை – ஏழை
சுத்தமுள்ள – நித்தம்
திட்டு – மட்டு
அருமை – வருமுன்
பட்டிடுவாய் – ஓட்டிவிடும்
இயைபு
தினமும் – இடமும்
கூழை – ஏழை
திட்டு – மட்டு
குடியப்பா – உறங்கப்பா
உணணாமல் – தின்பாயேல்
குறுவினா
1. நம்மை நோய் அணுகாமல் காப்பவை யாவை?
- நடைப்பயிற்சியும், நல்ல காற்றும் நம்மை நோய் அணுகாமல் காப்பவை ஆகும்
2. அதிகமாக உண்பதால் ஏற்படும் தீமையாகக் கவிமணி குறிப்பிடுவன யாவை?
- அதிகமாக உண்பதால் செரிமானம் தடுமாறி நாள்தோறும் நோய்வாய்ப்பட்டு பாயில் விழுவீர்கள் என கவிமணி குறிப்பிடுகிறார்.
சிறுவினா
உடல் நலத்துடன் வாழக் கவிமணி கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக
- உடலில் உறுதி கொண்டவரே, உலகில் மகிழ்ச்சி உடையவராவார். உடல் உறுதியற்ற நோயாளர்க்கு வாழும் இடமும் செல்வமும் இனிய வாழ்வு தராது.
- சுத்தம் நிறைந்துள்ள எல்லா இடங்களிலும் சுகம் உண்டு. நாள்தோறும் நீங்கள் தூய்மையைப் போற்றிப் பாதுகாத்தல் நீடித்த வாழ்நாளைப் பெயலாம்.
- காலையும், மாலையும் நடைப்பயிற்சி மேற்கொண்டு, நல்ல காற்றைச் சுவாசித்து வருவோரை நோய் அணுகாது.
- அவர் உயிரைக் கவர எமனும் அணுக மாட்டான். எனவே நீங்கள் கூழைக் குடித்தாலும் குளித்த பிறகே குடித்தல் வேண்டும்.
- நீங்கள் வறுமையில் வாழ்ந்தாலும் இரவில் நன்றாக உறங்க வேண்டும்.
- அளவாக உண்ணாமல் அதிகமாக உண்பதால் செரிமானம் தடுமாறி நாள்தோறும் நோய்வாய்ப்பட்டு பாயில் விழுவீர்கள்.
- தூய்மையான காற்றும், நல்ல குடிநீரும், நன்கு பசித்த பிறகு உண்பதும் நம்மை நோய் அணுகாமல் காப்பாற்றும்! நூறாண்டு வாழ வைக்கும்.
- அரிய நம் உடல் நலமோடு இருப்பதற்கான வழிகள் இவை என்பதை அறிவீர்களாக! ஆகவே நோய் வரும் முன் காப்போம்! உலகம் புகழ வாழ்வோம்!
வருமுன்காப்போம் – கூடுதல் வினாக்கள்
I. கோடிட்ட இடத்தை நிரப்புக
1. நோயற்ற வாழ்வே குறைவற்ற __________
விடை : செல்வம்
2. நல்ல உணவு, உடல் தூய்மை, உடற்பயிற்சி ஆகியவையே நல்ல __________ அடிப்படை
விடை : உடல் நலத்திற்கு
3. கவிமணி எனப் போற்றப்படுபவர் __________
விடை : தேசிய விநாயகனார்
4. தேசிய விநாயகனார் __________ என்னும் மொழிபெயர்ப்பு நூலை படைத்துள்ளார்.
விடை : உமர்கய்யாம் பாடல்கள்
5. உடலில் உறுதி கொண்டவரே, உலகில் __________ உடையவர்
விடை : மகிழ்ச்சி
6. சுத்தம் நிறைந்துள்ள இடங்களில் __________ உண்டு
விடை : சுகம்
7. வையம் என்பதற்கு __________ என்பது பொருள்
விடை : உலகம்
II. குறு வினா
1. எவை நம்மை நூறாண்டு வாழ வைக்ககும்?
- தூய்மையான காற்றும், நல்ல குடிநீரும், நன்கு பசித்த பிறகு உண்பதும் நம்மை நோய் அணுகாமல் காப்பாற்றும்! நூறாண்டு வாழ வைக்கும்.
2. குளித்த பிறகு செய்ய வேண்டும் செயல் என கவிமணி கூறுகிறார்?
- கூழைக் குடித்தாலும் குளித்த பிறகே குடித்தல் வேண்டும் என கவிமணி கூறுகிறார்
3. நல்ல உடல் நலத்திற்கு அடிப்படையானது எது?
- நல்ல உணவு, உடல் தூய்மை, உடற்பயிற்சி ஆகியவை நல்ல உடல் நலத்திற்கு அடிப்படை.
4. உலகில் மகிழ்ச்சி உடையவர் யார்?
- உடலில் உறுதி கொண்டவரே, உலகில் மகிழ்ச்சி உடையவர் ஆவார்
5. இனிய வாழ்வைத் தராது எவை?
- உடல் உறுதியற்ற நோயாளர்க்கு வாழும் இடமும் செல்வமும் இனிய வாழ்வு தராது.
6. கவிமணி குறிப்பு வரைக
- கவிமணி குமரி மாவட்டத்தில் தேரூரில் பிறந்தவர்
- கவமணி எனப் போற்றப்படும் தேசிய விநாயகனார் 36 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றியவர்.
- இவர் ஆசியஜோதி, மருமக்கள் வழி மான்மியம், கதர் பிறந்த கதை ஆகிய கவிதை நூல்களை இயற்றியுள்ளார்.
- தேசிய விநாயகனார் உமர்கய்யாம் பாடல்கள் என்னும் மொழிபெயர்ப்பு நூலையும் படைத்துள்ளார்.
நிரப்புக :
- 1. கவிமணி எனப் போற்றப்படுபவர் …………………
- 2. தேசிக விநாயகனார் பிறந்த ஊர் ……………
- 3. கவிமணி ஆசிரியராகப் பணியாற்றிய ஆண்டுகள் ……………….
- 4. அதிகமாக உண்டால் ………………. தடுமாறும்.
- 5. நாள்தோறும் போற்றிப் பாதுகாக்க வேண்டியது ………………..
- 6. உடலில் …………… உடையவர், உலகில் இன்பம் உடையவர்.
- 7. நோய் வந்தபின் தீர்க்க முயல்வதைவிட வருமுன் காப்பதே ………………
Answer:
1. தேசிக விநாயகனார்
2. தேரூர்
3. முப்பத்தாறு
4. செரிமானம்
5. தூய்மை
6. உறுதி
7. அறிவுடைமை
விடையளி :
1.கவிமணி தேசிக விநாயகனார் குறிப்பு எழுதுக.
Answer:
(i) தேசிக விநாயகனார் குமரி மாவட்டம் தேரூரில் பிறந்தவர்.
(ii) இவர் கவிமணி’ எனப் போற்றப்படுகிறார். ஆசிரியராகப் பணியாற்றியவர்.
(iii) இயற்றிய நூல்கள் – ஆசியஜோதி, மருமக்கள் வழிமான்மியம், கதர் பிறந்த கதை, உமர்கய்யாம் பாடல்கள் (மொழிபெயர்ப்பு நூல்).
ஆசிரியர் குறிப்பு – நூல் வெளி