8th Tamil Guide Unit 2.2
8th Standard Tamil Samacheer Kalvi Guide 2nd Lesson Book Answers
8th Standard Tamil Guide Lesson 2. இயல் 2.2 கோணக்காத்துப் பாட்டு Book Back and additional Question and answers. 8th Standard Samacheer Kalvi Guide, 8th Tamil Unit 2.2 Answers Notes, 8th Tamil Full Guide book Answers. 8th Tamil book back question iyal 2 you can download 8th Tamil book back question and answer all subjects. 8th Study Materials. 8th Tamil Answers Notes, 8th Tamil book Answers.
உருமங்கட் ரயமுகிலால் – கோணக்காத்துஉழன்று உழன்றுமெத்த அடித்ததினால்பெரிதான வீடுகளெல்லாம் – கோப்புடனேபிரிந்தும் கூரைத்தட்டுச் சரிந்ததங்கேசிங்காரமாய் வாங்கல்நகரில் – வைத்திருந்ததென்னம்பிள்ளை அத்தனையும் வின்னமாச்சுதேமங்காத காங்கயநாட்டில் – மேட்டுக்காட்டில்மாளாத பருத்திஎல்லாம் கோலாகப்போச்சுதே .ஆரங்கள்வைத்த சுவரெல்லாம் – மெத்தைவீடுஅடியோடே விழுந்ததங்கே கெடிகலங்கித்தாரங்களும் பிள்ளைகளுடன் – கூட்டிக்கொண்டுதானடந்து வேகமுடன் கூகூவென்றார்வாகுடனே தொண்டைமான்சீமை – தன்னிலேவளர்ந்தோங்கும் மாநகரம் தன்னிலேதானேசேகரமாய் வைத்தமரங்கள் – அத்தனையும்சின்னபின்ன மாய்ஒடிந்து பின்னமாச்சுதேசம்பிரமுடன் கப்பல்களெல்லாம் – கடலிலேதானடந்து வேகமுடன் வரும்போதிலேகொம்புகத்திக் கோணக்காத்து – காலனைப்போல்கோணமழை வந்துகப்பல் தான்கவிழ்ந்ததேஆர்க்காடு மைசூர்வரைக்கும் – கோணக்காத்துஅலறி லறிமெத்த அடித்ததனால்மார்க்கமான சாலையில்போன – சனங்களெல்லாம்மயங்கி மயங்கிமெத்தத் தவித்தார்களேதெத்துக்காடு காளப்பநாயக்கன் – பட்டியிலேசெத்திறந்த ஆடுமாடு மெத்தவுண்டாம்.சித்தர்கள் பொருந்திவாழும் – கொல்லிமலைசேர்ந்திருந்த நாடெல்லாம் காத்தடிச்சுதேஇப்படிக்கிச் சேதங்களானால் – குமரேசாஎப்படிப் பிழைத்துநாங்கள் ஒப்பிதமாவோம்மெய்ப்புடன்வே லாயுதங்கொண்டு – வருகின்றவீக்கினமெல் லாம்தீர்த்துக் காத்திடீரையா
சொல்லும் பொருளும்
- முகில் – மேகம்
- வின்னம் – சேதம்
- கெடிகலங்கி – மிக வருந்தி
- வாகு – சரியாக
- சம்பிரமுடன் – முறையாக
- காலன் – எமன்
- சேகரம் – கூட்டம்
- மெத்த – மிகவும்
- காங்கேய நாடு – கொங்குமண்டலத்தின் 24 நாடுகளுள் ஒன்று
பாடலின் பொருள்
அழகிய சுவர்களை உடைய மாடி வீடுகள் அடியோடு விழுந்தன. ஆடவர் தம் மனைவி, பிள்ளைகளுடன் ‘கூகூ’ என்று அலறியபடி ஓடினர். தொண்டைமான் நாட்டில் சிறப்பாக வைக்கப்பட்ட மரங்கள் அனைத்தும் சின்னாபின்னமாக ஒடிந்து விழுந்தன. கடலில் விரைந்து வந்த கப்பல், எமனைப் போல வந்த பெருமழையினாலும் சுழல் காற்றினாலும் கவிழ்ந்தது. ஆர்க்காடு முதல் மைசூர் வரை வீசிய புயலால் சாலைகளில் சென்ற மக்கள் தடுமாறித் தவித்தனர். தெத்துக்காடு, காளப்பநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் ஏராளமான ஆடு மாடுகள் இறந்தன. சித்தர்கள் வாழும் கொல்லி மலையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் புயல் அடித்தது. முருகப் பெருமானே! இத்தகைய அழிவுகளை நாங்கள் எவ்வாறு தாங்குவோம்? எங்களுக்கு வருகின்ற இடர்களை எல்லாம் தடுத்து எங்களைக் காப்பாயாக!
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. வானில் கரு _____ தோன்றினால் மழை பொழியும் என்பர்.
- முகில்
- துகில்
- வெயில்
- கயல்
விடை : முகில்
2. முறையான உடற்பயிற்சியும் சரிவிகித உணவும் _____யும் ஓட்டிவிடும்.
- பாலனை
- காலனை
- ஆற்றலை
- நலத்தை
விடை : காலனை
3. ‘விழுந்ததங்கே’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.
- விழுந்த + அங்கே
- விழுந்த + ஆங்கே
- விழுந்தது + அங்கே
- விழுந்தது + ஆங்கே
விடை : விழுந்தது + அங்கே
4. ‘செத்திறந்த’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.
- செ + திறந்த
- செத்து + திறந்த
- செ + இறந்த
- செத்து + இறந்த
விடை : செத்து + இறந்த
5. பருத்தி + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.
- பருத்திஎல்லாம்
- பருத்தியெல்லாம்
- பருத்தெல்லாம்
- பருத்திதெல்லாம்
விடை : பருத்தியெல்லாம்
குறுவினா
1. கப்பல் கவிழ்ந்ததற்குக் காரணமாகக் கோணக்காத்துப் பாட்டு கூறுவது யாது?
- எமனைப் போல வந்த பெருமையும், சூழல் காற்றும் கப்பல் கவிழ்ந்ததற்குக் காரணமாகும்.
2. புயல்காற்றினால் தொண்டைமான் நாட்டில் ஏற்பட்ட அழிவு யாது?
- தொண்டைமான் நாட்டில் சிறப்பாக வைக்கப்பட்ட மரங்கள் அனைத்தும் சின்னா பின்னமாகப் புயல் காற்றால் ஒடிந்து விழுந்தன.
3. கொல்லிமலை பற்றிப் பாடல் கூறும் செய்தி யாது?
- சித்தர்கள் வாழும் மலை கொல்லிமலை. அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் புல் அடித்தது.
சிறுவினா
1. புயல் காற்றினால் மரங்களுக்கு ஏற்பட்ட நிலைகளாகப் பாடல் குறிப்பிடும் கருத்துகள் யாவை?
- வொங்கல் என்னும் ஊரில் அழகாக வைக்கப்பட்ட தென்னம்பிள்ளைகள் எல்லாம் வீணாயின.
- தொண்டைமான் நாட்டில் சிறப்பாக வைக்கப்பட்ட மரங்கள் அனைத்தும் சின்னா பின்னமாகப் புயல் காற்றால் ஒடிந்து விழுந்தன.
2. கோணக்காற்றால் வீடுகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் யாவை?
- திரண்டு எழுந்த மேகங்களால் உருவான காற்று வேகமாக அடித்ததால் பெரிய வீடுகளின் கூரைகள் எல்லாம் மொத்தமாகப் பிரிந்து சரிந்தன. அழகிய சுவர்களை உடைய மாடி வீடுகள் அடியோடு வீழ்ந்தன.
கோணக்காத்துப் பாட்டு – கூடுதல் வினாக்கள்
I. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. ____________ அடிக்கடி புயலால் தாக்கப்படும் பகுதியாகும்.
விடை : தமிழ்நாடு
2. சேகரம் என்பதன் பொருள் ____________
விடை : கூட்டம்
3. ____________ கொங்கு மண்டலத்தின் 24 நாடுகளுள் ஒன்று
விடை : காங்கேய நாடு
4. பருத்திச் செடிகள் எல்லாம் சிதைவு அடைந்த நாடு ____________
விடை : காங்கேய நாடு
II. பிரித்து எழுதுக
- வீடுகளெல்லாம் = வீடுகள் + எல்லாம்
- தென்னம்பிள்ளை = தென்னம் + பிள்ளை
- சுவரெல்லாம் = சுவர் + எல்லாம்
- தானடந்து = தான் + அடைந்து
- நாடெல்லாம் = நாடு + எல்லாம்
- செத்திறந்து = செத்து + இறந்து
- மார்க்கமான = மார்க்கம் + ஆன
- வேகமுடன் = வேகம் + உடன்
III. குறுவினா
1. புலவர்கள் எவற்றை கும்மி பாடல்களாகப் பாடினர்?
- நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்ட காலங்களில், மக்கள் பட்ட துயரங்களை அக்காலத்தில் வாழ்ந்த புலவர்கள் கும்மி பாடல்களாகப் பாடினர்.
2. இயற்கை எப்பட்டது?
- இயற்கை மிகவும் அழகானது; அமைதியானது; மக்களுக்கு மகிழ்ச்சி ஊட்டுவது.
3. இயற்கை சீற்றம் கொண்டு பொங்கி எழுந்தால் என்ன நேரிடும்?
- சீற்றம் கொண்டு பொங்கி எழுந்தால் பெரும் அழிவை ஏற்படுத்திவிடும்
4. மாடி வீடுகள் எப்படி விழந்தன?
- அழகிய சுவர்களை உடைய மாடி வீடுகள் அடியோடு விழுந்தன
5. யாரெல்லாம் எப்படி அலறியபடி ஓடினர்?
- ஆடவர்கள் மனைவி பிள்ளைகளுடன் “கூ” “கூ” என்று அலறியபடி ஓடினர்
6. எந்த நாட்டில் பருத்திச் செடிகள் சிதைந்தன?
- அழவில்லாத காங்கேய நாட்டின் மேட்டுப் பகுதிகளில் வளர்ந்திருந்த பருத்திச் செடிகள் எல்லாம் சிதைவு அடைந்து வெறும் குச்சிகளாக மாறின
நிரப்புக :
- 1. இயற்கை மிகவும் ……………………
- 2. தமிழ்நாடு அடிக்கடி ………………. தாக்கப்படும் பகுதியாகும்.
- 3. பேச்சுத் தமிழில் அமைந்த கும்மிப்பாடல்கள் …………………….. என்று அழைக்கப்பட்டன.
- 4. பஞ்சக்கும்மிகள் என்னும் நூல் …………………….. என்பவரால் தொகுக்கப்பட்டது.
- 5. காத்து நொண்டிச்சிந்து’ இயற்றியவர் ……………………
Answer:
- 1. அழகானது, அமைதியானது
- 2. புயலால்
- 3. பஞ்சக்கும்மிகள்
- 4. புலவர் செ. இராசு
- 5. வெங்கம்பூர் சாமிநாதன்