You are currently viewing 8th Tamil Guide Unit 1.3

8th Tamil Guide Unit 1.3

8th Tamil Guide Unit 1.3

8th Standard Tamil Samacheer kalvi guide Lessin 1 – இயல் 1.3 தமிழ் வரிவடிவ வளர்ச்சி

8th Standard Tamil Guide Lesson 1. இயல் 1.3 தமிழ் வரிவடிவ வளர்ச்சி Book Back and additional Question and answers. 8th Standard Samacheer Kalvi Guide, 8th Tamil Unit 1.3  Answers Notes, 8th Tamil Full Guide book Answers. 8th Tamil book back question iyal 1 you can download 8th Tamil book back question and answer all subjects. 8th Study Materials.

8th Tamil Guide Unit 1

8th Tamil Guide Unit 1.3 தமிழ் வரிவடிவ வளர்ச்சி

8th Tamil Guide Unit 1.3
தெரிந்து தெளிவோம்

கல்வெட்டுகளில் உள்ள எழுத்துகளின் அமைப்பு

  • 1. ‘ஸ எனும் வடமொழி எழுத்து காணப்படுகிறது.
  • 2. மெய்யைக் குறிக்கப் புள்ளி பயன்படுத்தவில்லை.
  • 3. எகர, ஒகரக் குறில் நெடில் வேறுபாடில்லை.

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற _____ காரணமாக அமைந்தது?

  1. ஓவியக்கலை
  2. இசைக்கலை
  3. அச்சுக்கலை
  4. நுண்கலை

விடை : அச்சுக்கலை

2. வளைந்த கோடுகளால் அமைந்த மிகப்பழைய தமிழ் எழுத்து ______ என அழைக்கப்படுகிறது?

  1. கோட்டெழுத்து
  2. வட்டெழுத்து
  3. சித்திர எழுத்து
  4. ஓவிய எழுத்து

விடை : வட்டெழுத்து

3. தமிழ் எழுத்துச் சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டவர் _____.

  1. பாரதிதாசன்
  2. தந்தை பெரியார்
  3. வ.உ. சிதம்பரனார்
  4. பெருஞ்சித்திரனார்

விடை : தந்தை பெரியார்

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. கடைச்சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழ் எழுத்துகள் ________________ என அழைக்கப்பட்டன.

விடை : கண்ணெழுத்துக்கள்

2. எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களைக் களைந்தவர் ________________

விடை : வீரமாமுனிவர்

III. குறுவினா

1. ஓவிய எழுத்து என்றால் என்ன?

  • தொடக்க காலத்தில் எழுத்து என்பது பொருளின் ஓவிய வடிவமாகவே இருந்தால் அதனை ஓவிய எழுத்து என்பர்.

2. ஒலி எழுத்து நிலை என்றால் என்ன?

  • ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலையை ஒலி எழுத்து நிலை என்பர்.

3. ஓலைச்சுவடிகளில் நேர்கோடுகள், புள்ளிகள் ஆகியவற்றைப் பயன்படுத்த இயலாமைக்குக் காரணம் என்ன?

  • புள்ளியிட்டு எழுதினால் ஓலைச்சுவடி சிதைந்துவிடும்
  • நேர்கோடிட்டு எழுதினால் ஓலைச்சுவடி கிழிந்து விடும்
  • ஆகிய காரணங்களால் ஓலைச்சுவடிகளில் நேர்கோடுகள், புள்ளிகள் ஆகியவற்றைப் பயன்படுத்த இயலவில்லை

4. வீரமாமுனிவர் மேற்கொண்ட எழுத்துச் சீர்திருத்தங்களில் எவையேனும் இரண்டனை எழுதுக

  • ஒகர வரிசை எழுத்துக்களில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களை வீரமாமுனிவர் போக்கினார்.
  • “எ” என்னும் எழுத்திற்குக் கீழ்க்கோடிட்டு “ஏ” என்னும் எழுத்தை நெடிலாகவும் “ஒ” என்னும் எழுத்திற்குச் சுழி இட்டு “ஓ” என்னும் எழுத்தாக உருவாக்கினார்

IV. சிறுவினா

1. எழுத்துச் சீர்திருத்தத்தின் தேவை குறித்து எழுதுக.

  • ஓலைச் சுவடிகளிலும் கல்வெட்டுகளிலும் புள்ளிபெறும் எழுத்துகளை எழுதும்போது அவை சிதைந்துவிடும் என்பதால் புள்ளி இடாமல் எழுதினர்.
  • ஓலைச் சுவடிகளில் நிறுத்தற் குறிகளும் பத்தி பிரித்தலும் கிடையாது.
  • புள்ளி இடப்பட்டு எழுதப்படும் இடங்களில் புள்ளிகள் தெளிவாகத் தெரியாத நிலையில் அவற்றின் இடம் நோக்கி மெய்யா உயிர்மெய்யா, குறிலா நெடிலா என உணர வேண்டிய நிலை இருந்தது.
  • இதனால் படிப்பவர்கள் பெரிதும் இடருற்றனர். எனவே எழுத்துச் சீர்திருத்தம் வேண்டியதாயிற்று.

2. தமிழ் எழுத்துகளில் ஏற்பட்ட உருவ மாற்றங்களை எழுதுக.

  • நெடிலைக் குறிக்க ஒற்றைப்புள்ளிக்குப் பதிலாக இக்காலத்தில் துணைக்கால் (ர) பயன்படுகின்றது.
  • ஐகார உயிர்மெய்யைக் குறிக்க எழுத்துக்கு முன் இருந்த இரட்டைப்புள்ளிக்குப் பதிலாக இக்காலத்தில் இணைக்கொம்பு (ை) பயன்படுகின்றது.
  • ஒளகார உயிர்மெய்யைக் குறிக்க எழுத்துக்குப் பின் இருந்த இரட்டைப்புள்ளிக்குப் பதிலாக இக்காலத்தில் கொம்புக்கால் (ள) பயன்படுகின்றது.
  • குற்றியலுகர, குற்றியலிகர எழுத்துகளின் மேல் புள்ளி இடும் வழக்கம் இக்காலத்தில் வழக்கொழிந்து விட்டது.

V. நெடுவினா

எழுத்துகளின் தோற்றம் குறித்து எழுதுக.

  • மனிதன் தனக்கு எதிரே இல்லாதவர்களுக்கும் பின்னால் வரும் தலைமுறையினருக்கும் தனது கருத்துகளைத் தெரிவிக்க விரும்பினான்.
  • அதற்காகப் பாறைகளிலும் குகைச் சுவர்களிலும் தன் எண்ணங்களைக்
  • குறியீடுகளாகப் பொறித்து வைத்தான். இதுவே எழுத்து வடிவத்தின் தொடக்க நிலை ஆகும்.
  • தொடக்க காலத்தில் எழுத்து என்பது ஒலியையோ வடிவத்தையோ குறிக்காமல் பொருளின் ஓவிய வடிவமாகவே இருந்தது. இவ்வரி வடிவத்தை ஓவிய எழுத்து என்பர்.
  • அடுதத்ததாக ஒவ்வொரு வடிவமும் அவ்வடிவத்துக்கு உரிய முழு ஒலியாகிய சொல்லைக் குறிப்பதாக மாறியது.
  • அதன்பின் ஒவ்வொரு வடிவமும் அச்சொல்லின் முதல் ஓசையைக் குறிப்பதாயிற்று. இவ்வாறு ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து

தமிழ் வரிவடிவ வளர்ச்சி – கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. மொழியை நிலைபெறச் செய்ய ________________ உருவாக்கினான்

விடை : எழுத்துகளை

2. ‘ஸ’ எனும் ________________ காணப்படுகிறது.

விடை : வட எழுத்து

3. தமிழ் எழுத்துக்களின் பழைய வரி வடிவங்களை கருங்கல் ________________, ________________ காணமுடிகிறது

விடை : சுவர்களிலும், செப்பேடுகளிலும்

4. வரி வடிவங்களை ________________, ________________ என இருவகைப்படுத்தலாம்.

விடை : வட்டெழுத்து, தமிழெழுத்து

5. ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலையை ________________ என்பர்.

விடை : ஒலி எழுத்து நிலை

II. குறுவினா

1. மனிதன் எதற்கு மொழியைக் கண்டுபிடித்தான்?

  • மனிதன் தன் கருத்தைப் பிறருக்கு அறிவிக்க மொழியைக் கண்டுபிடித்தான்.

2. மொழிக்கு மொழி எவை வேறுபடுகின்றன?

  • எழுத்துகளின் வரிவடிவங்கள் மொழிக்கு மொழி வேறுபடுகின்றன. அவை ஒரே மொழியிலும் கூட, காலந்தோறும் மாறி வருகின்றன.

கூடுதல் வினாக்கள்

நிரப்புக :

  • 1. எழுத்துகளின் வரிவடிவங்கள் மொழிக்கு மொழி வேறுபடுகின்றன.
  • 2. பாறைகளிலும் குகைச் சுவர்களிலும் தன் எண்ணங்களைக் குறியீடுகளாகப் பொறித்து வைத்தான்.
  • 3. பொருளின் ஓவிய வடிவமாக இருந்த வரிவடிவம் ஓவிய எழுத்து.
  • 4. ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலை ஒலி எழுத்து நிலை.
  • 5. தமிழ் எழுத்துகளின் பழைய வரி வடிவங்கள் காணப்படும் இடங்கள் கோவில்களிலுள்ள கருங்கல் சுவர்கள்.
  • 6. வளைந்த கோடுகளால் அமைந்த மிகப் பழைய தமிழ் எழுத்து வட்டெழுத்து.
  • 7. கல்வெட்டுகள் மூன்றாம் நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன.
  • 8. செப்பேடு, கல்வெட்டில் காணப்படும் வரிவடிவங்கள் வட்டெழுத்து, தமிழெழுத்து என இருவகைப்படும்.
  • 9. அரச்சலூர் கல்வெட்டில் தமிழ் எழுத்தும் வட்டெழுத்தும் கலந்து எழுதப்பட்டுள்ளன.
  • 10. எட்டாம் நூற்றாண்டு முதல் பதினொன்றாம் நூற்றாண்டு வரை கிடைக்கும் சாசனங்களில் இடம்பெற்ற எழுத்துகள் வட்டெழுத்துகள்.
  • 11. முதலாம் இராசராச சோழனின் ஆட்சிக் காலம் பதினொன்றாம் நூற்றாண்டு.
  • 12. ‘கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி’ என்னும் தொடர் இடம்பெற்ற நூல் சிலப்பதிகாரம்.
  • 13. பழங்காலத்தில் கற்பாறை, செப்பேடு, ஓலை போன்றவற்றில் எழுதினர்.
  • 14. தமிழ்மொழியை எழுத இருவகை எழுத்துகள் இருந்ததற்குச் சான்றாக அமைந்த கல்வெட்டு அரச்சலூர் கல்வெட்டு.

குறுவினாக்கள் :

1.எழுத்து வடிவத்தின் தொடக்கநிலை யாது?

மனிதன் தனக்கு எதிரே இல்லாதவர்களுக்கும் பின்னால் வரும் தலைமுறையினருக்கும் தனது – கருத்துகளைத் தெரிவிக்க விரும்பினான். அதற்காகப் பாறைகளிலும் குகைச் சுவர்களிலும் தன் எண்ணங்களைக் குறியீடுகளாகப் பொறித்து வைத்தான். இதுவே எழுத்து வடிவத்தின் தொடக்கநிலை ஆகும்.

2.தமிழ் எழுத்துகள் எப்போது நிலையான வடிவத்தைப் பெற்றன?

காலந்தோறும் தமிழ் எழுத்துகளின் வரிவடிவங்கள் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி வளர்ச்சி அடைந்து வந்துள்ளன. அச்சுக்கலை தோன்றிய பிறகே தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற்றுள்ளன.

3.கண்ணெழுத்து – குறித்து எழுதுக.

கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் கண்ணெழுத்துகள் என்று அழைக்கப்பட்டன. இதனைச் சிலப்பதிகாரத்தில் இடம்பெறும், ‘கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி’ என்னும் தொடரால் அறியலாம்.

4.எழுத்துகளில் மாற்றங்கள் ஏற்பட காரணங்களாக அமைந்தவை யாவை?

எழுத்துகளில் மாற்றங்கள் ஏற்பட எழுதப்படும் பொருள்களின் தன்மை, அழகுணர்ச்சி போன்றவை காரணங்களாக அமைந்தன.

5.தமிழ்மொழியின் வரிவடிவ வளர்ச்சியின் இன்றைய நிலை யாது?

காலந்தோறும் ஏற்பட்ட வரிவடிவ வளர்ச்சி காரணமாகத் தமிழ்மொழியைப் பிற மொழியினரும் எளிதில் கற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்மொழிகணினிப்பயன்பாட்டிற்கு ஏற்ற மொழியாகவும் மாற்றம் பெற்றுள்ளது.

சிறுவினாக்கள் :

1.பேச்சுமொழி எவ்வாறு உருவானது?

  • (i) மனிதன் தோன்றிய காலத்தில் தனது தேவைகளையும் கருத்துகளையும் மற்றவர்களுக்குத் தெரிவிக்கச் சைகைகளைப் பயன்படுத்தினான்.
  • (ii) காலப்போக்கில் தனது குரலைப் பயன்படுத்தி ஒலிகள் மூலம் தனது கருத்துகளை வெளிப்படுத்த முற்பட்டான்.
  • (iii) அடுத்துச் சிறிது சிறிதாகச் சொற்களைச் சொல்லக் கற்றுக்கொண்டான். அவை மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டதால் செம்மைப்பட்டுக் காலப்போக்கில் அவை பண்பட்டுப் பேச்சுமொழி உருவானது.

2.தமிழ் எழுத்துகளின் பழைய வரி வடிவங்கள் பற்றி எழுதுக.

  • (i) தமிழ் எழுத்துகளின் பழைய வரி வடிவங்களை கோவில்களிலுள்ள கருங்கல் சுவர்களிலும் செப்பேடுகளிலும் காணமுடிகிறது.
  • (ii) கல்வெட்டுகள் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன. செப்பேடுகள் கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன.
  • (iii) கல்வெட்டுகள், செப்பேடுகள் ஆகியவற்றில் காணப்படும் வரிவடிவங்களை வட்டெழுத்து, தமிழெழுத்து என இருவகையாகப் பிரிக்கலாம்.

3.பெரியார் மேற்கொண்ட எழுத்துச் சீர்திருத்தங்களில் எவையேனும் நான்கனை எழுதுக.

8th Tamil Guide Unit 1 தமிழ் இன்பம்

4.இரு வகையான எழுத்துகள் பற்றி எழுதுக.

  • (i) வட்டெழுத்து என்பது வளைந்த கோடுகளால் அமைந்து மிகப் பழைய தமிழ் எழுத்து ஆகும். தமிழ் எழுத்து என்பது இக்காலத்தில் எழுதப்படும் தமிழ் எழுத்துகளின் பழைய வரி வடிவம் ஆகும்.
  • (ii) சேர மண்டலம், பாண்டிய மண்டலம் ஆகிய பகுதிகளில் எட்டாம் நூற்றாண்டு முதல் பதினொன்றாம் நூற்றாண்டு வரை கிடைக்கும் சாசனங்களில் வட்டெழுத்துகளே இடம் பெற்றுள்ளன.
  • (iii) முதலாம் இராசராச சோழனின் ஆட்சிக் காலமான பதினொன்றாம் நூற்றாண்டுக்குப் பிறகு கிடைக்கும் கல்வெட்டுகளில் பழைய தமிழ் எழுத்துகள் காணப்படுகின்றன.

5.தமிழ் எழுத்துகளில் புள்ளிகளின் நிலை பற்றி எழுதுக.

  • (i) எகர ஒகர குறில் எழுத்துகளைக் குறிக்க எழுத்துகளின் மேல் புள்ளி வைக்கும் வழக்கம் தொல்காப்பியர் காலம் முதல் இருந்து வந்துள்ளது.
  • (ii) எடுத்துக்காட்டாக எது என எழுதப்பட்டால் எது என்றும் எது என எழுதப்பட்டால் ஏது என்றும் ஒலித்தனர்.
  • (iii) அகர வரிசை உயிர்மெய்க் குறில் எழுத்துகளை அடுத்துப் பக்கப்புள்ளி இடப்பட்டால் அவை நெடிலாகக் (க. = கா, த. = தா) கருதப்பட்டன.
  • (iv) ஐகார எழுத்துகளைக் குறிப்பிட எழுத்துகளின் முன் இரட்டைப் புள்ளி இட்டனர். (.க =கை)
  • (v) எகர வரிசை உயிர்மெய்க் குறில் எழுத்துகளை அடுத்து இருபுள்ளிகள் இடப்பட்டால் அவை ஒளகார வரிசை எழுத்துகளாகக் கருதப்பட்டன. (கெ.. = கௌ, தெ..= தெள).
  • (vi) மகர எழுத்தைக் குறிப்பிட, பகர எழுத்தின் உள்ளே புள்ளி இட்டனர்.
  • (vii) குற்றியலுகர, குற்றியலிகர எழுத்துகளைக் குறிக்க அவற்றின் மேலேயும் புள்ளி இட்டனர்.

நெடுவினா :

1.எழுத்துச் சீர்திருத்தத்தில் வீரமாமுனிவர், பெரியார் மேற்கொண்டவை எவை?

வீரமாமுனிவர் :
  • தமிழ் எழுத்துகளில் மிகப்பெரும் சீர்திருத்தத்தைச் செய்தவர் வீரமாமுனிவர். எகர, ஒகர வரிசை எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களை அவர் களைந்தார். எ என்னும் எழுத்திற்குக் கீழ்க்கோடிட்டு ஏ என்னும் எழுத்தை நெடிலாகவும் ஒ என்னும் எழுத்திற்குச் சுழி இட்டு ஓ என்னும் எழுத்தாகவும் உருவாக்கினார்.
  • அதேபோல ஏகார ஓகார வரிசை உயிர்மெய் நெடில் எழுத்துகளைக் குறிக்க இரட்டைக்கொம்பு இரட்டைக் கொம்புடன் கால் சேர்த்து போ) புதிய வரி வடிவத்தை அறிமுகப்படுத்தினார்.
வீரமாமுனிவரின் எழுத்துச் சீர்திருத்தம் :
 
8th Tamil Guide Unit 1 தமிழ் இன்பம்
பெரியார் எழுத்துச் சீர்திருத்தம் :
  • இருபதாம் நூற்றாண்டு வரை ணா, றா, னா ஆகிய எழுத்துகளை ணா, றா, னா என எழுதினார். அதே போல ணை, லை, ளை, னை ஆகிய எழுத்துகளை ணை, லை, ளை, னை என எழுதினார். இவற்றை அச்சுக்கோப்பதற்காக இவ்வெழுத்துகளுக்குத் தனி அச்சுகள் உருவாக்கப்பட வேண்டியிருந்தது. இக்குறைகளை நீக்குவதற்காகத் தந்தை பெரியார் எழுத்துச் சீர்திருத்தம் செய்தார். அவரது எழுத்துச் சீர்திருத்தங்கள் சில ஏற்கப்பட்டு தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
8th Tamil Guide lesson 1

Leave a Reply