8th Social Science Economics Guide Unit 2
8th Standard Social Science Civics Guide Lesson 2 பொது மற்றும் தனியார் துறைகள்
8th Standard Social Science Civics Guide Lesson 2 பொது மற்றும் தனியார் துறைகள் Tamil Medium Guide Book Back Question and answers download pdf. 8th STD All Subject Guide. Tamil Nadu Start Board Syllabus Samacheer kalvi 8th std all Lesson / Units question and answers. 8th Social Science TEXT Books download pdf. Tamil and English Text books. 8th Standard Tamil Guide.
8th Social Science Economics Guide Unit 2 பொது மற்றும் தனியார் துறைகள்
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:
1. இந்தியாவில் பொதுத்துறைகளின் தோற்றத்திற்கு காரணமாக இந்திய அரசின் தொழில் கொள்கையின் தீர்மானம் ……………………….. ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது
- 1957
- 1958
- 1966
- 1956
விடை : உச்சநீதிமன்றம்
2. கலப்புப் பொருளாதார நன்மைகளின் கலவை என்பது
- முதலாளித்துவம்
- சமதர்மம்
- அ மற்றும் ஆ சரி
- அ மற்றும் ஆ தவறு
விடை : அ மற்றும் ஆ சரி
3. …………………… நிறுவனச் சட்டம் மற்றும் அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படும் முதன்மையான முக்கிய பங்குதாரர்
- தனியார் துறை
- கூட்டுத் துறை
- பொதுத்துறை
- இவற்றில் எதுவுமில்லை
விடை : பொதுத்துறை
4. பொதுத்துறை ……………….. உடையது
- இலாப நோக்கம்
- சேவை நோக்கம்
- ஊக வணிக நோக்கம்
- இவற்றில் எதுவுமில்லை
விடை : சேவை நோக்கம்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக:
- _____________ மற்றும் _____________ ஆகியவை சமூகத்தின் அனைத்து பிரிவினரின் பொருளாதார நலனை மேம்படுத்துவதில் அந்தந்த பணிகளை மேற்கொள்வதில் அரசால் அனுமதிக்கப்பட்டுள்ளது விடை :பொதுத்துறை மற்றும் தனியார் துறை
- தனியார் துறை _____________ நோக்கத்தில் செயல்படுகிறது விடை : இலாப
- _____________ என்பது ஒரு சமூகத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியின் செயல்முறையாகும்விடை : சமூக பொருளாதார மேம்பாடு
- தனியார் துறையின் முக்கிய செயல்பாடுகளை தோற்றுவிப்பது _____________ மற்றும் _____________ ஆகும்விடை : புதுமை மற்றும் நவீனமாதல்
- குடிமக்கள் மத்தியில் _____________ மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்த அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதுவிடை : சமூக பொருளாதார மேம்பாடு
III.பொருத்துக
- மதியுரையகக் குழு – முதன்மை துறை
- வேளாண்மை – மொத்த உள்நாட்டு உற்பத்தி
- தொழில்கள் – நிதி ஆயோக்
- GDP – நவரத்னா தாெழில்
- BHEL – இரண்டாம் துறை
விடை : 1 – இ, 2 – அ, 3 – உ, 4 – ஆ, 5 – ஈ
IV பொருத்தமற்றதை கூறு
1. சமூகப் பொருளாதார முன்னேற்றத்தை அளவிட பின்வருவனற்றில் எந்தக் குறியீடு பயன்படுத்தப்படுவதில்லை
- கருப்புபணம்
- ஆயுட்காலம்
- மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP)
- வேலைவாய்ப்பு
விடை : கருப்புபணம்
2. பின்வருவனற்றுள் எது சரியான விடை
- அரசுக்கு மட்டுமே சொந்தமான தொழில்கள் அட்டவணை – A என குறிப்பிடப்படுகின்றன
- தனியார் துறையானது மாநில துறையின் முயற்சிக்கு துணை புரியக் கூடிய தொழில்கள் புதிய அலகுகளை தொடங்குவதற்கான முழு பொறுப்பையும் அரசு ஏற்றுக்கொள்வது அட்டவணை – B என குறிப்பிடப்படுகின்றன
iii. தனியார் துறையில் இருந்த மீதமுள்ள தொழில்கள் அட்டவணையில் குறிப்பிடப்படவில்லை
- அனைத்தும் சரி
- i மற்றும் iii சரி
- i மற்றும் ii சரி
- இவற்றில் எதுவும் இல்லை
விடை : i மற்றும் ii சரி
VI. பின்வரும் வினாக்களுக்கு ஒரிரு வாக்கியங்களில் விடையளி
1. பொதுத்துறைகள் குறித்து சிறு குறிப்பு எழுதுக
- அரசு, பொதுமக்களுக்கு பண்டங்கள் மற்றம் சேவைகளை வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பொதுத்துறை ஆகும். இது அரசாங்கத்தால் நடத்தப்படுகிறது
2. சமுதாய தேவை என்றால் என்ன?
- கல்வியறிவு, வேலைவாய்ப்பு, சமூக பொருளாதார மேம்பாடு, சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரம் ஆகியனவாகும்
3. பொதுத்துறைகளின் நோக்கங்கள் யாவை?
- விரைவான பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துதல்
- வளர்ச்சிக்கான நிதி ஆதாரங்களை உருவாக்குதல்
- வருமானம் மற்றம் செல்வங்களை மறுபகிர்வு செய்வதை ஊக்குவித்தல்
- வேலை வாய்ப்புகளை உருவாக்குதல்
- சமச்சீர் வட்டார வளர்ச்சியை ஊக்குவித்தல்
- சிறிய அளவிலான மற்றும் துணைத் தொழில்களின் வளர்ச்சியை ஊக்குவித்தல்
- ஏற்றுமதி ஊக்குவிப்பு மற்றும் இறக்குமதி மாற்றீடை துரிதப்படுத்துதல்
4. பொதுத்துறைகளின் மூன்று உறுப்புகள் யாவை?
- அரசுத்துறைகளால் நிர்வாகம் செய்யப்படும் நிறுவனங்கள்
- கூட்டுத்துறை நிறுவனங்கள்
- பொதுக்கழகம்
5. சமூக பொருளாதார மேம்பாட்டை அளவிடும் சில குறியீடுகளின் பெயர்களை கூறுக
- மொத்த உள்நாட்டு உற்பத்தி GDP
- ஆயுட்காலம்
- கல்வியறிவு
- வேலைவாய்ப்பின் அளவு
6. தனியார் துறை குறித்து சிறு குறிப்பு எழுதுக
- தனியார் தனிநபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு சொந்தமான அவர்களால் கட்டுப்படுத்தப்பட்டு மற்றும் நிர்வகிக்கப்படும் ஒரு தேசிய பொருளாதாரத்தின் பிரிவு தனியார் துறை என்று அழைக்கப்படுகிறது
7. தனியார் துறை நிறுவனங்களில் ஏதேனும் மூன்றினை கூறு
- இன்போசிஸ் நிறுவனம்
- ஆதித்யா பிர்லா நிறுவனம்
- ரிலையன்ஸ
- டாட்டா குழும நிறுவனங்கள்
- விப்ரோ நிறுவனம்
- இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம்
- ஐசிஐசிஐ வங்கி நிறுவனம்
VII. பின்வருபவைகளுக்கு விரிவான விடை தருக
1. பொதுத்துறையின் உறுப்புகள் பற்றி விளக்குக
அரசுத்துறைகளால் நிர்வாகம் செய்யப்படும் நிறுவனங்கள்
- ஒரு அரசாங்க துறையின் நிர்வாகம் என்பது பெரும்பாலும் அனைத்து நாடுகளிலும் பொதுவானது ஆகும்
- எ.கா. தபால் மற்றும் தந்தி, இரயில்வே, துறைமுக அறக்கட்டளை
கூட்டுத்துறை நிறுவனங்கள்
- ஒரு நிறுவன சட்டத்தால் நிர்வகிக்கப்படுகிறது மற்றும் அரசாங்கம் ஒரு பிரதான பங்குதாரராக இருந்து கட்டுப்படுத்தப்படுகிறது
- எ.கா. இந்தியன் ஆயில் பெட்ரோனாஸ் தனியார் நிறுவனம், இந்தியன் ஆயில் ஸ்கை டேங்கிங் நிறுவனம், ரத்னகிரி கேஸ் அண்ட் பவர் தனியார் நிறுவனம், இந்தியன் செயற்கை ரப்பர் நிறுவனம்
பொதுக்கழகம்
- பொதுக்கழக அமைப்பானது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டத்தினால் பொதுக்கழகத்தினை நிறுவுவதே ஆகும்
- எ.கா. ஆயுள் காப்பீட்டு நிறுவனம், ஏர் இந்தியா, இந்திய ரிசர்வ் வங்கி, மின்சார வாரியம்
2. பொதுத்துறையின் வரலாற்றை சுருக்கமாக விளக்குக
- 1947இல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, அது பலவீனமான தொழில் தளத்தை கொண்ட வேளாண்மையை முதன்மையாக கொண்ட நாடாகும்.
- 1948ஆம் ஆண்டு முதல் தொழில்துறை கொள்கை தீர்மானத்தின் அறிவிப்பில் தொழில்துறை வளர்ச்சியின் யுக்திகளை பரந்த வரையறைகளைக் கொண்ட வகுத்தது
- தொழில்துறை வளர்ச்சியை ஒழுங்குபடுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கத்திற்கு அதிகாரம் அளிக்கும் நோக்கத்துடன் 1951ஆம் ஆண்டில் தொழில்துறை சட்டம் இயற்றப்பட்டது
- இந்தியாவின் இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டமும் (1956-60) 1956ம் ஆண்டு தொழில்துறை கொள்கை தீர்மானமும் நேருவின் தேசிய தொழில்மயமாக்கல் கொள்கையை பூர்ததி செய்ய பொதுத்துறை நிறுவனங்களின் வளர்ச்சியை வலியுறுத்தியது
- அவரது பார்வையை இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களின் தந்தை என்று அழைக்கப்படும் டாக்டர் வி. கிருஷ்ணமூர்த்தி முன்னெடுத்துள்ளார்.
3. சமூக – பொருளாதார மேம்பாட்டினை அளவிடும் குறியீடுகள் ஏதேனும் ஐந்தினை பற்றி விளக்குக
மொத்த உள்நாட்டு உற்பத்தி
சமூக – பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதில் மொத்த உள்நாட்டு உற்பத்தி பெரிதும் துணைபுரிகிறது
ஆயுட்காலம்
- 2011 ஆம் ஆண்டு இந்தியாவின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி சராசரி ஆயுட்காலம் ஆண்டுக்கு80 ஆண்டுகள் மற்றும் பெண்களுக்கு 68.33 ஆண்டுகள் ஆகும்
- பல்வேறு திட்டங்கள் மூலம் அரசாங்கம் அதிக அளவு சுகாதார நடவடிக்கைகளை வழங்குகிறது
கல்வியறிவு
- சமூக பொருளாதார வளர்ச்சிக்கு கல்வி திறன் முக்கிய பங்கு வகிக்கிறது
- அனைவருக்கும் கல்வி இயக்கம், அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டம், கல்வியல் தரத்தின் அளவை அதிகரிப்பதற்காக அரசால் வழங்கப்படுகிறது
வேலைவாய்ப்பு
- வேலை வாய்ப்பைப் பொறுத்தவரை கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளை மேம்படுத்துவதற்காக குறைந்த கட்டணத்தில் மின்சார வரிச்சலுகை போன்ற சலுகைகளை வழங்குவதன் மூலம் பின் தங்கிய பகுதிகளில் தொழில்துறையை தொடங்க தனியார் துறைகளை அரசாங்கம் ஊக்குவிக்கிறது
- இதனால் வட்டார ஏற்றத் தாழ்வுகளை நீக்குகிறது
வீடு சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரம் வழங்குதல்
- அரசுத்துறையானது வீட்டு வசதிகள், சுத்தமான குடிநீர் வசதிகள் மற்றும் சுகாதார வசதிகளை தூய்மை இந்தியா திட்டதின் கீழ் வழங்குகிறது.
- இது போன்ற வசதிகளை வழங்குவதால், மக்களின் வாழ்க்கை சுழற்சி அதிகரிக்கிறது
4. பொதுத்துறையின் முக்கியத்துவம் யாது?
- பொதுத்துறை மற்றும் மூலதன உருவாக்கம்
- பொருளாதார மேம்பாடு
- சமச்சீரான வட்டார வளர்ச்சி
- வேலை வாய்ப்பு உருவாக்கம்
- ஏற்றுமதி ஊக்குவிப்பு மற்றும் அந்திய செலவாணி வருவாய்
- நலிவடைந்த தொழில்களுக்கு பாதுகாப்பு
- இறக்குமதி மாற்று
5. பொதுத்துறைக்கும் தனியார் துறைக்கும் உள்ள வேறுபாடுகளை எழுதுக
பொதுத்துறை |
தனியார் துறை |
1. தொழில்களின் உரிமையானது அரசாங்கத்திடம் உள்ளது |
தொழில்களின் உரிமையானது தனிநபர்களிடம் உள்ளது |
2. பாெதுத்துறை தொழிலாளர்களக்கு முறையான ஊதியத்தை உறுதி செய்கிறது |
தனியார்துறை தொழிலாளர்களை சுரண்டகிறது |
3. வரி ஏய்ப்பு இல்லை |
வரி ஏய்ப்பு உண்டு |
4. இது சேவை நோக்கமுடையது |
இது இலாப நோக்கமுடையது |
5. இட ஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது |
இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவதில்லை |
எ.கா. NLC, SAIL, BSNL |
எ.கா. TVS Moterors. TATA Steel |
6. தனியார் துறையின் பணிகளைப் பற்றி எழுதுக
- தனியார் துறையின் முக்கிய செயல்பாடு புதுமை மற்றும் நவீனமயமாதலை உருவாக்குவதாகும். இலாப நோக்கத்தோடு இயங்க கண்டறிவதற்கும், உற்பத்தியின் புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடிப்பதற்கும், உற்பத்தி நடவடிக்கைகளை விஞ்ஞான முறையில் நிர்வகிப்பதற்கும் அவர்களை தூண்டுகிறது
- உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளை மேம்படுத்துதல் மற்றும் பராமரித்தல் இருக்கின்ற வணிகங்களை ஊக்குவித்தல், விரிவுபடுத்துதல்
- மனித மூலதன வளர்ச்சியை ஊக்குவித்தல் பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு குறிப்பாக தொழிலாளர் சந்தையில் பங்கேற்க உதவுதல் மற்றும் சமூக வணிக மற்றம் கூட்டுறவு உள்ளூர் பரிமாற்ற அமைப்புகள் மற்றும் முறைசாரா கடன் போன்றவற்றை ஊக்குவிப்பதன் மூலம் சமூக வளர்ச்சியை ஊக்குவித்தல்
- சிறு, நுண் மற்றும் நடுத்தர நிறுவனங்களை வழங்குவதன் மூலம் அளிப்பு பக்க நடவடிக்கைகள் மற்றும் தேவை பக்க நடவடிக்கைகளை கோருதல் மற்றும் நகரத்தில் முதலீட்டை ஈர்த்தல்