8th Social Science Civics Guide Unit 2
8th Standard Social Science Civics Guide Lesson 2 குடிமக்களும் குடியுரிமையும்
8th Standard Social Science Civics Guide Lesson 2 குடிமக்களும் குடியுரிமையும் Tamil Medium Guide Book Back Question and answers download pdf. 8th STD All Subject Guide. Tamil Nadu Start Board Syllabus Samacheer kalvi 8th std all Lesson / Units question and answers. 8th Social Science TEXT Books download pdf. Tamil and English Text books. 8th Standard Tamil Guide.
8th Social Science Civics Guide Unit 2 குடிமக்களும் குடியுரிமையும்
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:
1. கீழ்க்கண்டவைகளில் எந்த ஒன்று இந்திய குடியுரிமை பெறும் வழிமுறை அல்ல?
- பிறப்பின் மூலம்
- சொத்துரிமை பெறுவதன் மூலம்
- வம்சாவழியின் மூலம்
- இயல்பு குடியுரிமை மூலம்
விடை : சொத்துரிமை பெறுவதன் மூலம்
2. அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பகுதி மற்றும் பிரிவுகள் குடியுரிமையைப் பற்றிக் குறிப்பிடுகின்றன?
- பகுதி II
- பகுதி II பிரிவு 5 – 11
- பகுதி II பிரிவு 5 – 11
- பகுதி I பிரிவு 5 – 11
விடை : பகுதி II பிரிவு 5 – 11
3. இந்தியாவின் முதல் குடிமகன் யார்?
- பிரதமர்
- குடியரசுத் தலைவர்
- முதலமைச்சர்
- இந்திய தலைமை நீதிபதி
விடை : குடியரசுத் தலைவர்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக:
- ஒரு நாட்டின் _______, அந்நாடு வழங்கும் குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளைப் பெறத் தகுதியுடையவர் ஆவார்.விடை : குடிமக்கள்
- இந்திய அரசியலமைப்புச் சட்டம் _______ குடியுரிமையை மட்டும் வழங்குகிறது. விடை : ஒற்றை
- இந்தியக் கடவுச் சீட்டினைப் பெற்று வெளிநாட்டில் வாழும் இந்தியக் குடிமகன் ________ என அழைக்கப்படுகிறார்.விடை : வெளிநாடுவாழ் இந்தியர்
- மக்கள் அனைவரும் உரிமைகள் மற்றும் ________ யும் இயற்கையாக பெற்றிருக்கின்றனர்.விடை : சலுகைகளை
- ________ என்பது இளைஞர்களை நவீன சமுதாயத்தை வடிவமைப்பதில் பங்கேற்க செய்யும் ஒரு யோசனை ஆகும்.விடை : உலகளாவிய குடியுரிமை
III. சரியான கூற்றைத் தேர்ந்தெடு
1. ஒரு இந்தியக் குடிமகனின் குடியுரிமை கீழ்க்கண்ட எதனால் முடிவுக்கு வருகிறது.
- i) ஒருவர் வேறு நாட்டுக் குடியுரிமையை பெறும் போது
- ii) பதிவு செய்வதன் மூலம்
iii) தவறான மோசடி வழிகளில் ஒருவர் குடியுரிமை பெற்றார் என்று அரசு கருதும் போது
- iv) போரின் போது எதிரி நாட்டிடம் இந்திய குடிமகன் வணிகம் செய்யும் போது
- I மற்றும் II சரி
- I மற்றும் III சரி
- I, II, IV சரி
- I, II, III சரி
விடை : I மற்றும் III சரி
2. கூற்று : 1962 ஆம் ஆண்டு பாண்டிச்சேரி இந்திய யூனியனுடன் இணைந்தது. அங்கு வாழ்ந்த மக்கள் இந்திய குடிமக்களாயினர்.
காரணம் : 1955 இந்தியக் குடியுரிமைச் சட்டத்தின் படி பிரதேசங்களை இணைத்தல் என்பதன் அடிப்படையில் அவர்கள் இந்திய குடிமக்களாகினர்
- காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்
- காரணம் தவறு
- கூற்று தவறு ஆனால் காரணம் சரி
- காரணம், கூற்று இரண்டும் தவறு
விடை : காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்
IV. சரியா, தவறா?
- அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஒற்றைக் குடியுரிமையை வழங்குகிறது.விடை : தவறு
- வெளிநாட்டுக் குடியுரிமையை கொண்டு இந்தியாவில் வசிப்பதற்கான அட்டை வைத்திருப்பவருக்கு வாக்குரிமை உண்டு.விடை : தவறு
- அடிப்படை உரிமைகளை இந்தியக் குடிமகன் அனுபவிக்க நமது அரசியலமைப்புச் சட்டம் உத்திரவாதம் அளிக்கிறது.விடை : சரி
- நாட்டுரிமையை மாற்ற இயலும். ஆனால் குடியுரிமையை மாற்ற இயலாது.விடை : தவறு
V கீழ்க்காணும் வினாக்களுக்கு ஓரிரு வார்த்தைகளில் விடையளி.
1. குடியுரிமையின் வகைகளை குறிப்பிடுக.
- இயற்கை குடியுரிமை: பிறப்பால் இயற்கையாக பெறக்கூடிய குடியுரிமை
- இயல்புக் குடியுரிமை; இயல்பாக விண்ணப்பித்து பெறும் குடியுரிமை
2. ஓர் இந்தியக் குடிமகன் நமது நாட்டில் அனுபவிக்கும் உரிமைகள் யாவை?
- அடிப்படை உரிமைகள்
- மக்களவை தேர்தலுக்கும், மாநில சட்டமன்ற தேர்தலுக்கும் வாக்களிக்கும் உரிமை
- இந்திய அரசு அலுவலகங்களில் பணிபுரியும் உரிமை. இந்திய பாராளுமன்றம் மற்றும் மாநில சட்ட மன்றங்களில் உறுப்பினராவதற்கான உரிமை.
3. நற்குடிமகனின் மூன்று பண்புகளை குறிப்பிடுக
- அரசியலமைப்புச் சட்டத்தின் படி நடத்தல்
- சட்டத்துக்கு கீழ்படிதல்
- சமுதாயத்திற்கு தன் பங்களிப்பை ஆற்றுதல் மற்றும் குடிமைப் பணியை செயலாற்றுதல்.
- நற்பண்புகளையும், நீதியையும் நிலைநாட்டுதல்
- வேற்றுமைகளை மறந்து நடத்தல்
4. இந்தியக் குடிமகனாவதற்குரிய ஐந்து வழிமுறைகளை எழுதுக?
- பிறப்பால் குடியுரிமை பெறுதல்
- வம்சாவளியால் குடியுரிமை பெறுதல்
- பதிவு செய்தல் மூலம் குடியுரிமை பெறுதல்
- இயல்புக் குடியுரிமை
- பிரதேசங்களை இணைத்தல் மூலம் பெறும் குடியுரிமை
5. 1955 ஆம் ஆண்டு இந்திய குடியுரிமைச் சட்டம் பற்றி நீவிர் அறிவது யாது?
- இந்தியக் குடியுரிமைச் சட்டம், 1955 இந்தியக் குடிமகன் தன்னுடைய குடியுரிமையை பெறுதலையும், நீக்குதலையும் பற்றிய விதிகளை இச்சட்டம் கூறுகிறது.
VII. கீழ்க்காணும் வினாக்களுக்கு விரிவான விடையளி
1. ஒருவருக்கு எதன் அடிப்படையில் இந்தியக் குடியுரிமை இரத்து செய்யப்படுகிறது?
- குடியுரிமை இழப்பு பற்றிய மூன்று வழிமுறைகளை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் இரண்டாவது பகுதியின் 5 முதல் 11 வரையிலான விதிகள் குறிப்பிடுகின்றன.
குடியுரிமையை துறத்தல் (தானாக முன்வந்து குடியுரிமையைத் துறத்தல்)
- ஒருவர் வெளி நாட்டின் குடியுரிமையை பெறும் பட்சத்தில் அவரின் இந்தியக் குடியுரிமை அவரால் கைவிடப்படுகிறது.
குடியுரிமை முடிவுக்கு வருதல் (சட்டப்படி நடைபெறுதல்)
- ஒர் இந்தியக் குடிமகன் தாமாக முன்வந்து வெளிநாட்டின் குடியுரிமையை பெறும் பட்சத்தில் அவரது இந்தியக் குடியுரிமை தானாகவே முடக்கப்படுகிறது.
குடியுரிமை மறுத்தல் (கட்டாயமாக முடிவுக்கு வருதல்)
- மோசடி, தவறான பிரதிநிதித்துவம் அல்லது அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பாக செயல்படுதல் ஆகியவற்றின் மூலம் இந்தியக் குடியுரிமையை பெறும் ஒருவரின் குடியுரிமையை இந்திய அரசு ஓர் ஆணை மூலம் இழக்கச் செய்கிறது.