8th Social Science Civics Guide Unit 1
8th Standard Social Science Civics Guide Lesson 1 மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது
8th Standard Social Science Civics Guide Lesson 1 மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது Tamil Medium Guide Book Back Question and answers download pdf. 8th STD All Subject Guide. Tamil Nadu Start Board Syllabus Samacheer kalvi 8th std all Lesson / Units question and answers. 8th Social Science TEXT Books download pdf. Tamil and English Text books. 8th Standard Tamil Guide.
8th Social Science Civics Guide Unit 1 மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:
1. ஒரு மாநிலத்தின் ஆளுநர் யாரால் நியமிக்கப்படுகிறார்?
- குடியரசுத் தலைவர்
- துணைக் குடியரசுத் தலைவர்
- பிரதம மந்திரி
- முதலமைச்சர்
விடை : குடியரசுத் தலைவர்
2. மாநில அமைச்சரவைக் குழுவின் தலைவர்
- ஆளுநர்
- முதலமைச்சர்
- சபாநாயகர்
- உள்துறை அமைச்சர்
விடை : முதலமைச்சர்
3. மாநில சட்டமன்ற கூட்டத்தைக் கூட்டவும், ஒத்திவைக்கவும் அதிகாரம் பெற்றவர்
- உள்துறை அமைச்சர்
- குடியரசுத் தலைவர்
- சபாநாயகர்
- ஆளுநர்
விடை : ஆளுநர்
4. உயர் நீதி மன்ற நீதிபதிகளை நியமிப்பதில் பங்கு பெறாதவர் யார்?
- ஆளுநர்
- முதலமைச்சர்
- உயர் நீதி மன்ற தலைமை நீதிபதி
- குடியரசுத் தலைவர்
விடை : முதலமைச்சர்
5. உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயது
- 62
- 64
- 65
- 58
விடை : 62
II. கோடிட்ட இடங்களை நிரப்புக:
- இந்தியாவில் உள்ள மொத்த மாநிலங்களின் எண்ணிக்கை __________ ஆகும்.விடை : 28
- ஆளுநரின் பதவிக்காலம் __________ ஆண்டுகள் ஆகும்.விடை : 5
- மாவட்ட நீதிபதிகள் ____________________ ஆல் நியமிக்கப்படுகின்றனர். விடை : ஆளுநர்
- ஆளுநர் ஒரு மாநிலத்தின் __________ ஆவார்.விடை : நிர்வாகத் தலைவர்
- ஒருவர் சட்டப்பேரவை உறுப்பினராக __________ வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.விடை : 25
III.பொருத்துக
- ஆளுநர் – கீழவை
- முதலமைச்சர் – பெயரளவுத் தலைவர்
- சட்டமன்ற பேரவை – மேலவை
- சட்டமன்ற மேலவை – உண்மையான தலைவர்
விடை : 1 – ஆ, 2 – ஈ, 3 – அ, 4 – இ
IV. சரியான கூற்றைத் தேர்ந்தெடு
1. மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் கீழ்கண்டவர்களுள் யாரைத் தேர்ந்தெடுப்பதில் பங்கு பெறுகின்றனர்.
- குடியரசுத் தலைவர் ii. துணை குடியரசுத் தலைவர்
iii. ராஜ்ய சபை உறுப்பினர்கள் iv. சட்டமன்ற மேலவை உறுப்பினர்கள்
- i, ii & iii சரி
- i மற்றும் iii சரி
- i, iii மற்றும் iv சரி
- i, ii, iii மற்றும் iv சரி
விடை : i, iii மற்றும் iv சரி
V. சரியா, தவறா?
- முதலமைச்சர் மாநிலத்தின் தலைமை நிர்வாகி ஆவார்.விடை : சரி
- ஆளுநர் சட்ட மன்றத்திற்கு இரண்டு ஆங்கிலோ இந்திய உறுப்பினர்களை நியமிக்கிறார்.விடை : தவறு
- உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை நிலையாகவும் ஒரே மாதிரியாகவும் இருப்பதில்லை.விடை : சரி
VI கீழ்க்காணும் வினாக்களுக்கு ஓரிரு வார்த்தைகளில் விடையளி.
1. மாநில சட்டமன்றத்தின் இரு அவைகளின் பெயரை எழுதுக.
- மேலவை – சட்டமன்ற மேலவை
- கீழவை – சட்ட மன்ற பேரவை
2. மாநில சட்டமன்ற பேரவை உறுப்பினராவதற்கு உள்ள தகுதிகள் யாவை?
- இந்திய குடியுரிமை பெற்றவராக இருத்தல் வேண்டும்
- 25 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்
3. முதலமைச்சர் எவ்வாறு நியமிக்கப்படுகிறார்?
- ஆளுநர் மாநில சட்டமன்றத்தில் பெரும்பான்மை கொண்டுள்ள கட்சியின் தலைவரை மாநில முதலமைச்சராக நியமிக்கிறார்.
4. மாநில அமைச்சரவை குழு எவ்வாறு உருவாக்கப்படுகிறது?
- முதலமைச்சர் அவரது கட்சி சட்டமன்ற உறுப்பினர்களிலிருந்து அமைச்சர்களை தேர்வு செய்கிறார்.
VII. கீழ்க்காணும் வினாக்களுக்கு விரிவான விடையளி
1. முதலமைச்சரின் அதிகாரங்கள் மற்றும் பணிகளை விவரி?
- முதலமைச்சர் மாநிலத்தின் தலைமை நிர்வாகி ஆவார். மாநில அரசாங்கத்தின் பல்வேறு முக்கிய முடிவுகள் அவரது தலைமையின் கீழ் எடுக்கப்படுகின்றன.
- மாநில முதலமைச்சர், அமைச்சரவையை, உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறார்.
- முதலமைச்சரின் ஆலோசனையின்பெயரில் அமைச்சர்களை ஆளுநர் நியமிக்கிறார்.
- பல்வேறு துறைகளை கண்காணித்து ஆலோசனை வழங்குகிறார். மேலும் அவர் பல்வேறு துறைகளின் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கிறார்.
- முதலமைச்சர் மாநில அரசாங்கத்தின் கொள்கைகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறார்.
- மாநில அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளில் அவரது முடிவே இறுதியாக இருக்கும்.
- மாநில அரசாங்கத்தின் உயர் பதவிகளில் நியமனம் செய்யும் முக்கிய அதிகாரத்தைக் கொண்டுள்ளார்.
2. மாநில சட்ட மன்றத்தின் பணிகளை விவரி?
- மாநிலத்திற்கான சட்டங்களை இயற்றுவது சட்ட மன்றத்தின் முக்கிய பணி ஆகும்.
- மாநில சட்டமன்றம் அமைச்சரவையின் மீது கட்டுபாட்டினை செலுத்துகிறது.
- சட்ட மன்றத்தின் அனுமதி இல்லாமல் மாநில அரசாங்கம் வரியினை விதிக்கவோ, அதிகரிக்கவோ, குறைக்கவோ, விலக்கி கொள்வோ முடியாது
- அரசியலமைப்பு திருத்தும் சில நேர்வுகளில் சட்டமன்றம் பங்க வகிக்கின்றது.
3. உயர்நீதி மன்றத்தின் அதிகாரங்களையும், பணிகளையும் எழுது?
- அடிப்படை உரிமைகள் மற்றும் இதர நோக்கங்களை வலியுறுத்த உயர்நீதிமன்றம் பல்வேறு நீதிப் பேராணைகளை பிறப்பிக்கின்றன.
- ஒவ்வொரு உயர்நீதிமன்றமும் தனது அதிகார எல்லைக்குள் உள்ள ராணுவ நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்கள் நீங்கலாக அனைத்து சார் நிலை நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்களை கண்காணிக்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ளது.
- உயர் நீதிமன்றம் உச்ச நீதிமன்றத்தைப் போலவே வழக்குகள் பற்றிய பதிவேடுகளின் ஆதாரச் சான்றாக உள்ள பதிவுரு நீதிமன்றமாக விளங்குகிறது.