8th Science Guide Lesson 3
8th Std Science Guide Unit 3 ஒளியியல் | Tamil Medium
8th Science Tamil Medium Guide Lesson 3 ஒளியியல் book back answers. 8th Standard Science Guide Tamil Medium Book Back Answers. 8th Science Samacheer kalvi guide Tamil Medium 8th Text Book download pdf. 8th std All Subject Guide.
8th Science Guide பாடம் 3 ஒளியியல்
I. சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக
1. வளைந்த எதிரொளிக்கும் பரப்பை உடைய ஆடிகள்
- சமதள ஆடிகள்
- கோளக ஆடிகள்
- சாதாரண ஆடிகள்
- இவற்றில் எதுவுமில்லை
விடை : கோளக ஆடிகள்
2. உட்புறமாக வளைந்த எதிரொளிக்கும் பரப்பை உடைய ஆடி
- குவி ஆடி
- குழி ஆடி
- வளைவு ஆடி
- இவற்றில் எதுவுமில்லை
விடை : குவி ஆடி
3. கோளக ஆடிகளின் எதிரொளிக்கும் பரப்பு, எந்த கோளத்தின் பகுதியாக உள்ளதோ அந்த கோளத்தின் மையம்
- ஆடிமையம்
- வளைவு மையம்
- வளைவு ஆரம்
- ஆடியின் புறப்பரப்பு
விடை : வளைவு மையம்
4. வாகனங்களின் பின் காட்சி ஆடியாக பயன்படுத்தப்படும் ஆடி
- குழி ஆடி
- குவி ஆடி
- சமதள ஆடி
- இவற்றில் எதுவுமில்லை
விடை : குவி ஆடி
5. ஒரு ஆடியின் ஆடி மையத்தையும், வளைவு மையத்தையும் இணைக்கும் கற்பனைக் கோடு_______எனப்படும்
- வளைவு மையம்
- ஆடிமையம்
- முதன்மை அச்சு
- வளைவு ஆரம்
விடை : வளைவு ஆரம்
6. முதன்மைக்குவியத்திற்கும், ஆடி மையத்திற்கும் இடையே உள்ளத் தொலைவு _______என்று அழைக்கப்படுகிறது.
- வளைவு நீளம்
- குவியத்தொலைவு
- முதன்மை அச்சு
- இவற்றில் எதுவுமில்லை
விடை : குவியத்தொலைவு
7. குவியதொலைவானது_______ல் பாதியளவு இருக்கும்
- வளைவு மையம்
- அச்சுக் கோடு
- வளைவு ஆரம்
- இவற்றில் எதுவுமில்லை
விடை : வளைவு ஆரம்
8. ஒரு கோளக ஆடியின் குவியத்தொலைவு 10 செ.மீ. எனில், அதன் வளைவு ஆரம் _______
- 10 செ.மீ.
- 5 செ.மீ.
- 20 செ.மீ.
- 15 செ.மீ.
விடை : 20 செ.மீ.
9. பொருளின் அளவும், பிம்பத்தின் அளவும் சமமாக இருந்தால், பொருள் வைக்கப்பட்டுள்ள இடம் _________
- ஈறிலாத் தொலைவு
- F ல்
- F க்கும் P க்கும் இடையில்
- C ல்
விடை : C ல்
10. நீரின் ஒளிவிலகல் எண்
- 0
- 33
- 44
- 52
விடை : 1.0
II. கோடிட்ட இடங்களை நிரப்புக:
- அழகு நிலயங்களில் அலங்காரம் செய்யப்பயன்படும் கோளக ஆடி __________
விடை : குழி ஆடி
- கோளக ஆடியின் வடிவியல் மையம் _________ எனப்படும். விடை : வளைவு மையம்
- குவி ஆடியில் தோன்றும் பிம்பத்தின் தன்மை _________விடை : நேரான மாய பிம்பம்
- கண் மருத்துவர் கண்களைப் பரிசோதிக்கப் பயன்படுத்தும் ஆடி_________
விடை : குழி ஆடி
- ஒளிக் கதிர் ஒன்றின் படுகோணத்தின் மதிப்பு 45° எனில் எதிரொளிப்புக் கோணத்தின் மதிப்பு _________ விடை : 45°
- ஒன்றுக்கொன்று இணையாக உள்ள இரண்டு சமதளக் கண்ணாடிகளுக்கிடையே பொருளானது வைக்கப்பட்டால், உருவாகும் பிம்பங்களின் எண்ணிக்கை _________
விடை : 3
V. பொருத்துக.
1.
- குவி ஆடி – ரேடியோ தொலைநோக்கிகள்
- பரவளைய ஆடி – சொரசொரப்பான சுவர்
- ஒழுங்கான எதிரொளிப்பு – பின்னோக்குப் பார்வை ஆடி
- ஒழுங்கற்ற எதிரொளிப்பு – சமதளக் கண்ணாடி
விடை : 1 – இ, 2 – அ, 3 – ஈ, 4 – ஆ
2.
- ஸ்நெல் விதி – கலைடாஸ்கோப்
- நிறப்பிரிகை – Sini/sinr =μ
- ஒளிவிலகல் எண் – வானவில்
- பன்முக எதிரொளிப்பு – c/v =μ
விடை : 1 – ஆ, 2 – இ, 3 –ஈ, 4 – அ
IV சுருக்கமாக விடையளிக்கவும்.
1. கோளக ஆடி என்றால் என்ன?
வளைந்த ஆடிகளின் ஒரு வடிவமே கோளக ஆடிகளாகும்.
வளைந்த ஆடிகள் ஒரு கோளத்தின் பகுதியாகக் கருதப்பட்டால் அவை ‘கோளக ஆடிகள்’ என அழைக்கப்படுகின்றன
2. வரையறு- குவியத்தொலைவு.
ஆடி மையத்திற்கும் முதன்மைக் குவியத்திற்கும், இடைப்பட்ட தொலைவுv குவிய தொலைவு எனப்படும்.
குவியத்தொலைவு = வளைவு ஆரம் / 2
3. கோளக ஆடியின் வளைவு ஆரம் 25 செமீ எனில் குவியத் தொலைவினைக் காண்க.
வளைவு ஆரம் R |
= 25 செமீ |
குவியத்தொலைவு F |
= வளைவு ஆரம் / 2 |
F |
= 25 / 2 = 12.5 செமீ |
4. குழி ஆடி மற்றும் குவி ஆடிகளின் பயன்களில் இரண்டினைத் தருக.
குழி ஆடிகள் பயன்கள்:-
- பெரிதான பிம்பத்தை உருவாக்குவதால் அலங்காலக் கண்ணாடியாகவும், முகசவரக் கணணாடியாகவும் குழி ஆடிகள் பயன்படுத்தப்படுகின்றன.
- ஒளியை நீண்ட தொலைவு பரவச் செய்வதால் டாரச் விளக்குகள், தேடுவிளக்குகள் மற்றும் வாகனங்களின் முகப்பு விளக்குகள் பாேன்றவற்றில் குழிஆடிகள் பயன்படுத்தப்படுகின்றன.
குவி ஆடிகள் பயன்கள்:-
- வாகனஙகளின் பின்புறம் வரும் பிற வாகனங்களைப் பார்ப்பதற்கு குவிஆடிகள் பயன்படுகின்றன. மேலும், குவி ஆடிகள் வெளிப்புறமாக வளைந்திருப்பதால நேரான பிம்பத்தைத் தருவதோடு, அதிக அளவு பின்புறப் பகுதியையும் காண்பிக்கின்றன .
- மருத்துவமனை, தங்கும் விடுதிகள், பள்ளிகள் மற்றும் அங்காடிகளில் இவை பயன்படுகின்றன. பெரும்பாலும் கட்டடத்தின் குறுகிய வளைவுகள் உள்ள சுவர்கள் அல்லது கூரைகளில் இந்த ஆடிகள் பாெருத்தப்பட்டிருக்கும்.
5. ஒளி எதிரொளிப்பிற்கான விதிகளைக் கூறுக.
- படுகதிர், எதிரொளிப்புக்கதிர் மற்றும் படுபுள்ளியில் வரையப்பட்ட குத்துக்கோடு ஆகியவை அனைத்தும் ஒரே தளத்தில் அமைந்துள்ளன.
- படுகோணமும், எதிரொளிப்புக் கோணமும் எப்போதும் சமமாகவே இருக்கும்.
6. இரண்டு சமதளக் கண்ணாடிகளுக்கிடைப்பட்ட கோணம் 45° எனில் தோன்றும் பிம்பங்களின்எண்ணிக்கையினைக் காண்க.
இரண்டு சமதளக் கண்ணாடிகளுக்கிடைப்பட்ட கோணம் |
= 45° |
தோன்றும் பிம்பங்களின்எண்ணிக்கை |
= 360 / θ – 1 |
= 360 / 45° – 1 |
|
= 4 – 1 |
|
தோன்றும் பிம்பங்களின்எண்ணிக்கை |
= 3 |
7. ஊடகத்தின் ஒளிவிலகல் எண் வரையறு
காற்றில் ஒளியின் திசைவேகத்திற்கும், ஒரு குறிப்பிட்ட ஊடகத்தில் ஒளியின் திசைவேகத்திற்கும் இடையே உள்ள தகவு ஆகும்
ஒளிவிலகல் எண் μ = காற்றில் ஒளியின் திசைவேகம் (c) / ஊடகத்தில் ஒளியின் திசைவேகம் (v)
8. ஒளி விலகலுக்கான ஸ்நெல் விதியினைக் கூறுக.
- படுகதிர் , விலகுகதிர் மற்றும் அவை சந்திக்கும் புள்ளியில் வரையப்பட்ட குத்துக்கோடு ஆகியவை அனைத்தும் ஒரே தளத்தில் அமையும்.
- படுகோணத்தின் சைன் மதிப்பிற்கும்(i), விலகுகோணத்தின் சைன் மதிப்பிற்கும் (r) இடையே உள்ள தகவு, ஒளிவிலகல் எண்ணிற்குச் சமமாகும். இது ஒரு மாறிலி ஆகும்
V விரிவான விடையளிக்கவும்.
1. குழிஆடியில் தோன்றும் பிம்பங்களைப் பற்றி விவரிக்கவும்.
குழி ஆடிகள் மெய் பிம்பங்களைத் தோற்றுவிக்கும். இவற்றைத் திரையில் பிடிக்க இயலும். ஆடியின் முன்னர் வைக்கப்பட்ட பொருளின் அமைப்பு, அளவு மற்றும் தன்மையினைப் பொறுத்து பிம்பங்களும் மாறுபடுகின்றன. குவி ஆடிகளைப்போல், குழி ஆடிகள் வெவ்வேறு வகையான பிம்பங்களைத் தோற்றுவிக்கின்றன
பொருளின் நிலை |
பிம்பத்தின் நிலை |
பிம்பத்தின் அளவு |
பிம்பத்தின் தன்மை |
ஈறிலாத் தொலைவில் |
F -இல் |
மிகவும் சிறியது |
தலைகீழான மெய் பிம்பம் |
C- க்கு அப்பால் |
C-க்கும் F- க்கும் இடையில் |
சிறியது |
தலைகீழான மெய் பிம்பம் |
C- இல் |
C- இல் |
பொருளின் அளவில் இருக்கும் |
தலைகீழான மெய் பிம்பம் |
C-க்கும் F- க்கும் |
C- க்கு அப்பால் |
பெரியது |
தலைகீழான மெய் பிம்பம் |
F –இல் |
ஈறிலாத் தொலைவில் |
மிகப்பெரியது |
தலைகீழான மெய் பிம்பம் |
F-க்கும் P- க்கும் |
ஆடிக்குப் பின்னால் |
பெரியது |
நேரான மாய பிம்பம் |
2. ஒளி எதிரொளித்தல் என்றால் என்ன? ஒழுங்கான மற்ற ஒழுங்கற்ற எதிரொளிப்புக்களைப் பற்றிச் சிறு குறிப்பு வரைக.
எதிரொளிக்கும் அளவானது எதிரொளிக்கும் பாெருளின் பரப்பை
சார்ந்தது. எதிரொளிக்கும் பரப்பை பாெறுத்து இரு வகைப்படுத்தலாம்
அவை
- ஒழுங்கான எதிரொளிப்பு
- ஒழுங்கற்ற எதிரொளிப்பு
- ஒழுங்கான எதிரொளிப்பு
வழவழப்பான பரப்பின் மீது ஓர் ஒளிக்கற்றையானது (இணை ஒளிக்கதிர்களின் தொகுபபு) விழும்பாேது அது எதிரொளிக்கப்படுகிறது. எதிரொளிப்பிற்குப் பின் ஒளிக்கதிர்கள் ஒன்றுக்காென்று இணையாக உள்ளன.இந்த எதிராளிப்பில் ஒவ்வாெரு கதிரின் படுகாேணமும் எதிரொளிப்புக் காேணமும் சமமாக உள்ளது. எதிரொளித்தல் விதியானது பின்பற்றப்படுவதால் இதில் தெளிவான பிம்பம் கிடைக்கிறது. இவ்வகை எதிரொளிப்பிற்கு ’ஒழுங்கான எதிரொளிப்பு’ அல்லது ’கண்ணாடி எதிரொளிப்பு’ என்று பெயர்.
எடுததுக்காட்டு : சமதளக்கண்ணாடியில் உருவாகும் எதிரொளிபபு மற்றும் நிலையான தண்ணீரில் ஏற்படும் எதிரொளிப்பு.
ஒழுங்கற்ற எதிரொளிப்ப
சொரசொரப்பான அல்லது ஒழுஙகற்ற பரப்பின் ஒவ்வாெரு பகுதியும் வெவ்வேறு காேணததில அமைந்திருக்கும். ஒளியானது இப்பரப்பில படும்பாேது ஒவ்வாெரு ஒளிக்கதிரும் வெவ்வேறு காேணததில் எதிரொளிக்கிறது. இங்கு ஒவ்வாெரு ஒளிக்கதிரின் படுகாேணமும், எதிரொளிப்புக் காேணமும் சமமாக இருக்காது. மேலும், ஒளி எதிரொளிபபு விதிகள் மிகச் சரியாகப் பாெருந்தவில்லை. எனவே, இதில பிம்பமும் தெளிவாகக் கிடைக்கவில்லை. இவ்வகை எதிரொளிப்பிறகு ’ஒழுங்கற்ற எதிரொளிப்பு’ அல்லது’ பரவலான எதிரொளிப்பு’ என்று பெயர்.
எடுத்துக்காட்டு: சுவரின் மீது ஏற்படும் எதிரொளிப்பு
3. பெரிஸ்கோப் செயல்படும் விதம் பற்றி விவரிக்கவும்.
- ஒரு பொருளுக்கு அல்லது நீர்முழ்கிக் கப்பலுக்கு மேலாகவோ அல்லது அதைச் சுற்றியோ உள்ள பிற பொருள்களையோ அல்லது கப்பல்களையோ பார்ப்பதற்கான கருவியே பெரிஸ்கோப் ஆகும்.
- ஒளி எதிரொளித்தல் விதிகளின் அடிப்படையில் இக்கருவியானது செயல்படுகிறது.
- இதன் அமைப்பானது நீண்ட வெளிப்பகுதியையும் உட்பகுதியையும் கொண்டது.
- உட்பகுதியி ல் 45° கோணச் சாய்வில் ஒவ்வொரு முனையிலும் கண்ணாடி அல்லது முப்பட்டகமானது பொருத்தப்பட்டுள்ளது.
- நீண்ட தொலைவில் உள்ள பொருளிலிருந்து வரும் ஒளியானது பெரிஸ்கோப்பின் மேல்முனையில் உள்ள கண்ணாடியில் பட்டு, செங்குத்தாகக் கீழ்நோக்கி எதிரொளிக்கப்படுகிறது.
- இவ்வாறு வரும் ஒளியானது பெரிஸ்கோப்பின் கீழ்ப்பகுதியில் உள்ள கண்ணாடியால் மீண்டும் ஒருமுறை எதிரொளிக்கப்பட்டு கிடைமட்டத் திசையில் சென்று பார்ப்பவரின் கண்களை அடைகிறது.ஒளியியல்
IMAGE
4. காற்றில் ஒளியின் திசைவேகம் 3×108 மீவி-1 மற்றும் ஊடகத்தின் ஒளிவிலகல் எண் 1.5 எனில் ஊடகத்தில் ஒளியின் திசைவேகத்தினைக் காண்க.
காற்றில் ஒளியின் திசைவேகம் c |
= 3 x 108 ms-1 |
ஊடகத்தின் ஒளிவிலகல் எண் µ |
= 1.5 |
ஊடகத்தில் ஒளியின் திசைவேகம் v |
= ? |
தீர்வு :
µ |
= cv |
1.5 |
= 3 × 108 / v |
v |
3 × 108 / 1.5 |
v |
= 2 x 108 ms-1 |