8th Science Guide Lesson 2
8th Std Science Guide Lesson 2 விசையும் அழுத்தமும்
8th Science Tamil Medium Guide Lesson 2 விசையும் அழுத்தமும் book back answers. 8th Standard Science Guide Tamil Medium Book Back Answers. 8th Science Samacheer kalvi guide Tamil Medium 8th Text Book download pdf. 8th std All Subject Guide.
8th Science Guide பாடம் 2 விசையும் அழுத்தமும்
I. சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக
1. ஒரு பொருள் இயங்கும் திசைக்கு எதிரான திசையில் விசையைச் செலுத்தினால் அப்பொருளின் இயக்கமானது
- நின்று விடும்
- அதிக வேகத்தில் இயங்கும்
- குறைந்த வேகத்தில் இயங்கும்
- வேறு திசையில் இயங்கும
விடை : நின்று விடும்
2. திரவத்தினால் பெறப்படும் அழுத்தம் இவற்றால் அதிகரிக்கிறது
- திரவத்தின் அடர்த்தி
- திரவத்தம்ப உயரம்
- அ மற்றும் ஆ
- மேற்கண்ட எதுவுமில்லை
விடை : திரவத்தம்ப உயரம்
3. அழுத்தத்தின் அலகு
- பாஸ்கல்
- Nm-2
- பாய்ஸ்
- அ மற்றும் ஆ
விடை : அ மற்றும் ஆ
4. கடல் நீர் மட்டத்தில் வளிமண்டல அழுத்தத்தின் மதிப்பு
- 76 செ.மீ பாதரசத் தம்பம்
- 760 செ.மீ பாதரசத் தம்பம்
- 176 செ.மீ பாதரசத் தம்பம்
- மேற்கண்ட அனைத்தும்
விடை : 76 செ.மீ பாதரசத் தம்பம்
5. பாஸ்கல் விதி இதில் பயன்படுகிறது
- நீரியல் உயர்த்தி
- தடை செலுத்தி (பிரேக்)
- அழுத்தப்பட்ட பகுதி
- மேற்கண்ட அனைத்தும்
விடை : மேற்கண்ட அனைத்தும்
6. கீழ்க்கண்ட திரவங்களில் எது அதிக பாகுநிலை உடையது?
- கிரீஸ்
- நீர்
- தேங்காய் எண்ணெய்
- நெய்
விடை : நெய்
7. பாகுநிலையின் அலகு
- Nm2
- பாய்ஸ்
- kgms-1
- அலகு இல்லை
விடை : நெய்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக:
- ஆழம் அதிகரிக்கும் போது திரவ அழுத்தம் __________ விடை : அதிகரிக்கும்
- ______________விதியை அடிப்படையாகக் கொண்டு நீரியல் உயர்த்தி செயல்படுகிறது. விடை : பாஸ்கல்
- தாவரங்களில் நீர் மேலேறுவதற்குக் காரணம் ___________ என்ற திரவப் பண்பே ஆகும். விடை : நுண்புழையேற்றம்
- ___________ என்பவரால் எளிய பாரோமீட்டர் முதன்முதலில்உருவாக்கப்பட்டது.
விடை : டாரிசெல்லி
III. சரியா? தவறா? என எழுதுக.
- கொடுக்கப்பட்ட பரப்பில் செயல்படும் விசை அழுத்தம் எனப்படும
விடை : சரி
- இயங்கும் பொருள் உராய்வினால் மட்டுமே ஓய்வு நிலைக்கு வரும்.
விடை : தவறு
- மிதப்பு விசையை விட அதிக எடைகொண்ட பொருள் மூழ்கும்.
விடை : சரி
- ஒரு வளி அழுத்தம் என்பது ஒரு சதுர மீட்டரில் செயல்படும் 100000 நியூட்டன் விசைக்குச் சமம்.
விடை : சரி
- உருளும் உராய்வு நழுவு உராய்வைவிட சற்று அதிகமாக இருக்கும்.
விடை : தவறு
- ஆற்றல் இழப்பிற்கு உராய்வு மட்டுமே காரணம்.
விடை : தவறு
- ஆழம் குறைந்தால் திரவ அழுத்தம் குறையும்.
விடை : சரி
- பாரோமீட்டரைக் கொண்டு ஒரு கட்டிடத்தின் உயரத்தை அளவிடலாம்.
விடை : தவறு
- நீர்த்துளி கோள வடிவம் பெறுவதற்குக் காரணம் பரப்பு இழுவிசை.
விடை : சரி
- பாகுநிலை திரவத்தின் அழுத்தத்தைச் சார்ந்தது.
விடை : தவறு
IV. ஏறு வரிசையில் எழுதுக.
1. உருளும் உராய்வு, நிலை உராய்வு, நழுவு உராய்வு.
- விடை : நிலை உராய்வு, நழுவு உராய்வு, உருளும் உராய்வு
2. கோலிக் குண்டு கீழ்கண்ட பொருட்களில் உருளுகிறது. அந்த பொருட்களில் கோலிக் குண்டு கடக்கும் தொலைவைக் கொண்டு ஏறுவரிசையில் பொருள்களை எழுதுக.
பருத்தித் துணி, கண்ணாடித்தட்டு, காகிதம், ௭ழுது அட்டை (Writing pad), தகரம்
விடை : பருத்தித் துணி, காகிதம், தகரம், ௭ழுது அட்டை (Writing pad), கண்ணாடித்தட்டு
V. பொருத்துக.
1.
- நிலை உராய்வு – பாகுநிலை
- இயக்க உராய்வு – குறைந்த உராய்வு
- உருளும் உராய்வு – இயக்கத்தில் உள்ள பொருள்கள்
- திரவ அடுக்குகளுக்கு இடையேயான உராய்வு – நழுவும் பொருள்கள்
- நழுவு உராய்வு – ஓய்வுநிலையில் உள்ள பொருள்கள்
விடை : 1 – உ, 2 – இ, 3 – ஆ, 4 – அ, 5 – ஈ
2.
- பாரோ மீட்டர் – உராய்வைக் குறைக்கும்
- உராய்வை அதிகரித்தல் – வளிமண்டல அழுத்தம்
- உராய்வைக் குறைத்தல் – உராய்விற்கான காரணம்
- உயவுப் பொருள்கள் – தொடு பரப்பு அதிகரித்தல்
- ஒழுங்கற்ற பரப்பு – தொடு பரப்பு குறைதல்
விடை : 1 – ஆ, 2 – ஈ, 3 – உ, 4 – அ, 5 – இ
VI. ஒப்பிட்டு விடை தருக.
1. நூலில் போடப்பட்டுள்ள முடிச்சு : நிலை உராய்வு பந்து தாங்கிகள் : _______ உராய்வு.
- விடை : உருளும் உராய்வு
2. கீழ்நோக்கிய விசை : எடை திரவங்களால் தரப்படும் மேல்நோக்கிய விசை : ________
- விடை : மிதப்பு விசை
VII. கணக்குகள்.
1. ஒரு கல்லின் எடை 500N எனில். 25 செ.மீ2 பரப்புடைய தளத்தில் கல்லினால் ஏற்படும் அழுத்தத்தை கணக்கிடுக.
கல்லின் எடை |
= 500 N |
பரப்பு |
= 25 cm2 = 0.25m2 |
கல்லினால் ஏற்படும் அழுத்தம் |
= விசை /பரப்பு |
= 500 / .25 = 50000 / 25 |
|
கல்லினால் ஏற்படும் அழுத்தம் |
= 2000 Nm2 |
VIII. காரணம் மற்றும் கூற்று
1. சரியான தேர்வை சுட்டிக்காட்டுக
- கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கத்தைத் தருகிறது.
- கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல.
- கூற்று சரி. ஆனால் காரணம் தவறு.
- கூற்று தவறு. ஆனால் காரணம் சரியாக உள்ளது
1. கூற்று : கூர்மையான கத்தி காய்கறிகளை வெட்டப் பயன்படுகிறது
காரணம் : கூர்மையான முனைகள் அதிக அழுத்தத்தைத் தருகிறது.
விடை : கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கத்தைத் தருகிறது.
2. கூற்று : அகலமான பட்டைகள் தோள் பைகளில் அமைக்கப்படுகின்றன.
காரணம் : அகலமான பட்டைகள் நீண்ட நாள் உழைக்கும்.
விடை : கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல.
3. கூற்று : நீர்ச்சிலந்தி தண்ணீரின் மேற்பரப்பில் எளிதாக ஓடுகிறது.
காரணம் : நீர்ச்சிலந்தி குறைவான மிதப்பு விசையை உணர்கிறத
விடை : கூற்று சரி. ஆனால் காரணம் தவறு.
IX. ஓரிரு வரிகளில் விடையளி.
1. விசை பொருளின் வடிவத்தை மாற்றுவதற்கு இரு எடுத்துக்காட்டுகள் தருக.
- பலூனில் ஏற்படும் மாற்றம்
- ரப்பர் பட்டை இழுக்கும் போது விரிவடைதல்
2. ஓய்வுநிலையை மாற்ற முயலுகின்ற விசைக்கு இரு எடுத்துக் காட்டுகள் தருக.
- ஓய்வு நிலையில் உள்ள பந்தின் மீது விசையை செலுத்துதல்
- புறவிசையினால் காற்றாலையில் உள்ள விசிறிகள் இயக்கம்
3. பற்பைசை அதன் டியூபிலிருந்து வெளியேற்றப்படுகிறது. இந்த எடுத்துக்காட்டுக்கு எந்த இயற்பியல் அளவை மேற்கோள் காட்டுவாய்?
- விசை
4. மரப்பலகையில் இரும்பு ஆணி சுத்தியல் கொண்டு அடிக்கப்படுகிறது. சுத்தியலால் ஆணி அடிக்கப்பட்டவுடன் ஆணியைத் தொட்டுப்பார். என்ன உணர்கிறாய்? ஏன் அவ்வாறு நிகழ்கிறது?
- மரப்பலகையில் இரும்பு ஆணி சுத்தியல் கொண்டு அடிக்கப்படுகிறது. சுத்தியலால் ஆணி அடிக்கப்பட்டவுடன் ஆணியைத் தொட்டுப்பார்த்தால் மிதமான வெப்பம் உணரப்படுகிறது.
- உராய்வு விசையின் காரணமாக இந்நிகழ்வு நிகழ்கிறது.
5. இரு பொருட்களின் புறப்பரப்புகளுக்கு இடையே ஒப்புமை இயக்கம் இருக்கும் போது உராய்வு எவ்வாறு உருவாகிறது?
- ஒப்புமை இயக்கத்தில் இருக்கும் இரு பொருட்களின் ஒழுங்கற்ற வடிவியல் பரப்பின் காரணமாக உராய்வு விசை உருவாகிறது
6. திரவ அழுத்தத்தை அளவிட உதவும் இரு கருவிகளின் பெயர்களைத் தருக.
- மானோ மீட்டர்
- பாரோ மீட்டர்
7. வரையறு – ஒரு வளிமண்டல அழுத்தம்
- ஒரு வளிமண்டல அழுத்தம் (1 atm) என்பது திரவத்தம்பத்தில் உள்ள பாதரசத்தின் மீது காற்று செலுத்தும் அழுத்தம் என கருதப்படுகிறது
8. அதிக எடையை சுமக்க உதவும் பைகளின் பட்டைகள் அகலமாக அமைக்கப்படுவது ஏன்?
- முதுகில் சுமந்து செல்லும் பைகள் தோளின் மீது செலுத்தும் அழுத்தத்தை குறைககவும், தோளின் மீதான தொடுபரப்பை அதிகரிக்கவும் அகலமான பட்டைகள் அமைக்கப்படுகின்றன.
9. பரப்பு இழுவிசை தாவரங்களுக்கு எவ்வாறு உதவுகிறது?
- தாவரங்களில் நீர் மேலேறுவதற்கு காரணம் பரப்பு இழுவிசை ஆகும்
10. எண்ணெய் அல்லது தேன் இவற்றில் அதிக பாகுநிலை கொண்டது எது?ஏன்?
- எண்ணெய், ஒவ்வொரு திரவமும் உராய்வு விசையின் காரணமாக வெவ்வேறு வேகத்தில் இயங்கும். தேன் எண்ணையை விட வேகமாக இயங்குவதால் குறைவான பாகியல் விசையைக் கொண்டுள்ளது
X. குறுகிய விடையளி.
1. உராய்வை வரையறு. அன்றாட வாழ்வில் உராய்வின் பயன்பாட்டிற்கு இரு உதாரணம் தருக.
ஒரு பொருளின் இயக்கத்தை எதிர்க்கும் விசைக்கு உராய்வு என்று பெயர்
உதாரணம்
- கயிற்றில் உள்ள முடிச்சு
- சக்கரம் பொருத்தப்பட்ட தள்ளு வண்டியின் இயக்கம்
2. உராய்வைக் குறைக்க ஏதேனும் மூன்று வழிமுறைகளைத் தருக.
- தொடுபரப்பை குறைத்தல்
- உயவுப்பொருள்களை பயன்படுத்துல்
- பந்து தாங்கிகளை பயன்படுத்துதல்
3. கடல் கொந்தளிப்பிலிருந்து தங்கள் கப்பலை மாலுமிகள் எவ்வாறு பாதுகாப்பார்கள்.
- கடல் கொந்தளிப்பின் போது மாலுமிகள் கப்பலைச் சுற்றிலும் சோப்புத் துகள்கள் அல்லது எண்ணெயைக் கொட்டுவார்கள்.
- இதன் காரணமாக கடல்நீரின் பரப்பு இழுவிசை குறைந்து கப்பலின் மீதான தாக்கமும், நீரினால் ஏற்படும் பாதிப்புகளும் குறைகின்றன.
4. பாஸ்கல் விதியின் மூன்று பயன்பாடுகளைத் தருக.
- வாகனங்களை பழுதுநீக்கும் பணிமனைகளில் வாகனங்களை உயர்ந்த பாஸ்கல் விதியின் அடிப்படையில் இயங்கும் நீரியல் உயர்த்திகள் பயன்படுத்தப்படுகின்றன.
- வாகனங்களில் உள்ள தடை (Break) அமைப்பு பாஸ்கல் விதியின் அடிப்படையில் செயல்படுகிறது.
- பஞ்சு அல்லது ஆடைகள் மிகக் குறைவான இடத்தை அடைத்துக் கொள்ளும் அழுத்தப்பட்ட பொதிகளாக மாற்றுவதற்கு பாஸ்கல் விதியை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் நீரியல் அழுத்தி பயன்படுத்தப்படுகின்றன
5. மிதிவண்டியின் அச்சுகளில் பந்து தாங்கிகள் ஏன் பயன்படுத்தப்படுகின்றன?
- உருளும் உராய்வு நழுவு உராய்வை விட குறைவாக இருப்பதினால் பந்து தாங்கிகளைக் கொண்டு நழுவு உராய்வை உருளும் உராய்வாக மாற்றலாம். மிதிவண்டிகளின் சக்கர அச்சில் காரீயத்தினாலான பந்து தாங்கிகளை நாம் காணலாம்.
XI. விரிவாக விடையளி.
1. உராய்வு ஒரு தேவையான தீமை விளக்குக.
- உராய்வின் காரணமாக எந்தவொரு பொருளையும் நம்மால் பிடிக்க முடிகிறது.
- உராய்வின் காரணமாகவே நம்மால் சாலைகளில் நடக்க முடிகிறது. செருப்பும், தரையும் நாம் நழுவி கீழே விழாமல் நடக்க உதவுகின்றன.
- உராய்வின் காரணமாகவே பேனாவைக் கொண்டு காகிதத்தில் எழுத முடிகிறது.
- சக்கரத்திற்கும் சாலைக்கும் இடையேயான உராய்வு விசை பாதுகாப்பான பயணத்திற்குக் காரணமான உள்ளது. இயங்கும் வாகனத்தை நிறுத்த தடையைச் செலுத்தும் போது உராய்வின் காரணமாகவே வாகனம் ஓய்வு நிலைக்கு வருகிறது.
- தீக்குச்சியைக் கொளுத்துவது, துணியைத் தைப்பது, முடிச்சுக்களைப் போடுவது, சுவற்றில் ஆணியை அடிப்பது என எல்லாவற்றிற்கும் உராய்வே காரணமாக உள்ளது.
- உராய்வின் உதவியால் அன்றாட வாழ்வில் பெரும்பாலான வேலைகள் எளிதானாலும் சில தீய விளைவுகளும் உண்டு. எனவே உராய்வை தேவையான தீமை என்றழைக்கின்றனர்.
2. உராய்வின் பல்வேறு வகைகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
உராய்வானது அடிப்படையில் இரண்டாக வகைப்படுத்தப்படுகிறது.
அவை,
- நிலை உராய்வு
- இயக்க உராய்வு
நிலை உராய்வு :
ஓய்வு நிலையில் இருக்கும் பொருட்களால் உணரப்படும் உராய்வு நிலை உராய்வு எனப்படும்.
எ.கா: புவியில் ஓய்வுநிலையில் உள்ள பொருள்கள் நிலையான இடத்தைப் பெற்றுள்ளன, கயிற்றில் உள்ள முடிச்சு.
இயக்க உராய்வு:
பொருள்கள் இயக்கத்தில் இருக்கும்போது ஏற்படும் உராய்வு இயக்க உராய்வு எனப்படும்.
இயக்க உராய்வானது
- நழுவு உராய்வு
- உருளும் உராய்வு
என மேலும் இரு பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகிறது.
நழுவு உராய்வு:
ஒரு பொருள் மற்றொரு பொருளின் மேற்பரப்பில் நழுவும் போது இரண்டு பொருட்களின் பரப்புகளுக்கு இடையே உருவாகும் உராய்வு நழுவு உராய்வு எனப்படும்.
உருளும் உராய்வு:
ஒரு பொருள் மற்றொரு பொருளின் மேற்பரப்பில் உருளும் போது அந்த இரண்டு பொருட்களின் மேற்பரப்புகளுக்கு இடையே உருவாகும் உராய்வு உருளும் உராய்வு எனப்படும்.
உருளும் உராய்வு நழுவு உராய்வை விட குறைவாகவே இருக்கும். இதன்காரணமாகவே வாகனங்கள், தள்ளுவண்டிகள் மற்றும் பெட்டிகளில் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன
3. உராய்வு, பரப்பின் தன்மையைச் சார்ந்தது என்பதை நிரூபிக்கும் சோதனையை விளக்குக.
- மேஜையின் மீது ஒன்றன் மீது ஒன்றாக புத்தகங்களை அடுக்கவும்.
- இதன் மீது அகலமான ஒரு அளவு கோலை சாய்வாக வைக்கவும்.
- அளவுகோல் மேஜையைத் தொடும் இடத்தில் செவ்வக வடிவிலான காகிதத்தை மேஜையின் மீது பரப்பவும்.
- கோலிக் குண்டுகளை அளவுகோலின் மீது நழுவச் செய்யவும்.
- கோலிக் குண்டு அளவுகோலில் இருந்து நழுவி காகிதத்தில் உருண்டு ஓடும்.
- கோலிக் குண்டு ஓய்வுநிலையை அடைந்த பிறகு ஒரு மீட்டர் அளவு கோல் மூலம் தொலைவை அளக்கவும்.
- காகிதத்திற்கு பதிலாக கண்ணாடி, மரப்பலகை, பருத்தித் துணி செய்தித்தாள், எழுதப் பயன்படுத்தும் அட்டை எனவெவ்வேறு பொருள்களைப் பயன்படுத்தி சோதனையை மீண்டும் செய்து கோலிக் குண்டின் தொலைவை அட்டவணைப்படுத்தவும்.
- மேஜையின் மீது விரிக்கப்பட்டுள்ள உருளும் பரப்பு நழுவிய பின் கோலிக்குண்டு கடந்த தொலைவு (சென்டி மீட்டரில்)
மேஜையின் மீது விரிக்கப்பட்டுள்ள உருளும் பரப்பு |
நழுவிய பின் கோலிக்குண்டு கடந்த தொலைவு (சென்டி மீட்டரில்) |
1. மரப்பலகை |
17 |
2. காகிதம் |
18 |
3. பருத்தி துணி |
15 |
4. கண்ணாடி |
20 |
காண்பது
கோலிக் குண்டு கண்ணாடிப் பரப்பில் கடந்த தொலைவை விட பருத்தித் துணியில் கடந்த தொலைவு குறைவு.
காரணம்
சொர சொரப்பான பரப்பை உடைய பருத்தித் துணி அதிகப்படியான உராய்வைத் தருவதால் கோலிக் குண்டு நீண்ட தொலைவைக் கடப்பது இல்லை. அதேசமயம் வழவழப்பான கண்ணாடி மிகக்குறைவான உராய்வைத் தருவதால் கோலிக் குண்டு அதிகத் தொலைவை கடக்கிறது. மேற்கண்ட சோதனையிலிருந்து பரப்பின் சொர சொரப்புத் தன்மை அதிகரித்தால் உராய்வு அதிகரிக்கும் என்பது தெளிவாகிறது.
4. உராய்வு எவ்வாறு குறைக்கப்படுகிறது என்பதை விளக்குக.
உயவுப்பொருள்களை பயன்படுத்துல்
உராய்வைக் குறைக்க பயன்படுத்தப்படும் பொருள் உயவுப் பொருள் எனப்படும். எ.கா கிரீஸ், தேங்காய் எண்ணெய், கிராஃபைட், விளக்கெண்ணெய் முதலியவை. இரண்டு பொருட்களின் ஒன்றையொன்று தொடும் ஒழுங்கற்ற பரப்புகளின் இடையில் உயவுப் பொருள்கள் சென்று நிரம்புவதால் அவைகளுக்கு இடையே ஒரு வழவழப்பான உறை உருவாகிறது. இது இரு பரப்புகளுக்கான நேரடித் தொடர்பைத் தடுத்து உராய்வை குறைக்கிறது.
பந்து தாங்கிகளை பயன்படுத்துதல்
உருளும் உராய்வு நழுவு உராய்வை விட குறைவாக இருப்பதினால் பந்து தாங்கிகளைக் கொண்டு நழுவு உராய்வை உருளும் உராய்வாக மாற்றலாம். மிதிவண்டிகளின் சக்கர அச்சில் காரீயத்தினாலான பந்து தாங்கிகளை நாம் காணலாம்.
5. ஆழத்தைச் சார்ந்து அழுத்தம் அதிகரிக்கிறது என்பதை நிரூபிக்கும் சோதனையை விளக்குக.
ஒரு பிளாஸ்டிக் பாட்டிலை எடுத்துக் கொள்ளவும். அதன் அடித்தளத்தில் இருந்து சம உயரத்தில் சம அளவுடைய துளைகளை இடவும். நீரால் நிரப்பி பாட்டிலின் துளைகளின் வழியாக வெளியேறும் நீரை உற்று நோக்கவும்.
காண்பது
அனைத்து துளைகளின் வழியாக வெளியேறும் நீரின் விசை சமமாகவும் பாட்டிலிலிருந்து சம தொலைவிலும் விழுகிறது.
காரணம்
குறிப்பிட்ட ஆழத்தில் திரவங்கள் அனைத்து திசைகளிலும் சமமான அழுத்தத்தை செயல்படுத்துகின்றன என்பதை இந்த செயல்பாட்டின் மூலம் புரிந்து கொள்ளலாம்.