8th Science Guide Lesson 15 அன்றாட வாழ்வில் வேதியியல்
8th Std Science guide unit 15 அன்றாட வாழ்வில் வேதியியல் | Tamil Medium
8th Science Tamil Medium Guide Lesson 15 அன்றாட வாழ்வில் வேதியியல் book back answers. 8th Standard Science Guide Tamil Medium Book Back Answers. 8th Science Samacheer kalvi guide Tamil Medium 8th Text Book download pdf. 8th std All Subject Guide.
8th Science Guide பாடம் 15 அன்றாட வாழ்வில் வேதியியல்
I. சரியான விடையைத் தேர்ந்தெடு.
1. LPG வாயுவுடன் கலக்கப்படும் மற்றும் அதன் கசிவைக் கண்டறிய உதவும் ஒரு வேதிப்பொருள் _____________.
- மெத்தனால்
- எத்தனால்
- கற்பூரம்
- மெர்காப்டன்
விடை : மெர்காப்டன்
2. தாெகுப்பு வாயு என்று அழைக்கப்படுவது எது?
- சதுப்பு நில வாயு
- நீர்வாயு
- உற்பத்தி வாயு
- நிலக்கரி வாயு
விடை : நீர்வாயு
3. ஒரு எரிபோருள் கலோரி மதிப்பின் அலகு
- கிலோ ஜுல்/மோல்
- கிலோ ஜுல்/கிராம்
- கிலோ ஜுல்/கிலோ கிராம்
- ஜுல்/கிலோ கிராம்
விடை : கிலோ ஜுல்/கிலோ கிராம்
4. ________ என்பது உயர்தரமான நிலக்கரி வகையாகும்.
- பீட்
- லிக்னைட்
- பிட்டுமினஸ்
- ஆந்த்ரசைட்
விடை : ஆந்த்ரசைட்
5. இயற்கை வாயுவில் பெரும்பான்மையானை பகுதிப்பொருள் _______
- மீத்தேன்
- ஈத்தேன்
- புராேப்பேன்
- பியூட்டேன்
விடை : மீத்தேன்
II. கோடிட்ட இடத்தை நிரப்புக.
- உற்பத்தி வாயு எனது, ________ மற்றும் ________ ஆகியவற்றின் கலவையாகும். விடை : கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன்
- _________ சதுப்பு நில வாயு எனப்படுகிறது. விடை : மீதேன்
- பெட்ராேலியம் என்ற சொல் குறிப்பது __________. விடை : பாறை
- காற்றில்லாச் சூழலில் நிலக்கரியை வெப்படுத்துவது _______ எனப்படும் விடை : சிதைத்து வடித்தல்
- படிம எரிபொருளுக்கு ஒரு எ.கா_______ விடை : நிலக்கரி
III.பொருத்துக.
- ஆக்டேன் மதிப்பீடு – டீசல்
- சீட்டேன் மதீப்பீடு – மீத்தேன்
- எளிய ஹைட்ராே கார்பன் – பெட்ராேல்
- பீட் – பழுப்பு நிறம் கொண்டது
- லிக்னைட் – முதல் நிலை நிலக்கரி
விடை : 1 – இ, 2 – அ, 3 – ஆ, 4 – உ, 5 – ஈ
IV. குறுகிய விடையளி
1. சங்கிலித்தாெடராக்கம் என்றால் என்ன?
- ஹைட்ரோ கார்பன்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து வேதிப்பிணைப்புகளை உருவாக்கும் தன்மை கொண்டவை. இந்த பண்பு சங்கிலித் தொடராக்கம் எனப்படும்
2. இயற்கை வாயுவின் அனுகூலங்கள் யாவை?
- இயற்கை வாயு எளிதில் எரியக்கூடியது என்பதால், இது பெருமளவில் வெப்பத்தை வெளியிடுகிறது.
- எரியும்பொழுது எந்தக் கழிவையும் இது தருவதில்லை
- எரியும்பொழுது புகையை வெளிடாததால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதில்லை.
- இந்த வாயுவை குழாய்கள் மூலும் எளிதில் எடுத்துச்சென்று சேர்க்க முடியும்.
- இதனை வீடுகளிலும், தொழிற்சாலைகளிலும் நேரடியாக எரிபொருளாகப் பயன்படுத்த முடியும்.
3. CNG என்பதை விரிவுபடுத்தி எழுது. அதன் இரு பயன்களை எழுது.
CNG – Compressed Natural Gas
- அதிக அழுத்தம் கொண்டு இயற்கை வாயுவை அழுத்தும்பொழுது அழுத்தப்பட்ட இயற்கைவாயு கிடைக்கிறது.
- இது மிகவும் மலிவானை மற்றும் தூய்மையான எரிபொருள்
- இதனை பயன்டுத்தும் வாகனங்கள் மிக குறைவான கார்பன்-டை-ஆக்சைடையும், ஹைட்ரோ கார்பன்களையும் வெளிவிடுகின்றன.
- பெட்ரோல் மற்றும் டீசலை விட மிகவும் விலைக் குறைந்தது.
4. தாெகுப்பு வாயு என்று அறியப்படும் வாயுவை கண்டறிந்து எழுது. அது ஏன் அவ்வாறு என்றழைக்கப்படுகிறது?
- நீர் வாயு தொகுப்பு வாயு என அழைக்கப்படுகிறது. இது கார்பன் மோனாக்சைடு மற்றும் ஹைட்ரஜன் வாயுக்களின் கலவையாகும்.
- கல்கரியின் மீது 1000oC வெப்பநிலையில் நீராவியைச் செலுத்து இது உற்பத்தி செய்யப்படுகிறது
C(g) + H2O(g) |
1000oC —————> |
CO(g) + H2 (g) |
வாயுக்களின் கலவை என்பதால் இது தொகுப்பு வாயு என்று அழைக்கப்படுகிறது.
5. ஏன் ஆந்த்ரசைட் வகை நிலக்கரி மிகவும் உயர்தரமான நிலக்கரி எனப்படுகிறது. அதற்கானை காரணம் தருக.
- இது மிகவும் உயர்தரம் காெண்ட நிலக்கரி வகையாகும்.
- மிகுந்த கடினத் தன்மையும் அடர் கருமை நிறத்தையும் காெண்டது.
- இவ்வகை நிலக்கரி மிகவும் இலேசானதும் உயர்ந்த வெப்ப ஆற்றலையும் காெண்டது.
- ஆந்த்ரசைட் நிலக்கரியானது மிகவும் கடினமானது.
- அடர் கருமை நிறமும் பளபளக்கும் தன்மையையும் காெண்டது
- இதிலுள்ள கார்பனின் சதவீதம் 86-97% ஆகும்.
- பிட்டுமினஸ் நிலக்கரியை விட சற்று உயர்ந்த வெப்பாற்றல் மதிப்பை உடையது .
- ஆந்த்ரசைட் நிலக்கரி நீண்ட நேரம் எரிந்து அதிக வெப்பத்தையும் குறைவான தூசியினையும் தருகிறது.
6. ஆக்டோன் எண் – சீட்டோன் எண் வேறுப்படுத்துக
ஆக்டோன் |
சீட்டோன் |
1. ஆக்டேன் எண் மதிப்பீடு பெட்ரோலுக்கு பயன்படுகிறது |
சீட்டோன் எண் மதிப்பீடு டீசலுக்கு பயன்படுகிறது |
2. இது பெட்ரோலில் உள்ள ஆக்டேனின்ன அளவைக் குறிக்கிறது |
இது டீசல் எஞ்சினிலுள்ள எரிபொருளின் பற்றவைப்பு தாமதக்கால அளவை குறிக்கிறது. |
3. பென்சீன் அல்லது டொலுவின் சேர்ப்பதன் மூலம் பெட்ரோலின் ஆக்டேன் எண்ணை அதிகரிக்க முடியும் |
அசிட்டோனைச் சேர்ப்பதன் மூலம் டீசலின் சீட்டேன் எண்ணை அதிகரிக்க முடியும். |
4. உயர்ந்த ஆக்டேன் எண் பெற்றுள்ள எரிபொருளின் சீட்டேன் எண் குறைவாக இருக்கும் |
அதிக சீட்டேன் எண் பெற்றுள்ள எரிபொருளின் ஆக்டேன் எண் குறைவாக இருக்கும் |
7. தமிழ்நாட்டில் காற்றாலைகளைப் பயன்படுத்தி காற்றாற்றல் உற்பத்தி செய்யப்படும் இடங்களை எழுதுக.
- கயத்தாறு
- ஆரல்வாய் மொழி
- பல்லடம்
- குடிமங்கலம்
8. சூரிய ஆற்றல் எப்பொழுதும் தீராத ஒரு ஆற்றல் மூலமாகும். இக்கூற்றை நியாயப்படுத்துக.
- சூரியனே பூமியில் உயிரினங்கள் வாழத் தகுந்த சூழ்நிலையை உண்டாக்கக்கூடிய முதன்மையான மற்றும் முக்கியமான ஆற்றல் மூலமாகும்.
- சூரிய ஆற்றல் மட்டுமே தீர்ந்துவிடாத ஆற்றல் மூலமாகும்.
- இது விலையில்லா மற்றும் புதுபிக்ககூடிய ஆற்றல் வளமாக உள்ளது.
- இது சுற்றுச்சூழலைப் பாதிக்காத, தீர்ந்து போக ஆற்றல் வளமாகும்.
- இது படிம எரிபொருள்களைப் பதிலீடு செய்து உலகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான ஒரு ஆற்றல் வாய்ந்த வளமாகும்.
- அறிவியில் மற்றும் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியனால் சூரிய ஆற்றலானது பயன்படுத்துவதற்கு எளிதானதாகவும், இன்றைய ஆறறல் சார்ந்த் பிரச்சனைகளைத் தீர்ப்பதாகவும் உள்ளது.
- சூரிய ஆற்றல் ஒரு சுத்தமான ஆற்ல் ஆகும்
- பல்வேறு கருவிகளை கொண்டு குறைந்த அளவு முயற்சியுன் அதிக அளவு ஆற்றலை சூரியனிடமிருந்து நாம் பெற முடியும்.