8th Science Guide Lesson 1
8th Std Science Guide Lesson 1 அளவீட்டியல் | Tamil Medium
8th Science Tamil Medium Guide Lesson 1 அளவீட்டியல் book back answers. 8th Standard Science Guide Tamil Medium Book Back Answers. 8th Science Samacheer kalvi guide Tamil Medium 8th Text Book download pdf. 8th std All Subject Guide.
8th Science Guide பாடம் 1 அளவீட்டியல் – Book Back Answers
I. சரியான விடையை தேர்ந்தெடுத்து எதுகுக
1. கீழ்க்கண்டவற்றுள் எது ஆங்கில அலகீட்டு முறையாகும்.
- CGS
- MKS
- FPS
- SI
விடை : FPS
2. மின்னோட்டம் என்பது ———– அளவாகும்
- அடிப்படை
- துணைநிலை
- வழி
- தொழில் சார்ந்த
விடை : அடிப்படை
3. வெப்பநிலையின் SI அலகு
- செல்சியஸ்
- ஃபாரன்ஹீட்
- கெல்வின்
- ஆம்பியர்
விடை : கெல்வின்
4. பாெருளின் அளவு என்பது
- அணுக்களின் எண்ணிக்கைக்கு நேர்த்தகவில் இருக்கும்
- அணுக்களின் எண்ணிக்கைக்கு எதிர்த்த்கவில் இருக்கும்
- அணுக்களின் எண்ணிக்கையின் இருமடிக்கு நேர்த்தகவில் இருக்கும்
- அணுக்களின் எண்ணிக்கையின் இருமடிக்கு எதிர்த்தகவில் இருக்கும்
விடை : அணுக்களின் எண்ணிக்கைக்கு நேர்த்தகவில் இருக்கும்
5. ஒளிச்செறிவு என்பது ——– யின் ஒளிச்செறிவாகும்.
- லேசர் ஒளி
- புற ஊதாக் கதிரின் ஒளி
- கண்ணுறு ஒளி
- அகச் சிவப்புக் கதிரின் ஒளி
விடை : கண்ணுறு ஒளி
- கீழ்க்கண்டவற்றுள் எது மின்னோட்டத்தை அளவிடப் பயன்படும் கருவியாகும்?
விடை : ஆ
7. SI அலகு என்பது
- பன்னாட்டு அலகு முறை
- ஒருங்கிணைந்த அலகு முறை
- பன்னாட்டு குறியீட்டு முறை
- ஒருங்கிணைந்த குறியீட்டு முறை
விடை : பன்னாட்டு அலகு முறை
8. அளவிடப்பட்ட இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அளவீட்டு மதிப்புகளின் நெருக்கமானது ——– என அழைக்கப்படுகிறது.
- துல்லியத்தன்மை
- துல்லியத்தன்மையின் நுட்பம்
- பிழை
- தோராயம்
விடை : துல்லியத்தன்மை
9. அடிப்படை அளவுகள் தவிர்த்த பிற அளவுகள் ————-
- துணை அளவுகள்
- வழி அளவுகள்
- தொழில்முறை அளவுகள்
- ஆற்றல் அளவுகள்
விடை : வழி அளவுகள்
10. கீழ்க்கண்ட எந்தக் கூற்று தோராயம் பற்றிய தவறான கூற்றாகும்.
- தோராயம் என்பது துல்லியமான மதிப்பைத் தரும்
- தோராயம் என்பது கணக்கிடுதலை எளிமையாக்குகிறது.
- தோராயம் என்பது குறைவான அளவுத் தகவல்கள் கிடைக்கும்போது பயனுள்ளதாக அமைகிறது.
- தோராயம் என்பது உண்மையான மதிப்புக்கு நெருக்கமான மதிப்பினைத் தருகிறது.
விடை : தோராயம் என்பது துல்லியமான மதிப்பைத் தரும்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக:
- திண்மக்கோணம் ———– என்ற அலகில் அளக்கப்படுகிறது. விடை : ஸ்ட்ரேடியன்
- ———- இயற்பியல் அளவுகளுக்கான பொதுவான அளவீட்டின் தேவையை உணர்ந்து, அதற்கான அங்கீகாரத்தை வழங்கியது. விடை : பன்னாட்டு அலகு முறை
- ஒரு பொருளின் குளிர்ச்சி அல்லது வெப்பத்தின் அளவானது ——— என அழைக்கப்படுகிறது. விடை : வெப்பநிலை
- மின்னோட்டத்தினை அளவிடப் பயன்படும் கருவி—— ஆகும். விடை : அம்மீட்டர்
- ————- என்பது 6.023 x 10+23 அணுக்கள் அல்லது மூலக்கூறுகளைக் கொண்டுள்ளது. விடை : ஒரு மோல்
- ஓரலகுப் பரப்பில் ஓரலகு ———- இல் வெளியிடப்படும் கண்ணுறு ஒளியின் அளவே ஒளிச்செறிவாகும். விடை : திண்மக் கோணத்தில்
- குவார்ட்ஸ் கடிகாரங்கள் ——— அலைவுகளைப் பயன்படுத்திச் செயல்படுகின்றன. விடை : மின்னணு
- அளவீடுகளின் நிலையற்றத்தன்மை ———– என அழைக்கப்படுகிறது. விடை : பிழைகள்
- அளவிடப்பட்ட மதிப்புகளின் நெருங்கியத் தன்மையே —– ஆகும் விடை : துல்லியத்தன்மை
- இரண்டு நேர்க்கோடுகளின் குறுக்கீட்டினால் ——- உருவாகிறது. விடை : தளக்கோணம்
III. சரியா? தவறா? என எழுதுக.
- SI அலகு முறை என்பது மெட்ரிக் அலகு முறையாகும்.
விடை : சரி
- ஓர் அமைப்பில் உள்ள துகள்களின் மொத்த இயக்க ஆற்றலின் அளவே வெப்பநிலை ஆகும்.
விடை : தவறு
சரியான கூற்று : ஓர் அமைப்பில் உள்ள துகள்களின் சராசரி இயக்க ஆற்றலின் அளவே வெப்பநிலை ஆகும்.
- நீரின் உறைநிலைப் புள்ளியானது வெப்பநிலைமானியில் மேல்நிலைப் புள்ளியாகக் (UFP) குறிக்கப்படுகிறது.
விடை : தவறு
சரியான கூற்று : நீரின் கொதிநிலைப் புள்ளியானது வெப்பநிலைமானியில் மேல்நிலைப் புள்ளியாகக் (UFP) குறிக்கப்படுகிறது.
- ஒரு நிமிடத்தில் செல்லும் மின்னூட்டத்தின் அளவு ஒரு கூலும் எனில் அது ஓர் ஆம்பியர் என அழைக்கப்படுகிறது.
விடை : தவறு
சரியான கூற்று : ஒரு விநாடியில் செல்லும் மின்னூட்டத்தின் அளவு ஒரு கூலும் எனில் அது ஓர் ஆம்பியர் என அழைக்கப்படுகிறது.
- பொருளில் அடங்கியுள்ள துகள்களின் எண்ணிக்கையே பொருளின் அளவாகும்.
விடை : சரி
- மெழுகுவர்த்தியிலிருந்து வெளியாகும் ஒளிச்செறிவின் தோராயமான மதிப்பு ஒரு கேண்டிலாவிற்குச் சமமாகும்.
விடை : சரி
- கூம்பின் உச்சி ஏற்படுத்தும் கோணம் தளக் கோணத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.
விடை : தவறு
சரியான கூற்று : கூம்பின் உச்சி ஏற்படுத்தும் கோணம் திண்மக் கோணத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாகும்
- குவார்ட்ஸ் கடிகாரங்கள் GPS கருவிகளில் பயன்படுகிறது.
விடை : தவறு
சரியான கூற்று : அணுக் கடிகாரங்கள் GPS கருவிகளில் பயன்படுகிறது.
- மின்புலச் செறிவினைக் குறிப்பிட ’கேண்டிலா’ என்ற அலகு பயன்படுகிறது.
விடை : தவறு
சரியான கூற்று : ஒளிச் செறிவினைக் குறிப்பிட ’கேண்டிலா’ என்ற அலகு பயன்படுகிறது.
- 4.582 எண்ணின் முழுமையாக்கப்பட்ட மதிப்பு 4.58
விடை : சரி
IV. பொருத்துக.
1. வெப்பநிலை |
உண்மையான மதிப்பின் நெருங்கிய அளவு |
2. தளக்கோணம் |
குளிர்ச்சி மற்றும் வெப்பத்தின் அளவு |
3. திண்மக் கோணம் |
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அளவீடுகளின் நெருங்கியத் தன்மை |
4. துல்லியத் தன்மை |
மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட தளங்களின் குறுக்கீட்டினால் ஏற்படும் கோணம் |
5. நுட்பம் |
இரண்டு தளங்களின் குறுக்கீட்டினால் ஏற்படும் கோணம் |
விடை : 1 – ஆ, 2 – உ, 3 – ஈ, 4 – அ, 5 – இ |
V. காரணம் மற்றும் கூற்று
- கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம் தருகிறது.
- கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கமன்று.
- கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியன்று.
- கூற்று தவறானது. ஆனால், காரணம் சரியானது.
1. கூற்று : SI அலகுமுறை அளவீடுகளுக்கான மிகச் சரியான முறையாகும்.
காரணம் : வெப்பநிலைக்கான SI அலகு கெல்வின்
விடை : கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம் தருகிறது.
2. கூற்று : மின்னோட்டம், பொருளின் அளவு, ஒளிச்செறிவு ஆகியவை இயற்பியலில் அடிப்படை அளவீடுகளாகும்.
காரணம் : அவை ஒன்று மற்றொன்றோடு சார்புடையதன்று.
விடை : கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம் தருகிறது.
3. கூற்று : கடிகாரத்தின் வினாடி முள்ளின் மீச்சிற்றளவு ஒரு வினாடியாகும்.
காரணம் : மீச்சிற்றளவு என்பது ஒரு கருவியால் துல்லியமாக அளவிடப்படும் மிகப்பெரிய அளவீடாகும்.
விடை : கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியன்று.
4. கூற்று : அவகாட்ரோ எண் என்பது ஒரு மோல் பொருளில் உள்ள அணுக்களின் எண்ணிக்கையாகும்.
காரணம் : அவகாட்ரோ எண் ஒரு மாறிலி ஆகும்.
விடை : கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம் தருகிறது.
5. கூற்று : திண்மக் கோணத்தின் அலகு ரேடியன்.
காரணம் : ஒரு ரேடியன் என்பது வட்டத்தின் மையத்திலிருந்து வரையப்படும் ஆரத்தின் நீளமானது கடக்கும் கோண அளவாகும்.
விடை : கூற்று தவறானது. ஆனால், காரணம் சரியானது.
VI. ஓரிரு வார்த்தைகளில் விடையளிக்க.
1. FPS முறையில் நிறையின் அலகு என்ன?
பவுண்ட்(Pound)
2. SI முறையில் உள்ள அடிப்படை அளவுகள் எத்தனை?
ஏழு
3. வெப்பநிலையை அளக்க உதவும் கருவியின் பெயரினைத் தருக.
வெப்பநிலைமானி
4. ஃபாரன்ஹீட் வெப்பநிலைமானியில் உள்ள ’கீழ்நிலைப்புள்ளி’ வெப்பநிலையின்(Lower Fixed Point Temperature) மதிப்பு என்ன?
32oF
5. ஒளிசெறிவின் SI அலகு என்ன?
கேண்டிலா
6. அவகாட்ரோ எண்ணின் மதிப்பு என்ன?
6.023 x 1023
7. அணுக்கடிகாரங்களில் பயன்படும் அலைவுகளின் வகை என்ன?
அணுவில் ஏற்படும் அதிர்வுகள்
8. காட்சிப்படுத்துதலின் (Display) அடிப்படையில் வகைப்படுத்தப்படும் கடிகாரங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
- ஒப்புமை வகைக் கடிகாரங்கள்
- எண்ணிலக்க வகைக் கடிகாரங்கள்
9. கடிகாரத்தில் ஒரு மணிநேரத்தில் நிமிடமுள் எத்தனை முறை சுற்றிவரும்?
60 முறை
- ஒரு நிமிட நேரத்தில் எத்தனை மணிகள் உள்ளன?
1/60 மணிகள்
VII. கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு ஓரிரு வரிகளில் விடையளிக்க.
1. அளவீட்டியல் என்றால் என்ன?
மதிப்புத் தெரிந்த திட்ட அளவினைக் கொண்டு, தெரியாத அளவின் மதிப்பைக் கண்டறிவதே அளவீட்டியல் ஆகும்.
2. பொதுவாக உள்ள அளவீட்டு முறைகளின் பெயர்களைத் தருக.
FPS முறை :
- நீளம் – அடி(Foot)
- நிறை – பவுண்ட்(Pound)
- காலம் – வினாடி (Second)
CGS முறை:
- நீளம் – சென்டி மீட்டர் (Centimetre)
- நிறை – கிராம் (Gram)
- காலம் – வினாடி (Second)
- MKS முறை :
- நீளம் – மீட்டர் (metre)
- நிறை – கிலோகிராம் (Kilogram)
- காலம் – வினாடி (Second)
3. வரையறு: வெப்பநிலை
அமைப்பு ஒன்றில் உள்ள துகள்களின் சராசரி இயக்க ஆற்றல் வெப்பநிலை எனப்படும்
வெப்பநிலையின் SI அலகு ‘கெல்வின்’ ஆகும்
4. வரையறு: ஆம்பியர்
ஒரு விநாடியில் ஒரு கூலும் மின்னூட்டம் சென்றால், மின்னோட்டத்தின் மதிப்பு ஒரு ஆம்பியர் என வரையறுக்கப்படுகிறது.
5. மின்னோட்டம் என்றால் என்ன?
ஒரு குறிப்பிட்ட திசையில் மின்னூட்டங்கள் (Charges) பாய்வதை மின்னோட்டம் என்கிறோம். மின்னோட்டத்தின் எண்மதிப்பானது, ஒரு கடத்தியின வழியே ஒரு வினாடியில் பாயும் மின்னூட்டங்களின் அளவு என வரையறுக்கப்படுகிறது
மின்னோட்டம் (I) = மின்னூட்டத்தின் கால அளவு (Q) / காலம் (R)
மின்னோட்டத்தின் SI அலகு ‘ஆம்பியர் (A)’ ஆகும்
6. ஒளிச்செறிவு என்றால் என்ன?
ஒளி மூலத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட திசையில் ஓரலகுத் திண்மக் கோணத்தில் வெளிவரும் ஒளியின் அளவு ‘ஒளிச்செறிவு’ எனப்படும்.
ஒளிச்செறிவின் SI அலகு ‘கேண்டிலா’ஆகும். இதனை ‘Cd’ என்ற குறியீட்டால் குறிக்கலாம
7. வரையறு: மோல்
6.023 × 1023 துகள்களை உள்ளடக்கிய பொருளின் அளவானது, ஒரு மோல் என வரையறுக்கப்படுகிறது.
‘மோல் ’ என்பது பொருளின் அளவின் SI அலகு ஆகும். இது ‘mol’ என்ற குறியீட்டால் குறிக்கப்படுகிறது.
8. தளக்கோணத்திற்கும் திண்மக்கோணத்திற்கும் உள்ள வேறுபாடுகளைத் தருக.
தளக் கோணம் |
திண்மக் கோணம் |
1. இரு கோடுகள் அல்லது இரு தளங்கள் வெட்டிக் கொள்வதால் உருவாகும் கோணம் |
மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட தளங்கள் ஒரு பொதுவான புள்ளியில் வெட்டிக் கொள்வதால் உருவாகும் கோணம் |
2. இது இருபரிமாணம் கொண்டது . |
இது முப்பரிமாணம் கொண்டது. |
3. இதன் அலகு ரேடியன் |
இதன் அலகு ஸ்ட்ரேடியன் |
9. அளவீடுகளில் பிழைகள் என்றால் என்ன?
ஒவ்வொரு அளவீட்டின் போது கிடைக்கப் பெறும் மதிப்புகளில் சில நிலையற்ற தன்மை காணப்படுகிறது. இந்த நிலையற்ற தன்மை ’பிழைகள்‘ எனப்படும்.
VIII. விரிவான விடையளி.
1. அடிப்படை அளவுகளை அவற்றின் அலகுகளோடு பட்டியலிடுக.
அளவு |
அலகு |
குறியீடு |
நீளம் |
மீட்டர் |
m |
நிறை |
கிலோகிராம் |
kg |
காலம் |
வினாடி |
s |
வெப்பநிலை |
கெல்வின் |
K |
மின்னோட்டம் |
ஆம்பியர் |
A |
பொருளின் அளவு |
மோல் |
mol |
ஒளிச்செறிவு |
கேண்டிலா |
cd |
2. கடிகாரங்களின் வகைகளைப் பற்றி சிறு குறிப்பு வரைக.
காட்சியின் அடிப்படையில்
- ஒப்புமைவகைக் கடிகாரங்கள்
- எண்ணிலக்க வகைக் கடிகாரங்கள்
என இருவகைப்படும்
1.ஒப்புமை வகைக் கடிகாரங்கள் (Analog clocks)
இவை பாரம்பரியமான கடிகாரங்களை ஒத்திருக்கின்றன. இது மூன்று குறிமுள்கள் மூலம் நேரத்தைக் காட்டுகின்றன
மணி முள் :
- இது குட்டையாகவும் தடிமனாகவும் அமைந்திருக்கும்.
- இது கடிகாரத்தில் மணியைக் (Hour) காட்டுகிறது.
நிமிட முள் :
- இது நீளமாகவும் மெல்லியதாகவும் இருக்கும்.
- இது நிமிடத்தைக் காட்ட உதவுகிறது.
வினாடி முள் :
- இது நீளமாகவும் மிகவும் மெல்லியதாகவும் இருக்கும் இது வினாடியைக் குறிக்கிறது.
- இது ஒரு நிமிடத்திற்கு ஒரு முறையும், ஒரு மணிக்கு 60 முறையும் கடிகாரத்தைச் சுற்றி வருகிறது.
இவ்வகை கடிகாரங்கள் எந்திரவியல் தொழில் நுட்பம் அல்லது மின்னியல் தொழில் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் வகையில் உருவாக்கப்படுகின்றன.
2. எண்ணிலக்க வகைக் கடிகாரங்கள் (Digital Clocks)
- இவை நேரத்தை நேரடியாகக் காட்டுகின்றன. இவை நேரத்தை எண்களாகவோ அல்லது குறியீடுகளாகவோ காட்டுகின்றன.
- இவை 12 மணி நேரம் அல்லது 24 மணி நேரத்தைக் காட்டும் வகையில் வடிவமைக்கப்படுகின்றன.
- தற்காலக் கடிகாரங்கள் நாள், கிழமை, மாதம், ஆண்டு, வெப்பநிலை போன்றவற்றை காட்டக்கூடியவைகளாக உள்ளன.
- எண்ணிலக்க வகைக் கடிகாரங்கள், பொதுவாக மின்னியல் கடிகாரங்கள் என அழைக்கப்படுகின்றன.