7th Tamil Term 2 Unit 3.3 Book Back Answers
TN 7th Standard Tamil Term 2 – Lesson 3 – இயல் 3.3 பேசும் ஓவியங்கள் Book back answers
TN 7th Tamil Term 2 Unit 3.3 Book Back Answers. 7th Standard Tamil Term 2 Lesson 3 Book Back Answers. 7th Standard Tamil Samacheer Kalvi Guide Term 2 – 3rd Lesson இயல் 3.3 பேசும் ஓவியங்கள் Book Back and additional question and answers download pdf. Class 7 2nd Term book back answers. Class 7 Tamil Book in answers download pdf. 7th All Subject Important Study Materials. 7th Tamil All Lessons. Answers.
- 7th Tamil Samacheer Kalvi Guide Term 2 – Lesson 3 ( இயல் 3.1 to 3.6 ) Full Answer Key
- 7th Tamil Term 1, Term 2, Term 3 – All Unit Book Back Answers
7th Standard Tamil Term 2 – Lesson 3 – இயல் 3.3 பேசும் ஓவியங்கள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. குகை ஓவியங்களில் வண்ணம் தீட்ட பயன்பட்ட பொருள்களில் ஒன்று _______.
- மண்துகள்
- நீர் வண்ணம்
- எண்ணெய் வண்ணம்
- கரிக்கோல்
விடை : மண்துகள்
2. நகைச்சுவை உணர்வு வெளிப்படுமாறு வரையப்படும் ஓவியம் ________.
- குகை ஓவியம்
- சுவர் ஓவியம்
- கண்ணாடி ஓவியம்
- கேலிச்சித்திரம்
விடை : கேலிச்சித்திரம்
3. ‘கோட்டோவியம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________.
- கோடு + ஓவியம்
- கோட்டு + ஓவியம்
- கோட் + டோவியம்
- கோடி + ஓவியம்
விடை : கோட்டு + ஓவியம்
4. ‘செப்பேடு’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________.
- செப்பு + ஈடு
- செப்பு + ஓடு
- செப்பு + ஏடு
- செப்பு + யேடு
விடை : செப்பு + ஏடு
5. ‘எழுத்து + ஆணி’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ________.
- எழுத்துஆணி
- எழுத்தாணி
- எழுத்துதாணி
- எழுதாணி
விடை : எழுத்துதாணி
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
- கருத்துப் படங்களை அறிமுகப்படுத்தியவர் ____________விடை : பாரதியார்
- கலம்காரி ஓவியம் என்று அழைக்கப்படுவது ___________விடை : துணி ஓவியம்
- மன்னர்களின் ஆணைகளையும் அரசு ஆவணங்களையும் __________ மீது பொறித்துப் பாதுகாத்தனர்.விடை : செப்பேடுகளில்
III. குறுவினா
1. ஓவியங்களின் வகைகள் யாவை?
- குகை ஓவியம்
- சுவர் ஓவியம்
- துணி ஓவியம்
- ஓலைச்சுவடி ஓவியம்
- செப்பேட்டு ஓவியம்
- தந்த ஓவியம்
- கண்ணாடி ஓவியம்
- தாள் ஓவியம்
- கருத்துப்பட ஓவியம்
- நவீன ஓவியம்
2. குகை ஓவியங்களில் இருந்து நாம் அறியும் செய்திகள் யாவை?
குகை ஓவியங்களில் இருந்து செய்திகளை மற்றவர்களுக்குத் தெரிவிப்பதற்காக குகைகளில் ஓவியம் வரைந்ததையும் பழந்தமிழரின் வாழ்க்கை முறைகளையும் அறியலாம்.
3. தாள் ஓவியங்களை எவற்றைக் கொண்டு வரைவர்?
கரிக்கோல், நீர்வண்ணம், எண்ணெய், வண்ணம் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஓவியங்களை வரைவர்
4. சுவர் ஓவியங்கள் காணப்படும் இடங்களைக் கூறுக.
அரண்மனைகள், மண்டபங்கள், கோவில்கள் ஆகியவற்றின் சுவர்களிலும் மேற்கூரைகளிலும் சுவர் ஓவியங்கள் காணப்படும் இடங்கள் ஆகும்
5. செப்பேட்டு ஓவியங்களில் காணப்படும் காட்சிகள் யாவை?
ஆகியன செப்பேட்டு ஓவியங்களில் காணப்படும் காட்சிகள் ஆகும்
IV. சிறுவினா
1. கேலிச்சித்திரம் என்றால் என்ன?
மனித உருவங்களை விந்தையான தோற்றங்களில் நகைச்சுவை தோன்றும்படி வரைவதை கேலிச்சித்திரம் என்பர்
2. ஓலைச்சுவடி ஓவியங்கள் குறித்து நீங்கள் அறிந்து கொண்டவற்றை எழுதுக.
- ஓலைச்சுவடிகள் மீது எழுத்தாணிகளைக் கொண்டு கோட்டோவியமாகவும் வண்ணப்பூச்சு ஓவியமாக வரைவர்
- இவை பெரும்பாலும் புராண, இதிகாசக் காட்சிகளை கொண்டு இருக்கும்.
- இவை தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தில் மட்டுமே காணப்படுகிறது
கூடுதல் வினாக்கள்
I. கோடிட்ட இடங்களை நிரப்புக.
- ஆயக்கலைகள் ______விடை : 6
- பழந்தமிழர்களின் வாழ்க்கை முறையை அறிந்து கொள்ள உதவும் ஓவியம்____________விடை : குகை ஓவியம்
- தஞ்சை பெரிய கோவிலில் உள்ள ஓவியம் ____________விடை : சுவர் ஓவியம்
- ____________, ____________ ஓவியர்கள் வரைந்து வரும் ஓவியம் துணி ஓவியம் ஆகும்.விடை : தமிழகத்திலும், ஆந்திராவிலும்
- கேரளாவில் அதிகம் காணப்படும் ஓவியம் ____________விடை : தந்த ஓவியம்
- கண்ணாடி ஓவியம் வரையும் ஓவியர்கள் காணப்படும் இடம் ____________விடை : தஞ்சாவூர்
- கருத்துப்பட ஓவியம் முதன்முதலில் வெளி வந்த இதழ் ____________விடை : இந்தியா
II. குறுவினா
1. துணியை எவ்வாறெல்லாம் அழைப்பார்கள்?
துணியை எழினி, திரைச்சீலை, கிழி, படாம் எனப் பல பெயர்களில் அழைப்பர்.
2. ஓவியம் வேறு பெயர்கள் தருக
ஓவு, ஓவம், சித்திரம், படம், படாம், வட்டிகைச்செய்தி
3. ஓவியம் வரைபவரின் வேறு பெயர்கள் யாவை?
- கண்ணுள் கவிஞர்
- ஓவியப் புலவர்
- ஓவமாக்கள்
- கிளவி வல்லோன்
- சித்திரக்காரர்
- வித்தகர்
4. புனையா ஓவியங்கள் பற்றி குறிப்பிடும் இலக்கியங்கள் யாவை?
நெடுநல்வாடை மணிமேகலை
5. பசார் பெயிண்டிங் என்றால் என்ன?
நாட்காட்டி ஓவியங்களை பசார் பெயிண்டிங் என்பர். இதன் முன்னோடி கொண்டையராஜூ
6. புனையா ஓவியங்கள் பற்றி நம் இலக்கியங்கள் கூறும் செய்திகள் யாவை?
புனையா ஓவியம் கடுப்பப் புனைவில்
– நெடுநல்வாடை
புனையா ஓவியம் புறம் போந்தன்ன
-மணிமேகலை
7. தாள் ஓவியம் எவ்வகை வடிவங்களிலெல்லாம் காணப்படுகின்றன?
கோட்டோவியங்கள், வண்ண ஓவியங்கள், நவீன ஓவியங்கள்
8. தந்த ஓவியம் பற்றி குறிப்பு வரைக?
தந்த ஓவியம் என்பது யானைத் தந்தங்களின் மீது வரையப்பட்ட
ஓவியங்கள்.
வயது முதிர்ந்து இறந்த யானையின் தந்தங்களின் மீது பலவகை நீர்வண்ணங்களைப் பயன்படுத்தி அழகான ஓவியங்களாக வரையப்படுகின்றன.
இதனைக் கேரள மாநிலத்தில் அதிகமாகக் காணமுடியும்.
9. ஓலைச்சுவடி ஓவியம் பற்றி குறிப்பு வரைக?
ஓலைச்சுவடிகள் மீது எழுத்தாணிகளைக் கொண்டு கோட்டோவியமாகவும் வண்ணப்பூச்சு ஓவியமாகவும் வரையப்படுவது ஓலைச்சுவடி ஓவியம் எனப்படும்.