You are currently viewing 7th Tamil Term 2 Unit 2.1 Book Back Answers

7th Tamil Term 2 Unit 2.1 Book Back Answers

7th Tamil Term 2 Unit 2.1 Book Back Answers

TN 7th Standard Tamil Term 2 – Lesson 2 – இயல் 2.1 இன்பத்தமிழ்க் கல்வி Book back answers

7th Standard Tamil Term 2 Lesson 2 Book Back Answers. 7th Standard Tamil Samacheer Kalvi Guide Term 2 – 2nd Lesson இயல் 2.1 இன்பத்தமிழ்க் கல்வி Book Back and additional question and answers download pdf. Class 7 1st Term book back answers. Class 7 Tamil Book in answers download pdf. 7th All Subject Important Study Materials7th Tamil All Lessons. Answers.

7th Tamil Term 2 Lesson 2 Book Back Answers

7th Standard Tamil Term 2 –  Lesson 2 – இயல் 2.1 இன்பத்தமிழ்க் கல்வி

நூல்வெளி

பாரதிதாசனின் இயற்பெயர் சுப்புரத்தினம்

கவிஞர், இதழாளர், தமிழாசிரியர் என்ற பன்முக ஆற்றல் கொண்டவர்

கதை, கவிதை, கட்டுரை, நாடகம் ஆகியவற்றைப் படைப்பதில் வல்லவர்

பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, இசையமுது, இருண்ட வீடு, குடும்ப விளக்கு, கண்ணகி புரட்சிக் காப்பியம் உள்பட பல நூல்களை எழுதியுள்ளார்.

இவர் எழுதிய “பிசிராந்தையார்” என்னும் நாடகநூலக்குச் சாகித்திய அகாடமி விருது அளிக்கப்பட்டது.

I. சொல்லும் பொருளும்

  1. எத்தனிக்கும் – முயலும்
  2. பரிதி – கதிரவன்
  3. வெற்பு – மலை
  4. அன்னதோர் – அப்படி ஒரு
  5. கழனி – வயல்
  6. கார்முகில் – மழைமேகம்
  7. நிகர – சமம்
  8. துயின்றிருந்தோர் – உறங்கியிருந்தார்

7th Tamil Term 2 Unit 2.1 Book Back Answers.

II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பெண்களுக்கு நிகராகப் பாரதிதாசன் கூறுவது________.

  1. மயில்
  2. குயில்
  3. கிளி
  4. அன்னம்

விடை : மயில்

2. பின்வருவனவற்றுள் ‘ மலை’யைக் குறிக்கும் சொல்

  1. வெற்பு
  2. காடு
  3. கழனி
  4. புவி

விடை : வெற்பு

3. ’ஏடெடுத்தேன்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______.

  1. ஏடெடு + தேன்
  2. ஏட்டு + எடுத்தேன்
  3. ஏடு + எடுத்தேன்
  4. ஏ + டெடுத்தேன்

விடை : ஏடு + எடுத்தேன்

4. ‘துயின்றிருந்தார்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______.

  1. துயின்று + இருந்தார்
  2. துயில் + இருந்தார்
  3. துயின்றி + இருந்தார்
  4. துயின் + இருந்தார்

விடை : துயின்று + இருந்தார்

5. ‘என்று + உரைக்கும்’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ________.

  1. என்றுஉரைக்கும்
  2. என்றிரைக்கும்
  3. என்றரைக்கும்
  4. என்றுரைக்கும்

விடை : என்றுரைக்கும்

III. பொருத்துக.

  1. கழனி – அ. கதிரவன்
  2. நிகர் – ஆ. மேகம்
  3. பரிதி – இ. சமம்
  4. முகில் – ஈ. வயல்

விடை : 1 – , 2 – , 3 – , 4 –

IV. குறு வினா

1. பாரதிதாசனின் மனத்தைக் கவர முயன்ற இயற்கைப் பொருள்கள் யாவை?

  • வானம்
  • நீரோடை
  • தாமரை
  • காடு
  • வயல்
  • மேகம்
  • தென்றல்
  • மயில்
  • அன்னம்
  • கதிரவன்

2. தமிழ் மொழிக்கல்வி பயில்வதால் உண்டாகும் நன்மைகள் எவையெனப் பாரதிதாசன் குறிப்பிடுகிறார்?

தமிழ் மொழிக்கல்வி பயில்வதால் உண்டாகும் நன்மைகள்

  • தமிழ்நாட்டு மக்கள் அறியாமை தூக்கம் களையும்
  • வாழ்வின் துன்பங்கள் நீங்கும்
  • நெஞ்சில் தூய்மை உண்டாகும். வீரம் வரும்

V. சிறுவினா

’இன்பத்தமிழ்க் கல்வி’ – பாடலின் மையக்கருத்தை உங்கள் சொந்த நடையில் எழுதுக.

பாரதிதாசன் கவிதை எழுத ஏட்டினை எடுத்தார். வானம் தன்னைக் கவிதையாக எழுதும்படிக் கூறியது

நீரோடை, தாமரை, காடு, வயல், மேகம் ஆகியன அவரைக் கவர்ந்து தங்களைக் கவிதை எழுதும்படி அவரிடம் வேண்டியது.

மயில் போன்ற பெண்கள் அன்பைக் கவிதையாக எழுதும்படிக் கூறினர்.

தென்றல், மயில், அன்னம், கதிரவன், வீரர்கள் ஆகியனவும் அவரிடம் கவிதை எழுத வேண்டின.

ஆனால் துன்பத்தில் கிடக்கும் தமிழ்நாட்டு மக்கள் அறியாமையில் தூங்கிக் கொண்டு  இருக்கின்றார்கள்.

அதனை நீங்க இன்பத்தமிழ் கல்வி கற்க வேண்டும். இந்த நிலை ஏற்பட்டால் வாழ்வில் துன்பம் நீங்கும்.

மனதில் தூய்மை உண்டாகும், வீரம் வரும்.

கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

  1. பாரதிதாசன் ________________ விருது பெற்ற நூல் பிசிராந்தையார்விடை : சாகித்ய அகாடமி
  2. ________________ பாரதிதாசன் கவிதையாக எழுதச் சொன்னார்விடை : பெண்கள் அன்பினைக்
  3. வீரர்களின் தோள்களுக்கு நிகராகப் பாரதிதாசன் கூறுவது ________________விடை : மலை
  4. ________________ பசுமையான தோகைகளை உடையதுவிடை : மயில்

II. பிரித்தெழுதுக

  1. எழுதென்று = எழுது + என்று
  2. என்றுரைக்கும் = என்று + உரைக்கும்
  3. பெண்களெல்லாம் = பெண்கள் + எல்லாம்
  4. மேற்றிசை = மேற்கு + திசை
  5. வெற்பென்று = வெற்பு + என்று
  6. என்றுரைக்கும் = என்று + உரைக்கும்

III. வினாக்கள்

1. என்னை கவிதையாக எழுதுக என்று பாரதிதாசனிடம் முதலில் கூறியது எது?

வானம் தன்னைக் கவிதையாக எழுதுக என்று பாரதிதாசனிடம் முதலில் கூறியது.

.2. பாரதிதாசனிடம் கவி ஓவியமாகத் தங்களைத் தீட்டுமாறு கூறியவை எவை?

நீரோடை, தாமரை மலர்கள்

3. பாரதிதாசன் வேல் ஏந்திய வீரர்கள் எதனை எழுதுமாறு வேண்டினர்?

பாரதிதாசன் வேல் ஏந்திய வீரர்கள் மலை போன்ற தங்களின் தோள்களின் அழகை எழுதுமாறு வேண்டினர்

4. பாரதிதாசனை கவர்ந்த பொருள் யாவை?

வானம், ஓடை, காடு, தென்றல், மயில் போன்ற இயற்கைப் பொருள்கள் எல்லாம் அவர் கருத்தைக் கவர்ந்தன.

Leave a Reply