7th Tamil Guide Term 2 Unit 1 Book answers

7th Tamil Term 2 Unit 1.1 Book Back Answers

7th Tamil Term 2 Unit 1.1 Book Back Answers

7th Standard Samacheer Kalvi Guide Unit 1.1. கலங்கரை விளக்கம்

7th Standard Term 2 Unit 1.1 Samacheer Kalvi Guide Book back and additional answers. 7th All Terms Full Answers. 7th TNPSC Important Notes, Free Online Test.  7th Standard All Important Study Materials. 7th Tamil Term 2 Unit 1.1 Book Back and additional question Answers.

7th Tamil Term 2 – Unit 1.1 to 1.5 Full BookAnswers – Click Here

7th Tamil Term 2 Unit 1.1 Book Back Answers

I. சொல்லும் பொருளும்

  1. தேடல் – தூண்
  2. சென்னி – உச்சி
  3. ஞெகிழி – தீச்சுடர்
  4. உரவுநீர் – பெருநீர்பரப்பு
  5. அழுவம் – கடல்
  6. கரையும் – அழைக்கும்
  7. வேயா மாடம் – வைக்கோல் போன்றவற்றால் வேயப்படாது, திண்மையாகச் சாந்து பூசப்பட்ட மாடம்

 

II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. வேயாமாடம் எனப்படுவது

  • வைக்கோலால் வேயப்படுவது
  • சாந்தினால் பூசப்படுவது
  • இலையால் வேயப்படுவது
  • துணியால் மூடப்படுவது

விடை : சாந்தினால் பூசப்படுவது

2. உரவுநீர் அழுவம் – இத்தொடரில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள் ______.

  • காற்று
  • வானம்
  • கடல்
  • மலை

விடை : கடல்

3. கடலில் துறை அறியாமல் கலங்குவன ______.

  • மீன்கள்
  • மரக்கலங்கள்
  • தூண்கள்
  • மாடங்கள்

விடை : மரக்கலங்கள்

4. தூண் என்னும் பொருள் தரும் சொல் ______.

  • ஞெகிழி
  • சென்னி
  • ஏணி
  • மதலை

விடை : மதலை

III. குறுவினா

1. மரக்கலங்களைத் துறை நோக்கி அழைப்பது எது?

மரக்கலங்களைத் துறை நோக்கி அழைப்பது – கலங்கரை விளக்கின் ஒளி

2. கலங்கரை விளக்கில் எந்நேரத்தில் விளக்கு ஏற்றப்படும்?

கலங்கரை விளக்கில் இரவு நேரத்தில் விளக்கு ஏற்றப்படும்

IV. சிறுவினா

1.கலங்கரை விளக்கம் பற்றிப் பெரும்பாணாற்றுப்படை கூறும் கருத்துகளை எழுதுக.

கலங்கரை விளக்கமானது வானம் கீழே விழாமல் தாங்கிக்கொண்டு இருக்கும் தூண்போலத் தோற்றம் அளிக்கும்

அது ஏணி கொண்டு ஏற முடியாத அளவுக்கு உயரத்தை கொண்டு இருக்கின்றது.

வைக்கோல் ஆகியவற்றால் வேயப்படாமல் வலிமையான சாந்து (சுண்ணாம்பு) பூசப்பட்ட வானத்தை முட்டும் மாடத்தை உடையது

அம்மாடத்தில் இரவில் ஏற்றப்பட்ட எரியும் விளக்கு, கடலில் துறை (எல்லை) அறியாமல் கலங்கும் மரங்கலங்களைத் தன் துறை (எல்லை) நோக்கி அழைப்பது

  கலங்கரை விளக்கம் – கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக:-

1. பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுடைத்தலைவன் ___________________

விடை : தொண்டைமான் இளந்திரையன்

2. பெரும்பாணாற்றும்படை நூலின் ஆசிரியர் ___________________

விடை : கடியலூர் உருத்திரங்கண்ணனார்

3. உருத்திரங்கண்ணனார் ___________________ என்ற ஊரில் வாழ்ந்தார்

விடை : கடியலூர்

4. கடலில் துறை அறியாமல் கலங்குவது ___________________

விடை : மரக்கலங்கள்

II. பிரித்து எழுது:-

  1. மரக்கலங்கள் = மரம் + கலங்கள்
  2. பத்துப்பாட்டு = பத்து + பாட்டு
  3. முல்லைப்பாட்டு = முல்லை + பாட்டு
  4. அம்மாடத்தில் = அ + மாடத்தில்
  5. தீச்சுடர் = தீ + சுடர்

 

III. “கலங்கரை விளக்கம்” பாடல் பகுதியில் உள்ள எதுகை, மோனைச் சொற்களை எடுத்து எழுதுக:-

மோனைச் சொற்கள்

ணி – ற்றருஞ்சென்னி

ரவில் – லங்குசுடர்

எதுகைச் சொற்கள்

ன்றிய – சென்னி

வில் – உவு நீர்

IV. வினாக்கள்

1. உருத்திரங்கண்ணனார் பற்றி குறிப்பு வரைக

கடியலூர் உருத்திரங்கண்ணனார் சங்காலப்புலவர்.

இவர் கடியலூர் என்ற ஊரில் வாழ்ந்தார்.

இவர் பத்துப்பாட்டில் உள்ள பெரும்பாணாற்றுப்படை, பட்டினப்பாலை ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.

2. ஆற்றுப்படை இலக்கியம் என்றால் என்ன?

வள்ளல் ஒருவரிடம் பரிசு பெற்றுத் திரும்பும் புலவர், பாணர் போன்றோர் அந்த வள்ளலிடம் சென்று பரிசு பெற, பிறருக்கு வழிகாட்டுவதாகப் பாடப்படுவது ஆற்றுப்படை இலக்கியம் ஆகும்

3. பத்துப்பாட்டு நூல்கள் யாவை?

  • திருமுருகாற்றுப்படை
  • மதுரைக்காஞ்சி
  • பெருநாராற்றுப்படை
  • நெடுநெல்வாடை
  • பெரும்பாணாற்றுப்படை
  • குறிஞ்சிப்பாட்டு
  • சிறுபாணாற்றுப்படை
  • பட்டினப்பாலை
  • முல்லைப்பாட்டு
  • மலைபடுகடாம்

 

4. பெரும்பாணாற்றுப்படை பற்றி நீவிர் அறிவன யாவை?

பெரும்பாணாற்றுப்படை பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று.

இந்நூலை இயற்றியவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார்,

ஆற்றுப்படை இலக்கியம் சார்ந்தது.

இந்நூலின் பாட்டுடைத்தலைவன் தொண்டைமான் இளந்திரையன்

5. வேயா மாடம் தொடர் பொருள் கூறுக.

வேயா மாடம் – வைக்கோல் போன்றவற்றால் வேயப்படாது, திண்மையாக சாந்து பூசப்பட்ட மாடம்

Leave a Reply