7th Tamil Term 1 Unit 3.5 Book Back Answers
Tamil Nadu 7th Standard Tamil Term 1 இயல் 3.5 வழக்கு Book Back Answers
7th Standard Tamil Term 2 Lesson 3 Book Back Answers. 7th Standard Tamil Samacheer Kalvi Guide Term 1 – 3rd Lesson Unit 3.5 வழக்கு Book Back and additional question and answers download pdf. Class 7 1st Term book back answers. Class 7 Tamil Book in answers download pdf. 7th All Subject Important Study Materials. 7th Tamil All Lessons. Answers.
- 7th Tamil Samacheer Kalvi Guide Term 1 – Lesson 3 ( இயல் 3.1 to 3.5 ) Full Answer Key
- 7th Tamil Term 1, Term 2, Term 3 – All Unit Book Back Answers
7th Standard Tamil Book Back Answers Term 1 – Lesson 3.5 வழக்கு
I. பொருத்துக.
- பந்தர் – அ. முதற்போலி
- மைஞ்சு – ஆ. முற்றுப்போலி
- அஞ்சு – இ. இடைப்போலி
- அரையர் – ஈ. கடைப்போலி
விடை – 1 – ஈ, 2 – அ, 3 – ஆ, 4 – இ
II. குறுவினா
1. வழக்கு என்றால் என்ன?
நம் முன்னோர் எந்தெந்ச் சொற்கள் என்னென்ன பொருளில் பயன்படுத்தினார்களோ அச்சொற்கள் அவ்வாறே பயன்படுத்துவதை வழக்கு என்பர்
2. தகுதி வழக்கின் வகைகள் யாவை ?
ஏதேனும் ஒரு காரணத்தினால் பிறரிடம் சொல்லத் தகுதியற்ற சொற்களைத் தகுதியான வேறு சொற்களால் குறிப்பிடுவது தகுதி வழக்கு ஆகும்.
தகுதி வழக்கு மூன்று வகைப்படும்.
- இடக்கரடக்கல்
- மங்கலம்
- குழூஉக்குறி
3. வாழைப்பழம் மிகவும் நஞ்சு விட்டது. – இத்த தொடரில் இடம்பெற்றுள்ள போலிச் சொல்லைக் கண்டறிக. அதன் சரியான சொல்லை எழுதுக.
- போலிச் சொல் : நஞ்சு சரியான சொல் : நைந்து
வாழைப்பழம் மிகவும் நஞ்சு விட்டது
வாழைப்பழம் மிகவும் நைந்து விட்டது
கூடுதல் வினாக்கள்
I. குறுவினா
1. வழக்கு எத்தனை வகைப்படும்?
இயல்பு வழக்கு, தகுதி வழக்கு என வழக்கு இருவகைப்படும்.
2. இயல்பு வழக்கு என்றால் என்ன? அதன் வகைகளை கூறுக.
ஒரு பொருளை அதற்கே உரிய இயல்பான சொற்களால் குறிபபிடுவது இயல்பு வழக்கு ஆகும்.
3. இயல்பு வழக்கு வகைகளை கூறுக
இயல்பு வழக்கு மூனறு வகைப்படும்.
- இலக்கணமுடையது
- இலக்கணப்போலி
- மரூஉ
4. போலி என்றால் என்ன? அதன் வகைகளை கூறுக?
சொல்லின் முதலிலோ, இடையிலோ, இறுதியிலோ இயல்பாக இருக்க வேண்டிய ஓர் எழுத்திற்குப் பதிலாக வேறு ஓர் எழுத்து இடம்பெற்று அதே பொருள் தருவது போலி எனப்படும். போலி என்னும் சொல் போல இருத்தல் என்பதிலிருந்து தோன்றியது.
போலி மூன்று வகைப்படும்.
- முதற்போலி
- இடைபோலி
- கடைப்போலி
5. முதற்போலி என்றால் என்ன?
முதற்போலிசொல்லின் முதலில் இயல்பாக இருக்க வேண்டிய ஓர் எழுத்திற்குப் பதிலாக வேறு ஓர் எழுத்து இடம்பெற்று அதே பொருள் தருவது முதற்போலி எனப்படும்.
(எ.கா.) பசல் – பைசல், மயல் – மையல், மஞ்சு – மைஞ்சு
6. இடைப்போலி என்றால் என்ன?
சொல்லின் இடையில் இயல்பாக இருக்க வேண்டிய ஓர் எழுத்திற்குப் பதிலாக வேறு ஓர் எழுத்து இடம்பெற்று அதே பொருள் தருவது இடைப்போலி எனப்படும்.
(எ.கா.) அச்சு – அமைச்சு, இலஞ்சி – இலைஞ்சி, அரயர் – அரையர்
7. கடைப்போலி என்றால் என்ன?
சொல்லின் இறுதில் இயல்பாக இருக்க வேண்டிய ஓர் எழுத்திற்குப் பதிலாக வேறு ஓர் எழுத்து இடம்பெற்று அதே பொருள் தருவது கடைபோலி எனப்படும்.
(எ.கா.) அகம் – அகன், நிலம் – நிலன், முகம்- முகன், பந்தல் – பந்தர்
8. முற்றுப்போலி என்றால் என்ன?
ஒரு சொல்லில் இயல்பாக அமைந்த எழுத்துகளுக்குப் பதிலாக எழுத்துகள் அனைத்தும் வேறுபட்டாலும் பொருள் மாறாமல் இருப்பது முற்றுப்போலி எனப்படும்.
(எ.கா.) ஐந்து- அஞ்சு
9. முற்றுப்போலி என்றால் என்ன?
ஒரு சொல்லில் இயல்பாக அமைந்த எழுத்துகளுக்குப் பதிலாக எழுத்துகள் அனைத்தும் வேறுபட்டாலும் பொருள் மாறாமல் இருப்பது முற்றுப்போலி எனப்படும்.
(எ.கா.) ஐந்து- அஞ்சு
10. வாயில் என்ற சொல் இலக்கணப் போலியிலும் மரூஉ-விலும் எவ்வாறு வழங்குகிறோம்?
- இல்லத்துக்குள் நுழையும் வழி இல்வாய் (இல்லத்தின் வாய்) எனக் குறிப்பிடப்பட வேண்டும். ஆனால் அதனை வாயில் என வழங்குகிறோம். இது இலக்கணப் போலியாகும்.
- வாயில் என்னும் சொல்லைப் பேச்சு வழக்கில் வாசல் என வழங்குகிறோம். இது மரூஉ ஆகும்.
11. இடக்கரடக்கல், மங்கலம், குழூஉக்குறி மூன்றும் ஒரு சொல்லுக்கு மாற்றாக வேறு சொல்லைப் பயன்படுத்தும் முறைகள் யாவை?
- நாகரிகம் கருதி மறைமுகமாகக் குறிப்பிடுதல் இடக்கரடக்கல்
- மங்கலமற்ற சொற்களை மாற்றி மங்கலச் சொற்களால் குறிப்பிடுதல் மங்கலம்
- பிறர் அறியாமல் ஒரு குழுவுக்கு மட்டும் புரியும் வகையில் குறிப்பிடுதல் குழூஉக்குறி
II. சிறுவினா
1. இயல்பு வழக்கு வகையினை விவரி
ஒரு பொருளை அதற்கே உரிய இயல்பான சொற்களால் குறிப்பிடுவது இயல்பு வழக்கு ஆகும்.
இயல்பு வழக்கு மூன்று வகைப்படும்.
- இலக்கணமுடையது
- இலக்கணப்போலி
- மரூஉ
இலக்கணமுடையது
இலக்கண நெறி மாறாமல் முறையாக அமைந்த சொல் இலக்கணமுடையது ஆகும்.
(எ.கா.) நிலம், மரம், வான், எழுது
இலக்கணப்போலி
இலக்கண முறைப்படி அமையாவிடினும், இலக்கணமுடையவை போலவே ஏற்றுக் கொள்ளப்படும் சொற்கள் இலக்கணப்போலி எனப்படும்.
(எ.கா.) புறநகர், கால்வாய், தசை , கடைக்கண்.
இலக்கணப்போலி என்பது பெரும்பாலும் சொற்களின் முன்பின் பகுதிகள் இடம்மாறி வருவதையே குறிக்கும். எனவே, இலக்கணப் போலியை முன்பின்னாகத் தொக்க போலி எனவும் குறிப்பிடுவர்.
மரூஉ
இலக்கண நெறியிலிருந்து பிறழ்ந்து, சிதைந்து வழங்கும் சொற்கள் மரூஉ எனப்படும்.
(எ.கா.) கோவை, குடந்தை, எந்தை, போது, சோணாடு
2. தகுதி வழக்கு வகையினை விவரி
தகுதி வழக்கு மூன்று வகைப்படும்.
- இடக்கரடக்கல்
- மங்கலம்
- குழூஉக்குறி
இடக்கரடக்கல்
பிறரிடம் வெளிப்படையாகச் சொல்லத் தகாத சொற்களைத் தகுதியுடைய வேறு சொற்களால் கூறுவது இடக்கரடக்கல் ஆகும்.
(எ.கா.)
- கால் கழுவி வந்தான்.
- குழந்தை வெளியே போய்விட்டது.
- ஒன்றுக்குப் போய் வந்தேன்.
மங்கலம்
மங்கலமில்லாத சொற்களை மங்கலமான வேறு சொற்களால் குறிப்பதை மங்கலம் என்பர்.
(எ.கா.)
- ஓலை – திருமுகம்
- கறுப்பு ஆடு – வெள்ளாடு
- விளக்கை அணை – விளக்கைக் குளிரவை
- சுடுகாடு – நன்காடு
குழூஉக்குறி
ஒரு குழுவினர் ஒரு பொருள் அல்லது செயலைக் குறிக்கத் தமக்குள் பயன்படுத்திக்கொள்ளும் சொற்கள் குழூஉக்குறி எனப்படும்.
(எ.கா.)
- பொன்னைப் பறி எனல் (பொற்கொல்லர் பயன்படுத்துவது)
- ஆடையைக் காரை எனல் (யானைப்பாகர் பயன்படுத்துவது)
மொழியை ஆள்வோம்
I. எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் எனப் பிரிக்க.
- வீரர்கள் நாட்டைக் காத்தனர்.
- பொதுமக்கள் அந்நியத்துணிகளைத் தீயிட்டு எரித்தனர்.
- கொற்கைத் துறைமுகத்திலே பாண்டியனுடைய மீனக்கொடி பறந்தது.
- திருக்குறளை எழுதியவர் யார்?
- கபிலர் குறிஞ்சிப்பாட்டை எழுதிய புலவர்.
எழுவாய் | பயனிலை | செயப்படுபொருள் |
வீரர்கள் | நாட்டைக் | காத்தனர் |
பொதுமக்கள் | அந்நியத்துணிகளைத் | தீயிட்டு எரித்தனர் |
கொற்கைத் துறைமுகத்திலே | பாண்டியனுடைய மீனக்கொடி | பறந்தது |
திருக்குறளை | எழுதியவர் | யார்? |
கபிலர் | குறிஞ்சிப்பாட்டை | எழுதிய புலவர் |
II. எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் ஆகிய மூன்றும் அமையும்படி ஐந்து தொடர்களை எழுதுக.
- கம்பர் இராமாயணத்தை எழுதினார்
- ராமு கவிதை எழுதினான்
- கீதா ஓவியம் வரைந்தாள்
- ஒளவையார் ஆத்திசூடி இயற்றினார்
- வீரர்கள் நாட்டைக் காத்தனர்
III. இடைச்சொல் ‘கு’ சேர்த்துத் தொடரை எழுதுக.
(எ.கா.) வீடு சென்றான்
- வீடு+கு+சென்றான் – வீட்டுக்குச் சென்றான்
1. மாடு புல் கொடுத்தார் = _______________
- மாடு + கு + புல் கொடுத்தார் = மாடுக்குப் புல் கொடுத்தார்
2. பாட்டு பொருள் எழுது = _______________
- பாட்டு + கு + பொருள் எழுது = பாட்டுக்குப் பொருள் எழுது
3. செடி பாய்ந்த நீர் = _______________
- செடி + கு + பாய்ந்த நீர் = செடிக்குப் பாய்ந்த நீர்
4. முல்லை தேர் தந்தான் பாரி = _______________
- முல்லை + கு + தேர் தந்தான் பாரி = முல்லைக்குத் தேர் தந்தான் பாரி
5. சுவர் சாந்து பூசினாள் = _______________
- சுவர் + கு + சாந்து பூசினாள் = சுவர்க்குச் சாந்து பூசினாள்
IV. இரண்டு சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக.
கண் |
அழகு |
மண் | அழகு |
விண் | உண்டு |
பண் |
உண்டு |
|
|
V. அகம் என முடியும் சொற்களை எழுதுக.
நூலகம் மருந்தகம் தலைமையகம்
எழிலகம் அலுவலகம் செயலகம்
VI. கோடிட்ட இடங்களைத் தமிழ் எண் கொண்டு நிரப்புக.
- திருக்குறள் ____________ பால்களைக் கொண்டது.விடை : ௩ (3)
- எனது வயது ____________விடை : க௩ (13)
- நான் படிக்கும் வகுப்பு ____________விடை : எ (7)
- தமிழ் இலக்கணம் ____________ வகைப்படும்.விடை : ரு (5)
- திருக்குறளில் ____________ அதிகாரங்கள் உள்ளன.விடை : க௩௩ (133)
- இந்தியா ____________ ஆம் ஆண்டு விடுதலை பெற்றது.விடை : க௯௪எ (1947)
VII. குறிப்புகளைக் கொண்டு தலைவர்களின் பெயர்களைக் கட்டங்களிலிருந்து கண்டுபிடித்து எழுதுக.
- மூதறிஞர் ____________
விடை : இராஜாஜி
- வீரமங்கை ____________
விடை : வேலுநாச்சியார்
- பாஞ்சாலங்குறிச்சி வீரன் ____________
விடை : கட்டபொம்மன்
- வெள்ளையரை எதிர்த்த தீரன் ____________
விடை : சின்னமலை
- கொடிகாத்தவர் ____________
விடை : திருப்பூர் குமரன்
- எளிமையின் இலக்கணம் ____________
விடை : கக்கன்
- தில்லையாடியின் பெருமை ____________
விடை : வள்ளியம்மை
- கப்பலோட்டிய தமிழர் ____________
விடை : சிதம்பரனார்
- பாட்டுக்கொரு புலவன் ____________
விடை : பாரதியார்
- விருதுப்பட்டி வீரர் ____________
விடை : காமராஜர்
- கள்ளுக்கடை மறியல் பெண்மணி ____________
விடை : நாகம்மை
- மணியாட்சியின் தியாகி ____________
விடை : வாஞ்சிநாதன்
நிற்கு அதற்குத் தக
I. கலைச்சொல் அறிவோம்.
- கதைப்பாடல் – Ballad
- பேச்சாற்றல் – Elocution
- துணிவு – Courage
- ஒற்றுமை – Unity
- தியாகம் – Sacrifice
- முழக்கம் – Slogan
- அரசியல் மேதை – Political Genius
- சமத்துவம் – Equality